21 பிப்ரவரி, 2009

தநா-07-அல-4777


தநா-07-அல-4777 என்பது எம்.ஜி.ஆரின் அம்பாஸடர் கார் நம்பராம். டாக்ஸி நம்பர் 9211 என்ற இந்திப்படத்தின் ரீமேக். நானாபடேகர் நடித்த பாத்திரத்துக்கு பசுபதியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? அஞ்சாதேயில் அஞ்சவைத்த அஜ்மல் இந்தப் படத்தில் இளம்பெண்களை கொஞ்சவைக்கிறார்.

பணக்காரர்கள் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு பயணி. பணக்காரர்களைத் தவிர எல்லோரும் வாழவேண்டும் என்று நினைக்கிற ஒரு டாக்ஸி ட்ரைவர். இருவரும் ஒரு புள்ளியில் எதேச்சையாக இணைவதால் ஏற்படும் ஒரு நாள் பிரச்சினைகள் தான் இரண்டுமணி நேரப்படம். தமிழ் சினிமாவின் அஸ்திவாரமான காதல், ஆக்சன் கருமாந்திரங்களுக்கு இடமில்லாமல் விறுவிறுப்பான படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் லட்சுமிகாந்தன்.

வசனம் யார் எழுதியதென்று தெரியவில்லை. பல இடங்களில் வசனத்தின் நிறம் பச்சை.

ஒரு விலைமாதுவுக்கும் டாக்ஸி டிரைவர் பசுபதிக்கும் நடக்கும் உரையாடல்...

"மணி வர்றியா?"

"........."

"யோவ் சவாரிக்கு வர்றியான்னு கேட்டேன்யா.."

"ஏறு"

"ஏன்யா அசிங்கமா பேசுறே?"

"........."

"ஏய் நிறுத்து.. நிறுத்து.. நிறுத்து.. பார்ட்டி வெயிட் பண்றான்!"

"அவனுக்கு ஸ்டியரிங்கையே பிடிச்சி வண்டி ஓட்டத் தெரியாது!"

பசுபதிக்கு ஒரு ஆயாவை ஜோடியாக போட்டிருக்கிறார்கள். அய்யய்யோ அது சிம்ரனாம். சிம்ரனுக்கெல்லாம் கூடவா வயதாக வேண்டும்? கிழடு தட்டிப்போய் கொடுமையாக இருக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் குத்துவிளக்கு மீனாட்சி முற்றும் துறந்த முனிவராகி விட முயற்சிக்கிறாரோ? நல்லவேளையாக முற்றுமில்லாமல் முக்கால் வாசி மட்டுமே துறந்ததால் தப்பித்தோம்.

படம் ஓடும் இரண்டு மணி நேரமும் ஜெட் வேகம் தான். பாடல்களே தேவையில்லாத படமிது. ரெண்டு ஹீரோக்களும் ஓப்பனிங் சாங் அட்டர் வேஸ்ட். அதிலும் ஆத்திச்சூடி ரீமிக்ஸிங் கொடுமையிலும் கொடுமை. இந்த கருமாந்திரத்தைப் பார்த்து சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் ரீமிக்ஸ் செய்து கொடுமைப்படுத்துவார்களோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

படத்தின் கதை ரொம்ப சிம்பிள். அதை சொல்லியிருக்கும் விதம் தான் மேட்டரே. சிம்ரனும் பசுபதியும் இணையும் க்ளைமேக்ஸ் அட்டகாசம். குசேலன் மாதிரி குப்பைத் தொட்டிகளை தவிர்த்து இதுபோன்ற பாத்திரங்களையே இனியும் பசுபதி தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். தேசிய விருது ரொம்ப தூரத்தில் இல்லை.

தநா-07-அல-4777 - வேகத்தை ரசிப்பவர்கள் ஏறலாம்.

