இணையத்தின் வழியாக கட்டமைக்கப்படும் அபிப்ராயங்கள் ஏனோ எனக்கு பெருமளவு ஏமாற்றத்தையே வழங்குகின்றன. லேட்டஸ்டாக பல்பு வாங்கியது ‘விடியும் முன்’.
படம் பார்த்ததிலிருந்து ஒருமாதிரி மனம் நிலை கொள்ளாமல், இந்நொடி வரை பதட்டமாகவே உணர்கிறேன். ஒரு மாதிரியான மோசமான மனநிலை இது. எதிலும் மனதை முழுமையாக ஈடுபடுத்த முடியாதபடி தொந்தரவு செய்யக்கூடிய உளவியல் சிக்கல் இது. இந்நிலை உங்களில் யாருக்கும் வரவேண்டாம். தயவுசெய்து ‘விடியும் முன்’ படத்தை தியேட்டரிலோ, திருட்டு டிவிடியிலோ கூட பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திரைப்படங்களை பற்றி எழுதுவதற்கு எனக்கு முன்மாதிரியாக விளங்கும் அமரர் எஸ்.ஏ.பி.யின் திரைப்பட விமர்சனக் கொள்கைக்கு எதிர்மாறான கோரிக்கைதான் இது என்றாலும் வேறு வழியில்லை.
விடியும் முன் படத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும்?
ஒன்று : காமக்கதை எழுதுபவனோ, நீலப்படம் எடுப்பவனோ கூட நம் சூழலில் ‘ஆண்டி’களை வைத்துதான் எடுப்பானே தவிர, குழந்தைகளை முன்வைத்து கற்பனை செய்யமாட்டான். குறைந்தபட்ச அறம் என்பது அயோக்கியனுக்கும் உண்டு. பிட்டு படங்களையோ, கதைகளையோ விரும்பி வாசிக்கக்கூடிய நம்மைப் போன்ற அயோக்கியர்களும் அதில் ‘குழந்தை’ சம்பந்தப்படுவதை விரும்புவதில்லை.
இரண்டு : விலை மாது ஒருத்தி பதினோரு, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க பெண்குழந்தையை ஒரு நாள் ஒப்பந்தத்துக்கு ஒரு பெரிய மனிதருக்கு கூட்டிக்கொடுக்க அழைத்து வருகிறாள். அந்த குழந்தைக்கு ஒப்பனை செய்யும் காட்சியை எல்லாம் காட்டுவது என்பது மனநிலை பிறழ்ந்த நிலையிலிருக்கும் ஒரு இயக்குனரின் கற்பனையில் மட்டுமே உதிக்கும். அப்போது குழந்தை கேட்கிறாள் : “நீ மேக்கப் போட்டுக்கலையா?”. விலைமாதுவின் பதில் : “இன்னைக்கு நீ தான் ராணி”
மூன்று : மேலே அறையில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்கிறது. கீழே இருக்கும் விலைமாது ஓடிப்போய் பார்க்கிறாள். குழந்தை கைகள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கிறாள். பெரிய மனிதர் கையில் க்ளவுஸ் அணிந்து, ஒரு ப்ளேடு வைத்திருக்கிறார். ஆபாசமாக எடுக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும், கண்ணியமாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர் என்று ஏதோ ஒரு விமர்சன மாகானுபவன் இணையத்தில் எழுதியிருந்தார். நேரடிக்காட்சிதான் ஆபாசமா? கையில் ப்ளேடு வைத்திருக்கிறார், அடுத்து அவர் என்ன செய்ய உத்தேசித்திருப்பார் என்று ரசிகனை யூகிக்க வைப்பதை மாதிரி ஆபாசம் நேரடியான உடலுறவுக் காட்சியில் கூட வெளிப்படாது. நேரடிக் காட்சிகளில் உருவாகும் கிளர்ச்சியின் பாதிப்பு சில மணி நேரத்துக்குதான். ஆனால் இதுபோன்ற காட்சிகள் சாதாரணர்களையும் வக்கிரர்களாக மாற்றக்கூடிய ஆபத்தான ஆயுதங்கள்.
