17 மார்ச், 2009

தேர்தல் நிலவரம்!

தேர்தலில் எந்தெந்த கட்சி தேறும் என்பது இன்றுவரை தமிழகத்தில் தெளிவில்லாமல் இருக்கிறது. இப்போதைக்கு திமுக - காங்கிரஸ், அதிமுக - மதிமுக - கம்யூனிஸ்டுகள் என்ற அளவுக்கே கூட்டணி அமைந்திருக்கிறது. பாஜகவோடு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. தேமுதிக திமுக அணிக்கு வருவதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. எந்த அணி வெற்றிவாகை சூடும் என்று தெரியாததால் திரிசங்கு சொர்க்கத்தில் அள்ளாடுகிறது பாமக.

தேர்தல் ஓராண்டுக்கு முன்பாக நடந்திருக்குமேயானால் மிகத்தெளிவாக சொல்லிவிட்டிருக்கலாம் ரிசல்ட்டை. நாற்பதுக்கு ஜீரோ என்றளவில் திமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும். மின்வெட்டுப் பிரச்சினையை தட்டுத் தடுமாறி சமாளித்தது, வெள்ளமெனப் பாய்ந்த வெள்ள நிவாரணம், ஒரு ரூபாய்க்கு அரிசி, பெரியளவிலான இலவசடிவி, கேஸ் கனெக்‌ஷன் வினியோகம், ஐம்பது ரூபாய் மளிகைப்பொருட்கள், பொங்கலுக்கு பொங்கல் வைக்க இலவசப் பொருட்கள் என்று ஓட்டுக்களை குறிப்பார்த்து வீசப்பட்ட திட்டங்கள் திமுகவை கரையேற்றி இருக்கிறது. இன்றைய நிலையில் இருபதுக்கு இருபது என்றே இரு அணிகளுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

பாமக, தேமுதிக கட்சிகள் சேரும் அணிகளைப் பொறுத்து ஐந்து முதல் பத்து தொகுதிகளில் ரிசல்ட் மாறலாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெல்லும் என்பது போன்ற தோற்றம் இருந்தது. இப்போது அதே பிம்பம் திமுக மீது இருக்கிறது. சுலபமாக வெற்றியடைந்து விடுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கோட்டை விட்டால் திமுகவின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே ஆட்டம் கண்டுவிடக்கூடிய சூழல் இருக்கிறது. பிரச்சாரத்தின் போது வழக்கமாக ஏதாவது மேஜிக் செய்வார் கலைஞர். இம்முறை என்ன செய்யப்போகிறார் என்று ஜெயலலிதா ஆவலாக காத்திருக்கிறார்.

பாமகவுக்கு கிட்டத்தட்ட பதிமூன்று தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய சக்தி இருக்கிறது. ஆயினும் தனியாக நின்றால் நாற்பதில் நான்கில் கூட டெபாசிட்டை வாங்க முடியாது. பதிமூன்று தொகுதிகளில் பாமகவுக்கு இருக்கும் செல்வாக்கைப் போலவே விஜயகாந்துக்கு கிட்டத்தட்ட முப்பது தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. எனவே இந்த இரண்டு கட்சிகளும் எடுக்கப்போகும் கூட்டணி நிலை தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். கூட்டணி பலமின்றி வெற்றிக்கனி பறிக்கும் நிலையை திமுகவும், அதிமுகவும் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே இழந்துவிட்டன.

கலைஞர் இரு நாட்களுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம். கொள்கை அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் பெரியளவில் வேறுபாடு இல்லையென்று சொல்லியிருக்கிறார். சிறுத்தைகளுக்கு அரசியல் அரங்கில் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இதை எடுத்துக் கொள்ளலாம். தாங்கள் மட்டுமே கொள்கைக்குன்றுகள் என்று இதுவரை திமுகவினர் சொல்லிவந்த நிலை மாறியிருக்கிறது. சிறுத்தைகளுக்கு பலமான எதிர்காலம் இருப்பதை ஒருவேளை கலைஞர் கணித்திருக்கலாம். அதே நேரத்தில் காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி சிறுத்தைகள் தங்கள் பக்கம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக அவர் சொல்லியிருப்பதும் குறிப்பிடத் தகுந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஈழப்பிரச்சினை இத்தேர்தலில் பெரிய அலையாக இருக்கக்கூடும் என்று தமிழுணர்வாளர்கள் பேசிவந்தனர். தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக பார்க்கப்போனால் ஈழ உணர்வு எழுச்சியில் தேக்கம் ஏற்பட்டிருப்பதாகவே உணரமுடிகிறது. ஈழப்பிரச்சினையை அடிப்படையாக வைத்து போராட்டங்கள் நடத்திய இயக்கங்கள் மதிமுக, பாமக, சிறுத்தைகள் உள்ளிட்டவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே திமுக - அதிமுக என்று தேர்தல் கூட்டணிகளுக்கு முக்கியத்துவம் தந்து ஈழப்பிரச்சினையை பின்னுக்கு தள்ளியது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

