குழம்பிப் போயிருக்கிறார்கள் தெலுங்கர்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் தமிழர்கள் சந்தித்த அதே சூழல்தான்.
நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருந்து எழுபதுகளிலேயே தமிழர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டோம். நில சீர்த்திருத்தம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும் அந்த சமூக மாற்றத்தை விரைவுப்படுத்தியது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தியாவை ஆக்கிரமித்த உலகமயமாக்கலுக்கு தன்னை வேகமாக தயார்படுத்திக் கொண்ட முதல் இந்திய மாநிலம் தமிழகம் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். மைசூர் அரசுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் காலாவதியாகி காவிரி பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியவுடனேயே தமிழக அரசு விழித்துக் கொண்டு தன்னை நகர்ப்புற கலாச்சாரத்துக்கு தகவமைத்துக் கொள்ள தயாராகி விட்டது. எனவேதான் இங்கே பண்ணையார்களும், நாட்டாமைகளும், ஜமீன்களும் மவுசு இழந்துப் போனார்கள்.
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வேலைரீதியாக தமிழ் பார்ப்பனர்கள் பறக்க, அவர்களை பின்தொடர ஆரம்பித்தார்கள் மற்ற தமிழர்கள். உலகமயமாக்கலின் காரணமாக பணித்திறமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அதே பார்ப்பனர்களின் வாரிசுகள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இடம்பெயர, நெல்லுக்கு பாயும் தண்ணீருக்கு பாய்ந்ததை போல பார்ப்பனரல்லாத மற்ற சாதியினரில் கல்வித்தகுதி பெற்ற என்ஜினியர்களும், சி.ஏ.க்களும், எம்.பி.ஏ.க்களுக்கும் அயல்நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சமூகம் கணிசமாக சம்பாதிக்க ஆரம்பித்தது. இன்று என்.ஆர்.ஐ. தமிழர்களை குறிவைத்து செயல்படக்கூடிய ஏராளமான வணிகங்களில் (என்.ஜி.ஓ.தான் ஆகப்பெரிய வணிகம்) சினிமாவுக்கே பிரதான இடம். ஓவர்சீஸில் காசு பார்க்கலாம் என்று எண்பதுகளின் இறுதியில் கமல் சொன்னபோதும், என்.ஆர்.ஐ.களின் முதலீட்டில் பெரிய படங்களை எடுக்க முடியும் என்றுகூறி ‘மருதநாயகம்’ முயற்சித்தபோதும், “இதெல்லாம் வேலைக்கு ஆவுறதில்ல....” என்று மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு கேலியாக சிரித்த சினிமாக்காரர்கள் இன்று ‘ஓவர்சீஸே சரணம்’ என்று காலில் விழுகிறார்கள். கமல் சொன்னது நம்மூர்காரர்களுக்கு புரியவில்லை. ஆனால் பாலிவுட்காரர்கள் விழித்துக்கொண்டு இருபது வருடங்களாக பணத்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஓக்கே. லெட் அஸ் கமிங் டூ த கோர் பாயிண்ட்...
சிகப்பு கோலோச்சிய பூமியாக இருந்தாலும் ஆண்டான் – அடிமை ஜமீன் கலாச்சாரத்தில் இருந்து இன்றைய தேதி வரை முழுமையாக வெளிவர முடியாமல் அவதிப்படுகிறது தெலுங்குதேசம். நகர்ப்புற பிரதேசங்கள் சீமாந்திராவாகவும், சிறுநகரம் மற்றும் கிராமங்கள் பெரும்பாலும் அடங்கிய மாநிலமாக தெலுங்கானாவும் உருவாகிய பிறகு எல்லா வணிகமுமே அப்பகுதியில் எம்மாதிரியான யுக்திகளை செயல்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்வது என்கிற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் சாஃப்ட்வேர் அபிமானத்தால் அங்கே கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெயிட்டாக உருவாகியிருக்கும் என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகம், நாம் முன்பு எதிர்கொண்டு, இப்போது சமாளித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரரீதியான இரண்டுங்கெட்டான் குழப்பத்தில் நீடிக்கிறது.
