21 நவம்பர், 2012

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!

ஐ.நா. சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வில் மனிதநேயம் தொடர்பான பிரச்னைகளை கவனித்துக் கொள்ளும் குழு இது. இந்தக் கூட்டத்தில் ஒரு வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. “மரணத்தண்டனை விதிக்கப்படுவது உலகம் முழுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்”

நிறவெறி தேசங்கள் என்று கருதப்படும் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்திருக்கின்றன. தீர்மானத்தை முழுமூச்சாக எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், மரணத் தண்டனையை எதிர்த்த காந்தியை தேசப்பிதாவாக கொண்டாடும் நாடுமான இந்தியாவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இன்னொரு ஜனநாயக நாடு அமெரிக்கா. அகிம்சையைப் போதித்த புத்தபகவானை வணங்கும் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளும் எதிர்த்திருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் எதிர்த்து வாக்களித்திருப்பதாக தெரிகிறது.

ஏன் எதிர்த்தோம் என்பதற்கு இந்தியா விளக்கமும் கொடுத்திருக்கிறது. “ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சட்ட நடைமுறைகளை வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. இதில் குறுக்கிடுவது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்” என்று இந்தியா தனது எதிர்ப்புக்கான நியாயத்தை பேசியிருக்கிறது. அவ்வப்போது அண்டை நாடுகளிடம் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசியாவின் தாதா ‘இறையாண்மை’ குறித்துப் போதிப்பது கருப்பு நகைச்சுவைதான்.

“மரணத்தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்கிற ஒருவரி தீர்மானம் தவிர்த்து பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இத்தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் போன்ற வலியுறுத்தல்கள் குறித்து இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை ‘மரணத் தண்டனை’ என்பது ஊடகங்களுக்கு தரும் ஃப்ளாஷ் நியூஸ். அரசோ, எதிர்க்கட்சிகளோ சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் மக்களை மடைதிருப்ப ‘மரணத்தண்டனை’ உதவிக் கொண்டிருக்கிறது. மாநில அளவில் கலைஞர் ஆட்சியாகட்டும், ஜெயலலிதா ஆட்சியாகட்டும். இவர்களுக்கு ‘என்கவுண்டர்’ எப்படி உதவுகிறதோ அதுபோல மத்திய ஆட்சியாளர்களுக்கு மரணத்தண்டனை. மனித உரிமை, கருத்தியல், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்ப்பை அரசோ, மரணத்தண்டனைக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடும் குடிமக்களோ முன்வைப்பதில்லை. ‘தீவிரவாதிகளை எப்படி கட்டுப்படுத்துவதாம்?’ என்று ‘வெயிட்’டான காரணத்தை முன்வைத்து, மூளையை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு தூக்குத்தண்டனைக்கு ‘ஜே’ போடுகிறார்கள். வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இராணுவத்துக்கும், மற்ற பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஒதுக்கப்படுகிறதே.. அவற்றுக்கு முறையான கணக்கிருக்கிறதா.. அவர்கள் ஒழுங்காக வேலைபார்த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மாட்டார்களா.. தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முன்பாக நம் உளவு அமைப்புகள் தூங்கிக் கொண்டிருந்தனவா.. என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப நமக்கு துப்பில்லை.

எனவேதான் கிட்டத்தட்ட திருட்டுத்தனமாக திடீரென்று கசாப்பை தூக்கிலிட்டிருக்கிறார்கள். மரணத்தண்டனை என்பது நியாயமான நீதியென்று பெருமிதமாக மார்தட்டிக் கொள்பவர்களுக்கு இந்த திருட்டுத்தனம் அவசியமில்லை. கசாப்பை தூக்கிலிடும் தேதியை வெளிப்படையாக அறிவித்தால் தீவிரவாதிகள் ஜெயிலைத் தகர்த்து கசாப்பை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள் என்றெல்லாம் அரசு அஞ்சியதா என்ன.. அவ்வளவு பலவீனமாகவா இந்தியா இருக்கிறது? கசாப்பின் தூக்குத்தண்டனையை ரகசியமாக நிறைவேற்றியதற்கு ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை இந்தியா சொல்ல வேண்டும்.

விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக குஜராத் தேர்தலில் பாஜகவோடு பலப்பரிட்சை நடத்தியாக வேண்டும். இத்தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலின் ‘ட்ரைலர்’ என்று பாஜக பிரச்சாரம் செய்யும். அரசின் மீது தொடர்ச்சியாக ஊழல் கணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிர்க்கட்சியான பாஜக இனி ஊழலைப் பற்றிப் பேச அருகதையில்லை என்பதை அக்கட்சியின் தலைவர் கட்கரி நிரூபித்துவிட்டார். எனவே அடுத்து அவர்கள் எய்யப்போகும் அம்பு ‘கசாப்’தான் என்பதை பா.ஜ.க.வின் அரசியலை எடைபோடுபவர்கள் எளிமையாக யூகிக்க முடியும். அந்த வாய்ப்பை தர காங்கிரஸ் தயாராக இல்லை. ஒத்த வீட்டுக்கு துண்டு போட்டு போகும் பெரிய மனுஷன் கணக்காக அசிங்கமான முறையில் கசாப்பை தூக்கிலிட்டு விட்டது. மும்பையில் தெருவெங்கும் கொண்டாட்டமாம். கொஞ்ச நாட்களுக்கு தேசியவெறி தலைக்கேறி மக்கள் அரசு சார்பாக சிந்திக்கத் தொடங்குவார்கள். முன்பு இதேபோன்ற தேசியவெறியை கார்கில் போர் வாயிலாக கிளப்பி பாஜக ஆட்சிக்கு வந்தது நினைவிருக்கலாம். இவையெல்லாம் வெளிப்படையாக யூகிக்கக்கூடிய விஷயங்கள். காங்கிரஸுக்கு கசாப்பை தூக்கிலிட்டதன் மூலமாக கிடைக்கக்கூடிய மறைமுக பலன்கள் என்னவென்று தெரியவில்லை.

எனவேதான் பதறிப்போய் குஜராத் படுகொலை புகழ் நரேந்திரமோடி அவசர அவசரமாக ‘அப்சல் குருவுக்கு எப்போ?’ என்று கேட்கிறார். காங்கிரஸ் அதையும் உடனடியாக செய்ய தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் பேச்சின் வாயிலாக அவர்களது ‘மூட்’ புரிகிறது. “கசாப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது. கசாப்போடு நாம் நின்றுவிட முடியாது. அப்சல் குருவுக்கான தண்டனையையும் விரைவுப்படுத்த வேண்டும்” என்கிறார். பேசுவது காங்கிரஸ் பொதுச்செயலரா அல்லது பாஜகவின் தலைவர்களில் ஒருவரா என்பதே தெரியாத அளவுக்கு திக்விஜய்சிங்கின் பேச்சு அமைந்திருக்கிறது. சிறுபான்மையினர் விஷயத்தில் பாஜகவோடு ஒப்பிட்டு காங்கிரஸை தூக்கிப்பிடிக்க இனி நமக்கு காரணங்கள் எதுவுமில்லை. இது இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை என்று பிரச்சாரப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் பாஜகவும், காங்கிரஸும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. பாஜகவின் செய்தித் தொடர்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வி, “நாட்டின் எதிரி தண்டிக்கப்பட்டுள்ளான்” என்று கருத்து சொல்லியிருப்பதின் மூலம் இதை புரிந்துக் கொள்ளலாம். ஒருவகையில் கசாப்பின் தூக்கு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நிம்மதியையும் தந்திருக்கலாம். தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாய் கசாப் அவர்களுக்கு உறுத்திக் கொண்டிருந்தான்.

நாட்டின் பாதுகாப்பை விட, அரசியல் பிரதிபலன்கள்தான் இங்கே மரணத்தண்டனையை தீர்மானிக்கின்றன. மரணத்தண்டனையை விட ஆபத்தான அம்சம் இது. மனிதநேயத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்துக் கொண்டே இருப்பது நமது கடமை.