அதே நேரத்தில் தமிழிணையங்களில் ஈழம் தொடர்பாக கூறப்படும் அதீத எழுச்சியின் அளவினை என்னால் இங்கிருக்கும் மக்கள் மனங்களில் காண முடியவில்லை. காசிஆனந்தன் விகடன் பேட்டியில் சொல்லியிருப்பதைப் போன்று 83ஐ விட அதிகமான ஈழ ஆதரவு அலை இங்கே நிச்சயமாக இல்லை. இப்போதிருப்பது அனுதாபம் மட்டுமே. கடந்த சிலமாதங்களாக நேரடியான களப் போராட்டங்களிலும், கூட்டங்களிலும் கலந்துகொண்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே இதை தெளிவாக என்னால் உணரமுடிகிறது.

தமிழன் வாக்களிக்கும்போது தன்னுடைய வாய்க்கால், வரப்பு பிரச்சினைக்கு தான் முன்னுரிமை அளிக்கிறானே தவிர, வன்னிக்கு அல்ல. ஈழத்தமிழர் மீதான அனுதாபத்தை தாண்டி காங்கிரஸை புறக்கணிக்கிறோம், அதிமுகவை புறக்கணிக்கிறோம், திமுகவை புறக்கணிக்கிறோம் என்று தங்கள் கட்சி அபிமானங்களை விட்டுத்தர யாரும் தயாராக இல்லை. எனவே இத்தேர்தலிலும் ஈழம் ஓட்டுக்கான அரசியலாக இங்கே முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. ஒருவேளை பாமக, வி.சிறுத்தைகள், மதிமுக கட்சிகள் அணி அமைத்துப் போட்டிருந்தால் இது வாக்குக்கான பிரச்சினையாக முன்வைக்கப்பட்டிருக்கக் கூடிய சூழல் இருந்திருக்கும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெல்ல முடிந்தது. இத்தேர்தலில் அப்படிப்பட்ட வெற்றியை பெறுவது அசாத்தியமானது. மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே எந்த அணியும் வெல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. எந்த அலையோ, எந்தப் பிரச்சினையோ இல்லாமல் விளக்கெண்ணெய் மாதிரி வழ வழா கொழ கொழா என்று நடைபெறப் போகிற தேர்தல் இது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கியப் பிறகாவது நிலைமை சூடு பிடிக்கிறதா என்று பார்க்கலாம்.

நமீதா! - குளோஸ் அப் ஷாட்!




மும்பையில் பிறந்து வளர்ந்த கவர்ச்சி சுனாமி மீதாவின் பிறந்தநாள் மே 10 (வயது 26?). நமீதாவின் தந்தை பிரபல தொழிலதிபர். மீதாவின் பூர்விகம் மலையாளம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. ஸ்பெஷல் சேச்சி ட்ரேட்மார்க் அவரிடம் இருப்பதை கூர்ந்து பார்க்காமலேயே உணரலாம். குஜராத்தில் வளர்ந்தவர் அவர். தமிழில் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சித்திக்கால் தென்னிந்தியாவில் பிரபலமானார். தமிழிலும் எங்கள் அண்ணா திரைப்படம் மூலமாக சித்திக்கே அவரை அறிமுகப்படுத்தினார்.


2001 மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டபோது மீதாவின் உயரம் 5'8", வயது 18, பலான பலான அளவு 32:24:35, எடை : 55 கிலோ. அந்தப் போட்டியில் அதிகபுள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருந்தபோதிலும், இறுதிச் சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.

மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்றதன் விளைவாக தெலுங்கு திரையுலகில் அதிரடியாக நுழைந்தார். அவர் நடித்த சொந்தம், ஜெமினி திரைப்படங்கள் வணிகரீதியிலாக பெரிய வெற்றி பெறாதபோதிலும் வசீகரிக்கவைக்கும் அவரது தோற்றத்தால் தெலுங்கு சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தார். "ஏய்" படத்தின் "அர்ஜூனா, அர்ஜூனா" பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கிறங்கடித்தார். கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மீதாவுக்கு பிடித்த வண்ணங்கள் கறுப்பு வெள்ளை. மீதாவை காதலிக்க விரும்புபவர்கள் ஒரு வெள்ளை ரோஜாவுடன் Propose செய்யலாம். வெள்ளை ரோஜா என்றால் அவருக்கு உயிர். ஓய்வு நேரங்களில் நீந்துவதும், பேட்மிண்டன் ஆடுவதும் அவரது பொழுதுபோக்கு. குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர் மீதா. சிட்னி ஷெல்டன் நாவல்களை வாசிப்பதில் அலாதி பிரியம் கொண்ட நமீதாவுக்கு ரொம்ப பிடித்தது படங்களோடு வரும் காமிக்ஸ் புத்தகங்கள். நந்திதா தாஸ், தபு போன்றவர்களின் நடிப்பை ரொம்பவும் ரசிப்பார். விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அன்பு செலுத்துவதில் அவர் இன்னொரு மேனகா காந்தி.

14 மார்ச், 2009

நமீதா செய்த மோசம்!


ச்சே.. வர வர நமீதாவைக் கூட நம்பமுடியவில்லை. ‘எங்கள் அண்ணா’விலிருந்து நமீதாவைக் காட்டிய ஒரு படத்தைக் கூட மிஸ் செய்ததில்லை. நமீதாவை சுற்றிக் காட்டவே டைரக்டருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் மூன்று, நான்கு மணி நேரங்கள் குறைந்தது ஆகுமென்றாலும் இரண்டரை மணி நேரத்தில் எப்படியோ சுருக்கி, அடக்கிக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் சில காலமாக நமீதா தோன்றும் படங்கள் படுமொக்கையாகவும், அப்படங்களில் இவருக்கு கோவணத்துண்டு அளவுக்கான வேடங்களும் மட்டுமே வழங்கப்பட்டு வருவது வேதனைக்குரியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களை (ஒரிஜினல்) புரட்சித்தலைவி நமீதாவும் ஒப்புக்கொள்வது வரலாற்று சோகம்.

சமீபத்தில் நமீதா வரிசையாக நடித்த அல்லது தெறமை காட்டிய மூன்று படங்கள் பெருமாள், தீ, 1977. நமீதாவின் ஹாட்ரிக் ஃபெய்லியர். மொக்கைப் படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுமேயானால் இந்த மூன்றுப் படங்களுமே கடுமையான போட்டியில் குதிக்கும். கடைசியாக 1977 படத்தின் டைரக்டர் தினேஷ்குமாருக்கே விருது கிடைக்கும்.


பெருமாள்

ஏற்கனவே இந்தப் படத்தை விமர்சித்திருப்பதாக நினைவு. பேரைப்போலவே படமும் படுமொக்கை. நமீதா என்ற கொட்டிக் கிடக்கும் அழகை நம்பாமல் ஒரு மொக்கை ஃபிகரை ஹீரோயினாக்கி இருக்கிறார்கள். சுந்தர் சி டைரக்ட் செய்தாலும் சரி, நடித்தாலும் சரி. படம் சூப்பர்ஹிட் தான் என்ற கோடம்பாக்கத்து செண்டிமெண்டை தகர்த்தெறிய வந்திருக்கும் படம்.

இந்தப் படத்தை பார்த்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லையென்றாலும் அதற்குள்ளாகவே கதையும், சதையும் சுத்தமாக மறந்துவிட்டது. படத்தின் டைரக்டர் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளக்கூட விரும்பவில்லை. பாடல்கள் மட்டும் சூப்பர்.


தீ

சன்பிக்சர்ஸின் அடாவடி டிரைலர்களைப் பார்த்ததுமே படம் பார்க்கவேண்டும் என்கிற தாகம் எல்லோருக்குமே ஏற்படுகிறது. ஜி.கிச்சா என்றொரு மேதாவி எடுத்திருக்கிறார். சத்தியமாகச் சொல்லுகிறேன். எனக்கெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிளாக் எழுதித் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். மொக்கை பிளாக் எழுதுபவர்களை விட படுமொக்கையானவர் இந்த இயக்குனர்.