இந்த பிரச்சினைகளை எல்லாம் மிக எளிமையாக முதன்முதலாக அங்கே கடந்திருப்பவர்கள் சினிமாக்காரர்கள்தான். உலகிலேயே வேறெந்த பிரதேசத்திலும் தெலுங்கர்கள் அளவுக்கு சினிமாவை கொண்டாடுபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.
பொங்கலுக்கு தமிழில் நான்கு படங்களை வெளியிட்டு அவற்றில் ஒன்று ஹிட் ஆகி, இன்னொன்று ஜஸ்ட் பாஸ் ஆகி, மற்ற இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கின்றன. அதே நேரம் தெலுங்கிலும் மகரசங்கராந்திக்கு நான்கு படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன. நான்குமே லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று சூப்பர்ஹிட். மற்றொன்று ப்ளாக்பஸ்டர் ஹிட். இவற்றில் மூன்று படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கும், நாகார்ஜூனா படத்துக்கும் கூடிய கூட்டம் ரஜினி முருகனைவிட அதிகம். மூன்று படங்களுமே சென்னை கேசினோ திரையரங்கில் ஓடுகிறது. சர்வானந்த் நடித்த ‘எக்ஸ்பிரஸ் ராஜா’ மட்டும் நாளைதான் வெளியாகிறது.
இன்னமும் தமிழ் சினிமாவுக்கு கைவராத வெற்றி சூத்திரத்தை தெலுங்கில் கண்டறிந்து விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. படத்துக்கு பூஜை போட்ட அன்றே, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வசூல் என்னவென்று கணித்து திட்டமிட்டு செலவுகளை வரையறை செய்து பக்காவாக துட்டு பண்ணுகிறார்கள். இந்த திட்டமிடலிலேயே படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மார்க்கெட்டிங் எல்லாமே மிக துல்லியமாக அடையாளம் காணப்பட்டு விடுகிறது.
மகன் வளர்ந்து, அப்பாவை ஏமாற்றியவனை அதலபாதாளத்துக்கு தள்ளுகிறான் என்கிற 70ஸ் கதைதான். போனஸாக வில்லனின் மகளை காதல் வலையில் வீழ்த்துகிறார் ஹீரோ. ‘தனி ஒருவன்’ பாணியில் கேட் vs மவுஸ் விளையாட்டு திரைக்கதையில் சுவாரஸ்யத்தின் உச்சியை எட்டுகிறது. இயக்குநர் சுகுமாரின் ட்ரீட்மெண்ட், இப்படத்தை தொழில்நுட்ப அடிப்படையில் சர்வதேச தரத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறது. தரை டிக்கெட் ஹாலிவுட் கமர்ஷியல் மாதிரியான அதிவேக திரைக்கதை, அதிரடி ஸ்டண்ட், தெலுங்குக்கே உரித்தான கலர் காஸ்ட்யூம் டூயட்டுகள், குத்துப்பாட்டு என்று மிக்ஸிங் பக்காவாக இருப்பதால் உள்ளூரில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் அமோக வசூல்.
நாகார்ஜூனாவின் ‘சொக்கடே சின்னி நாயனா’, இதுவரையிலான ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாக்களின் ஸ்பெசிமென் சாம்பிள். நாகார்ஜூனா என்கிற ஹீரோவுக்கு ஆன்ஸ்க்ரீனில் இருக்கும் ஆக்ஷன் + ரொமான்ஸ் இமேஜையும், ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளேபாய் இமேஜையும் (தென்னிந்தியாவின் ஹாட்டஸ்ட் ஸ்டார் அமலாவை கடும்போட்டியில் தட்டிக் கொண்டு போனவர் ஆயிற்றே?) அப்படியே புத்திசாலித்தனமாக காசாக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா.
