7 ஏப்ரல், 2016

கலைஞரின் சாதி!

சிறுவயதிலிருந்தே அந்த சலூனில்தான் சிகையலங்காரம். அங்கே காந்தி கண்ணாடியும், குல்லாவும் போட்ட ஒரு மனிதரின் கருப்புவெள்ளை புகைப்படம் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் அந்த மனிதர் சலூன் உரிமையாளரான மோகன் அண்ணாவின் தாத்தா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தபிறகுதான் அவரை அறிந்துக் கொண்டேன்.

ஒருமுறை முடிவெட்டிக் கொண்டிருந்தபோது அண்ணனிடம் கேட்டேன். “அண்ணே, அந்த போட்டோலே இருக்குறது யாரு?”

“தியாகி விஸ்வநாததாஸ். எங்க ஜாதித்தலைவரு”

“ஓஹோ. அவர் என்ன பண்ணாரு?”

“அதெல்லாம் தெரியாது. சுதந்திரப் போராட்ட தியாகின்னு மட்டும்தான் தெரியும். எல்லா ஜாதிக்கும் ஒரு தலைவர் போட்டோ வேணுமில்லே? அதனாலே இவரை செலக்ட் பண்ணிக்கிட்டோம்”

விஸ்வநாததாஸ், சங்கரதாஸ் சாமிகளிடம் சீடர். காந்தியடிகளின் தொண்டர். முப்பது முறை சிறை சென்றவர். நாடகமேடையில் முருகனாக தோன்றினாலும் கதர்தான் உடுத்துவார். புராண நாடகங்களிலும் சுதந்திரப் போராட்ட கீதங்களை பாடி வெள்ளையர் அரசால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர். நாடு சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே காலமானவர் என்று எனக்குத் தெரிந்ததையெல்லாம் அவரிடம் சொன்னேன்.

“எங்க ஜாதித்தலைவரை பத்தி, எனக்குத் தெரிஞ்சதைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கு” என்றார்.

“இப்பவே ரொம்ப ஃபேமஸான தலைவர் இருக்காரே அண்ணே? திமுககாரரான நீங்க எதுக்கு காங்கிரஸ் தலைவரை முன்னிறுத்தறீங்க?”

“கலைஞரைதானே சொல்லுறே? அவர்தான் என் படத்தை ஜாதி போஸ்டர்லே போடக்கூடாதுன்னு சொல்லிட்டாரே? ஜாதின்னு சொல்லி அவரை யாரும் போய் பார்க்கவும் முடியாது. கட்சி மட்டும்தான் அவருக்கு கணக்கு” என்றார்.

இதுதான் கலைஞர். கலைஞரை சாதிவெறியர் என்று இன்று இணையங்களில் அர்ச்சிப்பவர்கள் அவரை என்றாவது அவருடைய சொந்த சாதி சங்க கூட்டங்களில் கண்டதுண்டா? கலைஞரின் சாதிக்காரன் என்று சொல்லி யாரேனும் யாரையேனும் அதிகாரம் செய்ததுண்டா? அரசியல் / அரசு பதவிகளில் தன்னுடைய சாதிக்காரர்களுக்கு கலைஞர் முக்கியத்துவம் தந்தார் என்று நாக்கு மேல் பல்லை போட்டு பேசமுடியுமா?

சாதியை கடப்பது சாமானிய சாதி மறுப்பாளனின் பெருங்கனவு. தந்தை பெரியாரின் குடும்பத்திலேயே கூட முழுமையாக நடைமுறைக்கு வராத இந்த சாதனையை தன் குடும்பத்தில் முழுக்க நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர் ஒருவர்தான். உயர்சாதியான பார்ப்பனரில் தொடங்கி, கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் வரை கலைஞரின் குடும்பத்தில் உண்டு. சாதியெதிர்ப்பு/மறுப்பு பேசுபவர்கள், இந்தியாவில் வேறு எந்தத் தலைவனின் குடும்பமாவது இப்படி சமத்துவபுரமாக மாறியது என்று உதாரணம் காட்ட முடியுமா? சாதிய அடையாளத்திலிருந்து வெகுதூரத்துக்கு வந்துவிட்ட கலைஞரைதான் இன்னமும் அவர் பிறந்த சாதி துரத்திக் கொண்டே இருக்கிறது என்பதே வேதனை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஜூனியர் விகடன்’ ஏடு, ஒரு கட்டுரை எழுதியது. “ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவை பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து கொண்டாடினார் கருணாநிதி” என்று காரசாரமாக விமர்சித்தது. வாசித்த சூத்திரமகாஜனங்களும் பதறிப்போய், “ஒரு சூத்திரனுக்கு இப்படியொரு வாழ்வா?” என்று மனம் வெதும்பினார்கள்.