படத்தின் தீம் ஓக்கே. விஜயகாந்த் நடித்து ஷங்கர் இயக்கியிருந்தால் சக்கைப்போடு போட்டிருக்கக் கூடிய கதை. துரதிருஷ்டவசமாக கிச்சா இயக்கியிருக்கிறார். நமீதாவின் தொடைகளையும், இடுப்புக்கும் மேலும் கழுத்துக்கு கீழும் இருக்கும் பகுதிகளையும் நம்பியே படத்தின் முன்பாதி நகருகிறது. கா.. கா. கா.. பாட்டு மட்டும் விஷூவல் ட்ரீட். நமீதா ரொம்பவும் கஷ்டப்பட்டு வளைந்து, நெளிந்து, வளைத்து, குலுக்கி அசத்தியிருக்கிறார்.


1977

இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல்நாள் வேலைவிஷயமாக ஆல்பர்ட் தியேட்டர் போயிருந்தேன். தியேட்டர் நிர்வாகிகள் செம பிஸியாக இருந்தார்கள். விவரம் கேட்டபோது நாளைக்கு 1977 ரிலீஸ் ஆகிறது. படம் சூப்பர்ஹிட் ஆகும். ரிசர்வேஷன்லேயே பட்டையக் கெளப்புது என்றெல்லாம் சொன்னது படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியது.

மறுநாள் காலையில் ராஜ் டிவி பார்த்தபோது இப்படத்தின் இயக்குனர் தினேஷ்குமார் பேசிக்கொண்டிருந்தார். எம்.பி.ஏ படித்தவராம். ஹாலிவுட்டில் எப்படியெல்லாம் படமெடுக்கிறார்கள், நாம் ஏன் அதுபோலவெல்லாம் எடுக்கமுடியவில்லை என்றெல்லாம் நன்றாகவே பேசினார்.

இயக்குனருக்கு பேசமட்டுமே தெரியும் என்பது படம் பார்த்தால் தெரிகிறது. சரத்குமார் நடித்தப் படங்கள் 90 சதவிகிதமும் மொக்கை தானென்றாலும் அந்த மொக்கைகளுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல இப்படம் எவரெஸ்ட் மொக்கையாக அமைந்திருக்கிறது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜேம்ஸ்பாண்டு ஹீரோவாக இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்று இயக்குனர் சிந்தித்து புளகாங்கிதப்பட்டு இப்படத்தை எடுத்திருக்கிறார். இயக்குனருக்கு இருந்த புல்லரிப்பும், புளகாங்கிதமும் ரசிகர்களுக்கு ஒரு காட்சியில் கூட ஏற்படுவது இல்லை. சில பேருக்கு வாந்தி தான் வந்தது.

சும்மா தொட்டுக்க நமீதா. வக்கீல் வேடமென்றதுமே ஏதோ கில்மாவாக இருக்கப் போகிறது என்று ஆவலோடு நிமிர்ந்து உட்கார்ந்தால் முதுகுவலி தான் மிச்சம். இப்படத்தின் ஒரே ஒரு ஆறுதல் படத்தின் நாயகியும் நமீதா ரேஞ்சுக்கு பப்ளிமாஸாக, ஃப்ரீக்காக இருப்பதுதான். 1977 படத்தை தினேஷ்குமார் எடுத்திருப்பதால் எம்.பி.ஏ. படித்தவர்களெல்லாம் படமே எடுக்கக் கூடாது என்று சட்டமே போடலாம்.

21 பிப்ரவரி, 2009

தநா-07-அல-4777


தநா-07-அல-4777 என்பது எம்.ஜி.ஆரின் அம்பாஸடர் கார் நம்பராம். டாக்ஸி நம்பர் 9211 என்ற இந்திப்படத்தின் ரீமேக். நானாபடேகர் நடித்த பாத்திரத்துக்கு பசுபதியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? அஞ்சாதேயில் அஞ்சவைத்த அஜ்மல் இந்தப் படத்தில் இளம்பெண்களை கொஞ்சவைக்கிறார்.