படத்தின் கதை ரொம்பவும் சிம்பிள்தான்.
எமலோகத்தில் எமகன்னிகளோடு ஜல்ஸா புரிந்துக் கொண்டிருக்கும் பங்காரம், மகனின் பிரச்சினையை (!) சரிசெய்ய பூலோகத்துக்கு விரைகிறார். அவரை மனைவி ரம்யாகிருஷ்ணன் மட்டும்தான் பார்க்க முடியும். பேசமுடியும். வந்தது வந்துவிட்டோம், ஒருமுறை மனைவியோடு ஜாலியாக இருந்துவிடலாம் என்று முயற்சிக்கும் செத்துப்போன பங்காரத்துக்கு அதற்கெல்லாம் அலவ்ட் இல்லை என்கிற எமலோக விதியை எமன் சுட்டிக் காட்டுகிறார்.
அவ்வளவுதான் கதை. இதை தமிழில் எடுத்தால் பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது. ஆனால் புராண மயக்கத்தில் கிறுகிறுத்துப் போயிருக்கும் ஆந்திராவுக்கு அல்வா மாதிரி சப்ஜெக்ட். எமனை காட்டி எத்தனையோ முறை கல்லா கட்டியும், ஒவ்வொரு முறையும் முந்தைய வசூல்சாதனையை முறியடித்துக் கொண்டே போகிறார்கள்.
சக்கைப்போடு போடும் மேற்கண்ட இரண்டு படங்களிலுமே குடும்பம், குற்றம், செக்ஸ் ஆகியவைதான் கச்சா. எதை எதை எந்தெந்த அளவுக்கு கலக்க வேண்டும் என்பதை படத்தின் பட்ஜெட், ஹீரோ முதலான விஷயங்கள் தீர்மானித்திருக்கின்றன. ஆனால், சொல்லி அடித்திருக்கும் சிக்ஸர்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதை போல நமக்கே நமக்கான ஃபார்முலாவை நாம் எப்போதுதான் கண்டறியப் போகிறோம்?
நாம் சமூகம் குறித்த புரிதலில் கொஞ்சம் தெளிவாகி விட்டோம். அவர்கள் சினிமா எடுப்பதில் பயங்கர தெளிவாக இருக்கிறார்கள். அப்படியே உல்டா.
அதிருக்கட்டும். பாலகிருஷ்ணா நடித்த ‘டிக்டேட்டர்?’
சூப்பருக்கா உந்தி
பதிலளிநீக்குசமூக புரிதல் தெளிவாக உள்ளவர்களா அதிமுக க்கு 39 தொகுதிகளை வாரி வழங்கினார்கள்?
பதிலளிநீக்குஅம்மா கைதான போது நடந்த கூத்துக்களை பாரத்த பின் இது பெரியார் மண் என்பதில் நம்பிக்கை குறைகிறது
// அம்மா கைதான போது நடந்த கூத்துக்களை பாரத்த பின் இது பெரியார் மண் என்பதில் நம்பிக்கை குறைகிறது// - அதை செய்தது பொதுமக்கள் அல்ல கேடுகெட்ட அரசியல்வா(வியா)திகள்.
நீக்குசெமை! செமை!! செமை!!!
பதிலளிநீக்குபஞ்சாபி லஸ்ஸியை பற்றி எதுவுமே சொல்லவில்லையே அய்யா... ?
பதிலளிநீக்குPeriyar pirantha man?.....En athukku appuram vera evanume porakkalaya....Thamizhanukku than thalaivan yaar endre theriyamal seithu vittanar intha dravida throgigal
பதிலளிநீக்கு** ஏன் அதுக்கு அப்புறம் வேற எவனுமே பொறக்கலையா? **
நீக்குபன்னி குட்டி போடற மாதிரி கோடி பேர பிதுக்கி விட்டுருக்கு
தமிழ்நாடு.ஆனா அதுல எவன தலைவனா வெச்சுக்கலாம்னு
நீங்கதான் சொல்லுங்களேன்.