தொடர்புடைய முந்தையப் பதிவுகள் :



23 கருத்துகள்:

  1. பெயரில்லா1:53 PM, நவம்பர் 21, 2012

    அருமையான பதிவு தோழரே. ஒருக் கருத்திலும் முரண்பட முடியவில்லை. ஏற்கின்றேன். உயிருக்கு உயித் தீர்வாகாது. ஆதிக்கத்தின் கோரமுகம் மறைக்கும் முகமூடி மரண தண்டனைகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆசிய கட்டப்பஞ்சாயத்து தாதா நகைச்சுவை சொல்லியிருக்கிறீர்களே, ஐரோப்பாவின் முன்னாள் கட்டப்பஞ்சாயத்து தாதா பற்றிய கருப்பு நகைச்சுவை ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்தட்டுமா?
    வாலிபத்தில் உலகம் முழுதும் சுற்றி சுற்றி வந்து மனிதர்களை மிருங்கங்கள் போல் அடிமைப்படுத்தி வந்த இந்த நிறவெறி தாதா பரிசுத்தராகிப் பல காலம் ஆனபின் அந்த தேசத்தில் சில வருடங்கள் முன்பு ஒரு என்கவுண்டர் நடந்தது. தீவிரவாதிகளைத் தாக்கும் போது (தாதாவுக்கு அன்றைக்கு மூட் அவுட் ஆகி இருந்ததால் அவர்களை மன்னிக்க மனம் வரவில்லையோ என்னவோ, இல்லாவிட்டால் என்கவுண்டரே பண்ணியிருக்க மாட்டார்களே) ஒரு அப்பாவி ப்ளம்பர் ஒருவர் கொல்லப்பட்டார்.
    தன் நாட்டில் மரணதண்டனை ஒழித்து ஏசுவாகி தற்போது மற்ற நாடுகளிலும் ஒழிக்க புத்த அவதாரம் எடுத்திருக்கும் உத்தம தாதா என்ன சொன்னார் தெரியுமா? அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா….. என்கிற மாதிரி தீவிரவாதிகளை அழிக்கும் போது ஒண்ணு ரெண்டு (?!) அப்பாவிகள் சாவதைத் தவிர்க்க முடியாதாம்! அப்பாவிகளோடு தீவிரவாதியையும் சேர்த்தே மன்னித்திருக்கலாமே என்கிறீர்களா? உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்.

    பதிலளிநீக்கு
  3. உங்களின் மனிதநேயம் கண்டு மெச்சினேன் , ஆனால் இந்த மண்ணாங்கட்டி எல்லாம் மனுஷனுக்கு தான் , மிருகத்துக்கு அல்ல . பாகிஸ்தானி வந்து நம்ம எல்லாரையும் போட்டு தள்ளுவான் , அவன பிடிச்சு நம்ம பணிவிடை செய்யணும் , தூக்குல போடக் கூடாது . நல்லா இருக்கு சார் உங்க நியாயம். 26/11 ல செத்தது எவனோ வடநாட்டுக்காரன் தானே நமக்கு என்ன என்பது போல இருக்கிறது உங்க வாதம் . கசாப் தூக்கில் அரசியல் இல்லை , அதில் தேவையில்லாமல் மதத்தை புகுத்தும் உங்கள் எழுத்தில் தான் அரசியல் இருக்கிறது . அஜ்மல் கசாப் கதம் கதம் ...

    பதிலளிநீக்கு
  4. அப்பாவி பொது மக்களை கொன்று வீரத்தை காட்டும் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை சரியே!!!!மற்ற வழக்குகளில் மரண தண்டனையை அறவே நீக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. //எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், மரணத் தண்டனையை எதிர்த்த காந்தியை தேசப்பிதாவாக கொண்டாடும் நாடுமான இந்தியாவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இன்னொரு ஜனநாயக நாடு அமெரிக்கா. அகிம்சையைப் போதித்த புத்தபகவானை வணங்கும் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளும் எதிர்த்திருக்கின்றன.//
    புத்தர் பிறந்தாலோ, காந்தி ஏதாவது சொல்லியிருந்தாலோ அதற்காக ஆட்சி, அரசியல் என்று வரும் போது அதையெல்லாம் சொல்லிக் கொண்டு யோகா ப்ராக்டீஸ் பண்ண வேண்டிய அவசியம் இருக்கிறதா யுவா?
    மரண தண்டனைக்கு எதிராக அரசுக்கு உபதேசம் செய்கிற அறிவுஜீவிகள் தீவிர வாதிகளைத் தேடிப் போய் அவர்களைத் திருத்தத் தயாரா?
    மற்றொன்றையும் தெளிவு படுத்தவும். உங்களுடைய பெருங்கருணை தீவிரவாதிகளுக்கு மட்டும் தான் உண்டா? போர்முனையில் நேருக்கு நேர் டாங்குகளுடன் மோத வரும் எதிர்நாட்டு ராணுவத்துக்கும் உண்டா? புத்தர் மற்றும் காந்தி நம் நாட்டில் பிறந்து விட்டார்கள் என்று நடுப் போர்க்களத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டுமா?

    மரண தண்டனைக்கு எதிரான நவீன ஐரோப்பிய புத்தர்கள் தனியார் ராணுவ தளவாட உற்பத்தி, வினியோகத்தில் காசு பார்ப்பதை நிறுத்தி விட்டார்களா என்று கேட்டுச் சொல்ல முடியுமா?

    பி.கு: புத்தரோ காந்தியோ அஹிம்சை தவிர இன்னும் எவ்வளவோ விஷயங்கள் போதித்திருக்கிறார்களே, அதை அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொண்டு அரசாங்கம் எல்லாவற்றையும் அமல் படுத்தினால் மகிழ்ச்சி உண்டாகுமா? உதாரணமாக காந்தி புலனடக்கத்தைப் பற்றி சொல்லியிருப்பதை அரசு அப்படியே கடைப்பிடிக்க எண்ணினால்? வேண்டாம், அப்புறம் ஜொள்ளு, ஃபிகர், குவார்ட்டர் என்றெல்லாம் எழுதும் பத்திரிகையாளர்கள் மற்றும் பதிவர்களின் ‘கருத்து சுதந்திரம்’ என்னாகும்? வேண்டாம், வேண்டாம், கடவுளே! காந்தியாவது, புத்தராவது?

    பதிலளிநீக்கு
  6. சிந்திப்பவன்5:21 PM, நவம்பர் 21, 2012

    கொல்லப்பட்ட அந்த 168 அப்பாவிகளில் ஒருவேளை இந்த இளைய கிருட்டினரின் நெருங்கிய உறவினர்(பெற்றோர்களோ,மனைவி மக்களோ) சிலர் இருந்திருந்தால் இந்த கட்டுரையை பாராட்டியிருக்கலாம்.ஆனால் இப்போ இது மெகா உளறல்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா5:23 PM, நவம்பர் 21, 2012

    நானும் அரசுக்கு என் கண்டணத்தைப் பதிவு செய்கிறேன். அப்சல் குருவை நாளைக் காலையிலேயே தூக்கிலிட்டுவிடுவார்களோ என்னவோ?! நல்லவேளை பேரரிவாளன் உள்ளிட்ட மூவர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இல்லையென்றால் புரட்சித் தலைவி இதையே செய்ய வாய்ப்பு இருக்கிறது.

    சரி, 160 பேரைக் கொன்றவனுக்குத் தூக்கு என்றால் 800 பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த மோடிக்கு என்ன தண்டனை?

    சரவணன்

    பதிலளிநீக்கு
  8. 100 க்கு 100 உடன்படுகிறேன் என்ன கழுத இதே கருத்தை சொன்னால் நம்மை தேச துரோகின்னு சொல்றாங்க .
    உயிர் கொலைகளை .ஸ்வீட் எடு கொண்டாடுன்னு . சொல்லிதான் தேச பக்தியை நிரூபிக்க வேண்டுமா என்ன .?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா6:28 PM, நவம்பர் 21, 2012

    எல்லையில் ராணுவத்தால் சுடப்பட்டால் எப்படி அது மரணதண்டனை என்ற பேரில் வராதோ அதுபோலத்தான் இதுவும். மும்பை தாக்குதலில் ராணுவத்தின் குண்டுகளுக்கு மற்ற தீவிரவாதி பலியானார்கள். கசாப்பும் அப்படியே இறந்திருக்கவேண்டியவன் இப்போது பலியாகியிருக்கிறான் அவ்வளவுதான்…வேறு ஒரு வித்தியாசமும் இல்லை…மூச்சைப் பிடித்துக்கொண்டு விக்ரமன் பட பாணியில் பதிவு எழுதி மூக்கு சிந்துவதற்கு எதுவும் இல்லை…உமக்கு மும்பையில் செத்த குழந்தைகள் பற்றி எதுவும் தெரியாது போலும். இது கோணலான மனிதாபிமானம். இது தொடர்ந்து கொண்டிருக்கிற வெத்து வேட்டு ‘எதிர்ப்பரசியல்’ மட்டுமே. நீங்க ஆதரிக்கிறீர்களா…அப்படின்னா நா எதிர்க்கிறேன் என்ற அரசியல்…

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா8:57 PM, நவம்பர் 21, 2012

    what is the alternative to capital punishment for these kind of heinous crimes?
    unless somebody come with a proper solution for countries like us, i am afraid we need to carry on these punishments as a last resort!

    the western world may preach about humanitarion actions but they have a very well developed society where if they don't like a leader, they don't bomb him/her but only protest!

    Here we bomb or shoot!

    பதிலளிநீக்கு
  11. அனந்து அவர்களே... நண்பர் லக்கி பல பதிவுகள் மூலம் மரண தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்கிறார் .. நீங்கள்தான் மதத்தை புகுத்துகிறீர்கள் ... நான் மரண தண்டனை ஆதரவாளன் ... அது குறைந்த பட்சம் தற்காப்பு கேடயம். இங்கு சொல்ல விரும்புவது லக்கி கருத்தோடு ஒத்து போகவில்லையென்றால் அதை சொல்லுங்கள் ..மதச்சாயம் பூசாதீர்கள்

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா11:57 PM, நவம்பர் 21, 2012

    கோவையில் இரு குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளதைக் கண்டித்து அடுத்த பதிவு போடுவீர்களா?

    பதிலளிநீக்கு
  13. Yuva Krishna,
    Though i can agree you stance on Capitol Punishment for Criminal/Civil trials, i disagree with you for Ajmal Kasab.

    He waged war against India and it has to be dealt according to it. The reason we caught him live is to get the perpetrators not to find out whether he is innocent or not !!

    In War if you show mercy, then you will be killed ...
    I want to remind you history...If Prithiviraj Chauhan killed the enemy Shahabuddin Ghori at first battle..????

    பதிலளிநீக்கு
  14. I am not happy about Kasab hanged but I don't think it's a wrong decision. I don't understand when someone decides to take someone else life, why shouldn't he be hanged? Where humanity and rest comes into play here.

    But this post Yuva is a confusing one. I see this as you want to take stand like one of those all-i-know guys who supports things because they are popular.

    If my support for death penalty makes me inhuman, so be it.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா10:42 AM, நவம்பர் 22, 2012

    kasap a thookula podathu ok..avan sencha thappuku avan anupavikiran..appana malekhan kundu vedipu, kujarath kalavara valakellam ena sir aachu...fucking indian law..

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு பாஸ்...

    பதிலளிநீக்கு
  17. இது வரையில் அவனின் அறிவையும் குரானின் நியாயங்களையும் மறக்க செய்துள்ளனர். அவர்களைத்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

    இப்படி பாருங்களேன், அவனை பாவம், அவன் கற்றுக்கொண்டு ஞாபகம் வைத்துள்ள எந்த வேதமும் திருத்தவில்லை - அதற்கு மரணம் தான் தேவைபட்டிருக்கிறது.

    இதனாலயாவது, சாகும்போது நமக்கும் இது போலதான் தோணும்னு மத்த தீவிரவாதிகள் உணர்தாங்கன்னா - அது போதும்.

    இது பகவத் கீதையை படித்து - மறந்தவர்களுக்கும் தகும் - அவர்களும் மரணத்தை சந்திக்கும்போது மன்னிப்பு மட்டுமே கேட்க தோன்றும்.

    பதிலளிநீக்கு
  18. இந்த தேசம் ஏன் மரணத்தை கொண்டாடும் அளவுக்கு ஏன் தள்ளப்பட்டது என்பதை யோசித்துப்பாருங்கள் லக்கிலுக்.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்.

    பதிலளிநீக்கு
  19. Hi Lucky,

    I see completely contrasting reviews to your post. I am sure you have received "Anti National" badge by now.

    But, I completely agree with your point. Murder for murder is never a punishment, but a crime again. No man has the right to take another's life, even if the other is Kasab, "Rapist of two year girl", or head of Jamad-ud-Dawa for that matter. I completely understand the seriousness of crime of three categories I have just quoted, when I write this.

    Capital punishment is nothing but state sponsored murder. We just need to keep our emotional quotient at bay to understand this simple truth. If murder is a crime, then why capital punishment not ???????

    We achieve nothing when we hang a man. It is not even a vent for our anger, but it only aggravates anger and hatred among us. What we have achieved is to put an elderly mother Noorie Tai bereaved of his son. Can we wash ourselves of this sin, we have committed to a woman who meant no harm to us ? What had given us the right to do this ?
    Our society is completely drowned and accustomed to violence, that we do not feel pinch of our conscience when we celebrate another man's murder.

    I would like to propose an alternative to capital punishment - life long sentence behind bars, or three to four life sentences put together. It is more severe a punishment to come out of prison to a world, which is void of his friend, family, persons he loved, or may be his idealogy. Ten years of solitary confinement is more severe than death.

    Lucky, I do not approve all your views. But I appreciate your steadfastedness in your protest to capital punishment. I do not think that you oppose hanging because others support, that you want a sensational blog topic, or that you blabber.
    I only hope all the people who have dropped negative comments in this page are able to understand this truth at a time.

    Regards
    Arun R



    பதிலளிநீக்கு
  20. நானும் மரண தண்டனை கூடாது என்று நினைப்பவன் தான் ஆனால் எனக்கு இந்த கசாப்பின் விசயத்தில் மரண தண்டனை கூடாது என்ற விசயத்தில் ஒரு சிந்தனை மாற்றம் உள்ளது..

    அனைத்து தூக்கு தண்டனை கைதிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது...உணர்ச்சி வேகத்தில் , வறுமையில் இன்னும் பல வாழக்கையின் எதிர்பாராத கடினமான தருணங்களில் யோசிக்காமல் கொலை செய்பவர்களுக்கும் , இந்த கசாப் மாதிரியான கொலையாளிகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது...

    தாக்குதல் நடந்த பொழுது கசாப்பை பாருங்கள் அவனது தோற்றம் எப்படி உள்ளது... அருமையான முன் தயாரிப்பகளுடன் நவீன துப்பாக்கியுடன் சாட்டிலைட் போன் சகிதமாக திட்டமிட்டு.....

    இப்படிப்பட்டவர்களுக்கு தூக்கு சரியானது தானோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது....

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா7:08 PM, நவம்பர் 24, 2012

    athae than, r u also brainwashed at one of the T camps?

    Ridiculous!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  22. இலங்கையில் லட்சகணக்கில் உயிர்கள் பலியானால் அதை பற்றி பேசுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. தமிழன தலைவர்கள் என்று தம்மை தாமே அழைத்து 'கொல்பவர்' கூட வாய் திறப்பதில்லை. ஆனால் கசாப் மரணத்தை கொண்டாடுபவர்கள் அநாகரீகமானவர்கள். அவர்கள் கலைஞரிடம் இருந்து நாகரீகம் கற்று கொள்ள கடவது.

    பதிலளிநீக்கு