ஜூ.வி. இதழ் அக்கட்டுரையில் ‘வேண்டுமென்றே’ மறைத்த செய்தி ஒன்றுண்டு. கலைஞர், பட்டுவேட்டி பட்டுசட்டை அலங்காரத்தில் கலந்துக்கொண்ட நிகழ்வு தஞ்சையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சி. பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் கலைஞர்கள் ஆடிய நிகழ்ச்சி. கரைவேட்டியை தவிர வேறு உடையை நாடாத கலைஞர், அன்று ஏன் பட்டினை தேர்ந்தெடுத்தார் என்கிற ரகசியம் அவரது சமூகத்தாருக்குதான் தெரியும். ஆயிரம் ஆண்டு சாதிய இழிவை துடைத்தெறிந்துவிட்டோம் என்பதன் அடையாளமாகதான் அன்று கலைஞர் பட்டு வேட்டி, சட்டையில் ஜொலித்தார்.

எதற்கு பூசி மெழுகிக் கொண்டிருக்க வேண்டும்? கிராமங்களில் இன்றும் சாதாரணமாக ‘அம்பட்டன் கருணாநிதி’ என்றுதான் கலைஞர் வெறுப்பாளர்கள் அருவருப்போடு விளிக்கிறார்கள். கழகத்தை ‘அம்பட்டன் கட்சி’ என்றுதான் ஐம்பது ஆண்டுகளாக விமர்சிக்கிறார்கள். இதில் ஒளிவுமறைவு ஏதுமில்லை. முப்பதாண்டுகளுக்கும் மேலாக கழகத்துக்காக / கலைஞருக்காக பாடுபட்ட அண்ணன் வைகோவுக்கும், அவர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விட்டதே என்பதுதான் ஆதங்கம். “வைகோவின் பேச்சை கண்டிக்கிறோம்” என்று கூறிவிட்டு, கூடவே ‘ஆனால்’, ‘அதே நேரம்’ போடும் அறிவுஜீவிகளும் இதே ரகம்தான். இடதுசாரிகளை சொல்லவே தேவையில்லை. அவர்கள் சாதி சங்கம் நடத்தப் போகலாம்.

‘திமுக, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது; கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது’ என்கிற பலரது உள்மன விருப்பத்துக்கு கலைஞர் பிறந்த சாதியும் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. சாதிய ஒடுக்குமுறைகளை கண்டிப்பதில் எவரையும்விட அதிக கடமை கொண்டவர்களான தலித்துகளே இதற்கு துணைபோகக்கூடிய விசித்திரமான சமூகமுரணைதான் எப்படி புரிந்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

23 கருத்துகள்:

  1. அருமை ஆனால் கலைஞர் நீங்கள் குறிப்பிடும் இனம் அல்ல., அவர் சார்ந்த பிரிவை சின்னமேளம். பொட்டுக்காரர் (தேவதாசி) என்னும் மிக அரிய தியாக சமூகமாக அறியப்படுகிறது. அக்காலகட்டத்தில் அரசர்களால் சமூகத்திற்கு அர்பணிப்பட்ட சமுகமாகும்.,

