21 மார்ச், 2014

ஒரு சிடி 30 ரூபா

அப்போது கிழக்கு பதிப்பகத்தில் மாதநாவலுக்கு ஒரு இம்பிரிண்ட் தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். ‘கிழக்கு த்ரில்லர்’. நிறைய எழுத்தாளர்களிடம் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“2012 பொங்கலுக்கு ‘நண்பன்’ ரிலீஸ் ஆவுது. ஆனா 2011 டிசம்பர் 31ஆம் தேதியே திருட்டு டிவிடி வெளிவந்துடுது; இந்த ஒன்லைனரை வெச்சி ஒரு இருவதாயிரம் வார்த்தையிலே ஒரு கதை எழுதி கொடு பார்க்கலாம்” என்றார் பாரா.

அவர் சொன்ன காலக்கெடுவுக்குள் எழுத முடியவில்லை. கொஞ்சம் நாள் கழித்து கொடுத்தேன். இடையில் பாரா கிழக்கில் இருந்து விலகி சீரியல் உலகில் நுழைந்துவிட்டார். கிழக்கும் அந்த மாதநாவல் இம்ப்ரிண்டை நிறுத்திவிட்டது.

‘நண்பன்’ திரைப்படம் வெளியாக ஒரு மாத காலம் இருந்தபோது, என்னுடைய வலைத்தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக பதிய ஆரம்பித்தேன். அதை வாசித்த நண்பர் கே.ஆர்.பி.செந்தில், நண்பரும் இயக்குனருமான கேபிள்சங்கரிடம் இந்த கதை பற்றி சொல்லியிருக்கிறார். அதை புத்தகமாக கொண்டுவர வேண்டும் என்று என்னிடம் பேசிய கேபிள், உடனடியாக நட்பு அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டார். நண்பர் உலகநாதன் தன்னுடைய பதிப்பகம் மூலமாக அழிக்கப் பிறந்தவனை கொண்டுவந்தார்.

அந்த நாவல் தமிழ் வாசக பரப்பில் பெரிய அதிர்வுகளை எல்லாம் ஏற்படுத்திவிடவில்லை என்றாலும், முக்கியமான பலர் என்னை கவனிக்க காரணமாக அமைந்தது. என்னுடைய ‘விசிட்டிங் கார்ட்’ என்றுகூட அழிக்கப்பிறந்தவனை சொல்லலாம். குறிப்பாக சினிமாக்காரர்கள் நிறையபேர் வாசித்துவிட்டு என்னை தொடர்புகொண்டு பேசினார்கள். ஒரு படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதக்கூடிய வாய்ப்புகூட கதவை தட்டியது.

“இந்த கதையை ஸ்க்ரிப்டாக எழுதிக் கொடுங்கள்” என்று நான்கைந்து உதவி இயக்குனர்கள் கேட்டார்கள். “என்னால் ஸ்க்ரிப்ட் எழுத முடியாது. அனுபவமும் இல்லை. யார் முதலில் எழுதி, படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் டைட்டிலில் ‘based on the novel அழிக்கப் பிறந்தவன், written by yuvakrishna’ என்று கிரெடிட் கொடுக்கவேண்டும் என்று மட்டும் நிபந்தனை விதித்திருந்தேன். அவர்களில் ஓர் உதவி இயக்குனர் ஸ்க்ரிப்ட் தயார் செய்து, ஒரு தயாரிப்பாளரை பிடித்து படம் இயக்கவும் வாய்ப்பு பெற்றுவிட்டார். ஆனால் படப்பிடிப்புக்கு போவதற்கு முன்பாக நான் ஸ்க்ரிப்ட்டை பார்வையிட வேண்டும். நாவலில் நெருடும் சில விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்று என்னிடம் அனுமதி கேட்ட அத்தனை பேரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். உதாரணமாக இஸ்லாமிய தோழர்கள் மனம் புண்படுகிற விதமாக அதில் ஒரு காட்சியமைப்பு இருக்கிறது. இதை நண்பர் அப்துல்லா எனக்கு சுட்டி காட்டினார். நாவல் வேறு வடிவத்திலோ அல்லது இரண்டாம் பதிப்பு வருகையிலோ அதை சரிசெய்துவிடுவேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன்.
நாவல் வெளிவந்திருந்தபோது பாடலாசிரியர் பா.விஜய், நாவலை வாசித்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி பேசினார். அதற்கு பிறகு சிலமுறை அவரிடம் போனில் பேசியிருக்கிறேன். நேரிலும் ஒருமுறை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றின் விளம்பரத்தை ‘தட்ஸ் தமிழ்’ இணையத்தளத்தில் கண்டதுமே, அவருக்கு ‘வாழ்த்துகள்’ தெரிவித்து குறுஞ்செய்தியும் அனுப்பி வைத்தேன்.