* - * - * - * - * - * - * - * - * - *
பெருமாள்


மீனாட்சி ஹீரோயினாக நடித்த இன்னொரு படம். டாக்ஸி படத்திலாவது பரவாயில்லை, இந்தப் படத்தில் பொம்பளை டிராகுலா மாதிரி கொடூரமாக இருக்கிறார் மீனாட்சி.

மீனாட்சி ஏமாற்றினாலும் இன்னொரு ஹீரோயினான நமீதா முழுத்திருப்திக்கு கேரண்டி. அவரது இடுப்பு சதை மேடு மட்டும் தர்ப்பூசணிப்பழம் சைஸில் இருக்கிறது. பிரம்மாண்ட படமென்றால் நமீதாவை வெச்சித்தான் எடுக்கணும்.

நமீதாவைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி படத்தில் ஒன்றுமேயில்லை என்பது பெருத்த சோகம். ஏதோ சோஷியல் மெசேஜ் சொல்லப் போகிற பாவலாவோடு டைட்டிலை காட்டுகிறார்கள். "ஈ" படத்தைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட கொசு பெருமாள். வர வர ஒரு விவேக் நடித்தாலே கடியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரெண்டு விவேக். காமெடி என்ற பேரில் ரத்தம் வர வர ரசிகர்களின் கழுத்தறுக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக பாட்டுக்கள் மட்டும் சூப்பர். அதிலும் 'காதல் வைபோகமே' கலக்கல். மு.க.மு.அறிவுநிதிக்கு அச்சுஅசலாக அவர் அப்பாவின் வாய்ஸ். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா' ரீங்காரம் அடிக்கிறது. தியேட்டர் முழுக்க மு.க.மு.அறிவுநிதி நற்பணி மன்றத்தினர் (?) பேனர் வைத்து அமர்க்களம் செய்கிறார்கள்.

பெருமாள் ‍‍- பேரை மாதிரியே படமும் மொக்கை!

14 பிப்ரவரி, 2009

கிருஷ்ணா மனசுலே புவனா!


வாவ்!

நூறு டன் ரோஜாக்களை பொக்லைனில் வாரி தலைமீது கொட்டியது போலிருக்கிறது. எவ்வளவு நாளாயிற்று இப்படி ஒரு ப்ரெஷ்ஷான ஃபிகரைப் பார்த்து. தமிழனின் நாட்டுக்கட்டை மோகத்துக்கு சரியான வேலண்டைன் தீனி. அடியே கொல்லுதே. அழகோ அள்ளுதே. அனுயா.

ஃபிகருக்கு நல்ல போட்டோஜெனிக். குளோசப்பில் மட்டும் பிம்பிள்ஸ் பயமுறுத்துகிறது. க்ளியர்சில் பயன்படுத்தலாம். லிப்ஸ் கூட ஆட்டின் ஷேப். கன்னத்தில் இருபக்கமும் சிரிக்கும்போது குழி. சங்குக் கழுத்தில் அம்சமான அழகு மச்சம். பனியில் நனைந்த ரோஜா நிறம். கழுதைப்பாலில் குளிப்பாரோ? உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அழகு கொட்டோ கொட்டுவென கொட்டிக் கிடக்கிறது. பிரம்மன் சும்மா செதுக்கு செதுக்குவென்று செதுக்கித் தள்ளியிருக்கிறான். அனுயாவின் செல் நம்பரை விகடன் தாத்தா எஸ்.எம்.எஸ். செய்தால் இந்த வருட வேலண்டைன்ஸ் டேவுக்கு ப்ரபோஸ் செய்ய வசதியாக இருக்கும்.

