அப்போதெல்லாம் தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் மளிகைக்கடையாகவோ, பாத்திரக்கடையாகவோ இருந்திருக்கலாம். உண்மையில் ரங்கநாதன் தெரு ஷாப்பிங் ஸ்ட்ரீட் ஆகவெல்லாம் இல்லை. உஸ்மான் ரோடுதான் ஃபேமஸ். ஷாப்பிங்குக்கு எல்லாரும் பூக்கடைக்குதான் போவார்கள். பிராட்வே போகும் பஸ்களில் கூட்டம் கும்மும். பூக்கடையை ஒப்பிடும்போது உஸ்மான்ரோடில் விலைவாசி ஒரு பத்து சதவிகிதம் அளவுக்காவது கூடுதலாக இருக்கும். எனவே, தி.நகரில் நெரிசலே இல்லாமல் ஷாப்பிங் செய்யலாம். நம்புங்கள். எண்பதுகளில் அப்படிதான் இருந்தது.
சரவணாவுக்கு முன்பாக அங்கே முருகன் டெக்ஸ்டைல்ஸ்தான் பிரபலமாக இருந்தது. ‘வாங்க வாங்க முருகன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று ஒரு கியூட்டான குழந்தை அழைக்கும் விளம்பரம் நினைவிருக்கிறதா? எனினும் சரவணாவோடு விலை விஷயத்தில் போட்டியிட முடியாமல் பலரும் பிசினஸை ஏறக்கட்டினார்கள். பிரபலமாக இருந்த ‘குமரன் டிரெஸ்ஸஸ்’, பனகல் பார்க் ‘குமார் சர்ட்ஸ்’ எல்லாம் காலி. பாரம்பரியமாக ராசியான துணிக்கடையென பெயரெடுத்த ‘நல்லி’ மாதிரி ப்ளேயர்ஸ் மட்டுமே சரவணாவையும் தாண்டி தாக்குப்பிடிக்க முடிந்தது.
கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க துணிமணிகளோடு மற்றப் பொருட்களையும் சரவணா அதே மலிவுவிலை டெக்னிக்கில் விற்க ஆரம்பித்தது. சரவணா என்கிற பிராண்ட் துணிக்கடையின் மூலம் பிரபலமாக ஏற்கனவே இருந்த பாத்திரக்கடை பிரும்மாண்டமாக உருவெடுத்தது. நகைக்கடையும் திறந்தார்கள். தொண்ணூறுகளின் இறுதியில் அண்ணாச்சி செல்வரத்தினத்தை அந்த பாத்திரக்கடை வாசலில் எப்போதும் பார்க்கலாம். கொஞ்சம் அழுக்காக கதர் வேட்டி, முரட்டுத் துணியில் தைக்கப்பட்ட வெள்ளைச் சட்டை என்று வியர்வை கசகசக்க நின்றுக்கொண்டே ஊழியர்களை வேலை வாங்கிக் கொண்டிருப்பார். கஸ்டமர்களை கண்டதும் கஷ்டப்பட்டு சிரிப்பார். யாராவது கம்ப்ளையண்ட் சொன்னால் அவரால் தாங்க முடியாது. ஊழியர்களிடம் கன்னாபின்னாவென்று கத்துவார். கஸ்டமர்கள்தான் அவருக்கு கடவுள்.
ஸ்தாபனம் கொஞ்சம் வளர்ந்ததும் ரேடியோ மற்றும் டிவியில் விளம்பரங்கள் தர ஆரம்பித்தார்கள். டிவி விளம்பரத்தின் மாடல் அண்ணாச்சியேதான். ‘நம்பிக்கை, நாணயம், கைராசி... உங்கள் சரவணா ஸ்டோர்ஸ்’ என்று theme signature வரும்போது அண்ணாச்சி கைகூப்பியபடியே வருவார். எனவே, இப்போது அண்ணாச்சியின் சகோதரர் மகன் சரவணன் விளம்பரத்தில் தோன்றுவது என்பது சரவணாவின் வரலாற்றில் புதியதல்ல. அண்ணாச்சியின் திடீர் மரணத்துக்குப் பிறகு சரவணா ‘பிரும்மாண்டமாய்’ மாறிய பிறகுதான் நடிக, நடிகையர்களை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டன.
