பெங்களூர் தீர்ப்பு கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது.
நீதித்துறைக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கும் இடையேயான மோதல் என்பது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. லல்லு, ஜெ தண்டனைகளுக்குப் பிறகு நீதித்துறையின் கை சற்றே ஓங்கியிருக்கிறது. இதன் விளைவாக ஏராளமான குழப்பங்களை எதிர்காலத்தில் நாம் சந்திக்க நேரிடும். ஜனநாயக நாட்டில் ’மக்கள்தான் மகேசர்கள்’ என்று சொல்லப்படும் கூற்று வெறும் வார்த்தைஜாலமாக உருமாறக்கூடும். நீதித்துறையினை நடத்துபவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆனால் அரசு தலைமை ஏற்பவர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்கிற அடிப்படையான வேறுபாட்டை நாம் அறிய வேண்டும். நேரடி மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாத இந்திய ஜனாதிபதி, தன்னிச்சையாக தன்னுடைய சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்தத் தொடங்குகிறார் என்று கற்பனை செய்து பார்ப்போம். விளைவு என்னவாகும்? அதுவேதான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பொருந்தும்.
ஊழல் ஒழிப்பு, ஊழல் தடுப்பு ஆகியவை நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமானவை. ஆனால் ஊழலுக்கே வாய்ப்பில்லாத மெக்கானிஸத்தை நம் அரசியலமைப்பு உருவாக்குவதுதான் ஊழலை ஒழிக்கக்கூடிய நிஜமான நடவடிக்கையாக இருக்கும். நடந்துவிட்ட ஊழல்களுக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டோம் என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்வது நமக்கு எவ்விதத்திலும் பெருமையல்ல. சர்வதேச அரங்கில் நாம் தலைகுனியக்கூடிய நிகழ்வுகள்தான் இவை.
மூன்று முறை மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலிலேயே போட்டியிட முடியாது என்கிற நிலையை எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள் என்று நாம் நினைக்க இடமேயில்லை. ஏனெனில் பக்கத்து வீடு எரிந்தால், தன் வீடு என்னவாகும் என்பது அவர்களுக்கும் தெரியும். எதிர்காலத்தில் ஒரு தலைவரின் மீதோ, கட்சியின் மீதோ பொய்வழக்கு புனையப்பட்டு - ஆனால் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகள் உருவாக்கப்பட்டு - தண்டனைகள் கிடைக்கும் பட்சத்தில் அது ஜனநாயகத்துக்கு நல்லதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். உதாரணத்துக்கு செப்.27 அன்று கோபாலபுரம் வீட்டுக்கு கல்லெறியச் சென்றவர்களுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது. கல்லெறியச் சென்றவர்கள் தந்த புகாரின் பேரில் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. டிகுன்ஹா மாதிரி ஒரு நீதிபதி இந்த வழக்கை விசாரித்து இருவருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கினால் அது சரியான நீதியாக அமையுமா?
1996ல் பதியப்பட்ட ஒரு வழக்குக்கு 2014ல் தீர்ப்பு என்பதே இந்திய நீதித்துறையின் பலவீனத்தைதான் காட்டுகிறது. 1991-96 ஆட்சிக்காலத்தில் அவர் குற்றமே செய்திருக்கட்டும். பதினெட்டு ஆண்டு காலம் கழித்து, வயதுமுதிர்ந்த நிலையில் இருப்பவருக்கு சிறைத்தண்டனை என்பது மனிதாபிமான பார்வையிலும் சரியானதாக இருக்க முடியாது. ஒரு குற்றம் நடந்திருக்கிறது என்றால், அதற்கு உரிய காலத்தில் தண்டனை தந்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திய நீதி மட்டுமல்ல, காலம் தாழ்த்திய தண்டனையும் கூட சரியானதல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வழக்கை தாமதப்படுத்தினார் என்று சால்ஜாப்பு சொல்லப்போனால் அதுவும்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. வாய்தா கொடுத்ததும் நீதிமன்றங்கள்தானே? விலக்கு கேட்கும்போதெல்லாம் கொடுத்த நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தானே தாமதத்துக்கு காரணம்? கண்டிப்பு காட்டி வழக்கை விரைவாக நடத்தவேண்டிய பொறுப்பு யாருக்கு அதிகம்?