முன்ன மாதிரி யாரையும் பாத்து நீ தீண்டத்தகாதவன்,
நீ சூத்திரன்னு பேசிட முடியாது.கால்ல இருக்கிறதை கலட்டி
அடிப்பான்.இதுதான் பெரியார் தமிழ்நாட்டுக்கு விட்டு சென்ற
சுயமரியாதை சொத்து.உன்ன மாதிரி ஈன பிறவிங்களுக்கு
இதெல்லாம் புரியாது.நீ கண்டிப்பா பாப்பானுக்கு அடுத்த
லெவல்ல உள்ள மேல்சாதிகாரனா இருப்ப.உங்க தோள்பட்டையில்
உக்காந்து பாப்பான் பண்ணினாலும் நீங்க பண்றதுக்கு கீழ் சாதின்னு
நாலு சாதி வேணாமா? அந்த எண்ணத்துல மண்ணள்ளி போட்ட
பெரியார் மேல உங்களுக்கு உள்ள காண்டு புரியுது.
//பன்னி குட்டி போடற மாதிரி கோடி பேர பிதுக்கி விட்டுருக்கு
நீக்குதமிழ்நாடு// - ஒருவர் எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். நீங்க யாரையும் வைத்து சோறு-போட்டு காப்பாற்றவில்லை இல்லையா அதனால் இதில் கருத்துகூறும் உரிமை உங்களுக்கில்லை.
//உன்ன மாதிரி ஈன பிறவிங்களுக்கு
இதெல்லாம் புரியாது// - அவர் ஈன பிறவியா நல்ல பிறவியா என்று முடிவு
செய்ய நீங்கள் யார். பெரியார், சுயமரியாதை என்றெல்லாம் பேசும் நீங்கள் பொது இடத்தில் சகமனிதரை
மரியாதையாக நடத்தினால் நன்றாக இருக்கும்.
விக்கிபீடியாவை பார்த்தல் ஒரு தெலுகு படமோ, இயக்குனரோ, நடிகரோ இது வரை தேசிய விருது வாங்கவில்லை. இரண்டு முறை சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது (சாரதா, விஜயசாந்தி. தமிழ் மக்கள் ஓரளவுக்கு நல்ல படம் பார்க்கிறார்கள். தெலுகு மக்கள் நிறைய குப்பை பண்ணி, பணம் பார்க்கிறார்கள்.
பதிலளிநீக்குஎனக்கு குப்பை வேண்டாம். குப்பையை அங்கேய வைத்துகொள்ளுங்கள்.
//'' பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது//...எந்த மண்ணைப் பற்றி பேசுகிறீர்கள்? பேய் பிசாசு சீரியல்கள், படங்களுக்குக் குறைவா தமிழில்? கலைஞர் தொண்டனாவது அவ்வப்போது சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் அல்லவா?
பதிலளிநீக்கு// மகன் ராமை முறுக்கேற்றி மகளோடு சேரவைக்க, அப்பா பங்காரம் சிட்டுக்குருவித்தனமாக சிந்தித்து சில ஐடியாக்களை செயல்படுத்துகிறார் //
பதிலளிநீக்குஇந்த மாதிரி குப்பைங்க தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம்.
இந்த படங்களைப் பற்றிய பதிவை படித்ததற்கே எனக்கு வாந்தி வருது. அவங்க இந்த கருமத்தயெல்லாம் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குWhy unnecessarily dragging brahmins in this cinema. They get opportunity in America so go there.
பதிலளிநீக்குRegards,
Ranga
not sure of your Gaandu on பார்ப்பனர்கள் ;) Chance kidaicha summaveh izhupinga pola ;)
பதிலளிநீக்கு