18 மார்ச், 2014

டிஜிட்டல் தீண்டாமை

இணையத்தளங்களில் ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள்.

1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் மறைமுகமாகவேனும் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான்.

1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக கல்விகற்று இணையத்துக்கு வருபவர்களை நக்கல் அடித்து துரத்தி அடிப்பது. பிறப்பு, வளர்ப்பு குறித்த inferiority complex ஏற்படுத்துவது.

2) இடஒதுக்கீடு போன்ற விவாதங்கள் வரும்போது ‘தகுதி’ பேசுவது. தகுதி என்பது பூணூலா என்று பதில் கேள்வி கேட்டால், ‘அய்யய்யோ... சாதிவெறி புடிச்சவன்’ என்று கூப்பாடு இடுவது.

3) ‘லைக்’ இடுவது, ‘கமெண்டு போடுவது’, ‘விவாதிப்பது’ போன்ற விஷயங்களில் இருக்கும் partiality. நீண்டகால இணைய விவாதங்களில் நீடிப்பவர்கள் இதை தெளிவாக உணரமுடியும்.

4) மோடி, ஜெயலலிதா என்று அவர்களது தேர்வுகள், எந்த தேசத்தில் வசிப்பவர்களாக இருந்தாலும் unique ஆக இருக்கும். தேசம் கடந்து எப்படி எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள், இவர்களை இணைக்கும் ‘சக்தி’ எதுவென்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

5) ‘ஈழம்’ மாதிரி பிரத்யேகப் பிரச்சினைகளில் எப்போதும் மெஜாரிட்டியான தமிழர்களுக்கு எதிரான வாதங்களையே முன்வைப்பார்கள். அதுவே பார்ப்பனரல்லாத தலைமைக்கு எதிராக திரும்பும் சந்தர்ப்பம் கிடைக்கிறதென்றால், அதையும் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் முன்பு பேசிவந்தவற்றிலிருந்து அப்படியே ‘யூ டர்ன்’ அடிப்பார்கள்.

6) தமிழர்களை ‘பொறுக்கி’ என்றே இணையத்தில் எப்போதும் விளிக்கும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களை இவர்கள் கண்டித்ததில்லை. பதிலுக்கு ரீட்விட்டு, லைக்கும் தூள்பறக்கும். ஏனெனில் அந்த விளிப்பு தங்களுக்கு பொருந்தாது என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அதே மொழியை எதிர்விவாதம் செய்பவர்கள் பயன்படுத்திவிட்டால், ‘அய்யய்யோ... நாகரிகம் அற்ற காட்டுமிராண்டிகள்’ என்று கூப்பாடு போடுவார்கள். அயல்நாட்டில் எல்லாம் படித்த பேராசிரியர், லஜ்ஜையே இல்லாமல் தன்னை சாதியடையாளத்தோடு சமூகத்தில் முன்வைத்துக் கொள்கிறாரே என்றெல்லாம் யோசிப்பதேயில்லை.

7) ஊழல்தான் நாட்டின் முதன்மைப் பிரச்சினை என்று வாதாடுவார்கள். சாதி, மதவாதப் பிரச்சினைகளை பேசும் விவாதங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் (லாலு, ராசா மாதிரி) பெயர்களை அடுக்குவார்கள். அதாவது இவர்கள் அதிகாரத்துக்கு வரும் பட்சத்தில், இதுதான் நடக்கும் என்பார்கள். இஸ்ரோவிலும் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு என்று சி.ஏ.ஜி. சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக் காட்டினால் அப்படியே லீஸில் விட்டுவிடுவார்கள். ஊழல் எதிர்ப்பிலும் கூட இவர்களுக்கு ‘தேர்வு’ இருக்கிறது.

8) ‘பெரியார்’ என்கிற பெயரை தினமும் தேடுபொறி இயந்திரங்களில் தட்டச்சி தேடுவார்கள். மறைந்து நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் ஆன தலைவரை கற்பனை செய்யவியலா வார்த்தைகளில் அர்ச்சிப்பார்கள். ’பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும்’ என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சு அதனால்தான் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் அதைவிட மோசமான, ஆபாசமான வார்த்தைகளை அவர் குறித்து இணையத்தில் வாசித்திருக்கிறேன்.