காஸ்ட்யூமர் வாழ்க. படம் முழுக்க டாப்ஸ் லோ கட். ஒன்று பிளாக், பிங்க், ஒயிட்டென்று கலர் கலராக பிரேஸியரின் நுனி அல்லது தோளில் பிரேஸியரின் டேப் எட்டிப் பார்க்கிறது. பிராமாதம். பச்சைக்கலர் புடவையிலும் பாந்தம். பேக்கிரவுண்டு அபாரம். அடங்காப்பிடாரி பாட்டில் போனால் போகிறதென்று குட்டியூண்டு ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு தண்டர்பேர்ட் ஓட்டுகிறார். ரொமான்ஸ் ஃபீலிங்ஸால் இதயத்துடிப்பு அதிகமாகி இந்த டீனேஜிலேயே எனக்கு மாரடைப்பு வந்துவிடுமோவென்று அஞ்சுகிறேன்.

Siவா Maனசுலே Saக்தி - காதலித்தவர்களை, காதலிப்பவர்களை, காதலிக்கப் போகிறவர்களை குறிபார்த்து பிரயோகிக்கப்பட்ட லவ் ரிவால்வர். இயக்குனரின் குறி கச்சிதம். ஆறு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘திருடா திருடி’யின் செகண்ட் பார்ட். மல்டிஃபிளக்ஸ் ஆடியன்ஸ் ரிப்பீட்டட் ஆடியன்ஸாகப் போகிறார்கள். பட்ஜெட் தான் Low. படம் முழுக்க Love.

மந்தகதியில் தொடங்கும் படம் ரெண்டாவது ரீலில் இருந்து புல்லட் ட்ரேயினின் வேகம். க்ளைமேக்ஸ் மட்டும் கொஞ்சம் ஜவ்வு. ஆனால் அதிலும் பொங்குது லவ்வு. கதையென்று உருப்படியாக சொல்லிக்கொள்ள எதுவும் தேறவில்லையென்றாலும் நகைச்சுவைப் பின்னணியில் காட்சிகள் ரெட்டிப்பு தூள். இசை, ஒளி, ஒலி எல்லாவற்றிலும் சிக்கனமோ சிக்கனம். ரெண்டே ரெண்டு கேரக்டர். துணைக்கு ஓரிரண்டு சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ். அதனாலேயே கில்லியாக எடிட்டப்பட்ட மெகாசீரியல் ரேஞ்சுக்கு இருக்கிறது.

கரெண்ட் இமேஜ் பற்றி எந்த கவலையும் படாமல் ஜீவா பின்னியிருக்கிறார். ஆக்சுவலாக தனுஷுக்கு பொருந்தும் பாத்திரம் அது. ஸ்ரீதேவி மாதிரி ஜீவா மூக்கு ஆபரேஷன் செய்துக் கொண்டால் தேவலை. மத்தப்படி பார்த்ததுமே ஃபிகர்கள் காதலிக்க நினைக்கும் ஹேண்ட்சம் பாய். சந்தானம் கூட அழகாகத்தான் இருக்கிறார். கோமாளித்தனத்தை மூட்டைக் கட்டிவிட்டு ஏதாவது லவ் சப்ஜெக்ட்டில் ஹீரோவாக முயற்சிக்கலாம்.

விமர்சிக்க ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் இப்போதிருக்கும் ரொமான்ஸ் மூடுக்கு அது செட் ஆகாது. அதுமட்டுமில்லாமல் அடுத்த படத்துக்கு விகடன் குழுமம் ஓசி பாஸ் கொடுப்பதையும் கெடுத்துவிடும் என்பதால் வுடு ஜூட்.

எஸ்.எம்.எஸ். - கொண்டாட்ட மனநிலைக்கு நெம்புகோல்!


* - * - * - * - * - * - * - *

எஸ்.எம்.எஸ். படம் பார்த்து முடித்ததுமே 2001 பிப்ரவரி 14 கானல்நீர் போல மங்கலாக நினைவுக்கு வருகிறது. முதன்முதலாக ஐ லவ் யூ சொன்ன பெண்ணிடமிருந்தே தித்திக்கும் கிஃப்ட் கிடைத்தது என்றாலும் புவனாவிடம் சொன்ன ஐ லவ் யூ தான் எனக்கு ஆல்வேஸ் ஸ்பெஷல் (இவளிடம் சொன்னது எத்தனையாவது ஐ லவ் யூ என்று நினைவில்லை). ஏனென்றால் என் புத்திசாலித்தனத்தைப்(?) பார்த்து என் காதலை ஏற்றுக் கொண்ட முதல் பெண். அதுவுமில்லாமல் நான் லவ்விய ஃபிகர்களிலேயே ரொம்ப ரொம்ப சுமார் பீஸும் அவள்தான்.