விஜிபியில் இருந்து பிரிந்து தனிக்கடை போட்ட வசந்த் & கோ, வசந்த் அண்ணாச்சியும் கூட டிவி விளம்பரங்களில் அவரேதான் நடித்தார். தொண்ணூறுகளில் டிவி பார்த்தவர்கள், இன்னமும் அந்த அதிர்ச்சியில் இன்று மீண்டிருக்க மாட்டார்கள். அண்ணாச்சி வசந்த், நீட்டான கோட் & சூட்டில் ஒரு பெரிய காரில் இருந்து இறங்குவார். கல்லூரி இளம்பெண்கள் சூழ்ந்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள் என்பது மாதிரி கிரியேட்டிவ்வான விளம்பரம் அது. முரண் என்னவென்றால் வசந்த் அண்ணாச்சியின் சொந்த அண்ணாச்சியான குமரி ஆனந்தன் தீவிர காந்தியவாதி. கதர் தவிர வேறெதையும் அணிய மாட்டார்.
இந்த முதலாளிகளின் சுயவிளம்பரப் பெருமையாக மட்டும் இதை பார்க்காமல், சமூக உளவியல் காரணிகளோடு இந்தப் போக்கை பொருத்திப் பார்க்க வேண்டும். நாடார் சமூகத்தினர், நல்ல உடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடுப்புக்கு மேலே ஆடை என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு கனவாக இருந்திருக்கிறது. அவர்கள் சமூகப் பெண்களே மார்பை மறைக்க வேண்டுமானால், அதற்கு தனி வரி செலுத்த வேண்டும் என்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டார்கள் என்று வரலாற்றிலேயே ஆதாரப்பூர்வமாக பதிவாகியிருக்கிறது.
அவர்கள் சமூகப் பெண்களே மார்பை மறைக்க வேண்டுமானால், அதற்கு தனி வரி செலுத்த வேண்டும் என்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டார்கள் - Is it for "Nadar wemon also, i dont think so, only SC Women are treated like that "
பதிலளிநீக்குNadar community was treated as SC in Thiruvithankur smasthanam (Kerala) which includes Thirunelveli, Kanyakumari and Nagarcoil in TN
நீக்குaccording to Bala kumaran, writer, people belonging to pandya dynasty after their crushing defeat by cholas took shelter in the palm belt of the deep south tamilnadu. that this community was neglected was because of their relationship with palm trees and toddy, which was just for a period. one hopes that tamils do not fall prey to brahminical vendetta
நீக்குபடிக்க ஆர்வமூட்டுகிறது. இது போன்ற படைப்புகளை யுவா விடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பதிலளிநீக்கு- Krishna Moorthy
1.அவர் பெயர் குமரி அனந்தன் ,ஆனந்தனல்ல .2.மார்பை மறைப்பதற்கான உரிமை ஜாதி அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது ,வரியடிப்படையில் அல்ல . மேலதிக தகவல்களுக்கு திரு.கணேசன் அவர்களின் புத்தகம் படிக்கவும் .
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்கள்!நன்றி!
பதிலளிநீக்குசரவணாவின் கதை!!!?
பதிலளிநீக்குசுவாரஸ்யம்!!!
...
இது உங்களின் அபத்தமான கற்பனை திறனையே காட்டுகின்றது. நாடார் பென்களுக்கு மேலாடை மறுக்கப்பட்டதனால் நாடார் ஆண்கள் கோட்டும், கலர் கலராக சட்டை அனிவதில் ஏக்கமும் ஆர்வமும் காட்டுகின்றனர் என்று எப்ப்படி கன்டுபிடித்தீர்கள்?
பதிலளிநீக்குமுஸ்லீம் சகோதர சகோதரிகள், அனியும் கலர் உடைகளுக்கு, மார்வாடி மற்றும் வட இந்தியர்கள் அனியும் கண்ணைப்பிடுங்கும் கலர் உடைகளுக்கும் கோட்டு களுக்கும் என்ன உளவியல் காரனம் வைத்திருக்கின்றீர்கள் யுவா?
மக்களின் கருத்தை பிரதிபலிப்பவனே சிறந்த ஊடகவியலராக வரமுடியும். நீங்கள் அதிலிருந்து விலகி நாட்டாமை இயலை நோக்கி தெரிந்துதான் பயனம் செய்கின்றீர்களா?
nice
நீக்குsuperb post! very interesting facts!
பதிலளிநீக்குBut how about the ill-treatment of his employees? Is that true?
Even though, their ancestors' desires of being equal to all, in terms of clothing, are justified. Why do they have to ill-treat their own employees?
More than just making fun of him appearing with two fair-skinned girls, it is more of the fact that he doesn't deserve this because he is not a man of dignity and sincerity
your words show your inner jealousy. mad article. that kalki has reproduced your words show that the congenial traders from south are not giving advertisements to that paarpanar magazine.
பதிலளிநீக்குKumar: Mr. Yuvakrishna. First feel sorry for your behaviour next if you don't have money to buy new cloths please come to saravana store and get one you will get one new dress in less rate. Please stop writing such unwanted comments. Jealous and cruel character of yours just coming out. Kalki failed by publishing this article.