நேற்று மாலை அழிக்கப் பிறந்தவனை வாசித்திருந்த நண்பர் ஒருவர் திடீரென ‘அழிக்கப்பிறந்தவனுக்கு வாழ்த்துகள்’ என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து எதற்கு வாழ்த்துகள் என்று கேட்டதுமே, உங்க நாவல் படமாகுது போல என்று சொன்னார்.
கூடவே மேற்கண்ட இமேஜையும் அனுப்பியிருக்கிறார். அந்த விளம்பரத்தை கண்டதுமே பா.விஜய் நடிக்கும் ‘ஒரு சிடி 30 ரூபா’ என்பது, அழிக்கப்பிறந்தவனை தழுவி எடுக்கப்படுவது நன்கு தெரிகிறது. இதில் இருக்கும் பாத்திரங்கள் அனைத்துமே, நாவலில் அப்படியே இருக்கின்றன. இதுவரை இப்படத்தின் கதையை எழுதி (?) இயக்கும் இயக்குனரோ அல்லது வேறு யாருமோ என்னிடம் இதுபற்றி பேசவில்லை. ‘அழிக்கப் பிறந்தவன்’ நாவலின் ஐந்து அத்தியாயங்கள் கீழ்க்கண்ட இணைப்புகளில் இருக்கிறது. முடிந்தால் அதை வாசித்து, மேற்கண்ட ‘ஒரு சிடி 30 ரூபா’ விளம்பரத்தைப் பாருங்கள்.

| அழிக்கப் பிறந்தவன்-1    |    அழிக்கப் பிறந்தவன்-2    |    அழிக்கப் பிறந்தவன்-3  |
| அழிக்கப் பிறந்தவன்-4    |    அழிக்கப் பிறந்தவன்-5    |    அழிக்கப் பிறந்தவன்-6  |

நூல் வடிவில் வாங்க : ‘டிஸ்கவரி புக் பேலஸ்’

inspiration அல்லது தழுவுதலை பெரிய குற்றமாக நான் நினைக்கவில்லை. சினிமாத்துறை ஆரம்பத்தில் இருந்தே இப்படிதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழிலேயே, சில காலம் முன்புதான் வந்த ஒரு நாவலை தழுவி எடுக்கும்போது, ரத்தமும் சதையுமாக உயிரோடு இருக்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் முன்கூட்டியே பேசிவிடலாம் இல்லையா?

இந்த நாவலைப் பொறுத்தவரை, சட்டப்படி உரிமை எனக்குதான் சொந்தம் என்றாலும் தார்மீகரீதியாக முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தம் என்று நான் உரிமை கொண்டாடிவிட முடியாது. இதன் ஒன்லைனரை உருவாக்கி தந்தவர் எழுத்தாளர் பா.ராகவன். இதில் ஓர் முழு அத்தியாயத்தை எழுதித் தந்தவர் நண்பர் அதிஷா. கே.ஆர்.பி.செந்தில், கேபிள் சங்கர் போன்றவர்கள் இதை புத்தக வடிவில் கொண்டுவர முயற்சித்தவர்கள். உலகநாதன் பதிப்பாளர். நண்பர் சுகுமார் அட்டைப்படத்தை வடிவமைத்தவர். டிஸ்கவரி புக் பேலஸ் நண்பர் வேடியப்பன் விற்பனை உரிமை பெற்றிருப்பவர். சிவராமன், நரேன் போன்ற இன்னும் நிறைய நண்பர்கள் மறைமுகமாக இதில் பங்களித்திருக்கிறார்கள். இந்நாவல் திரைப்படமாக வருகிறது என்றால் என்னைவிட அதிக மகிழ்ச்சி அடையப் போகிறவர்கள் அவர்கள்தான். அப்படியிருக்க எங்களுக்கு சம்பந்தமேயில்லாத யாரோ மொத்தமாக இதன் பலனை அறுவடை செய்வது நியாயமா?

என்ன செய்யலாம்? சொல்லுங்கள், நண்பர்களே!