--------------------------------------------

2001, பிப்ரவரி 14
இடம் : எழும்பூர் சங்கம் சினி காம்ப்ளக்ஸ் படிக்கட்டுகளில்.. பத்மம் திரையரங்கில் உள்ளம் கொள்ளை போகுதே ரிலீஸ்...

"உன்னை பர்ஸ்ட்டு எங்கே பார்த்தேன்னு ஞாபகம் இருக்கா?"

"இருக்கு. பஸ்லே சில்லறை இல்லாம உன்னை இறக்கி விட இருந்தாங்க. அப்போ சில்லறை கொடுத்தேன். அதை நீ திருப்பிக் கொடுக்கவே இல்லை"

"ஆமாம். அப்போ நீ ஸ்கூல் யூனிபார்ம்லே இருந்தே!"

"ம்ம்... விளையாட்டா ஆறுமாசம் ஆயிடிச்சி"

"உனக்கு ரஜினி புடிக்குமா? கமல் புடிக்குமா?"

"ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டிருக்கே?"

"ம்ம்ம்.. கொஞ்சம் கன்ப்யூஷன்லே இருக்கேன்!"

"என்ன கன்ப்யூஷன்"

"எப்படி சொல்லுறதுன்னு கன்ப்யூஷன்?"

"யாருகிட்டே எதை எப்படி சொல்லுறதுன்னு கன்ப்யூஷன்?"

"உங்கிட்டே தான்"

"பரவாயில்லை. சொல்லு. தப்பா நெனைச்சிக்க மாட்டேன்"

"ப்ராமிஸ்"

"காட் ப்ராமிஸ்"

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"

" ............................."

"உனக்கு இஷ்டம் இல்லியா?"

"லூசு.. கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?"

--------------------------------------------

புவனா எங்கிருந்தாலும் குழந்தை குட்டியோடு வாழ்க.

தொடர்புடைய பழையப் பதிவொன்று இங்கே.

* - * - * - * - * - * - * - *

கலாச்சார போலிஸ் ஐஜிக்களான ஸ்ரீராம் சேனாவினருக்கு என்னால் முடிந்த வேலண்டைன்ஸ் டே சிறப்புப் பரிசு.



சோஃபியா லாரன், எலிசபெத் டெய்லர் மாதிரியான எந்த ஆயாவோ கயட்டிப்போட்ட பிங்க் ஜட்டி.

தொடர்புடைய பழையப் பதிவொன்று இங்கே.

* - * - * - * - * - * - * - *

என்னைத் தெரியுமா?




கொல்டிக்கள் கூட இப்போதெல்லாம் லம்பாடி லுங்கி, டபுக்கு டபான் டான்ஸையெல்லாம் புறக்கணித்துவிட்டு அல்ட்ரா மாடர்னாக படமெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். லேட்டஸ்டாக வந்திருக்கும் சூப்பர் டப்பிங் படமிது. ஹீரோ (தெலுங்கு நாட்டாமை (பெத்தராயுடு) மோகன்பாபுவின் மகனாம்) ஒரு கஜினி. அதாவது மெமரி லாஸ் நோய் கொண்டவர். தூங்கி எழுந்ததுமே தூக்கத்துக்கு முன்பு நடந்தது எல்லாம் மறந்துவிடுமாம். ஆனால் எப்படியோ ‘அந்த’ மேட்டரில் மட்டும் கில்லாடியாக இருக்கிறார்.