பதிலளிநீக்குகல்கியின் காழ்ப்புணர்ச்சி:
பதிலளிநீக்குநாடாண்ட நாடார்கள் முதன்மையராக இருக்க கல்கி வகையறாக்கள் தாங்கி கொள்ளுமா என்ன?! (கல்கி 05.06.2016 இதழ் 49ஆம் பக்கம். பார்க்க)
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நாடார்கள் முன்னணியில் இருப்பதை கல்கியால் சகித்துக்கொள்ள முடியவில்லை!
100 ஆவது ஆண்டை நெருங்குகிறது TMB (ஆரம்பத்தில் நாடார் வங்கி), HCL அதிபர் ஷிவ் நாடார் போன்ற நாடார் சாதனையாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்! , வசந்த், சத்யம், தந்தி போன்ற தொலைகாட்சிகளை நடத்துபவர்கள் நாடார்கள், மதுரை நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வணிகத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள் இந்த சமூகத்தினரே!
(ஆச்சி பொருட்கள், அருண் ஐஸ் , இதயம் நல்லெண்ணெய், GOLDWINNER SUNFLOWER ஆயில், VVD (தனுஷ்கோடி நாடார் &கோ.) தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களும் அவர்களே ). இதில் ஒருவர் கூட விளம்பரம் தராவிட்டால் பைத்தியம் பிடிக்கத் தானே செய்யும்!)
கல்கி வகையறாக்களிடம் தெற்க்கத்திக்காரர்கள் (வியாபாரிகள்)விளம்பரங்கள் கொடுப்பதில்லை! CBSE பாடத்தில் நாடார் குறித்து தவறாக சித்தரிக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா இந்த சமூகத்தினர் அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்களின வழிதோன்றல்கள் என்று குறிப்பிட்டார். தூத்துக்குடி பக்கத்தில் இச்சமுகத்தின் ஒரு பிரிவு நிலமைக் காரர்கள் என்று அழைக்கப் படுவார்கள். மன்னர்களின் கீழ் வரி வசூல் அதிகாரிகள் அவர்கள்!
சிவந்தி ஆதித்தன் உயிரோடு இருந்தால் தெரியும சேதி!!
எவனோ ஒரு அனாமத்து எழுதியதை போட்டு அரிப்பை தீர்த்துக் கொள்கிறது.
இது இரண்டாம் முறை. முன்பு ஒரு முறை புத்தக விமர்சனம் என்ற பெயரில் இழிவு படுதின்னார்கள்.
(முற்பட்ட வகுப்பாக இருந்த கிறிஸ்தவ நாடார் வகுப்பை MGR பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தார் ; நாடார் வகுப்பில் ஒரு பிரிவான சாணார், MBC பிரிவில் வருவார்கள்)
This article shows the in-depth crooked mind set-up of Yuva who proclaiming himself as periyarist. Please try to wash out such crap from your mind bro...
பதிலளிநீக்குSathish Kumar
பழுத்த மரத்துக்கு தானே கல்லடி கிடைக்கும்!
பதிலளிநீக்குநாடார்கள் விரும்பி துணிக்கடை நடத்துவது லாபம் கருதி மட்டுமல்ல. அவர்களது ஜீன்களில் பதிந்திருக்கும் ஆடை குறித்த அவர்களது முன்னோர்களின் கனவுகளின் காரணமாகவும்தான் என்றும் தோன்றுகிறது...........ஷிவ் நாடார் கணினி விற்பதன் காரணம் 1822ஆண்டு காலகட்டத்தில் நாடார்கள் கணினி பயன்படுத்த தடை இருந்ததன் காரணமாய்த்தான் என அரைவேக்காடுதனமாக எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
பதிலளிநீக்குசரவணா ஸ்டோர்ஸ் !!! மிகவும் அருமை மிகவும் பிரமாண்டம் !!! ஆனால் அங்கும் மிகவும் வருத்தம் தரக் கூடிய மனதை கஷ்டபடுத்தக் கூடிய விஷயங்கள் உள்ளது. கோடி ரூபாய் மதிப்புள்ள கடையில் ஆயிரம் கணக்கில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு பிக் ஷாப்பர் பை இலவசமாக தருவதற்கு எவ்வளவு நிபந்தனைகள். ஒரு வாடிக்கையாளர் இரண்டாயிரம் மதிப்புள்ள துணிகள் பொருட்கள் வாங்கினால் ஒரு பை. அந்த மதிப்பிற்கு நூறு குறைந்தால் கூட கிடையாதாம். இது பராவாயில்லை. அந்த இடத்தில் உள்ள பெண் ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் பேசும் பேச்சு மனதை மிகவும் கஷ்டப்படுத்துகிறது. என் கண் முன்னே நடந்தது ஒரு வெளியூர் மூதாட்டி 1300/- க்கு மதிப்புள்ள நிறைய பொருட்கள் வாங்கி வெளியூர் எடுத்து செல்வதற்காக ஒரு பிக் ஷாப்பர் பை கேட்டதற்கு தான் இவ்வளவு பேச்சு. அந்த பையில் வாடிக்கையாளார் பெயரா எழுதி கொடுக்கிறீர்கள் உங்கள் கடை பெயர் உங்களுக்குதான் விளம்பரம். இது போன்ற நிகழ்வுகளால் வெளியூர் வாடிக்கையாளர்கள் மனதில் மிகவும் கசப்பான எண்ணம் ஏற்படுகிறது. பல லட்சம் ரூபாய் செலவழித்து விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை வரவழைத்து இப்படி செய்தால் தான் தங்களுக்கு லாபம் பெற முடியுமா கையில் எடுத்து செல்லும் ஒரு பை பொருட்களிம் மதிப்பிற்காக மட்டும் அல்ல பொருட்களின் எண்ணிக்கைக்காகவும் தான் என்பதை புரிந்து கொண்டால் சரி.
