- விகடன்.காம்
--------------------------------------------------
புத்தகத்தை படிக்கும்போது என்னை மிகவும் ஈர்த்த விஷயம் பர்மாபஜாரைப் பற்றியும், அங்கு நிகழும் வியாபாரத்தைப் பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். க்ரே மார்க்கெட்டின் டான் வாப்பா, மீன் பிடித்தல், மருந்து வியாபாரம், போலிஸ் விசாரணை என்று சென்னையின் மறுபக்கத்தை நுணுக்கமாக விவரித்த விதம் மிக அருமை
- நல்லவன்
--------------------------------------------------
கதையின் நடை நம்மை உள்ளிழுத்துக்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விலைமாது வரும் காட்சிகளிலும் அத்துமீறாமல் அடுத்த காட்சிக்குத்தாவும் சந்தர்ப்பங்களில் கதையின் போக்கில் நம்மை கவனப்படுத்தி விளையாடுகிறார் யுவா. மிகச் சாதாரணமான வார்த்தைகள். சம்பவங்களின் அனாயாசமான வேகம்.! ஏதோ ஒரு இடத்தில் இது உண்மையிலேயே நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கும் காட்சிக்கோர்வைகள் என நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவலைப் படித்த உணர்வு எழுந்தது.
- சுரேகா
--------------------------------------------------
சுஜாதா நாவலின் போதுதான் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். அதன் பிறகு யுவகிருஷ்ணாவின் நாவலைப் படித்த பிறகுதான் அந்த அவஸ்தையை மீண்டும் அனுபவித்தேன். இந்த நாவலை திரைக்கதையாக அமைத்தால், "மங்காத்தா" போல் நல்ல வெற்றி படமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.
- உலகநாதன்
--------------------------------------------------
விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று.
- வித்யா
--------------------------------------------------
ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.
- சுதர்சன்
--------------------------------------------------
பர்மா பஜாரின் திருட்டு VCD தொழிலுக்கு பின்னால் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் இந்த கதை சிறந்த திரைக்கதையாகவும் இருப்பது தனி சிறப்பு. இயக்குனர் ஷங்கரையும் அவரது நண்பன் படத்தையும் மையமாக வைத்து கதை சொன்ன விதம் அருமை. ஷங்கரே கூட இதை படமாக எடுக்க களம் உள்ள நாவல்.
--------------------------------------------------
ஒரு ஒண்ணரை முதல் இரண்டு மணி நேரத்திரைப்படத்துக்கான களம் மற்றும் பாத்திரங்கள் கச்சிதமாய் இருக்கும் இந்நாவலை டீட்டெயிலிங்கில் பிராமதப்படுத்தும் ஒரு நல்ல இயக்குநரும் (கே.வி.ஆனந்த் போல), ஒரு நல்ல குழுவும் சேர்ந்தால் என்றேனும் ஒருநாள் முழுநீளத்திரைப்படமாக பட்டையைக் கிளப்பக்கூடும்.
--------------------------------------------------
சென்னை பர்மா பஜார் தான் கதைக்களம். அங்கே நடக்கும் தொழில், அங்கே நிகழும் சம்பவங்கள், தாதாக்கள், ஒருவரை ஒருவர் முந்தும் தன்மை, திருட்டு வி.சி.டி இவற்றை மையமாக கொண்டு கதை செல்கின்றது. விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லை. தொடர் கொலைகள் அதை யார் செய்தார்கள் என்ற கேள்வியுடன் பயணிக்கின்றது. படு வேகம். விவரணைகள் கதைக்குள் ஒன்ற செய்கின்றது. டீடெய்லிங் தான் ஆச்சரியப்பட வைக்கின்றது, எல்லா தகவல்களையும் விரல்நுனியில் வைத்துள்ளார்.
- விழியன்
--------------------------------------------------
Get the book ,you can not keep it down without completing. As reader I want to enhance the experience of the book. AZHIKKAP PIRANDHAVAN MAPIA : CLICK HERE!
- முத்துவேல் சிவராமன்
--------------------------------------------------
கொஞ்சமும் ஏமாற்றாத த்ரில்லர். நடை அமர்க்களம். விறுவிறுப்பான அக்மார்க் லோக்கல் மசாலா.
- நரேன்
- நரேன்
--------------------------------------------------
செம விறுவிறுப்பான திரில்லர் நாவல்..! ஏக் தம்மில் இரவோடு இரவாகப் படித்து முடித்தேன். அவசியம் படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும்.
- உண்மைத் தமிழன்
- உண்மைத் தமிழன்
--------------------------------------------------
கதை விறுவிறுப்பாக இருக்கிறது.. ஃபில்டர் & டுபாக்கோ பர்ஃபெக்ட்லி மேட்சுடு சிகரெட்டைப்போல...
- மணிஜி
- மணிஜி
--------------------------------------------------
சினிமா பின்னணியில் அமைந்த தடதடக்கும் கிரைம் த்ரில்லர். காரம் கொஞ்சம் தூக்கலான அருமையான மசாலாப் படம் பார்த்த உணர்வு.
--------------------------------------------------
செம்ம சேஸிங் த்ரில்லர்.. கே.வி ஆனந்த் தோத்தாரு போங்க. சேஸிங் கண்ணுக்குள்ள விரியுது
--------------------------------------------------
ஜெட் வேகம். ஒரிரு லாஜிக் ஓட்டைகளும் படிக்கும் போது தெரியவில்லை, படித்து முடித்த பின்னர்தான் தோன்றுகிறது. அத்தனை வேகம்.
--------------------------------------------------
‘அழிக்கப் பிறந்தவன்’ - சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும். தொடர்பு எண் : 9940446650.
விலை ரூ.50/- மட்டுமே. பக்கங்கள் : 96.
ஆன்லைனில் வாங்க...
விலை ரூ.50/- மட்டுமே. பக்கங்கள் : 96.
ஆன்லைனில் வாங்க...