26 கருத்துகள்:

  1. ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்

    ஞானி சார் தளத்தில் பார்த்த பாரதியார் வரிகள்; விடாதிங்க சார் அவனுங்கள

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா1:56 PM, மார்ச் 21, 2014

    மீடியாவுல இருக்க உங்களுக்கே இந்த கதினா,
    சாமன்னியனின் நிலை எப்பிடி இருக்கும் என்றே யூகிக்கமுடியவில்லை யுவா.
    Madotica :-(

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா2:01 PM, மார்ச் 21, 2014

    you want to watch the movie for free?

    பதிலளிநீக்கு
  4. நாவலை காப்பி ரைட்ஸ் புரோட்டக்ட் பண்ணி கொடுத்து இருக்கலாமே? ஏன் செய்யலை? அவங்க தான் சிடி பார்த்தே கதை ரெடி பன்றாங்களே! வெள்ளித்திரை படத்தில வருகிற மாதிரி இருக்கு. இதை அவர்களின் பல்வேறு சங்கங்களில் முறையிடலாம். இல்லை வழக்கறிஞரை கலந்தாலோசித்து, வக்கீல் நோட்டிசாக விடலாம். பேசிய ஆதாரங்கள் வைத்திருந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  5. பா,விஜய் உங்ககிட்ட போன்ல பேசினார்., பாராட்டினார்ன்னு சொல்றீங்க. குறுஞ்செய்தி அனுப்பியிருக்கீங்க. இந்தப் படத்தின் நாயகன் என்கிற முறையில் அவரை நேரில் சந்தித்துப் பேசுங்கள். அவர் மூலம் இயக்குனரிடமும். அவற்றால் பலன் இல்லை என்று ஆனால் அடுத்ததை யோசிக்கலாம். என் மனதில் படுவது இதுதான் யுவா.

    பதிலளிநீக்கு
  6. / -- மீடியாவுல இருக்க உங்களுக்கே இந்த கதினா,
    சாமன்னியனின் நிலை எப்பிடி இருக்கும் என்றே யூகிக்கமுடியவில்லை யுவா. --/

    Fight with Yours own Writes.

    பதிலளிநீக்கு
  7. சிந்திப்பவன்3:39 PM, மார்ச் 21, 2014

    please take suitable legal action on them Yuva.Do not allow them to go free!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா4:48 PM, மார்ச் 21, 2014

    u can directly talk with pa.vijay....

    @tparavai

    பதிலளிநீக்கு
  9. ஒரு சில இயக்குநர்களின் திறமையின்மையை இது காட்டுகிறது. இதற்கு முன் வெளியிலிருந்து திருடினார்கள்,இப்போது உள்ளேயேத் திருட ஆரம்பித்திருக்கிறாகள்.

    வெறும் புகைப்படங்களைப் பார்த்து முடிவு செய்யாதீர்கள், தீர விசாரித்து எதிர்வினை ஆற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகளும், அனுதாபங்களூம். சுமுகமாக பேசி முடிவெடுத்து விடுங்கள். ஆனால் சும்மா விட்டு விடாதீர்கள்

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா10:20 PM, மார்ச் 21, 2014

    படத்தின் தலைப்பை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், முதலில் உங்கள் கதை தான் படமாகிறதா என்று பா.விஜய் அவர்களிடம் கேட்கவும். இது தான் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது - சுதா

    பதிலளிநீக்கு
  12. I suspect Pa.Vijay's involvement in this theft. He has read this novel already. Why to blame just the director alone?

    பதிலளிநீக்கு
  13. நேரடியாக பேசி பாருங்கள் இல்லை என்றால் இதே கட்டுரையை ஏதாவது வாசகர் பரப்பு அதிகமுள்ள இதழில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். சட்ட நடவடிக்கைக்கும் முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. ப விஜயும் உங்களைப் போல கழகக் கண்மணி தானே! கலைஞர் ைஐயா மூலம் பேசிப்பாருங்க