பதிலளிநீக்குதிருவிதாங்கூர் தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம்
பதிலளிநீக்குஅந்த சமஸ்தானத்தில் இருந்த அனைத்து சாதியினரும் பாதிப்புக்குள்ளானார்கள்
மலையாள வடுகர், பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரம் வாயிலாக ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் சாதிய கொடுமை கட்டவிழ்த்துவிடபட்டன.
சேரநாடு என்பது தமிழரின் நாடு அந்த வழியில் கேரளா, கன்னியாகுமரியில் இருந்த
தமிழர் மீது சொல்லில்லா கொடுமைகள் அரேங்கேற்றபட்டன என்பதை நினைவில்கொள்ள வேண்டும் மாறாக இது ஏதோ அந்த சமஸ்தானத்தில் இருந்த நாடர் சாதிக்கு மட்டுமே நடந்ததாக சிலர் எழுதி கொண்டு அலைவது
அந்த சாதியின் வளர்ச்சி மீது உண்டான காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறு ஒன்றும் இல்லை.
சொல்லபோனால் இந்த சாதிய அடக்குமுறைக்கு அஞ்சமால் துணிந்து போராட்டம் செய்தவர் அய்யா வைகுண்டர் மேலும் அந்த வாயிலாக பல எண்ணற்ற நாடார்கள் போராடி அதன் வாயிலாக அனைத்து சாதியினருக்கும் விடுதலை பெற்று தந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அன்று எந்த சாதிகரார்களும் நாடார்களுக்காக போராடவில்லை அன்று நாடார்கள் அவர்கள்தான் அவர்களுக்காகவும் மற்ற சாதியினருக்காகவும் போராடி வெற்றிபெற்றார்கள் அன்று அவர்களின் போராட்டத்தால் ஆடை அணியும் சாதி எல்லாம் வெட்க்கம் இல்லாமல் இன்று நாடார் சாதியை பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள் நல்ல வேடிக்கை.
இன்னும் இந்த காலத்தில் ஒருவர் கோட்டு சூட் போட்டால்கூட இவர் சாதி இப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பும் சில கிறுக்கனர்களை பார்க்கும்போது என்னத்த சொல்ல?
பதிலளிநீக்குஎங்க நாட்டு துணி மணி கோர்ட் சூட்டை நீங்கள் எப்படி போடலாம் என்று ஒரு வெள்ளகாரன் கேட்டால் சிறு நியாயம் இருக்கிறது
கண்ட கண்டவன்கள் எல்லாம் கேள்வி கேட்க்கிறானுங்க?
காரில் வருபவர்கள் எல்லாம் என்ன காரை கண்டுபிடித்தவர்களா?
இந்த ஊரில் கருத்து சுந்திரம்கூட இருக்கிறது ஆனால் ஒரு தனிநபர் கோர்ட் சூட்போட்டால் உடனே சில கழிசடைகளுக்கு மூக்கு வேர்க்கிறது என்றால் மேலும் அவரின் சாதியை எல்லாம் கேள்வி எழுப்புகிறான் என்றால் அவன் எவ்வுளவு பெரிய அயோக்கியனாக் இருக்கவேண்டும் அந்த சாதி மீது எந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சி உள்ளவளனாக இருக்க முடியும் என்பதை இது காட்டுகிறது