ஐ.நா. சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வில் மனிதநேயம்
தொடர்பான பிரச்னைகளை கவனித்துக் கொள்ளும் குழு இது. இந்தக் கூட்டத்தில் ஒரு
வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. “மரணத்தண்டனை விதிக்கப்படுவது உலகம் முழுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட
வேண்டும்”
நிறவெறி தேசங்கள் என்று கருதப்படும்
ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள்
இத்தீர்மானத்தை ஆதரித்திருக்கின்றன. தீர்மானத்தை முழுமூச்சாக எதிர்க்கும்
நாடுகளின் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், மரணத் தண்டனையை எதிர்த்த காந்தியை
தேசப்பிதாவாக கொண்டாடும் நாடுமான இந்தியாவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது.
கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இன்னொரு ஜனநாயக நாடு அமெரிக்கா. அகிம்சையைப்
போதித்த புத்தபகவானை வணங்கும் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளும்
எதிர்த்திருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் எதிர்த்து வாக்களித்திருப்பதாக
தெரிகிறது.
ஏன் எதிர்த்தோம் என்பதற்கு இந்தியா
விளக்கமும் கொடுத்திருக்கிறது. “ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சட்ட நடைமுறைகளை
வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. இதில் குறுக்கிடுவது நாட்டின் இறையாண்மையை
பாதிக்கும்” என்று இந்தியா தனது எதிர்ப்புக்கான நியாயத்தை பேசியிருக்கிறது. அவ்வப்போது
அண்டை நாடுகளிடம் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசியாவின்
தாதா ‘இறையாண்மை’ குறித்துப் போதிப்பது கருப்பு நகைச்சுவைதான்.
“மரணத்தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்கிற ஒருவரி தீர்மானம் தவிர்த்து பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இத்தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் போன்ற வலியுறுத்தல்கள் குறித்து இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை ‘மரணத் தண்டனை’ என்பது ஊடகங்களுக்கு தரும் ஃப்ளாஷ் நியூஸ். அரசோ, எதிர்க்கட்சிகளோ சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் மக்களை மடைதிருப்ப ‘மரணத்தண்டனை’ உதவிக் கொண்டிருக்கிறது. மாநில அளவில் கலைஞர் ஆட்சியாகட்டும், ஜெயலலிதா ஆட்சியாகட்டும். இவர்களுக்கு ‘என்கவுண்டர்’ எப்படி உதவுகிறதோ அதுபோல மத்திய ஆட்சியாளர்களுக்கு மரணத்தண்டனை. மனித உரிமை, கருத்தியல், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்ப்பை அரசோ, மரணத்தண்டனைக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடும் குடிமக்களோ முன்வைப்பதில்லை. ‘தீவிரவாதிகளை எப்படி கட்டுப்படுத்துவதாம்?’ என்று ‘வெயிட்’டான காரணத்தை முன்வைத்து, மூளையை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு தூக்குத்தண்டனைக்கு ‘ஜே’ போடுகிறார்கள். வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இராணுவத்துக்கும், மற்ற பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஒதுக்கப்படுகிறதே.. அவற்றுக்கு முறையான கணக்கிருக்கிறதா.. அவர்கள் ஒழுங்காக வேலைபார்த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மாட்டார்களா.. தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முன்பாக நம் உளவு அமைப்புகள் தூங்கிக் கொண்டிருந்தனவா.. என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப நமக்கு துப்பில்லை.

எனவேதான் கிட்டத்தட்ட திருட்டுத்தனமாக திடீரென்று
கசாப்பை தூக்கிலிட்டிருக்கிறார்கள். மரணத்தண்டனை என்பது நியாயமான நீதியென்று
பெருமிதமாக மார்தட்டிக் கொள்பவர்களுக்கு இந்த திருட்டுத்தனம் அவசியமில்லை. கசாப்பை
தூக்கிலிடும் தேதியை வெளிப்படையாக அறிவித்தால் தீவிரவாதிகள் ஜெயிலைத் தகர்த்து
கசாப்பை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள் என்றெல்லாம் அரசு அஞ்சியதா என்ன..
அவ்வளவு பலவீனமாகவா இந்தியா இருக்கிறது? கசாப்பின் தூக்குத்தண்டனையை ரகசியமாக
நிறைவேற்றியதற்கு ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை இந்தியா சொல்ல வேண்டும்.
விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொள்ள
வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக குஜராத் தேர்தலில் பாஜகவோடு பலப்பரிட்சை
நடத்தியாக வேண்டும். இத்தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலின் ‘ட்ரைலர்’ என்று
பாஜக பிரச்சாரம் செய்யும். அரசின் மீது தொடர்ச்சியாக ஊழல் கணைகளை ஏவிக்கொண்டிருந்த
எதிர்க்கட்சியான பாஜக இனி ஊழலைப் பற்றிப் பேச அருகதையில்லை என்பதை அக்கட்சியின்
தலைவர் கட்கரி நிரூபித்துவிட்டார். எனவே அடுத்து அவர்கள் எய்யப்போகும் அம்பு
‘கசாப்’தான் என்பதை பா.ஜ.க.வின் அரசியலை எடைபோடுபவர்கள் எளிமையாக யூகிக்க
முடியும். அந்த வாய்ப்பை தர காங்கிரஸ் தயாராக இல்லை. ஒத்த வீட்டுக்கு துண்டு
போட்டு போகும் பெரிய மனுஷன் கணக்காக அசிங்கமான முறையில் கசாப்பை தூக்கிலிட்டு
விட்டது. மும்பையில் தெருவெங்கும் கொண்டாட்டமாம். கொஞ்ச நாட்களுக்கு தேசியவெறி
தலைக்கேறி மக்கள் அரசு சார்பாக சிந்திக்கத் தொடங்குவார்கள். முன்பு இதேபோன்ற
தேசியவெறியை கார்கில் போர் வாயிலாக கிளப்பி பாஜக ஆட்சிக்கு வந்தது
நினைவிருக்கலாம். இவையெல்லாம் வெளிப்படையாக யூகிக்கக்கூடிய விஷயங்கள்.
காங்கிரஸுக்கு கசாப்பை தூக்கிலிட்டதன் மூலமாக கிடைக்கக்கூடிய மறைமுக பலன்கள்
என்னவென்று தெரியவில்லை.
எனவேதான் பதறிப்போய் குஜராத் படுகொலை புகழ் நரேந்திரமோடி
அவசர அவசரமாக ‘அப்சல் குருவுக்கு எப்போ?’ என்று கேட்கிறார். காங்கிரஸ் அதையும்
உடனடியாக செய்ய தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர்
திக்விஜய் சிங்கின் பேச்சின் வாயிலாக அவர்களது ‘மூட்’ புரிகிறது. “கசாப்புக்கு
வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது. கசாப்போடு நாம் நின்றுவிட முடியாது. அப்சல்
குருவுக்கான தண்டனையையும் விரைவுப்படுத்த வேண்டும்” என்கிறார். பேசுவது காங்கிரஸ்
பொதுச்செயலரா அல்லது பாஜகவின் தலைவர்களில் ஒருவரா என்பதே தெரியாத அளவுக்கு
திக்விஜய்சிங்கின் பேச்சு அமைந்திருக்கிறது. சிறுபான்மையினர் விஷயத்தில் பாஜகவோடு
ஒப்பிட்டு காங்கிரஸை தூக்கிப்பிடிக்க இனி நமக்கு காரணங்கள் எதுவுமில்லை. இது
இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை என்று பிரச்சாரப்படுத்தப்பட்டு விடக்கூடாது
என்பதில் பாஜகவும், காங்கிரஸும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. பாஜகவின் செய்தித்
தொடர்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வி, “நாட்டின் எதிரி தண்டிக்கப்பட்டுள்ளான்”
என்று கருத்து சொல்லியிருப்பதின் மூலம் இதை புரிந்துக் கொள்ளலாம். ஒருவகையில்
கசாப்பின் தூக்கு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நிம்மதியையும் தந்திருக்கலாம்.
தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாய் கசாப் அவர்களுக்கு உறுத்திக் கொண்டிருந்தான்.
நாட்டின் பாதுகாப்பை விட, அரசியல் பிரதிபலன்கள்தான் இங்கே மரணத்தண்டனையை தீர்மானிக்கின்றன. மரணத்தண்டனையை விட ஆபத்தான அம்சம் இது. மனிதநேயத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்துக் கொண்டே இருப்பது நமது கடமை.
தொடர்புடைய முந்தையப் பதிவுகள் :