    பதிலளிநீக்கு
  2. நண்பர் யுவா.. சென்னையிலும் அதனையொட்டிய வடமாவட்டங்களிலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நாதசுரம்-தவில் இசைப்பவர்கள் முடிதிருத்தும் சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் அதே பார்வையில் கலைஞரைக் குறிப்பிடும் வழக்கம் நிலவுகிறது. ஆனால், கலைஞரின் சாதி அதுவல்ல. இசைவேளாளர் என இன்று குறிப்பிடப்படும் அவரது சமூகத்தினர் மேளக்காரர்கள் என அழைக்கப்பட்டு, தேவதாசிகளாக்கப்பட்ட கொடுமைக்குள்ளான சமூகத்தினர். சாதிப்படிநிலையில் முடிதிருத்துபவர்களையும் இவர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதே இங்கு இயல்பாக இருப்பதால், கலைஞரையும் அப்படிப் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் முடிதிருத்தும் மருத்துவர் சமூகத்தைப் போலவே மிகவும் இழிவாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து கிளர்ந்தெழுந்து தமிழகத்தில் 5 முறை (மே 19க்குப் பிறகு 6) முதல்வராகவும், பல பிரதமர்களையும் குடியரசுத்தலைவர்களையும் நிர்ணயிக்கும் சக்தியாகவும் உயர்ந்த தலைவர் இந்தியாவிலேயே கலைஞர் மட்டுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிகை திருத்துபவர்கள் ‘மருத்துவர்’ சமூகம். ஆனால், தாங்களும் ’இசைவேளாளர்’ சமூகத்தின் அங்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது வன்னியகுல சத்திரியரில் பல சாதிகள் அடங்கியிருப்பது மாதிரி.

      நீக்கு
  3. பெயரில்லா5:09 PM, ஏப்ரல் 07, 2016

    //..திமுக, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது; கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது’ என்கிற பலரது உள்மன விருப்பத்துக்கு கலைஞர் பிறந்த சாதியும் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை//..
    தவறு. முதன் ,முறை அப்படி சிலர் நினைத்திருக்கலாம். ஐந்து முறை அவரை இதே மக்கள் தேர்ந்தெடுத்த பின் இவ்வாறு சொல்வது காமாலை கண் பார்வை.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா6:28 PM, ஏப்ரல் 07, 2016

    கருணாநிதியின் நிர்வாகத்திறமை மிகச் சிறந்தது என்றாலும் 94 வயது முதியவரை ஓய்வெடுக்க விடாமல் தடுப்பது எது? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்வின் அந்திப் பொழுதில் இருக்கும் அவரை அரசியலில் தொடர்ந்து வைத்திருக்கும் நிர்பந்தம் எது?

    1. கட்சிக்குள் ஸ்டாலினைத் தவிர்த்து வேறொரு தலைவர் உருவாகாமல் தவிர்த்தது. இன்றும் தன் மகனின் தலைமைப் பண்பின் மீது தலைவருக்கு இருக்கும் அவநம்பிக்கை.

    2. அதிகாரம் மட்டுமே அவருக்கு வாழவேண்டும் என்ற வேட்கையைத் தருகிறது. அது இல்லாமல் அவரால் ஓய்வெடுத்து வீட்டில் இருக்க முடியாது.

    3. கட்சி உடன்பிறப்புகள் வேண்டுமானால் ’நிரந்திர முதல்வர்’ என்று கருணாநிதியைக் கொண்டாடலாம். ஆனால் பொதுமக்களுக்கு அது உவப்பான நிலை இல்லை. ஏன் அவரை வாதிக்கிறீர்கள் என்றே நினைக்கின்றனர்.

    மற்றபடி, பெருவுடையார் கோவிலுக்குப் பட்டுடுத்திச் சென்றது சரியான பதிலடி!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா6:43 PM, ஏப்ரல் 07, 2016

    As yuvakrishna told maruthuvar caste also is part of isaivellalar only. As I'm from that caste I can feel the pain of that word spoken by Thiru.Vaiko. But now I am a veterinary surgeon. My father is also a vet ly. But still we are experiencing this problem some times even we are monetarily sound. But this give us more sole power to reach higher destination. Now I kno some ppl who are all from other caste doing the same work what we have been doing in our older days... But we want this type things/speech often to recharging us to reach higher...