ஓக்கே, லாஜிக்கையெல்லாம் மூட்டை கட்டிவிடுவோம். ஒருநாள் காலையில் தூங்கி எழுந்த ஹீரோ முந்தைய நாள் ராத்திரி ஒரு கொலை செய்துவிடுவதாக போலிஸ் கைது செய்கிறது. எனக்கு எதுவுமே ஞாபகமில்லை என்று வாதிடுகிறார் ஹீரோ. விசாரணையை ஒரு சூப்பர் ஃபிகர் ஐ.பி.எஸ். ஆபிஸர் நடத்துகிறார். க்ளைமேக்ஸில் இரண்டு மூன்று நாள் தூங்காமல் கொலை செய்தது யாரென்று ஹீரோ கண்டுபிடித்து விடுகிறார். மறுநாள் காலையில் நிரூபிக்க வேண்டிய நேரத்தில் தூங்கித் தொலைத்து விடுகிறார். அப்புறமென்ன? வண்ணத்திரையில் நீங்களே பாருங்கள். கொலையாளி யாரென்பது யாருமே எதிர்பாராத முடிவு. நல்ல த்ரில்லர்.

ஹீரோயின் ரியாசென். தாஜ்மஹாலில் மலைப்பாம்பு மாதிரி சப்பைப் ஃபிகராக இருந்தவர் திடீரென சமந்தா ஃபாக்ஸ் ரேஞ்சுக்கு சூப்பர் ஃபிகர் ஆகிவிட்டிருக்கிறார். அவருடைய ஒன்றரைக்கண் சிரிப்பு கூரான வாள் மாதிரி இதயத்தை அறுக்கிறது. ஹீரோ ஷாருக்கானை அச்சுஅசலாக இமிடேட் செய்கிறார். ஓக்கே, பையன் கூட சுமார் தான்.

படம் முழுக்க உபயோகித்திருக்கும் ஸ்பெஷல் கலர் கிரேடிங் ரிச்னஸ் தருகிறதென்றாலும் நேச்சுராலிட்டியைக் குறைக்கிறது. பாடல் காட்சிகளில் அநியாயத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ‘தண்ணிக் கருத்திருக்கு’ ரீமிக்ஸ் அபாரம். டப்பிங் படத்துக்கு ஒரு பழைய தமிழ் பாட்டின் ரீமிக்ஸ் என்பதை யாருமே சாத்தியமென்று நம்பமாட்டார்கள். சவாலாக எடுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார் எடிட்டர். லிப்ஸ் மூவ்மெண்ட்ஸ் மேட்ச் ஆகாத இடத்திலெல்லாம் மோஷன் ப்ளர் மாதிரியாக எஃபெக்ட்ஸ் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.

‘என்னைத் தெரியுமா?’ - எல்லோராலும் தெரிந்துக் கொள்ளப்பட வேண்டியவன்.

5 பிப்ரவரி, 2009

நான் கடவுள்


இயக்குனர் பாலாவின் படங்களில் மட்டுமல்ல.. தமிழின் சிறந்த படங்கள் பட்டியலிலும் நிச்சயமாக ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியும், உள்ளடக்கத் தரமும் தமிழ் சினிமாவை நிச்சயமாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். சீரியஸான நாவல் தரும் எல்லா உணர்வுகளையும் இப்படம் தருகிறது. ஒரு முழுமையான பின்நவீனத்துவப் படம். பிரதிக்குள்ளிருந்தே பிரதியை பகடி செய்யும் படைப்பிது.

இந்திய சினிமா இதுவரை கண்டிராத கதைக்களம். யாசகம் கேட்கும் விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றிய காட்சிகள் அதிகமென்றாலும் அவர்கள் மீது பரிதாபம் மட்டுமே படம் பார்க்கும் ரசிகனுக்கு ஏற்படுவதை பலவந்தமாக தடுத்திருக்கிறார் பாலா. அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம், அழுகிறோம், கோபப்படுகிறோம், நெகிழ்கிறோம், இத்யாதி.. இத்யாதி.. ஹேட்ஸ் ஆஃப் பாலா.