பணக்காரர்கள் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு பயணி. பணக்காரர்களைத் தவிர எல்லோரும் வாழவேண்டும் என்று நினைக்கிற ஒரு டாக்ஸி ட்ரைவர். இருவரும் ஒரு புள்ளியில் எதேச்சையாக இணைவதால் ஏற்படும் ஒரு நாள் பிரச்சினைகள் தான் இரண்டுமணி நேரப்படம். தமிழ் சினிமாவின் அஸ்திவாரமான காதல், ஆக்சன் கருமாந்திரங்களுக்கு இடமில்லாமல் விறுவிறுப்பான படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் லட்சுமிகாந்தன்.

வசனம் யார் எழுதியதென்று தெரியவில்லை. பல இடங்களில் வசனத்தின் நிறம் பச்சை.

ஒரு விலைமாதுவுக்கும் டாக்ஸி டிரைவர் பசுபதிக்கும் நடக்கும் உரையாடல்...

"மணி வர்றியா?"

"........."

"யோவ் சவாரிக்கு வர்றியான்னு கேட்டேன்யா.."

"ஏறு"

"ஏன்யா அசிங்கமா பேசுறே?"

"........."

"ஏய் நிறுத்து.. நிறுத்து.. நிறுத்து.. பார்ட்டி வெயிட் பண்றான்!"

"அவனுக்கு ஸ்டியரிங்கையே பிடிச்சி வண்டி ஓட்டத் தெரியாது!"

பசுபதிக்கு ஒரு ஆயாவை ஜோடியாக போட்டிருக்கிறார்கள். அய்யய்யோ அது சிம்ரனாம். சிம்ரனுக்கெல்லாம் கூடவா வயதாக வேண்டும்? கிழடு தட்டிப்போய் கொடுமையாக இருக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் குத்துவிளக்கு மீனாட்சி முற்றும் துறந்த முனிவராகி விட முயற்சிக்கிறாரோ? நல்லவேளையாக முற்றுமில்லாமல் முக்கால் வாசி மட்டுமே துறந்ததால் தப்பித்தோம்.

படம் ஓடும் இரண்டு மணி நேரமும் ஜெட் வேகம் தான். பாடல்களே தேவையில்லாத படமிது. ரெண்டு ஹீரோக்களும் ஓப்பனிங் சாங் அட்டர் வேஸ்ட். அதிலும் ஆத்திச்சூடி ரீமிக்ஸிங் கொடுமையிலும் கொடுமை. இந்த கருமாந்திரத்தைப் பார்த்து சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் ரீமிக்ஸ் செய்து கொடுமைப்படுத்துவார்களோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

படத்தின் கதை ரொம்ப சிம்பிள். அதை சொல்லியிருக்கும் விதம் தான் மேட்டரே. சிம்ரனும் பசுபதியும் இணையும் க்ளைமேக்ஸ் அட்டகாசம். குசேலன் மாதிரி குப்பைத் தொட்டிகளை தவிர்த்து இதுபோன்ற பாத்திரங்களையே இனியும் பசுபதி தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். தேசிய விருது ரொம்ப தூரத்தில் இல்லை.

தநா-07-அல-4777 - வேகத்தை ரசிப்பவர்கள் ஏறலாம்.

* - * - * - * - * - * - * - * - * - *
பெருமாள்


மீனாட்சி ஹீரோயினாக நடித்த இன்னொரு படம். டாக்ஸி படத்திலாவது பரவாயில்லை, இந்தப் படத்தில் பொம்பளை டிராகுலா மாதிரி கொடூரமாக இருக்கிறார் மீனாட்சி.

மீனாட்சி ஏமாற்றினாலும் இன்னொரு ஹீரோயினான நமீதா முழுத்திருப்திக்கு கேரண்டி. அவரது இடுப்பு சதை மேடு மட்டும் தர்ப்பூசணிப்பழம் சைஸில் இருக்கிறது. பிரம்மாண்ட படமென்றால் நமீதாவை வெச்சித்தான் எடுக்கணும்.

நமீதாவைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி படத்தில் ஒன்றுமேயில்லை என்பது பெருத்த சோகம். ஏதோ சோஷியல் மெசேஜ் சொல்லப் போகிற பாவலாவோடு டைட்டிலை காட்டுகிறார்கள். "ஈ" படத்தைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட கொசு பெருமாள். வர வர ஒரு விவேக் நடித்தாலே கடியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரெண்டு விவேக். காமெடி என்ற பேரில் ரத்தம் வர வர ரசிகர்களின் கழுத்தறுக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக பாட்டுக்கள் மட்டும் சூப்பர். அதிலும் 'காதல் வைபோகமே' கலக்கல். மு.க.மு.அறிவுநிதிக்கு அச்சுஅசலாக அவர் அப்பாவின் வாய்ஸ். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா' ரீங்காரம் அடிக்கிறது. தியேட்டர் முழுக்க மு.க.மு.அறிவுநிதி நற்பணி மன்றத்தினர் (?) பேனர் வைத்து அமர்க்களம் செய்கிறார்கள்.

