எவ்வளவு உருவினாலும்.. மன்னிக்கவும்.. உதைத்தாலும் ஸ்கூட்டர் ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை என்பதுதான் படத்தின் ஒன்லைன். இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இதே லைனை வைத்துக்கொண்டு காசிநாத்தின் ‘முதலிரவே வா வா’ கன்னடத்திலும், தமிழிலும் வூடு கட்டி அடித்து தயாரிப்பாளர் ஏக்நாத்தின் டப்பாவை கதற கதற ரொப்பியிருக்கிறது. ஆனால் காசிநாத்துக்கு இருந்த ‘தில்’ இயக்குனர் பிரசன்னாவுக்கு இல்லையென்பதால் வேலு மிலிட்டரியில் தயிர்சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டமாதிரி சப்பென்று ஆகிவிட்டது.
திரைக்கதையின் அடிப்படையான விஷயம் ஒன்று உண்டு. வெற்றிகரமான எந்தவொரு படத்திலும் இதை நீங்கள் கவனிக்கலாம். முரணை மிகச்சரியாக இண்டர்வெல் ப்ளாக்கில்தான் சொருக வேண்டும். ஹீரோ பிரசன்னாவின் பேட்டரி ‘செல்ஃப்’ எடுக்கவில்லை என்பதை படம் ஆரம்பித்து, கொஞ்ச நேரத்திலேயே ‘லீக்’ செய்துவிடுவதால், முழுப்படத்துக்கும் சுவாரஸ்யமாக ‘சீன்’ பிடிக்கமுடியாமல், ‘ஃபோர்ப்ளே’ செய்தே க்ளைமேக்ஸ் வரை ஜவ்வடிக்க வேண்டியதாகி விட்டது.
படத்தின் டைட்டிலில் தொடங்கி ஏதோ ஆவணப்பட எஃபெக்டில் ஒரு பெண் குழந்தை எப்படி வளர்ந்து பெரியவளாகிறாள் என்று வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது. படம் முழுக்க ஆங்காங்கே யார் யாரோ வாய்ஸ் ஓவர் கொடுக்கிறார்கள். ரொம்ப ஓவர். கதை சொல்வது யாரென்று பிடிபடாமல் ஒரு மாதிரியாக ‘நான்லீனியராக’ குழம்பிப் போகிறோம். அவசரத்துக்கு ஒரு போன் செய்யவோ, தம் அடிக்கவோ ரெண்டு நிமிஷம் வெளியே போய்விட்டு வந்தால், வேறு யாரோ கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மிக தைரியமான ஒரு தீமை எடுத்துக்கொண்டு, ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுத்துவிடுவார்களோ என்கிற பயத்திலேயே மிக பலவீனமான படத்தை கொடுத்திருக்கிறார்கள். இறங்கி குத்து, குத்துவென குத்தியிருக்க வேண்டாமா? எஸ்.ஜே.சூர்யாவும், பாக்யராஜும் இதே கதையில் களமிறங்கி இருந்தால் தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே எப்படிப்பட்ட ‘எழுச்சி’ ஏற்பட்டிருக்கும்.
ஹீரோ பிரசன்னாவுக்கு இம்மாதிரி ‘எழுச்சி’ சாத்தியப்படாமல் போனதற்கு ‘பிட்ச்’ சரியில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாமென்று, சில குளோசப் ஷாட்களை கண்டபோது தோன்றியது. முந்தானை முடிச்சில் பாக்யராஜ் ஏன் தீபாவை போட்டார் என்பதை இளம் இயக்குனர்கள் ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்தால், அவர்கள் அனைவருமே வெள்ளிவிழா இயக்குனர்களாக பரிணமிக்கலாம்.
படம் ரொம்ப அந்நியமாக தெரிவதற்கு முக்கியமான காரணம், படத்தின் பார்ப்பனத்தன்மை. தமிழ்ச்சூழலில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பார்ப்பனர்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் சின்சியராக இயக்குனர் பதிவு செய்ய நினைத்தாலும், ஏதோ உஸ்பெகிஸ்தான் படத்தை சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் பார்ப்பதைப் போன்ற எண்ணமே ரிச்சா வலிக்கும் முனுசாமிக்கு ஏற்படுகிறது. ஏற்கனவெ மேடைநாடகம், செவ்வாய்க்கிழமை தூர்தர்ஷன் நாடகம் என்று அடுத்தடுத்து பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து அந்த களங்களையெல்லாம் வெற்றிகரமாக சமாதி கட்டிவிட்டார்கள். எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான கதைக்கு பார்ப்பன குடும்பக்களம் (வியட்நாம் வீடு, ஆஹா போன்றவை உதாரணம்) இருந்தால் ஓக்கே. இப்படம் அமெரிக்கவாழ் பார்ப்பனர்கள் ‘ஹேப்பி’ ஆவதற்கு என்றே எடுக்கப்பட்டதுமாதிரி இருக்கிறது. ‘ஸ்கைப் வாத்தியார்’ மாதிரி சின்சியர் கிரியேட்டிவிட்டியை பார்த்து, தமிழ்நாட்டில் நூற்றுக்கு மூன்று பேர்தான் சிரிக்கிறார்கள். மீதி தொண்ணூற்றியேழு பேருக்கு வாத்யார் என்றால் எம்.ஜி.ஆரோ, சுஜாதாவோ அல்லது ஸ்கூல் வாத்யாரோதான்.