91-96 ஆட்சிக்காலத்தில் செய்த ஊழலால் அவர் 2014ல் தொடங்கி அடுத்து பத்தாண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தகுதியற்றவர் ஆகிறார். ஆனால் இடையில் 2001-06 மற்றும் 2011-14 அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக இருமுறை பொறுப்பேற்றிருக்கிறார். இப்போது தேர்தலிலேயே நிற்க தகுதியற்றதாக நீதிமன்றம் கருதக்கூடிய ஒருவர் இருமுறை மக்களால் பெருவாரியாக ஆதரவளிக்கப்பட்டு முதல்வராக இருந்திருக்கிறார் என்பது இந்திய நீதிபரிபாலனத்தின் போதாமையா? தகுதியற்ற ஒருவர் என்று நீதிமன்றம் இன்று கருதுபவர், மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் மக்களும் குற்றவாளிகளா? இதனால் தமிழக மக்கள் மீதும் வழக்கு தொடர்ந்து, விசாரித்து அவர்களுக்கும் இந்திய நீதித்துறை தண்டனை வழங்கப் போகிறதா?
worst article... then same will be applicable for robbers, rapist, ...
பதிலளிநீக்குAgree with u
நீக்குthey are not selected by people to rule them and u can not compare rape to corruption.. can u promise yourself that u r not given bribe to anyone in your life if u r given means u should also be punished
நீக்குசரியான சிந்தனை .நியாயமான கேள்விகள் .சிந்திக்கப் பட வேண்டிய கருத்துகள் தரப்பட்டுள்ள நடுநிலையான் கட்டுரை
பதிலளிநீக்குI fully agree
பதிலளிநீக்குYuva is one of my favorite blogger/writer but this article is a huge disappointment to me :-(
பதிலளிநீக்குசுவையான முரணாகத்தான் இருக்கிறது இந்த தீர்ப்பு! ஜெ.மீது ஒரு பரிதாபத்தையே ஏற்படுத்தி இருக்கிறது!
பதிலளிநீக்குcan't understand your arguement.Delayed justice in injustice but that does not mean one can't be convicted late even if he did wrong things..
பதிலளிநீக்கு-Sam
The judgement is not for the elected Govt. of Tamil Nadu, it is for an individual, Ms.Jayalalitha. The article reveals your true colour.
பதிலளிநீக்குயுவராஜ்,
பதிலளிநீக்குஉங்கள் மிகுந்த மதிப்பை வைத்திருந்தேன். சில வருடம் கழித்து கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்துக்கு கிடைக்கப்போகும் தண்டனைக்காக, இப்பொழுதே உங்கள் சப்புகட்டை ஆரம்பித்து விட்டீர்களா?
இதுதான் வரும்முன் காப்பதோ!!!!
பலே யுவா... பலே...
நீங்கள் அரசியலில் இறங்கிவிடுங்கள். உங்களை போன்றவர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள் .
வாழ்த்துக்கள...
//91-96 ஆட்சிக்காலத்தில் செய்த ஊழலால் அவர் 2014ல் தொடங்கி அடுத்து பத்தாண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தகுதியற்றவர் ஆகிறார். ஆனால் இடையில் 2001-06 மற்றும் 2011-14 அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக இருமுறை பொறுப்பேற்றிருக்கிறார். இப்போது தேர்தலிலேயே நிற்க தகுதியற்றதாக நீதிமன்றம் கருதக்கூடிய ஒருவர் இருமுறை மக்களால் பெருவாரியாக ஆதரவளிக்கப்பட்டு முதல்வராக இருந்திருக்கிறார் என்பது இந்திய நீதிபரிபாலனத்தின் போதாமையா? தகுதியற்ற ஒருவர் என்று நீதிமன்றம் இன்று கருதுபவர், மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் மக்களும் குற்றவாளிகளா? இதனால் தமிழக மக்கள் மீதும் வழக்கு தொடர்ந்து, விசாரித்து அவர்களுக்கும் இந்திய நீதித்துறை தண்டனை வழங்கப் போகிறதா?//
பதிலளிநீக்குநீதித்துறையின் தாமதம் சீர்திருத்தப்பட வேண்டியதுதான், ஐயமில்லை. ஆனால் உங்கள் கேள்விகள் அபத்தமானவை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிற/ வழக்கே தொடுக்கப்படாத எத்தனையோ பேர் சாதாரணமாக வெளியில் மக்களுடன் கலந்து பழகுகிறார்கள். அரசியல், பொருளாதார, வணிக, வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதற்காக அவர்களுடன் பழகியவர்கள், மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுகிறார்களா என்ன?
வலிமையான நீதித்துறை இருக்கிற நாடுகளில் கூட தீர்ப்பு வரும்வரை செய்யப்பட்ட ACTIONS IN GOOD FAITH அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுடனான சாதாரண அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தண்டனை என்பது எந்த நாட்டிலும் வழக்கமில்லையே?
வருமானத்திற்கு மேல் ஒருவர் தகாத முறையில் சொத்து சேர்த்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் ஒருவர்க்கு ஓட்டு போட்டு இருமுறை முதலமைச்சர் ஆக்கியது வாக்காளர்களின் தவறுதான். நீதிமன்றத்தில் சட்டப் பூர்வமாக நிரூபிக்க வேண்டுமானால் தாமதம் ஆகியிருக்கலாம். உண்மையில் இது பொது ஜனத்திற்கு தெரியாத விஷயம் இல்லை.
நீக்குவாக்காளர்களின் தவறு என்றும் கூற முடியாது. எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி தேவலாம் என்ற முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்போது எந்த ஊழல், தொகை எவ்வளவு, யார் அதிகம் சுரண்டியிருக்கிறார்கள் என்று அவ்வப்போதைய நிலையைச் சீர்தூக்கி அதற்குத் தகுந்தபடி வாக்களிக்கிறார்கள்.
நீக்குஅவர்களுக்காகவும் ரொம்ப உருகவும் தேவை இல்லை, சமயத்தில் அந்தக்கொள்ளிக்கட்டைகளால் முதுகைச் சொரிந்துகொண்டு சுகமும் காண்கிறார்கள்.
நீதான் கொள்ளை அடிச்சிருக்கியே, அதில கொஞ்சத்தை இப்படித் தள்ளு, ஓட்டுப்போடறேன் என்று தாங்களும் ஊழல் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்கள்.
இப்போதைய நிலவரப்படி 66 கோடி என்பதெல்லாம் கவுன்ஸிலருக்கே சகஜமாகியிருக்கும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபெருவாரியான மக்கள் ஊழல் செய்வது தவறு இல்லை என்று நினைக்கும் மனப்பான்மையில் இருக்கும் பொழுது பெங்களூரூ நீதிமன்றத்தின் தீர்ப்பு உங்களுக்கு தவறு என்று தோன்றுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
பதிலளிநீக்குஅருமையான விமர்சன கட்டுரை
பதிலளிநீக்குஅரசியல் சட்டத்தைக் கொஞ்சமாவது அறிந்து கொண்ட பின்னர் இது போன்ற விஷயங்களில் கருத்து சொல்ல முயற்சி செய்யலாமே யுவா.
பதிலளிநீக்குYuva, CM post has been filled already! Better luck next time
பதிலளிநீக்குநீங்கள் இப்படி சொல்லியிருக்கலாம்
பதிலளிநீக்கு"சட்டம் கொஞ்சம் முன்னமாக தீர்ப்பை கொடுத்து ஒரு ஊழல்வாதியை இரண்டு முறை ஆட்சி செய்வதை தவிர்த்திருக்கலாம், பரவாயில்லை கடைசியில் சட்டம் தன் கடமை செய்துள்ளது "
Idiotic
பதிலளிநீக்குஉங்களுக்கும் பதவி ஏற்பில் ஒப்பாரி வைத்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
பதிலளிநீக்குஅடுத்து கனிமொழி, ராசா, மாறனுக்குக் கிடைக்கப்போகும் தண்டனை பற்றி பயத்திலும், இப்போது வரவேற்றால் அப்போது தாக்கி எழுத முடியாது என்கிற ஜாக்கிரதையிலும் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
Enna Thozhre,
பதிலளிநீக்குAduthu Karuna and co entra payama
wrong writing... then anyone can do corruption and say that that was 10 years back and in between they got elected as mla .. or so..
பதிலளிநீக்குproblem is not with the judgement.. problem is with our laws..
//பெங்களூர் தீர்ப்பு கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது.//
பதிலளிநீக்குஇருக்காதா பின்ன ஏன்னா அடுத்தது நாம் தானே.(2G).
அம்மாவின் மேல் உங்களுக்கு தான் எவ்வளவு அக்கரை.
Be like a journalist, don't write like a party man
hello,
பதிலளிநீக்குA RAPIST IS PROVED AFTER 18 YEARS AS A ACCUSED , WHILE JUDGEMENT DAY HIS AGE IS AROUND 65, AS PER U R STATEMENT THE ACCUSED IS TO BE RELEASED due to his age factor..... WHICH IS VERY BULLISH ONE ....
Just because some one is voted doesnt give them rights to commit a crime. Law is equal to everyone, a CM or common person.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவைக்கட்டுரை.
பதிலளிநீக்குThis shows how ignorant and fanatic people are when it comes to voting. Your article also shows how much sentimental fools we are! If a old man or woman kills someone would you say they should be pardoned?
பதிலளிநீக்குVery well written. Especially the last paragraph is nethiyadi !!
பதிலளிநீக்குboss, what's wrong with you?? very disappointed
பதிலளிநீக்குஇது நகைச்சுவை பதிவு தானே ?
பதிலளிநீக்கு//உதாரணத்துக்கு செப்.27 அன்று கோபாலபுரம் வீட்டுக்கு கல்லெறியச் சென்றவர்களுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது. கல்லெறியச் சென்றவர்கள் தந்த புகாரின் பேரில் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. டிகுன்ஹா மாதிரி ஒரு நீதிபதி இந்த வழக்கை விசாரித்து இருவருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கினால் அது சரியான நீதியாக அமையுமா?//
பதிலளிநீக்குkunha mathiri oru neethipathi ippadiya theerppu vazhanguvar?? what you think kunha gave a wrong judgement? sorry Yuva very disappointed
Sana UAE
A very funny article indeed... you have used the title and the image as if to portray people were wronged big time in a big way.. Donno what were you trying to convey or establish with your article.. very childish arguments and unclear thoughts.. not upto the mark Yuva sir.
பதிலளிநீக்குLucky, Did someone hack your blogger password?
பதிலளிநீக்குif not, unexpected post from you.. ... guess, what people like Shankar says is true....
Please be a responsible journalist & write..
Yuva, I know you have ridiculed at the people, supporting and crying on the conviction.
பதிலளிநீக்குஉங்கள் கட்டுரையின் கருத்து மிகவும் பிழையானது.
பதிலளிநீக்கு1) மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்காக நீதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அர்த்தம் அல்ல.
2) பதினெட்டு ஆண்டுகள் வாய்தா கொடுத்தது நீதிபதியின் தன்னிச்சையான முடிவு அல்ல. வாதி, பிரதிவாதிக்கு சம உரிமையை வழங்கும் நமது சட்ட அமைப்பின் ஓட்டைகளை குற்ரம் சாட்டப்பட்டவர்கள் சரியாக தெரிந்து வைத்திருந்ததால் நீதிபதி வாய்தா கொடுத்தே ஆகவேண்டி இருக்கிறது.
3) மக்களின் தரத்தைப் பொறுத்தே அரசின் தரமும் இருக்கும் என்பது மக்கள் ஆட்சியின் சிறப்பான பண்பு. ஆகவே அடிப்படை தவறு ஓட்டு போட்ட மக்களிடமே. நல்லது கெட்டதை சீர்தூக்கி பார்த்து சுயநலம் இல்லாமல் தேச நலன் நிமித்தம் வாக்கினை அளிக்கும் அளவுக்கு மக்கள் பக்குவப் படும் வரை நீதிமன்றங்களாவது இது போல நேர்மையுடன் இருக்கட்டும். இதில் உங்கள் புதிய சிந்தனைகளை தயவு செய்து புகுத்தாதீர்கள்.