    பதிலளிநீக்கு
  6. கருணாநிதி மற்றவர்களை எப்படியெல்லாம் தரக் குறைவாகப் பேசியிருக்கிறார் ? யுவ கிருஷ்ணாவிற்கு அவையெல்லாம் ஞாபகம் வரவில்லை போலும்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா10:30 PM, ஏப்ரல் 07, 2016

    வன்னியர் வேறுபாடுகள் பட்டங்கள்.சாதி ஒன்றுதான்

    பதிலளிநீக்கு
  8. இசை வேளாளர்கள் தஞ்சை பகுதியிலும் சிதம்பரம் பகுதியிலும் பரவலாக உள்ளனர்., சிதம்பரத்தில் ஒரு தெரு முழுவதும் அவர்கள் சமுகம் சார்ந்தவர்கள் வாழ்வதாக சொல்வர்., மேலும் இவர்கள் பிள்ளை மற்றும் முதலியார் எனவே அழைத்துக்கொள்கின்றனர்., அவர்களுக்குள் பெண் எடுப்பதும் கொடுப்பதும் உண்டு. இவை அனைத்தும் விட திரு.வைகோ அவர்கள் இதை நன்கு உணர்ந்து அவர் தேவதாசி வகுப்பை சார்ந்தவர் என்பதில் மனதில் கொண்ட துவேசம் கலந்து உமிழ்ந்து இருக்கிறார்., இது அவர் மனதில் கொண்ட வன்மத்தின் உச்சம் என்பது எளிதில் விளங்கும்

    பதிலளிநீக்கு
  9. Vaiko lost his control. As the time pass by he makes more and more mistakes.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா4:18 AM, ஏப்ரல் 08, 2016

    kalaignar and thanthai periyar criticized paarppaans in very bad language. what is your opinion about it?

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா1:20 PM, ஏப்ரல் 10, 2016

    உயர்ஜாதி என்று சொல்லி கொள்கிற மக்கள் மட்டுமே தங்கள் ஜாதிக்கு கொடி பிடிக்கிறார்கள். தாழ்ந்த சமூகம் என்று மற்றவர்களால் அழைக்கப்படும் மக்கள், தன் ஜாதி வெளியே .தெரிய கூடாது என்று படாத பாடு படுவதை நகரத்தில் காண முடிகிறது.

    பதிலளிநீக்கு
  12. வைகோவை தவறான முடிவுகள் எடுக்கும் நல்லவர்
    என்பதுபோல் ஒரு தவறான பிம்பத்தை மீடியாக்கள்
    வலிந்து உருவாக்குகின்றன.கலைஞரின் முதுகில்
    குத்தியதர்க்கான பரிசு அது (வாழ்நாள் போனஸ்)
    தப்பி தவறி பெரியார்,சமூக நீதி,சமத்துவம் என்று
    தன்னிலை மறந்து பேசினால் தயாராக வைத்திருக்கும்
    ஆப்பை எடுத்து சொருகி விடுவார்கள்.

    ஒரு பதிவரின் பக்கங்களில் இருந்து,

    "" நெல்லை மாவட்டம் குறிஞ்சாக்குளத்தில் தலித் இன மக்கள்
    தங்களுக்கென்று காந்தாரி அம்மன் கோவிலை கட்டமுயன்றதற்காக,
    1992 மார்ச் 16 -ல் தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாகக்
    கொலை செய்யப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
    நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள். முதல் குற்றவாளி வைகோ
    அவர்களின் தம்பி ரவிச்சந்திரன். இரண்டாம் குற்றவாளி வைகோ
    அவர்களின் மாமா சங்குவெட்டி மோகன்தாசு நாயுடு.""

    இது போதும் வைகோ குடும்பத்தின் சாதி சகிப்பின்மை பற்றி
    அறிந்து கொள்ள.அவர் பேச்சும்,உடல் மொழியும் வெளிப்படுத்தியது
    அப்பட்டமான சாதி வெறியன்றி வேறொன்றுமில்லை.
    கலைஞரிடம் இருந்தபோது போர்வாள்.இப்போது
    வெறும் துரு ஏறிய குறுவாள்.அப்படியே புரட்சிப்புயல்
    என்பதை புழுதிப்புயல் என்றும் மாற்றி கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  13. Is this a qualification to rule a state. karuna in his 90's is yet to leave a legacy behind. Perhaps he is 0.05 percent better than JJ in overall governance. Stupid article from a well respected and responsible yuva