பெருமாள் ‍‍- பேரை மாதிரியே படமும் மொக்கை!

14 பிப்ரவரி, 2009

கிருஷ்ணா மனசுலே புவனா!


வாவ்!

நூறு டன் ரோஜாக்களை பொக்லைனில் வாரி தலைமீது கொட்டியது போலிருக்கிறது. எவ்வளவு நாளாயிற்று இப்படி ஒரு ப்ரெஷ்ஷான ஃபிகரைப் பார்த்து. தமிழனின் நாட்டுக்கட்டை மோகத்துக்கு சரியான வேலண்டைன் தீனி. அடியே கொல்லுதே. அழகோ அள்ளுதே. அனுயா.

ஃபிகருக்கு நல்ல போட்டோஜெனிக். குளோசப்பில் மட்டும் பிம்பிள்ஸ் பயமுறுத்துகிறது. க்ளியர்சில் பயன்படுத்தலாம். லிப்ஸ் கூட ஆட்டின் ஷேப். கன்னத்தில் இருபக்கமும் சிரிக்கும்போது குழி. சங்குக் கழுத்தில் அம்சமான அழகு மச்சம். பனியில் நனைந்த ரோஜா நிறம். கழுதைப்பாலில் குளிப்பாரோ? உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அழகு கொட்டோ கொட்டுவென கொட்டிக் கிடக்கிறது. பிரம்மன் சும்மா செதுக்கு செதுக்குவென்று செதுக்கித் தள்ளியிருக்கிறான். அனுயாவின் செல் நம்பரை விகடன் தாத்தா எஸ்.எம்.எஸ். செய்தால் இந்த வருட வேலண்டைன்ஸ் டேவுக்கு ப்ரபோஸ் செய்ய வசதியாக இருக்கும்.

காஸ்ட்யூமர் வாழ்க. படம் முழுக்க டாப்ஸ் லோ கட். ஒன்று பிளாக், பிங்க், ஒயிட்டென்று கலர் கலராக பிரேஸியரின் நுனி அல்லது தோளில் பிரேஸியரின் டேப் எட்டிப் பார்க்கிறது. பிராமாதம். பச்சைக்கலர் புடவையிலும் பாந்தம். பேக்கிரவுண்டு அபாரம். அடங்காப்பிடாரி பாட்டில் போனால் போகிறதென்று குட்டியூண்டு ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு தண்டர்பேர்ட் ஓட்டுகிறார். ரொமான்ஸ் ஃபீலிங்ஸால் இதயத்துடிப்பு அதிகமாகி இந்த டீனேஜிலேயே எனக்கு மாரடைப்பு வந்துவிடுமோவென்று அஞ்சுகிறேன்.

Siவா Maனசுலே Saக்தி - காதலித்தவர்களை, காதலிப்பவர்களை, காதலிக்கப் போகிறவர்களை குறிபார்த்து பிரயோகிக்கப்பட்ட லவ் ரிவால்வர். இயக்குனரின் குறி கச்சிதம். ஆறு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘திருடா திருடி’யின் செகண்ட் பார்ட். மல்டிஃபிளக்ஸ் ஆடியன்ஸ் ரிப்பீட்டட் ஆடியன்ஸாகப் போகிறார்கள். பட்ஜெட் தான் Low. படம் முழுக்க Love.

மந்தகதியில் தொடங்கும் படம் ரெண்டாவது ரீலில் இருந்து புல்லட் ட்ரேயினின் வேகம். க்ளைமேக்ஸ் மட்டும் கொஞ்சம் ஜவ்வு. ஆனால் அதிலும் பொங்குது லவ்வு. கதையென்று உருப்படியாக சொல்லிக்கொள்ள எதுவும் தேறவில்லையென்றாலும் நகைச்சுவைப் பின்னணியில் காட்சிகள் ரெட்டிப்பு தூள். இசை, ஒளி, ஒலி எல்லாவற்றிலும் சிக்கனமோ சிக்கனம். ரெண்டே ரெண்டு கேரக்டர். துணைக்கு ஓரிரண்டு சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ். அதனாலேயே கில்லியாக எடிட்டப்பட்ட மெகாசீரியல் ரேஞ்சுக்கு இருக்கிறது.

