21 பிப்ரவரி, 2009

தநா-07-அல-4777


தநா-07-அல-4777 என்பது எம்.ஜி.ஆரின் அம்பாஸடர் கார் நம்பராம். டாக்ஸி நம்பர் 9211 என்ற இந்திப்படத்தின் ரீமேக். நானாபடேகர் நடித்த பாத்திரத்துக்கு பசுபதியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? அஞ்சாதேயில் அஞ்சவைத்த அஜ்மல் இந்தப் படத்தில் இளம்பெண்களை கொஞ்சவைக்கிறார்.

பணக்காரர்கள் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு பயணி. பணக்காரர்களைத் தவிர எல்லோரும் வாழவேண்டும் என்று நினைக்கிற ஒரு டாக்ஸி ட்ரைவர். இருவரும் ஒரு புள்ளியில் எதேச்சையாக இணைவதால் ஏற்படும் ஒரு நாள் பிரச்சினைகள் தான் இரண்டுமணி நேரப்படம். தமிழ் சினிமாவின் அஸ்திவாரமான காதல், ஆக்சன் கருமாந்திரங்களுக்கு இடமில்லாமல் விறுவிறுப்பான படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் லட்சுமிகாந்தன்.

வசனம் யார் எழுதியதென்று தெரியவில்லை. பல இடங்களில் வசனத்தின் நிறம் பச்சை.

ஒரு விலைமாதுவுக்கும் டாக்ஸி டிரைவர் பசுபதிக்கும் நடக்கும் உரையாடல்...

"மணி வர்றியா?"

"........."

"யோவ் சவாரிக்கு வர்றியான்னு கேட்டேன்யா.."

"ஏறு"

"ஏன்யா அசிங்கமா பேசுறே?"

"........."

"ஏய் நிறுத்து.. நிறுத்து.. நிறுத்து.. பார்ட்டி வெயிட் பண்றான்!"

"அவனுக்கு ஸ்டியரிங்கையே பிடிச்சி வண்டி ஓட்டத் தெரியாது!"

பசுபதிக்கு ஒரு ஆயாவை ஜோடியாக போட்டிருக்கிறார்கள். அய்யய்யோ அது சிம்ரனாம். சிம்ரனுக்கெல்லாம் கூடவா வயதாக வேண்டும்? கிழடு தட்டிப்போய் கொடுமையாக இருக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் குத்துவிளக்கு மீனாட்சி முற்றும் துறந்த முனிவராகி விட முயற்சிக்கிறாரோ? நல்லவேளையாக முற்றுமில்லாமல் முக்கால் வாசி மட்டுமே துறந்ததால் தப்பித்தோம்.

படம் ஓடும் இரண்டு மணி நேரமும் ஜெட் வேகம் தான். பாடல்களே தேவையில்லாத படமிது. ரெண்டு ஹீரோக்களும் ஓப்பனிங் சாங் அட்டர் வேஸ்ட். அதிலும் ஆத்திச்சூடி ரீமிக்ஸிங் கொடுமையிலும் கொடுமை. இந்த கருமாந்திரத்தைப் பார்த்து சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் ரீமிக்ஸ் செய்து கொடுமைப்படுத்துவார்களோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

படத்தின் கதை ரொம்ப சிம்பிள். அதை சொல்லியிருக்கும் விதம் தான் மேட்டரே. சிம்ரனும் பசுபதியும் இணையும் க்ளைமேக்ஸ் அட்டகாசம். குசேலன் மாதிரி குப்பைத் தொட்டிகளை தவிர்த்து இதுபோன்ற பாத்திரங்களையே இனியும் பசுபதி தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். தேசிய விருது ரொம்ப தூரத்தில் இல்லை.

தநா-07-அல-4777 - வேகத்தை ரசிப்பவர்கள் ஏறலாம்.

* - * - * - * - * - * - * - * - * - *
பெருமாள்


மீனாட்சி ஹீரோயினாக நடித்த இன்னொரு படம். டாக்ஸி படத்திலாவது பரவாயில்லை, இந்தப் படத்தில் பொம்பளை டிராகுலா மாதிரி கொடூரமாக இருக்கிறார் மீனாட்சி.

மீனாட்சி ஏமாற்றினாலும் இன்னொரு ஹீரோயினான நமீதா முழுத்திருப்திக்கு கேரண்டி. அவரது இடுப்பு சதை மேடு மட்டும் தர்ப்பூசணிப்பழம் சைஸில் இருக்கிறது. பிரம்மாண்ட படமென்றால் நமீதாவை வெச்சித்தான் எடுக்கணும்.

நமீதாவைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி படத்தில் ஒன்றுமேயில்லை என்பது பெருத்த சோகம். ஏதோ சோஷியல் மெசேஜ் சொல்லப் போகிற பாவலாவோடு டைட்டிலை காட்டுகிறார்கள். "ஈ" படத்தைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட கொசு பெருமாள். வர வர ஒரு விவேக் நடித்தாலே கடியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரெண்டு விவேக். காமெடி என்ற பேரில் ரத்தம் வர வர ரசிகர்களின் கழுத்தறுக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக பாட்டுக்கள் மட்டும் சூப்பர். அதிலும் 'காதல் வைபோகமே' கலக்கல். மு.க.மு.அறிவுநிதிக்கு அச்சுஅசலாக அவர் அப்பாவின் வாய்ஸ். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா' ரீங்காரம் அடிக்கிறது. தியேட்டர் முழுக்க மு.க.மு.அறிவுநிதி நற்பணி மன்றத்தினர் (?) பேனர் வைத்து அமர்க்களம் செய்கிறார்கள்.

பெருமாள் ‍‍- பேரை மாதிரியே படமும் மொக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக