24 மே, 2014

கோச்சடையான்

தியேட்டரே அலறுகிறது. செம மாஸ். விசிலடித்து விசிலடித்து வாயே விசிலாகி விட்டது என்றெல்லாம் ஏற்றி விடுவார்கள். எதையும் நம்பாதீர்கள். செம கடி. சிகரெட் பிடிக்காதீர்கள் என்கிற வாசகத்தோடு ரஜினி சிகரெட் பிடிக்கும் ஸ்லைடை தியேட்டரில் போட்டால் கூடத்தான் விசிலடிக்கிறார்கள். ரஜினி படமென்று கூறி மீண்டும் குசேலன் மாதிரி கழுத்தறுத்திருக்கிறார்கள்.

ஆசியாவின் முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படத்தைவிட நிக்கில்டன் சேனலில் வரும் நிஞ்சா ஹட்டோரி சூப்பராக சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒருவேளை நிஜ ரஜினியையே வைத்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவை இயக்கியிருந்தால் வேற ரேஞ்சுக்கு போயிருக்கலாம். அறிமுக இயக்குனர் சிம்புதேவனுக்கே ஒரு வரலாற்றுப் படத்தில் ரிஸ்க் எடுக்கும் தில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாருக்கு ஏன் அச்சமென்று தெரியவில்லை.

பிரும்மாண்டமான கிராஃபிக்ஸ் செட்டிங்ஸ் ஓக்கே. ஆனால் பொம்மையில் உருவாக்கப்பட்ட மாடல் ஆட்கள்தான் படுத்துகிறார்கள். ரஜினி சில சீன்களில் பரவாயில்லை. பெரும்பாலான காட்சிகளில் பரிதாபமாக இருக்கிறார். நல்லவேளை த்ரீடி அனிமேஷனில் தன்னை பார்க்காமலேயே நாகேஷ் செத்துப்போய் விட்டார். நாசர், சரத்பாபு, ஷோபனா உள்ளிட்டோரின் பொம்மைகளெல்லாம் அய்யோவென்றிருக்கிறது. கற்பனைக்கு எட்டாத போர்க்கள காட்சிகளை காட்டும்போது பிரமிப்பு ஏற்படுவதற்கு பதிலாக, இதெல்லாம் பொம்மைகள்தானே என்று சலிப்புதான் தோன்றுகிறது.

புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும்போதே அதை ரொம்ப டம்மியாக கொண்டுவந்தால், அந்த தொழில்நுட்பம் மீதே ரசிகர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கமல்தான் சரிபட்டு வருவார். வெகுஜன ரசிகனுக்கு புரியாதவாறு அறிவுஜீவித்தனமாக எதையாவது செய்து கையை சுட்டுக் கொண்டாலும் கலக்கலாக புது டெக்னாலஜியை எஸ்டாப்ளிஷ் செய்வார்.

இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று டைட்டிலில் போடுகிறார்கள். முன்பெல்லாம் டிடியில் போடும் சேர்ந்திசை, மெல்லிசை ரேஞ்சுக்கு பாடல்கள் இருக்கிறது. பின்னணி இசையும் ஏனோதானோ. ஒருவேளை இசையமைத்தது ஆஸ்கர் நாயகனின் ஃபேக் ஐடியோ என்னவோ?

படத்தின் பெரிய ஆறுதல் ரஜினி மற்றும் நாசரின் பின்னணிக் குரல். வயசானாலும் சிங்கங்கள் காடு அலறும் கர்ஜனையாகதான் உறுமுகின்றன. போலவே கே.எஸ்.ரவிக்குமாரின் அருமையான கதை, திரைக்கதை, வசனம். பக்காவான பஞ்ச் டயலாக்குகளை பொம்மைக்கு எழுதி வீணடித்துவிட்டாரே என்று ஆதங்கமாக இருக்கிறது. பிளாஷ்பேக்கை ஏன் தீபிகா பொம்மையிடம், ரஜினி பொம்மை சொல்கிறதோ தெரியவில்லை. ஊருக்கே தெரிந்த கோச்சடையான் பொம்மையின் கதை, தீபிகா பொம்மைக்கு மட்டும் தெரியாதா என்ன?

வாழ்ந்துகொண்டிருக்கும் ரஜினியை வைத்து இதுமாதிரி கந்தர்கோலம் செய்திருப்பதைவிட, மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆரை கிராஃபிக்ஸில் கொண்டு வந்திருந்தால், வாத்தியாரை திரையில் காணும் திருப்தி மட்டுமாவது மிஞ்சியிருக்கும்.

பெட்டர் லக் அட் லிங்கா!

7 கருத்துகள்:

  1. Padam nalla irukunra payathula eluthi irukeenganu nallave theriyuthu. Valakkama puthu muyarchikala kamal edupaaru, ipa eantha peru Rajinikum poghuthunkira aathangam thaan intha post. neenga ena sonalum padam theri mass enbathe unmai.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:58 PM, மே 24, 2014

    ok kamal fan... unga velai mudinchu pochu... better luck next time...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4:40 PM, மே 25, 2014

    For this post, I want to read the comments. I hope it will be mix of horror, comedy, action, satire...

    பதிலளிநீக்கு
  4. ஹ ஹ ! நெசமாலுமெ செம தம்பி !

    பதிலளிநீக்கு
  5. // இதெல்லாம் பொம்மைகள்தானே என்று சலிப்புதான் தோன்றுகிறது.


    நியாயமாகப் பார்த்தால், எந்தத் திரைப்படத்தை பார்த்தாலும் பொம்மையாகத் தான் தோன்ற வேண்டும். எல்லாம் வெறும் நடிப்பு, எல்லாம் படச் சுருளில் அச்சடித்த உருவம் என்றுதான் தோன்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா3:43 PM, மே 27, 2014

    சுஜாதா இருந்திருந்தால் திருத்தங்கள் சொல்லி மெருகேற்றி இருப்பார்!

    - Karthik

    பதிலளிநீக்கு