வெளியூரிலிருந்து வருபவர்கள் சென்னையை பாலைவனம் என்று விமர்சிக்கும்போது சுருக்கென்று குத்தும்.
எந்த நகரத்துக்கு போனாலும் சென்னை மாதிரிதான் இருக்கிறது, அப்புறம் ஏன் சென்னையை மட்டும் இப்படி தனித்துக் குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
பல்லாவரம், பரங்கிமலை உச்சியில் ஏறிப் பார்த்தால் சென்னை என்னவோ பசுமையானதாகதான் எனக்குத் தோன்றுகிறது.
இத்தனைக்கும் ஆசியாவிலேயே ஒரு நகருக்கு மத்தியில் மிகப்பெரிய காடு இருக்கிறது என்றால், அது சென்னையில்தான்.
நவம்பர், டிசம்பர் மாலை வேளைகளில் கிண்டி, வேளச்சேரி பக்கமாக போனால் ஏதோ மலைவாசஸ்தலத்தில் இருப்பதைப் போன்ற சில்லிப்பை உணரலாம்.
எனக்கு நினைவு தெரிந்த அண்ணாசாலை இருபுறமும் மரங்கள் சூழ பசுமையாக எங்கும் நிழலாகவே இருந்தது.
குறிப்பாக சைதாப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை வரை அவ்வளவு மரங்கள். கே.கே.நகர் சாலைகளில் வெயில் தரையிலேயே படாத வண்ணம் நிழல்குடை.
2000ங்களின் தொடக்கம் வரை திருவான்மியூர் பக்கம் சாலையோரங்களில் நிறைய பனைமரங்கள். இப்போதும் மடிப்பாக்கம் ஏரிக்கரையோரம் நிறைய பனைமரங்களை பார்க்கலாம். வேளச்சேரி, மடிப்பாக்கமெல்லாம் வயலும், மடுவும், சிற்றாறுகளும், காடுகளுமாகதான் இருந்தது.
செல்லம்மாள் காலேஜ் அமைந்திருக்கும் ஹால்டா சிக்னல் பகுதியில் பேருந்துகள் 30 கி.மீ. வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஏனெனில் ஆங்காங்கே ‘மான்கள் குறுக்கிடும்’ போர்டு, வனத்துறையால் வைக்கப்பட்டிருக்கும்.
தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி சென்னையில் நடக்கும் வரை வேளச்சேரி சாலையின் இருபுறமும் மரங்களும், புதர்களுமாக அத்தனை பசுமையாக இருந்தது.
சென்னையில் ஒரே ஒரு சந்தனமரம் இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே கவர்னர் மாளிகை வளாகத்தில் காம்பவுண்டை ஒட்டி இருந்தது. அதற்கு தனியாக பாதுகாப்ப்பு சுவரெல்லாம் கட்டியிருந்தார்கள். ஆனால், இரவோடு இரவாக எவனோ ஏணி வைத்து ஏறி வெட்டிக்கொண்டு போய்விட்டான். ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
இப்போதும்கூட அவ்வளவு மோசமென்று எனக்குத் தோன்றவில்லை. அடையாறு, தரமணியெல்லாம் பசுமையாகதான் இருக்கிறது. சிட்டுக்குருவியை காணோம், தூக்கணாங்குருவியை காணோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஓரளவு உண்மைதான். ஆனாலும் இன்னமும் மீன்கொத்தியையெல்லாம் கூட நான் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
சென்னைக்கு புயல்கள் புதிதல்ல. ஆனாலும், இத்தனை மரங்கள் ஒட்டுமொத்தமாக வீழ்வதை பிறந்ததிலிருந்து சென்னைவாசியாக இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன்.
ஏனெனில், மேலே நான் சென்னையின் பழைய மரங்களாக குறிப்பிட்டவை அரசமரம், ஆலமரம், வேம்பு, புளியமரம், பூவரசம், கொடுக்காபுளி, அசோகாமரம், மாமரம், வேலிகாத்தான், ஒதியமரம் உள்ளிட்ட நம் உள்ளூர் சரக்குகள்.
தற்போது வீழ்ந்திருப்பவை பெரும்பாலும் fast growing tress என்று சொல்லப்படும் மேற்கத்திய இறக்குமதிகள். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளில் NGOக்களாலும், தலைவர்களின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சிகளாலும், அப்துல்கலாம் ரசிகர்களாலும் வைக்கப்பட்டவை.