இந்தப் படத்தை ‘ஆகா, ஓகோ’வென்று பாராட்டுபவர்கள் எதற்காக பாராட்டுகிறார்கள் என்றே புரியவில்லை. தொழில்நுட்பரீதியாக இதைவிட பன்மடங்கு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்த நடுநிசிநாய்களை கழுவிக் கழுவி ஊற்றியவர்கள் இவர்கள்தான். அதே மாதிரி.. இல்லை இல்லை.. அதைவிட மோசமான உள்ளடக்கத்தோடு கூடிய ஒரு குப்பையை ஏன்தான் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை. இதெல்லாம் நடப்பதே இல்லையா, நடப்பதைதானே சினிமாவில் காட்டுகிறார்கள் என்று வாதாடுபவர்களுக்கு மாஸ் மீடியாவை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லையென்று அர்த்தம். மகாநதியிலும் இதேமாதிரி காட்சி உண்டு. அதை எப்படி கலை ஆக்கினார்கள், எவ்வகையில் சமூக அக்கறையை நோக்கும் காட்சியாக உருமாற்றினார்கள் என்பதை மீண்டும் அப்படத்தை பார்த்துதான் உணரவேண்டும்.
விலங்குகளை கூட திரைப்படங்களில் பயன்படுத்துவதை ஆட்சேபிக்கும் தேசம், குழந்தைகளை மோசமான முறையில் படம் பிடித்துக் காட்டும் ‘விடியும் முன்’ போன்ற திரைப்படங்களை எப்படி சகித்துக் கொள்கிறது? காரணகாரியமில்லாமல் கண்டதையும் வெட்டும் ‘சென்சார்’ எனும் மனமகிழ் அமைப்புக்கு ‘மூளை’ என்றொரு வஸ்து இருக்கிறதா? இந்த படத்தை வெளியிடலாம் என்று சான்று கொடுத்த அதிகாரிகள் யாருமே, அந்த பதவியில் இருக்க லாயக்கற்றவர்கள்.
Claps Lucky ! Well said.
பதிலளிநீக்குஉங்கள் கருத்து முற்றிலும் சரியானது...
பதிலளிநீக்குநேற்றுதான் இந்தப்படத்தை பார்த்தேன், ஹாலிவுட்டில் எடுக்கிறார்கள் என்பதற்காக நாமும் எடுக்கலாம் என நினைத்து எடுக்கப்பட்ட நடுநிசி நாய்கள் தர்ம அடி வாங்கியது இப்படக்குளுவினருக்கு ஞாபகம் இல்லை போலும் :(
இப்படம் ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என கேள்விபட்டேன், ஆங்கிலத்தில் எவ்வளவோ நல்ல படங்கள் எடுக்கிறார்கள், அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி ஒரு வக்கிர கதையை ஏன் இந்த இயக்குனர் தழுவினாரோ?
Very true sir......
பதிலளிநீக்குநீங்கள் பார்க்கவே கூடாது என்கிறீர் ,ஒருவர் பார்க்க தவற விடாதீர்கள் என்று சொல்கிறார் .(அதுவும் நம்பகமான விமர்சகர் )ஒரே கன்புசிங்........!
பதிலளிநீக்குஐயோ, கொடூரமான சீன்ஸ் எல்லாம் இருக்கு.நல்ல வேலை பார்க்கலை. எனக்கும் இந்த மாதிரி படங்கள் என்றால் கிலி தான். நானும் இணையத்தில சில விமர்சனங்களை படிச்சுட்டு கண்டிப்பா பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.
பதிலளிநீக்கு//ஆனால் இதுபோன்ற காட்சிகள் சாதாரணர்களையும் வக்கிரர்களாக மாற்றக்கூடிய ஆபத்தான ஆயுதங்கள்.//
//விலங்குகளை கூட திரைப்படங்களில் பயன்படுத்துவதை ஆட்சேபிக்கும் தேசம், குழந்தைகளை மோசமான முறையில் படம் பிடித்துக் காட்டும் ‘விடியும் முன்’ போன்ற திரைப்படங்களை எப்படி சகித்துக் கொள்கிறது?//
சரியா சொன்னீங்க. இதுல சில இனைய விமர்சனர்கள் "சினிமால என்ன வேணும்னாலும் காட்டலாம். தமிழக மக்கள் ரொம்ப புத்திசாலீங்க. கலையை கலையா தான் ரசீபாங்கன்னு ஜால்ரா வேற".