அடிக்கடி பிரசன்னாவின் வாய்ஸ் ஓவரில் கப்பல் கவிழ்ந்துவிட்டது மாதிரி ‘பெரிய பிரச்சினை’ ஏதாவது புதுசு புதுசாக சொல்லப்படுகிறது. ஏதோ சங்கீத்தோ என்ன எழவு சடங்கோ, அதில் காக்ராசோளி போடுவேன் என்று மணப்பெண் சொல்வதும், அதை மாமியார்காரி எதிர்ப்பதும் அவ்வளவு பெரிய பிரச்சினையா என்று தெரியவில்லை. க்ளைமேக்ஸில் ஹீரோயினை ஆச்சரியப்படுத்த, ஹீரோ எங்கேயோ படகில் அழைத்துப்போய் மெகாசீரியலுக்கு சீரியல் லைட் செட் போட்டமாதிரி தீவையெல்லாம் சுற்றிக் காட்டுகிறார். லோ பட்ஜெட் படமென்பதால் வேறு வழியில்லாமல் ஹீரோயின் ஆச்சரியப்பட்டு, ஹீரோவை செம லவ்வு லவ்வுகிறார் (ரோஜாவில் மதுபாலாவின் கண்களை மூடிக்கொண்டு போய், புதுவெள்ளை மழை சாங் ஸ்டார்ட் ஆகும்போது அரவிந்த்சாமி திறப்பாரே, மதுபாலா அப்படியே கவிழ்ந்திடுவாரே அதுமாதிரி). நமக்குதான் அக்கடாவென்று இருக்கிறது.
ஒரு வழியாக படம் முடியும் முடியுமென்று ஆத்திரத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, டாய்லெட்டுக்கு போக முனையும்போது தேவையில்லாமல் பின்னிணைப்பாக காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒருவழியாக ஹெலிகாப்டர் ‘ஷாட்’ அடித்து ஹீரோ பிரசன்னா ஆட்டத்தை முடிக்கிறார். நமக்குதான் முடியலை.
ஹஹஹா.. எனக்கும் அப்படித்தான் தோன்றியது நண்பா.. "அந்த" விஷயத்த கொஞ்சம் ஓவரா டைம் எடுத்து சொல்லி வீனடிச்சுட்டாங்க..
பதிலளிநீக்குAs usual 'NICE' Review...
பதிலளிநீக்குMunthanai mudichu pada heroine Oorvasi onnum avvalavu super figure illai.
பதிலளிநீக்குMukiyama antha Bagyaraj charactor-ku sabalam undu pannum alavuku figure kidaiyathu.
But, Rasigargalai antha Hero charactor-kul kondu povatharkum, Kathai-oda ondri poka vaikavum(sub conscious-a)....Deepa charactor-a potturupaaru. antha ponnum chumma thaluk thaluk-nu vanthu Rasigargalin antha sabala tempo-vai padam muluvathum thooki vaikum.But, Padam sentiment-ku travel akurapo Deepa-va thangachi-nu solli veliyethi...Rasigargalai-um antha mood-la irunthu homely-ana Oorvasi charactor-ta ondri poka vaichuduvaru.
Ethuku rendu charactor...oru Heroine-yey use panni rendu mood-aiyum vara vaikalamey-nu kekalam.
but, antha mathiri kidairathu kastam.more over, namma aalunga atha othukka mattaanga.pondati homely-aavum...seight adikra ponnunga sexy-avum ethir paakura charactor thaan namma.
Ithu thaan ennoda understanding...Am I correct Sir? :)
Movie is ok. THis is typical Drivda opposition to anything brahmin. Which world are you in? Vathiyar means MGR or School teacher, come out of your shell you idiot,
பதிலளிநீக்குஏற்கனவெ மேடைநாடகம், செவ்வாய்க்கிழமை தூர்தர்ஷன் நாடகம் என்று அடுத்தடுத்து பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து அந்த களங்களையெல்லாம் வெற்றிகரமாக சமாதி கட்டிவிட்டார்கள்.
பதிலளிநீக்கு-- Thank God someone has said it in the open forum. All sabhas in Chennai will rent only to Brahmin drama troupes - Crazy, Ygp, Sve, kathadi...,
Another big noise created is December music festival. Brahmin singers deliberately avoid tamil songs. K Balachander advised these people 20 years back in Sindhu Bhairavi, still these people have not changed.
படம் ரொம்ப அந்நியமாக தெரிவதற்கு முக்கியமான காரணம், படத்தின் பார்ப்பனத்தன்மை. தமிழ்ச்சூழலில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பார்ப்பனர்களின் கலாச்சாரத்தையும், மொழியையும்
-- Brahmins even after so many years never mingle with others but they advise others like muslims to Indianise.
No Brahmin expressed his voice against the genocide of tamils in Lanka.
Recent trend in Brahmin blogs is advising Sankarraman family to forget his murder and get on with their remaining life.
"//எவ்வளவு உருவினாலும்.. மன்னிக்கவும்.. உதைத்தாலும் ஸ்கூட்டர் ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை என்பதுதான் படத்தின் ஒன்லைன்//" என்ற இந்த முதல் வரியிலேயே விமர்சனம் "மங்கல்யான்"வேகத்தில் சூடு பிடிக்கிறது ...அருமையான் நடை .....சூப்பர் சார்
பதிலளிநீக்கு// தமிழ்நாட்டில் நூற்றுக்கு "மூன்று" பேர்தான் சிரிக்கிறார்கள். ///
பதிலளிநீக்குசதவீத கணக்கு ?!!! சூப்பர் லக்கி....
APR