கரெண்ட் இமேஜ் பற்றி எந்த கவலையும் படாமல் ஜீவா பின்னியிருக்கிறார். ஆக்சுவலாக தனுஷுக்கு பொருந்தும் பாத்திரம் அது. ஸ்ரீதேவி மாதிரி ஜீவா மூக்கு ஆபரேஷன் செய்துக் கொண்டால் தேவலை. மத்தப்படி பார்த்ததுமே ஃபிகர்கள் காதலிக்க நினைக்கும் ஹேண்ட்சம் பாய். சந்தானம் கூட அழகாகத்தான் இருக்கிறார். கோமாளித்தனத்தை மூட்டைக் கட்டிவிட்டு ஏதாவது லவ் சப்ஜெக்ட்டில் ஹீரோவாக முயற்சிக்கலாம்.

விமர்சிக்க ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் இப்போதிருக்கும் ரொமான்ஸ் மூடுக்கு அது செட் ஆகாது. அதுமட்டுமில்லாமல் அடுத்த படத்துக்கு விகடன் குழுமம் ஓசி பாஸ் கொடுப்பதையும் கெடுத்துவிடும் என்பதால் வுடு ஜூட்.

எஸ்.எம்.எஸ். - கொண்டாட்ட மனநிலைக்கு நெம்புகோல்!


* - * - * - * - * - * - * - *

எஸ்.எம்.எஸ். படம் பார்த்து முடித்ததுமே 2001 பிப்ரவரி 14 கானல்நீர் போல மங்கலாக நினைவுக்கு வருகிறது. முதன்முதலாக ஐ லவ் யூ சொன்ன பெண்ணிடமிருந்தே தித்திக்கும் கிஃப்ட் கிடைத்தது என்றாலும் புவனாவிடம் சொன்ன ஐ லவ் யூ தான் எனக்கு ஆல்வேஸ் ஸ்பெஷல் (இவளிடம் சொன்னது எத்தனையாவது ஐ லவ் யூ என்று நினைவில்லை). ஏனென்றால் என் புத்திசாலித்தனத்தைப்(?) பார்த்து என் காதலை ஏற்றுக் கொண்ட முதல் பெண். அதுவுமில்லாமல் நான் லவ்விய ஃபிகர்களிலேயே ரொம்ப ரொம்ப சுமார் பீஸும் அவள்தான்.

--------------------------------------------

2001, பிப்ரவரி 14
இடம் : எழும்பூர் சங்கம் சினி காம்ப்ளக்ஸ் படிக்கட்டுகளில்.. பத்மம் திரையரங்கில் உள்ளம் கொள்ளை போகுதே ரிலீஸ்...

"உன்னை பர்ஸ்ட்டு எங்கே பார்த்தேன்னு ஞாபகம் இருக்கா?"

"இருக்கு. பஸ்லே சில்லறை இல்லாம உன்னை இறக்கி விட இருந்தாங்க. அப்போ சில்லறை கொடுத்தேன். அதை நீ திருப்பிக் கொடுக்கவே இல்லை"

"ஆமாம். அப்போ நீ ஸ்கூல் யூனிபார்ம்லே இருந்தே!"

"ம்ம்... விளையாட்டா ஆறுமாசம் ஆயிடிச்சி"

"உனக்கு ரஜினி புடிக்குமா? கமல் புடிக்குமா?"

"ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டிருக்கே?"

"ம்ம்ம்.. கொஞ்சம் கன்ப்யூஷன்லே இருக்கேன்!"

"என்ன கன்ப்யூஷன்"

"எப்படி சொல்லுறதுன்னு கன்ப்யூஷன்?"

"யாருகிட்டே எதை எப்படி சொல்லுறதுன்னு கன்ப்யூஷன்?"

"உங்கிட்டே தான்"

"பரவாயில்லை. சொல்லு. தப்பா நெனைச்சிக்க மாட்டேன்"

"ப்ராமிஸ்"

"காட் ப்ராமிஸ்"

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"

" ............................."

"உனக்கு இஷ்டம் இல்லியா?"

"லூசு.. கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?"

--------------------------------------------

புவனா எங்கிருந்தாலும் குழந்தை குட்டியோடு வாழ்க.