    பதிலளிநீக்கு
  15. ஒரு எழுத்தாளனின் எழுத்தை முதன் முதலில் பிரிண்டில் பார்க்கும் போது ஏற்படும் மனநிலை என்பது அனுபவித்தவர்களுக்குதான் தெரியும், அதுவும் அவரது கதை திரைகதையாகி, திரைப்படமாகும் போது ஏற்படும் மகிழ்ச்சி என்பது மிக பெரிய விஷயம், அதை அனுபவிக்க முடியாமல், திட்டம்போட்டு திருடுகிறார்கள் என்றால் இவர்களை அப்படியே விட்டுவிடமுடியாது, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்த படத்தின் நாயகன் உங்களுக்கு பழக்கம் (சிறிதளவு ) அவரே இந்த கதையை திரைப்படமாக்க நினைத்து, திட்டம் போட்டு அதற்க்கான ஏற்பாடுகளை செய்ததது போலதான் இருக்கிறது, ஆகவே அவரிடமே நேரடியாக பேசி, நியாயம் கேட்டு பெறுவதே சரி, இல்லை என்றால் பிறகு சட்டப்படி போராடவேண்டும், இதை இப்படியே விட்டுவிட கூடாது யுவா. முயற்சியுங்கள்,வெற்றி உண்மையின் பக்கமே இருக்கும், அது உங்களுக்கு கிடைக்க பிரார்திப்போம் நாங்கள்.முருகவேல் சண்முகம்

    பதிலளிநீக்கு
  16. யுவா, போராடுவதோடு கூட, உங்கள் இந்த கதை திரைப்படமாகிறது என்றால் உங்களின் சரக்கு விலைபோகிறது என்று தானே அர்த்தம், இதையே உங்களுக்கான தூண்டுதலாக வைத்து மென்மேலும் கதைகள் எழுதுங்கள், அது சாத்தியமே, இதைவிட பெரிய இலக்கை அடையலாம், முயற்சியுங்கள் வாழ்த்துக்கள்.முருகவேல் சண்முகம்

    பதிலளிநீக்கு
  17. இதுதான் திரையுலகம், முன்பு சுஜாதா சாருக்குப் பல ரூபங்களில் நடந்தது,இப்போது உங்களுக்கு நடக்கிறது. படைப்பாளிகள் வஞ்சிக்கப்படுவது முறையன்று. உங்கள் நியாயமான உரிமைக்காகப் போராடுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா12:34 AM, மார்ச் 24, 2014

    I dont think , any one has the guts to produce pa.vijay movie. except for some political gains.
    since he is in dmk, thats also ruled out.
    it's most probably his production or he is paying to act.

    start with non legal means. since you dont know the story of the movie. it may not be easy.
    so going thru a lawyer who knows cine stuff can help. it might cost you.
    else, lodge a complaint with cine union, not necessarily to complain that they stole your stuff. there seems to be a resemblance, if its true.. you want your name to be included in the movie titles.

    பதிலளிநீக்கு
  19. நேரடியாக திரைப்படத்தின் க்ரியேட்டிவ் ஆட்களிடம் பேசி விட்டு, நெருடல் இருந்தால் ஒரு லீகல் நோட்டிஸ் அனுப்பி விடுங்கள்! டைட்டிலில் பேர் போடுவதற்கு கண்டிப்பாக ஒத்துக்கொள்வார்கள்.

    சம்பந்தமில்லாதது: ‘நண்பர் அதிஷா’ என குறிப்பிட்டதை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். ராசியாகி விட்டீர்களா? உங்கள் இருவரையும் எனக்கு பழக்கமில்லை. ஆனால் உறவுகளைப்போல் இல்லாமல் நட்பு, விரிசல் வந்தாலும் மீண்டும் சேரும் வல்லமை கொண்டது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. before reading the post,just by seeing the photos itself i thought its the news of ur novel is going to be filmed and wanted to congratulate, but after reading the post only i realised you are cheated.Don't leave fight for your rights.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா7:03 PM, மார்ச் 24, 2014

    https://www.facebook.com/rahesh.rahesh.73 ithuthan indha padathoda director fb id. ithu padathoda producer id https://www.facebook.com/ven.govinda neenga ivanga kita kettu pakalame

    பதிலளிநீக்கு
  22. லக்கி சார்,

    1971-72 இல் ஒருவர் ''கேஷுவல் லீவ்'' என்று சென்னை சபாக்களில் ஒரு நாடகம் போட்டார். ஓரளவு பிரபலமும் ஆயிற்று. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தியில் ''கோல்மால்'' என்ற படம் சக்கை போடு போட்டது. அதுவே தமிழில் ''தில்லு முல்லு'' என்று ஆனது! (ஹிந்திக்கும் முன்னால் பெங்காலியில் வந்தது என்பார்கள்).பாவம், ஒரிஜினல் எழுத்தாளருக்குப் பட்டை நாமம்!