9) சாதிய அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம் கொண்டவர்களோடு, அவர்கள் எந்த சாதி, மதம் என்கிற பாகுபாடெல்லாம் காட்டாமல் தற்காலிக கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். அப்போதைக்கு முற்போக்காளர்கள் மூடிக்கொண்டு போகவேண்டும், அவ்வளவுதான் நோக்கம். ‘விஸ்வரூபம்’ பிரச்சினையின் போது இந்த போக்கை நீங்கள் கண்டிருக்கலாம்.

10) இவர்களோடு ஒத்துப் போகிறவர்களை அடிவருடிகளாக மாற்றிக் கொண்டு, எதிர்நிலை விவாதம் பேசுபவர்களை தேடி அடிக்கும் அடியாட்களாக மாற்றுவது. உதாரணங்கள் தேவையில்லை. அடிபட்டவர்களுக்கு புரியும்.

பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தீண்டாமை சில இந்திய நகரங்களில் முற்றிலும் ஒழிந்திருக்கலாம். அதன் தாக்கம் சமூகத்தில் குறைந்திருக்கலாம். ஆனால் களம் மாறியிருக்கிறது. ’டிஜிட்டல் தீண்டாமை’ சத்தியமாக இங்கே நிலவுகிறது. உணராதவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதற்கு அவர்களே பலியாகப்போவது உறுதி!

17 கருத்துகள்:

  1. பெயரில்லா3:47 PM, மார்ச் 19, 2014

    Excellent. In India only less than 5% of people believe that all humans are equal. Indians have no moral right to talk about racism.
    Very brave article.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா4:56 PM, மார்ச் 19, 2014

    Can you also write about other casts?

    பதிலளிநீக்கு
  3. Yuva,

    I am a follower of your blog atleast for the last couple of years. Moreover I also belong to the same area (Karthikeyapuram, 4th Street). I always moved by your articles and the impact of them will be with me for longer period.

    On reading your above article, I decide to write to you what I felt:-

    I am a tamil iyengar by birth. My family is still in Madipakkam and I travel a lot abroad for my projects. My long stay out of the country in GCC / ME and my habituals (social drinking, not wearing any symbol on my forehead, not visiting temples even when I am visiting India - I am not an Atheist) made me separated from my family. Even being the first son of the family, all the respect will go to my "Tambi" only because he is still a kudumi iyangar who lives in Mylapore. This background is highly required in support of my review comments, why I am differing with you on the above article.

    I follow the blogs of yours, Athisha, Karki, Parisal, Tamiraa, Charu, Manasu, Valipokkan, Moonram Suzhi (listed only few) etc., The common across these blogs are (i) Kadavul Maruppu (ii) Alavida mudiyatha Bramana dvesham. This doesn't stopped me in reading your blogs because I got attracted (rather addicted) by the style of writing....In fact I am very worried when bloggers like Parisal, Karki almost stopped writing in their blogs.

    In this context I regret to bring you a note that I always feel that the entire Tamil Inayam is against the belief in GOD and Brahmins. I feel majority of the tamil bloggers are of the same attitude and atleast in the Inayam we brahims are the minorities.

    To conclude your above article generalizing the Brahims is a real shock to me. I may be wrong in my reviews but thought of sharing my views to you.

    Luv,

    Raman A V
    +961 76641985
    Camp at Beirut, Lebanon

    பதிலளிநீக்கு
  4. WHATEVER YOU HAVE WRITTEN IS EQUALLY APPLICABLE FOR ALL OTHER CASTES.

    பதிலளிநீக்கு
  5. ஒடுக்கப்பட்ட இனம் முழுவதும் கூகிள் நிறுவனத்துக்கு பல வகையில் கோடானு கோடி நன்றிக்கடன் பட்டுள்ளது.

    தாங்கள் மட்டுமே உயர்ந்தர்கள் என்று பீற்றிக்கொன்டு மற்ரவர்களை மட்டம் தட்டுபவர்களை, வெற்றிகரமாக வாழ்ந்து வெற்றிகொள்வோம்.