    பதிலளிநீக்கு
  14. ''‘திமுக, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது; கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது’ என்கிற பலரது உள்மன விருப்பத்துக்கு கலைஞர் பிறந்த சாதியும் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை'' - இது தவறான வாதம். கருணாநிதியைத் தவிர கலைஞரை தமிழ் சமூகம் என்றுமே தாழ்த்தப்பட்டவராக கருதியதில்லை. ஐந்து முறை அவரை முதல்வராக்கி அழகு பார்த்தது தமிழ்ச்சமூகம். கருணாநிதி ஆரம்ப காலத்தில் ஒரு வீச்சுப்பேச்சாளராக, சமூகநீதிப் போராளியாக வாழ்ந்தார் என்பது உண்மை. ஆனால், பதவி வந்த போது தன் குடும்பம் சார்ந்து பெரும்பான்மையான நேரத்தை செலவிட்டார். தனது குடும்பத்தை சார்ந்தவர் பதவி பெற தனது இனத்தையே அடமானம் வைத்தவர். திருமங்கலம் ஃபார்முலாவை அழகிரி செயல்படுத்திய போது அவர் அதை கண்டித்திருக்க வேண்டும். ராசாத்தி அம்மாளும் கனிமொழியும் டாடாவின் சொத்தை அபகரிக்க முயன்ற போது அதை தடுத்திருக்க வேண்டும். தயாநிதி மாறன் அரசு நிறுவன தொலைபேசி இணைப்பை தன் குடும்ப நிறுவனத்திற்கு பயன்படுத்தியபோது அதை தடுத்திருக்க வேண்டும். தன் சுயநலம் சார்ந்து இயங்கும் ஒருவரை என்னவென்று அழைப்பது? ஊழலின் ஊற்றுக்கண்ணாக தமிழகத்தை மாற்றிய பெருமை கருணாநிதியையே சாரும். அவர் அடியொற்றியே ஜெயலலிதாவும் மன்னார்குடி மாஃபியாவும் தமிழகத்தை சூறையாடின. கருணாநிதி மட்டும் தன் குடும்ப நலனை புறக்கணித்து தமிழகத்தை முன்னேற்றி இருந்தால் நல்லாட்சி நடத்தியிருந்தால் எம்ஜியார் ஏது...ஜெயலலிதா ஏது? யோசித்து பதில் சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சிந்திக்க வேண்டிய செய்தி அனைத்து சாதியினரும் அவரை 5 முறை முதல்வராக தேர்ந்தெடுத்ததில் இருந்து அனைத்து மக்களுக்கும் பல நல்லலதை செய்திருக்கிறர் என்று அர்த்தம்

      நீக்கு
  15. பெயரில்லா11:27 PM, மே 01, 2016

    This is the first time I have ever come across the exact caste of Kalaignar (Though I was aware of some thing, the exact caste, and the status of his caste in our social layer I was not aware). During my school time, one of my teacher once told some thing about his caste, which I couldn't understand that time. I used to read some of kalaignar's "arikkaigal", in which he cleverly used to use his caste tag to defend his faults. I think there is not much difference between abusing a person based on his caste, and using caste as a defense to protect yourself from the faults you did. Leaving that aside, It is very well known that, till kalaignar came to power in tamilnadu, there was some amount of selflessness in tamilnadu politics. But it is only after his tenure, selfishness and corruption sneaked every nook and corner of tamilnadu politics. I am not telling he is the only person responsible for that, but his contribution is more than anybody else for the current undesirable state of tamilnadu politics. It is the reason so many people don't like kalaignar to come back to power again. By telling that it is because of his caste (as an important attribute as you have stated), many people don't like him to become CM again, you are exactly following footsteps of your leader in hiding his faults with a caste mask.But in truth it is not so.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா5:46 AM, மே 23, 2016

    http://tamizhpaamaran.blogspot.com/2016/05/2016.html

    பதிலளிநீக்கு
  17. ஆந்திராவில் களைஞர் பிறந்த சமுகம் Nayee Bamins என்று சொல்வர் அவர்கள் இசை வாத்தியங்கள் மற்றும் சிகை அலங்காரம் புரிபவர்களாக இருக்கிறார் தமிழ்நாட்டில் பெயர்கள் மட்டும் இரண்டா இசை வேளாளர் என்றும் மருத்துவர் என்றும்.

    பதிலளிநீக்கு
  18. இசை வேளாளர் மருத்துவர் ஒன்று தான் என்பது போல் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா2:47 AM, ஏப்ரல் 11, 2020

    இதுதான் உண்மை

    பதிலளிநீக்கு