    நீங்கள் திரு. பாராவுக்கோ மற்றவர்களுக்கோ கிரெடிட் கொடுப்பது உங்கள் பெருந்தன்மையைப் பொறுத்த விஷயம். ஆனால் முழுக் கதைக்கும் ஏகபோக உரிமையாளர் நீங்கள்தான். எனவே முழுக்க முழுக்க நியாயமான உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள்!

    நன்றி!

    சினிமா விரும்பி
    http://cinemavirumbi.blogspot.in

    பதிலளிநீக்கு
  23. நூருத்தீன்12:38 AM, மார்ச் 26, 2014

    திருட்டு டிவிடி சினிமா பற்றிய கதையைத் திருடி சினிமா? What an irony? அப்புறம் Ven “Govinda“ presents என்பதற்கு ஏதும் உள்ளர்த்தம் இருக்கிறதா என்பதையும் check செய்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  24. மன்னிக்கவும் ,மூவருக்கு பின்னூட்டம் ஒரே ,பக்கத்தில் தட்டச்சு செய்ததில் அனைத்தும் காபி ஆகிவிட்டது,எனவே அதனை நீக்கிவிட்டு தனியாக இடுகிறேன்.

    லக்கி,

    கதை சுடுவது என்பது "கர்ணப்பரம்பரை" தொழிலாக தமிழ் சினிமாவில் இருப்பதே :-))

    அபூர்வராகங்கள் படம் என்.ஆர் .தாசன் என்பவரின் "வெறும்மண்'நாடகத்தை சுட்டது, எழுத்தாளர் வழக்கு போட்டு 10 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பின் ரூ 1000 அபராதம் பாலச்சந்தருக்கு விதிக்கப்பட்டுள்ளது,அவரும் ஹாயாக கட்டிட்டு இன்னிக்கு இயக்குனர் சிகரமா இருக்காரு அவ்வ்.

    முதல் மரியாதை மற்றும் தேசியவிருது பெற்ற "காஞ்சிவரம்" படத்தின் கதை எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனதாம், பாரதி ராஜாவுக்கு நோட்டீஸ் விட்டு அப்புறம் வழக்கு போட்டால் இழுக்கும் என ஒதுங்கிட்டாராம்.

    பி.கே.பியின் கதை தலைப்பை கூட சுட்டாங்க, பதிவுலகில் சுட்டது தப்பில்லை, காப்பி ரைட்ஸ் தலைப்பிற்கு இல்லைனு தானே "எல்லாம் தெரிஞ்ச " மக்கள் பேசினாங்க, ஆனால் அறம் என ஒன்றை மறந்துவிட்டார்கள்!

    மேலும் முழு விபரங்களுக்கு நம்ம பதிவை காண்க,

    http://vovalpaarvai.blogspot.in/2014/01/blog-post.html

    #//ஒரு சிடி 30 ரூபா’ என்பது, அழிக்கப்பிறந்தவனை தழுவி எடுக்கப்படுவது நன்கு தெரிகிறது. இதில் இருக்கும் பாத்திரங்கள் அனைத்துமே, நாவலில் அப்படியே இருக்கின்றன//

    படத்தின் கதை தெரியாமல் எப்படி இப்படி சொல்ல முடியும்?

    உண்மையில் சொல்லப்போனால் "கதைக்காட்சியமைப்பு" ஒத்து போனால் தான் திருட்டு டிவிடி மையமாக கொண்ட கதைக்கே உரிமை கேட்க முடியும், ஏன் எனில் இந்த திருட்டு டிவிடி சமாச்சாரம்ம் எல்லாரும் நன்கு அறிந்தது, அதுவும் சினிமாவில் இருக்கவங்க எங்களுக்கு இது தெரியாதா, இது எங்க நேரடி அனுபவம் என சொன்னால், வழக்கு நிக்காது.

    அப்புறம் புத்தகமா போட்டாலே காப்பி ரைட் வந்துடும், கூடுதலாக பாதுகாப்புக்கு காப்புரிமை பெற 500 ரூ தான் செலவு.

    வழிமுறைகளை முன்னர் எழுதிய அப்பதிவில் சொல்லி இருக்கேன் படிச்சி பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா9:05 AM, ஏப்ரல் 06, 2014


    கதை கதையாம் காரணமாம்...

    http://cinema.vikatan.com/articles/news/28/4359

    பதிலளிநீக்கு
  26. Our justice system is weak, expensive, time consuming and favours rich and powerful. This is the root cause of most crimes. All criminals including "copycats" know this very well.
    You cannot win against them, maybe after 10 years and 10 lakhs you can get justice.

    பதிலளிநீக்கு