பார்ப்பதற்கு மரம் போன்று தெரிகிறதே தவிர, இவையெல்லாம் கடல்பாறை செடிகளுக்கு இணையான உறுதியோடுதான் இருந்திருக்கின்றன என்பது வர்தா காற்றில் தெரிந்துவிட்டது. சாலையில் விழுந்த மரக்கிளைகள் மீது வண்டிகள் ஏறினால், கிளைகள் எல்லாம் உடையாமல் கூழாகின்றன என்றால் என்ன அர்த்தம்? இதைப் போய் மரமென்று சொல்லலாமா?
ஒரு வேப்பமரமும், அசோகமரமும் புயலை எதிர்கொள்ளும் தன்மையே அலாதியானது. பெரும் காற்று அடிக்கும்போது தன்னுடைய எடையை குறைத்துக்கொள்ள வேகமாக சிலிர்த்துக் கொண்டு சிறுகிளைகளை அதுவாகவே முறித்துக் கொள்ளும். இதனால் ஒட்டுமொத்த மரமும் வேரோடு வீழாமல் ‘தந்திரமாக’ தப்பித்துவிடும். இந்த புத்திசாலித்தனம் இல்லாத fancy மரங்கள் தேமேவென்று வேரோடு ஏதோ கார் மீது சாய்ந்து செய்தித்தாள்களுக்கு போஸ் கொடுக்கின்றன.
முன்பெல்லாம் வனத்துறையின் நர்சரிகளில் போய் மரங்கள் கேட்டால் நீலகிரி, வேம்பு மாதிரி மருத்துவக் குணங்கள் நிரம்பிய மரங்களை தருவார்கள். இப்போது இந்த அதிவேக வளர்ச்சி மரங்களை தந்துத் தொலைக்கிறார்கள். அதன் விளைவுதான் நகரெங்கும் இருந்த மரங்கள் வீழ்ந்துக் கிடக்கும் காட்சி.
ஒரு கிரவுண்டு மனையில் அரை கிரவுண்டுக்கு வீடு கட்டி நான் வசிக்கிறேன். அமெரிக்க சேட்டிலைட்டுகளால் கூட எங்கள் வீட்டை கண்காணிக்க முடியாத அளவுக்கு 2400 சதுர அடிக்கும் வெயிலே விழாத அளவுக்கு எங்கள் வீட்டை மரங்கள் சூழ்ந்திருக்கின்றன.
என்னுடைய வீட்டில் ஒரு அசோகமரம் இருக்கிறது. 1993ஆம் ஆண்டு வைக்கப்பட்ட அந்த மரத்துக்கு வயது 23. ஆனால், நம் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் வெறும் இரண்டே வயதான ஒரு fast growing மரத்தின் அளவுதான் வளர்ந்திருக்கும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டு வேலியோரமாக சுயம்புவாக வளர ஆரம்பித்த ஒதியமரம் இன்னும் கூட மரமாக உருவெடுக்கவில்லை.
நம் உள்ளூர் மரங்கள் அத்தனையுமே இப்படிதான். மிக மெதுவாக வளரும். ஆனால், அதனுடைய முதுகெலும்பு மிகவும் வலிமையானது. சுழற்காற்றினைகூட சுலபமாக எதிர்கொள்ளக் கூடியது. ஒரு வேம்பு, மரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர குறைந்தது நான்கு ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால், இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அது நமக்கு நிழல் தந்து, குளிர்ச்சியான காற்று தந்து, பறவைகளுக்கு இருப்பிடம் தந்து வாழ்ந்துக்கொண்டே இருக்கும்.
வர்தா புயல் நமக்கு ஒரு படிப்பினை கொடுத்திருக்கிறது. நம்முடைய நாட்டுக்கட்டை மரங்கள்தான் நமக்கு ஏற்றது. குல்மொஹர் வகையறாக்கள் வெறும் அழகுக்குதானே தவிர, ஆபத்துக்கு உதவாது.
வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி ஆகியவைதான் சாலைகளில் வைக்கக்கூடிய மரங்கள்.
வீடுகளில் நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ போன்ற மரங்களை வளர்க்கலாம்.
உங்கள் வீட்டுக்கு நிறைய பறவைகள் வருகை தரவேண்டும் என்று விரும்பினீர்களேயானால் கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி போன்ற மரங்களை வளருங்கள்.
பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை ஆகியவை வளர்த்தால் அழகிய பூக்களை பெறலாம்.
அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.
“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று உங்களில் சிலர் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.
மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?
வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
எப்போது நடலாம்?
மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.
மரம் வளர்ப்பு : இரு மகிழ்ச்சித் துளிகள்!
• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.
• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.
உங்களுக்கு நேரமிருந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த கட்டுரையையும் வாசிக்கலாம் : பணம் மரத்தில்தான் காய்க்கிறது!