இதுதான் படத்தின் கதை என்று ஆரம்பக்காட்சிகளிலேயே தெளிவுபடுத்திவிடும் இயக்குனர் பிற்பாடு கதையை மறந்து காட்சிகளை மையப்படுத்தியே படத்தை நகர்த்திச் செல்கிறார். இசையமைப்பாளர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என்று அவரவர் தரப்பும் முழுவீச்சில் வித்தையைக் காட்ட இயக்குனர் எடுக்க நினைத்ததை விட நேர்த்தி சுலபமாக கைகூடுகிறது. இவ்வளவு மூர்க்கமான படத்துக்கு க்ளைமேக்ஸ் சப்பை என்பதால் படம் முடிந்தவுடன் கைத்தட்ட மனமின்றி வெறுமை சூழ்கிறது.

நாயகன், நாயகி இருவரை சுற்றிதான் கதை என்ற தமிழ் சினிமா மரபை பாலா கொஞ்சம் கூட மதிக்கவேயில்லை. ஒவ்வொரு பாத்திரமும் ரிலே ரேஸ் மாதிரி ஓடி படத்தின் சுமையை பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படத்தில் ஆர்யாவுக்கு கிடைத்த ஓபனிங் சீன் மாதிரி எந்த ஹீரோவுக்காவது இதுவரை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். அழகான அஹோரி. இவரிவர் தான் சிறப்பாக நடித்தார் என்று சுட்டிக்காட்ட இயலாத அளவுக்கு படத்தில் பங்கேற்ற நண்டு, சிண்டுக்கள் வரை எல்லோருமே பர்ஃபெக்ட் ஃபெர்பாமன்ஸ்.

இளையராஜாவின் இசை படத்தின் பல காட்சிகளை நடத்திச் செல்கிறது. வசனங்கள் இல்லாத இடத்திலும் யாரோ பேசிக்கொண்டிருப்பது போன்றே, கதை சொல்லிக் கொண்டிருப்பது போன்றே ஒரு பிரமை. கோல்டன் க்ளோப், ஆஸ்கர் விருதுகள் தரும் கம்முனாட்டிகள் குழுவுக்கு இப்படி ஒரு மேதை இங்கே இருப்பதாவது தெரியுமா என்பதே சந்தேகம். மேஸ்ட்ரோவுக்கு இணை மேஸ்ட்ரோ மட்டுமே.

ஜெயமோகனின் பகடி பலாப்பழம் மாதிரி இனிக்கிறது. வசன சூறாவளியாய், சுனாமியாய் எட்டுத்திக்கும் சுழன்றடித்து வியாபித்திருக்கிறார். மதம், கடவுள், சினிமா, அரசு, காவல்துறை என்று தமிழ்ச்சூழலில் பலமாக அஸ்திவாரம் போட்டு நிறுவப்பட்டிருக்கும் அதிகாரமைய கேந்திரங்களை இரக்கமேயில்லாமல் கேலிக்குள்ளாக்குகிறது அவரது கூர்மையான பேனா. ‘ஜெயமோகனா இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்?’ என்று அதிர்ச்சி மதிப்பீடுகளையும் மீறி கைத்தட்டலை அள்ளிச் செல்கிறது வசனங்கள். ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

“கவலைப்படாதீங்க எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்” என்றொருவர் சொல்ல மற்றொருவர், “தேவடியா மகன். புளுத்துவான்” என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகள் இனியும் ஜெமோவை நம்பலாமா? அண்ணாச்சி நைசாக இறுதிக்காட்சிகளில் தன்னுடைய இந்துத்துவா விசுவாசத்தைக் காட்டவும் தவறவில்லை. இக்கட்டான நேரத்தில் நாயகியை இந்து சாமியார் காப்பாற்ற, அதன் பின்னர் மாதாவை வேண்டி அவளுக்கு எந்த பிரயோசனமும் இல்லையாம். படத்தோடு ஒட்டாமல் க்ளைமேக்ஸ் வரும் நேரத்தில் தேவாலயமும், கன்னியாஸ்திரியும், நாயகியின் ஜெபமும் காட்டப்பட்டது வேண்டுமென்றே ஒட்டவைத்தது போல் தெரிகிறது. இந்த நுண்ணரசியலைக் கண்டு மனம் வெறுத்து தீக்குளிக்க முடிவு செய்திருக்கும் தோழர் அதிஷாவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.

க்ளைமேக்ஸ் இதுதான் என்பதை படம் ஆரம்பிக்கும்போது இயக்குனர் முடிவு செய்திருக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இடைவேளைக்குப் பிறகு குருட்டாம் போக்கில் அதுபாட்டுக்கு செல்லும் படம் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க பதட்டத்தோடு எடிட் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பாதியின் க்ரிப் இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை.

ஒரு நார்மலான மனிதரால் இதுபோன்ற கதையை சிந்தித்து படமெடுப்பது என்பது சாத்தியமேயில்லாத ஒன்று. மிகக்கொடூரமான காட்சிகள் படம் நெடுகிலும் கொடூரத் தோரணமாய் கட்டி தொங்க விடப்பட்டிருக்கிறது. இளகிய மனம் படைத்தவர்களும், பெண்களும், குழந்தைகளும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய படமிது. ஹேராம் படத்தில் ஒரு குருட்டுப்பெண் குடிசையில் நடந்துவரும் காட்சி நினைவிருக்கிறதா? மனதை உலுக்கும் அந்த ஒரு காட்சி தரும் தாக்கத்தையே இப்படத்தில் எல்லாக் காட்சிகளும் தருகிறது. ஒருமுறை படம் பார்த்தவர்களே இரண்டாவது முறை பார்ப்பது சந்தேகம்.

சென்னையின் சத்யம், ஐனாக்ஸுகளில் யுவகிருஷ்ணாக்களும், கேபிள்சங்கர்களும் பார்த்து பாராட்டி, எழுந்து நின்று கைத்தட்டக்கூடும். உசிலம்பட்டி கண்ணனில் படம் பார்க்கும் முனுசாமிகளும், மாடசாமிகளும் இப்படத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வசூல்ரீதியான மிகப்பெரிய வெற்றியை இப்படம் தவறவிடக்கூடும் என்றாலும் பல்வேறு விருதுகள் பட்டியலில் இப்போதே துண்டுபோட்டு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. லாபம் பற்றி சிந்திக்காமல் கலைச்சேவையாக இப்படத்தை தைரியமாக தயாரித்த தயாரிப்பாளர் பாராட்டப்பட வேண்டியவர்.

கொண்டாட்ட சூழலுக்கான படம் இது இல்லை என்றாலும் இயக்குனர் பாலா பல்லக்கில் வைத்து தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியவர். ஹேராமுக்குப் பிறகு இசையும், இயக்கமும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருக்கிறது.

இக்கட்டான சூழலில் தமிழ் சினிமாவை ரட்சிக்க வந்திருக்கிறார் கடவுள்!


இப்படத்தில் பூஜா நடித்த யாசகத் தோழி பாத்திரத்துக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கார்த்திகா. படப்பிடிப்புக்கு மார்புக்கச்சை (பிரா) அணிந்து வந்ததால் படத்திலிருந்து இயக்குனரால் நீக்கப்பட்டாராம். இந்த வண்ணப் படத்தை பார்க்கும்போது மார்புக்கச்சை அணியாமல் அவர் நடித்திருந்தால் படம் பார்த்த பலபேருக்கு மாரடைப்பு வந்திருக்கும் என்பது உறுதியாகிறது.