தொடர்புடைய பழையப் பதிவொன்று இங்கே.

* - * - * - * - * - * - * - *

கலாச்சார போலிஸ் ஐஜிக்களான ஸ்ரீராம் சேனாவினருக்கு என்னால் முடிந்த வேலண்டைன்ஸ் டே சிறப்புப் பரிசு.



சோஃபியா லாரன், எலிசபெத் டெய்லர் மாதிரியான எந்த ஆயாவோ கயட்டிப்போட்ட பிங்க் ஜட்டி.

தொடர்புடைய பழையப் பதிவொன்று இங்கே.

* - * - * - * - * - * - * - *

என்னைத் தெரியுமா?




கொல்டிக்கள் கூட இப்போதெல்லாம் லம்பாடி லுங்கி, டபுக்கு டபான் டான்ஸையெல்லாம் புறக்கணித்துவிட்டு அல்ட்ரா மாடர்னாக படமெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். லேட்டஸ்டாக வந்திருக்கும் சூப்பர் டப்பிங் படமிது. ஹீரோ (தெலுங்கு நாட்டாமை (பெத்தராயுடு) மோகன்பாபுவின் மகனாம்) ஒரு கஜினி. அதாவது மெமரி லாஸ் நோய் கொண்டவர். தூங்கி எழுந்ததுமே தூக்கத்துக்கு முன்பு நடந்தது எல்லாம் மறந்துவிடுமாம். ஆனால் எப்படியோ ‘அந்த’ மேட்டரில் மட்டும் கில்லாடியாக இருக்கிறார்.

ஓக்கே, லாஜிக்கையெல்லாம் மூட்டை கட்டிவிடுவோம். ஒருநாள் காலையில் தூங்கி எழுந்த ஹீரோ முந்தைய நாள் ராத்திரி ஒரு கொலை செய்துவிடுவதாக போலிஸ் கைது செய்கிறது. எனக்கு எதுவுமே ஞாபகமில்லை என்று வாதிடுகிறார் ஹீரோ. விசாரணையை ஒரு சூப்பர் ஃபிகர் ஐ.பி.எஸ். ஆபிஸர் நடத்துகிறார். க்ளைமேக்ஸில் இரண்டு மூன்று நாள் தூங்காமல் கொலை செய்தது யாரென்று ஹீரோ கண்டுபிடித்து விடுகிறார். மறுநாள் காலையில் நிரூபிக்க வேண்டிய நேரத்தில் தூங்கித் தொலைத்து விடுகிறார். அப்புறமென்ன? வண்ணத்திரையில் நீங்களே பாருங்கள். கொலையாளி யாரென்பது யாருமே எதிர்பாராத முடிவு. நல்ல த்ரில்லர்.

ஹீரோயின் ரியாசென். தாஜ்மஹாலில் மலைப்பாம்பு மாதிரி சப்பைப் ஃபிகராக இருந்தவர் திடீரென சமந்தா ஃபாக்ஸ் ரேஞ்சுக்கு சூப்பர் ஃபிகர் ஆகிவிட்டிருக்கிறார். அவருடைய ஒன்றரைக்கண் சிரிப்பு கூரான வாள் மாதிரி இதயத்தை அறுக்கிறது. ஹீரோ ஷாருக்கானை அச்சுஅசலாக இமிடேட் செய்கிறார். ஓக்கே, பையன் கூட சுமார் தான்.

படம் முழுக்க உபயோகித்திருக்கும் ஸ்பெஷல் கலர் கிரேடிங் ரிச்னஸ் தருகிறதென்றாலும் நேச்சுராலிட்டியைக் குறைக்கிறது. பாடல் காட்சிகளில் அநியாயத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ‘தண்ணிக் கருத்திருக்கு’ ரீமிக்ஸ் அபாரம். டப்பிங் படத்துக்கு ஒரு பழைய தமிழ் பாட்டின் ரீமிக்ஸ் என்பதை யாருமே சாத்தியமென்று நம்பமாட்டார்கள். சவாலாக எடுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார் எடிட்டர். லிப்ஸ் மூவ்மெண்ட்ஸ் மேட்ச் ஆகாத இடத்திலெல்லாம் மோஷன் ப்ளர் மாதிரியாக எஃபெக்ட்ஸ் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.

‘என்னைத் தெரியுமா?’ - எல்லோராலும் தெரிந்துக் கொள்ளப்பட வேண்டியவன்.