Blast!!
பதிலளிநீக்குபொதுவாக குழந்தைகளுக்கான சினிமா தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாகவே எடுக்கப்படுவதில்லை என்பது எனது கருத்து.பெரியவர்களுக்கான சினிமாக்களையே தமிழ்க் குழந்தைகளும் பார்த்து பிஞ்சில் பழுத்தவர்களாக ஆகிக்கொண்டிருக்கும் அவலம் உலகில் இங்கு மட்டுமே உண்டு.இப்போது அந்த சினிமா குழந்தைகளை வன்புணர்வு செய்யும் காட்சிகளையும் மனக்கண் முன் பார்த்திடும் வண்ணம் பார்வையாளனையும் வன்னெஞ்சனாக ஆக்கும் வேலையை இப்படம் செய்துள்ளதா? யுவகிருஷ்ணாவின் எழுத்தைப் படிக்கும் போதே உள்ளம் நடுங்குகிறதே...! வெகு மக்கள் ஊடகங்கள் உரக்கக் கண்டிக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தவேண்டும்.முதல் பத்திரிகையாளராக குரல் கொடுத்த யுவா...உமக்கு வாழ்த்து!வழிமொழிகிறேன்.
பதிலளிநீக்கு-தி.பெரியார் சாக்ரடீசு
Very good critic.
பதிலளிநீக்குtrue
பதிலளிநீக்குThis is a copy paste of LONDON TO BRIGHTEN English movie
பதிலளிநீக்குwe have taken indian prostitution to next level...see oscar nominated movie THE GOOD ROAD
பதிலளிநீக்கு//மூன்று : மேலே அறையில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்கிறது. கீழே இருக்கும் விலைமாது ஓடிப்போய் பார்க்கிறாள். குழந்தை கைகள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கிறாள். பெரிய மனிதர் கையில் க்ளவுஸ் அணிந்து, ஒரு ப்ளேடு வைத்திருக்கிறார். ஆபாசமாக எடுக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும், கண்ணியமாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர் என்று ஏதோ ஒரு விமர்சன மாகானுபவன் இணையத்தில் எழுதியிருந்தார். நேரடிக்காட்சிதான் ஆபாசமா? கையில் ப்ளேடு வைத்திருக்கிறார்//
பதிலளிநீக்குஒம்மால...படிக்கும் போதே காண்டு ஏறுது...
True review!!!
பதிலளிநீக்குTrue review!!
பதிலளிநீக்குஅன்பு நண்பர் யுவகிருஷ்னா அவர்களுக்கு,
பதிலளிநீக்குதாங்கள் பல்பு வாங்கியதற்கு எனது வருத்தங்கள். உங்களின் வித்தியாசமான பார்வையைக் கண்டு வியக்கும் அதே நேரத்தில் தங்களின் அறியாமையை எண்ணி வேதனைப்படுகிறேன்.
ஓன்று - சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை மிகைப்படுத்தி அதில் மூழ்கிக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களை மகிழ்விக்கும் பொருட்டு “ஆண்டி” மற்றும் “பிட்டு” படங்கள் எடுக்கும் அயோக்கியத்தனமும் அதை நியாயப்படுத்தும் பேடிதனமும் கொண்ட மனநிலை பிறழ்ந்தவர்கள் நாங்கள் அல்ல.
அதே வேளையில் சினிமா என்னும் சமூக ஊடகத்தின் கோட்பாடுகளை மீறாமல் சமுதாயத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்றை புரட்டிப் பார்க்கும் முயற்சிதான் “விடியும்முன்.”