I agree Muthuram... Well said...
நீக்குGood reply Muthu.
நீக்குPeople do not understand the difference between republic and democracy. India is a republic - not democracy. See this video: http://www.youtube.com/watch?v=JdS6fyUIklI
எதிரி ஏன் வெள்ளை கொடியோடு வர்றானு புரியுது.
பதிலளிநீக்குநாமளும் நாளைக்கு மாட்டிக்கொண்டால் என்ன செய்வது?
மற்றொன்று இனி திமுக தலை தூக்கவே வழி இல்லை என்றால் இந்த பக்கமாவது சொம்படிச்சி பிழைக்கலாம் என்று நினைக்கிறார் போல.
நீங்க எப்படி பால் போட்டாலும் கோல் போடுவோம்.
i though this is a sarcastic article..
பதிலளிநீக்குi don't understand why is everybody thrashing Yuva..
Shanmuga Priya
I feel bad for you lucky. You tried to write a sarcastic article. but the way you have written it is so unfunny and the article does not posses any structured argument, that it just looks like an illogical concoction of random arguments. now you can't back down and say you were trying to be tongue in cheek because that would not be believed and be merely branded as a cop out. i am sorry your attempt at humor failed badly and has landed you in trouble this time.
பதிலளிநீக்குPeople can forget the past how can you expect the same from justice..Every time J and K get chance to rule us not because we like them only because we hate either one who is in power.
பதிலளிநீக்குDMK IS ALREADY A SPENT FORCE. IT IS NOT ABLE TO WIN EVEN SINGLE SEAT IN LOK SABHA
பதிலளிநீக்குELECTIONS. BJP THINKS THAT BY DOWNGRADING THE POWERFUL JAYALAITHA IT CAN
WIN 2016 ASSEMBLY ELECTION WITH THE SUPPORT OF SOME USELESS PARTIES, BUT
PEOPLE OF TAMILNADU ARE NOT FOOLS. JAYA CONFRONTED KARNATAKA IN CAUVERY
ISSUE. SHE ALSO CONFRONTED RAJAPAKSE ON SRI LANKAN TAMIL REHABILITATION ISSUE.
RAJAPAKSE'S NEW FRIEND SUBRAMANIA SAMY AND KARNATAKA GOVT COLLUDED
IN KEEPING JAYA IN PRISON BY DENYING BAIL. BUT BEWARE JAYA IS SURE TO WIN 2016
ELECTION AND BJP'S DREAM OF WINNING T N ELECTIONS IS NEVER GOING TO HAPPEN.
//இப்போது தேர்தலிலேயே நிற்க தகுதியற்றதாக நீதிமன்றம் கருதக்கூடிய ஒருவர் இருமுறை மக்களால் பெருவாரியாக ஆதரவளிக்கப்பட்டு முதல்வராக இருந்திருக்கிறார் என்பது இந்திய நீதிபரிபாலனத்தின் போதாமையா? //
பதிலளிநீக்குதாங்கள் சொல்வதுபோலப் பார்க்கும்போது (அ) தங்களது கேள்வியைக் காணும்போது, குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் ஒருவர், மக்கள் வாக்களித்து தேர்வு செய்திருந்தாலே (அது சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ) அவர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யலாம் எனும் கருத்தினை அறிவிக்கிறது. அறிவுடைமையற்ற கருத்தாக இதை நான் காணுகிறேன்.
Listen up people: Honesty is very expensive gift don't except it from cheap people - Warren Buffett.
பதிலளிநீக்குMission Accomplished, why are you so keen of enjoying this cheap publicity? Never mind you are already famous somewhat, try to learn the meaning of Honesty.
Boomi
Sorry yuva, totaly wrong
பதிலளிநீக்குஇந்தக் கட்டுரையை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டில் பொறித்துவைத்துவிட்டு பக்கத்திலேயே நீங்களும் உட்கார்ந்துகொள்ளுங்கள் லக்கி! :-))))))))
பதிலளிநீக்குஅறுபத்தாறு கோடி அதிகமா சொத்து சேத்துட்டு நெருப்பாறு நீச்சல்னு பேச்சைப் பார் கிழவிக்கு .,..
பதிலளிநீக்கு