    பதிலளிநீக்கு
  6. i was very disappointed to read this, especially coming from someone of your calibre, who can and has done better. i follow your posts regularly, and am always impressed by your observation and analytical skills. except this one.

    this is an anti brahmin diatribe, without any basis for social revolution, and is more a reflection of narrow personal prejudice. times and situtations have changed 40+ years. you might want to look at reality today. wonder what happened to periyar's wealth and who is enjoying it. wonder what happened to periyar's ideals and whom all he would find fault today, if he were alive.

    why do you get obsessed with brahmins so much. most of them have left tamil nadu, and made lives in other states or outside of india. their children are not interested in tamil nadu anymore and most of the new generation dont even know who periyar is. those still in tamil nadu, know they are not wanted there, and have their problems and trying to find a way out, either abroad or other states.

    i would encourage to be a little more balanced and not give in to obsessive focus on brahmins. you are a good writer and build on your strength. learn to be more honest in regards to your observations re the ills of tamil society today and how you can contribute to make it better. this type of article does nothing except to encourage some jalra types. and that too of a dubious kind.

    best wishes.

    பதிலளிநீக்கு
  7. Pothum da samy....ivanunga kitta irunthu aeppo than thapika poromo...

    பதிலளிநீக்கு

  8. நிதர்சனமான பதிவு.
    //5) ‘ஈழம்’ மாதிரி பிரத்யேகப் பிரச்சினைகளில் எப்போதும் மெஜாரிட்டியான தமிழர்களுக்கு எதிரான வாதங்களையே முன்வைப்பார்கள். அதுவே பார்ப்பனரல்லாத தலைமைக்கு எதிராக திரும்பும் சந்தர்ப்பம் கிடைக்கிறதென்றால், அதையும் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் முன்பு பேசிவந்தவற்றிலிருந்து அப்படியே ‘யூ டர்ன்’ அடிப்பார்கள்.//

    மேலை நாடுகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளில் இந்த உண்மை தெளிவாக வெளிப்படுகிறது. எப்போது எல்லாம் இங்கு உள்ள தமிழர்கள், தமிழமைப்புகள் மூலம் இலங்கை தமிழர்கள் நலனுக்காக குரல் கொடுத்தாலோ, இன படுகொலைகளுக்கு சர்வ தேச விசாரணை வேண்டும் என்று குரல் கொடுத்தாலோ உடனே சங்கங்களை தடை செய்ய பட்ட அமைப்புக்கு(விடுதலை புலி) சட்ட விரோதமாக ஆதரிப்பதாகவும், வேறு பல புரளிகளை கிளப்பி விட்டும் தடுக்க பார்க்கிறார்கள். இதையும் மீறி FetNA போன்ற அமைப்புகள் கடுமையாக முன்னெடுப்பை எடுத்து செல்கின்றன. மற்றொரு விஷயம், பறை,சிலம்பம் போன்றவற்றை தமிழர்களின் அடையாளமாக பரப்ப தமிழ் சங்கங்கள் பல் வேறு முயற்சியை எடுத்து வெற்றி பெற்று வருகிறது. ஆனால் கர்னாடக சங்கீதமும் பரத நாட்டியமும் தான் தமிழர்களின் அடையாளம் என்று அந்த முயற்சிக்கும் முட்டு கட்டை போட்டு வருகிறார்கள்

    பதிலளிநீக்கு
  9. //3) ‘லைக்’ இடுவது, ‘கமெண்டு போடுவது’, ‘விவாதிப்பது’ போன்ற விஷயங்களில் இருக்கும் partiality. நீண்டகால இணைய விவாதங்களில் நீடிப்பவர்கள் இதை தெளிவாக உணரமுடியும்.//

    செம காமெடி. நான் தமிழ்மணத்தில் இருந்த போது இதையெல்லாம் அட்சர சுத்தமாக ஃபாலோ செய்தது பெரும்பாலும் திராவிடம் பேசுபவர்கள் தான். ஒரு வேளை, இவர்கள் தான் நவீன பார்ப்பனர்களா?

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா6:53 PM, மார்ச் 27, 2014

    Yes your are correct!. Good post

    S.Ravi
    Kuwait.

    பதிலளிநீக்கு