இரண்டு – நிஜங்கள் பல நேரங்களில் கொடூரமாகத்தான் இருக்கும். பூஜாவிற்கும் அந்த சிறுமிக்கும் நடக்கும் உரையாடல் விபச்சாரக் கூடங்களில் தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபளிப்பு. அது தவறு என்று சொல்லும் தகுதி ஒரு விபச்சாரிக்கே உண்டு, கண்களை மூடி கொண்டு உலகம் இருட்டு என்னும் கோழைகளுக்கு அல்ல.
மூன்று – மூன்று வயது குழந்தையை கற்பழிக்கும் காட்டுமிராண்டி சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாத்திரையும் சாராயமும் கசப்பாகத்தான் இருக்கும், ஆனால் அவைகளின் செயல்பாடுகள் வேறு. விடியும் முன் நிஜங்களை சற்று தைரியமாக உரசிப்பார்க்கும் ஒரு முயற்சி. பயந்து ஒதுங்க வேண்டியவர்கள் “பெரியைய்யா” போன்றவர்களே...
நீங்கள் ஒப்பிட்டிருக்கும் படங்களை விமர்சிக்கும் உரிமை எனக்கு இல்லை. “விடியும் முன்” சமுதாயத்தின் கழைகளை பிடுங்கும் கூரிய ஏர். சில நற்பயிர் இறப்பின் அது இயற்கையின் விதி.
நன்றி...
Abraham Prabu E - Creative Associate & Dialogue Writer - Vidiyum Munn
WHY DO THESE PEOPLE COPY AND PASTE ENGLISH FILMS. IF THEY WANT TO
பதிலளிநீக்குCOPY WHY CAN'T THEY COPY GOOD IRANIAN FILMS WHICH ARE SENSIBLE AND AESTHETIC.
MERELY REPEATING THE SHOTS OF A FOREIGN FILM DOES NOT MAKE A GOOD FILM.
VIDIYUM MUN CONTENT WISE IS VULGAR .
Hope my reply is posted :) And for everyone who says the film is copied from "London to Brighton"... The director got the required consent even before he decided to do this film. This is an inspired work and not a rip off ... Please watch both the films before commenting on that.
பதிலளிநீக்குஅடப்பாவிகளா! இதுவாடா இலக்கியம்?? சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் திரு.ஜெயகாந்தன் எழுதிய அக்னிப்ரவேசம் என்ற சிறுகதையை படிங்கடா முதலில்..
பதிலளிநீக்குயுவகிருஷ்ணவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
Abraham Prabu E, என்னது ஏர்-ஐ வச்சு களை புடுங்குறியா? எந்த ஊர்யா நீ?
பதிலளிநீக்குhere another view - http://kanavuthirutan.blogspot.in/2013/12/blog-post_5.html
பதிலளிநீக்குWhy these guys never inspire from books or novels? Rather, they always get 'inspired' from another movie, thereby, they make their work much easier by copying (sorry, inspiring) the screen play too... :D
பதிலளிநீக்கு//“விடியும் முன்” சமுதாயத்தின் கழைகளை பிடுங்கும் கூரிய ஏர். சில நற்பயிர் இறப்பின் அது இயற்கையின் விதி.//
பதிலளிநீக்குதோடா. நாங்க நல்லது(னு நெனச்சி) செய்வோம். அதுக்கு சில நற்பயிர் இறக்கத்தான் செய்யும்னா என்ன? திமிர் தானே? போர்னா மக்கள் இறக்கத்தான் செய்வாங்கங்கிற மாதிரி...
//நேரடிக் காட்சிகளில் உருவாகும் கிளர்ச்சியின் பாதிப்பு சில மணி நேரத்துக்குதான். ஆனால் இதுபோன்ற காட்சிகள் சாதாரணர்களையும் வக்கிரர்களாக மாற்றக்கூடிய ஆபத்தான ஆயுதங்கள்.//
பதிலளிநீக்குகுறியீடுகளின் மூலம் என்ன நடந்திருக்கும் என்று வாசகனை யூகிக்க வைப்பது நல்ல விஷயம் என்றாலும், வக்கிர எண்ணங்களுக்கு வாசலை திறந்துவிட முயற்சிக்க கூடாது.