“2012 பொங்கலுக்கு ‘நண்பன்’ ரிலீஸ் ஆவுது. ஆனா 2011 டிசம்பர் 31ஆம் தேதியே திருட்டு டிவிடி வெளிவந்துடுது; இந்த ஒன்லைனரை வெச்சி ஒரு இருவதாயிரம் வார்த்தையிலே ஒரு கதை எழுதி கொடு பார்க்கலாம்” என்றார் பாரா.
அவர் சொன்ன காலக்கெடுவுக்குள் எழுத முடியவில்லை. கொஞ்சம் நாள் கழித்து கொடுத்தேன். இடையில் பாரா கிழக்கில் இருந்து விலகி சீரியல் உலகில் நுழைந்துவிட்டார். கிழக்கும் அந்த மாதநாவல் இம்ப்ரிண்டை நிறுத்திவிட்டது.
‘நண்பன்’ திரைப்படம் வெளியாக ஒரு மாத காலம் இருந்தபோது, என்னுடைய வலைத்தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக பதிய ஆரம்பித்தேன். அதை வாசித்த நண்பர் கே.ஆர்.பி.செந்தில், நண்பரும் இயக்குனருமான கேபிள்சங்கரிடம் இந்த கதை பற்றி சொல்லியிருக்கிறார். அதை புத்தகமாக கொண்டுவர வேண்டும் என்று என்னிடம் பேசிய கேபிள், உடனடியாக நட்பு அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டார். நண்பர் உலகநாதன் தன்னுடைய பதிப்பகம் மூலமாக அழிக்கப் பிறந்தவனை கொண்டுவந்தார்.
அந்த நாவல் தமிழ் வாசக பரப்பில் பெரிய அதிர்வுகளை எல்லாம் ஏற்படுத்திவிடவில்லை என்றாலும், முக்கியமான பலர் என்னை கவனிக்க காரணமாக அமைந்தது. என்னுடைய ‘விசிட்டிங் கார்ட்’ என்றுகூட அழிக்கப்பிறந்தவனை சொல்லலாம். குறிப்பாக சினிமாக்காரர்கள் நிறையபேர் வாசித்துவிட்டு என்னை தொடர்புகொண்டு பேசினார்கள். ஒரு படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதக்கூடிய வாய்ப்புகூட கதவை தட்டியது.
“இந்த கதையை ஸ்க்ரிப்டாக எழுதிக் கொடுங்கள்” என்று நான்கைந்து உதவி இயக்குனர்கள் கேட்டார்கள். “என்னால் ஸ்க்ரிப்ட் எழுத முடியாது. அனுபவமும் இல்லை. யார் முதலில் எழுதி, படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் டைட்டிலில் ‘based on the novel அழிக்கப் பிறந்தவன், written by yuvakrishna’ என்று கிரெடிட் கொடுக்கவேண்டும் என்று மட்டும் நிபந்தனை விதித்திருந்தேன். அவர்களில் ஓர் உதவி இயக்குனர் ஸ்க்ரிப்ட் தயார் செய்து, ஒரு தயாரிப்பாளரை பிடித்து படம் இயக்கவும் வாய்ப்பு பெற்றுவிட்டார். ஆனால் படப்பிடிப்புக்கு போவதற்கு முன்பாக நான் ஸ்க்ரிப்ட்டை பார்வையிட வேண்டும். நாவலில் நெருடும் சில விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்று என்னிடம் அனுமதி கேட்ட அத்தனை பேரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். உதாரணமாக இஸ்லாமிய தோழர்கள் மனம் புண்படுகிற விதமாக அதில் ஒரு காட்சியமைப்பு இருக்கிறது. இதை நண்பர் அப்துல்லா எனக்கு சுட்டி காட்டினார். நாவல் வேறு வடிவத்திலோ அல்லது இரண்டாம் பதிப்பு வருகையிலோ அதை சரிசெய்துவிடுவேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன்.
நேற்று மாலை அழிக்கப் பிறந்தவனை வாசித்திருந்த நண்பர் ஒருவர் திடீரென ‘அழிக்கப்பிறந்தவனுக்கு வாழ்த்துகள்’ என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து எதற்கு வாழ்த்துகள் என்று கேட்டதுமே, உங்க நாவல் படமாகுது போல என்று சொன்னார்.
கூடவே மேற்கண்ட இமேஜையும் அனுப்பியிருக்கிறார். அந்த விளம்பரத்தை கண்டதுமே பா.விஜய் நடிக்கும் ‘ஒரு சிடி 30 ரூபா’ என்பது, அழிக்கப்பிறந்தவனை தழுவி எடுக்கப்படுவது நன்கு தெரிகிறது. இதில் இருக்கும் பாத்திரங்கள் அனைத்துமே, நாவலில் அப்படியே இருக்கின்றன. இதுவரை இப்படத்தின் கதையை எழுதி (?) இயக்கும் இயக்குனரோ அல்லது வேறு யாருமோ என்னிடம் இதுபற்றி பேசவில்லை. ‘அழிக்கப் பிறந்தவன்’ நாவலின் ஐந்து அத்தியாயங்கள் கீழ்க்கண்ட இணைப்புகளில் இருக்கிறது. முடிந்தால் அதை வாசித்து, மேற்கண்ட ‘ஒரு சிடி 30 ரூபா’ விளம்பரத்தைப் பாருங்கள்.
| அழிக்கப் பிறந்தவன்-1 | அழிக்கப் பிறந்தவன்-2 | அழிக்கப் பிறந்தவன்-3 |
| அழிக்கப் பிறந்தவன்-4 | அழிக்கப் பிறந்தவன்-5 | அழிக்கப் பிறந்தவன்-6 |
நூல் வடிவில் வாங்க : ‘டிஸ்கவரி புக் பேலஸ்’
inspiration அல்லது தழுவுதலை பெரிய குற்றமாக நான் நினைக்கவில்லை. சினிமாத்துறை ஆரம்பத்தில் இருந்தே இப்படிதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழிலேயே, சில காலம் முன்புதான் வந்த ஒரு நாவலை தழுவி எடுக்கும்போது, ரத்தமும் சதையுமாக உயிரோடு இருக்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் முன்கூட்டியே பேசிவிடலாம் இல்லையா?
இந்த நாவலைப் பொறுத்தவரை, சட்டப்படி உரிமை எனக்குதான் சொந்தம் என்றாலும் தார்மீகரீதியாக முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தம் என்று நான் உரிமை கொண்டாடிவிட முடியாது. இதன் ஒன்லைனரை உருவாக்கி தந்தவர் எழுத்தாளர் பா.ராகவன். இதில் ஓர் முழு அத்தியாயத்தை எழுதித் தந்தவர் நண்பர் அதிஷா. கே.ஆர்.பி.செந்தில், கேபிள் சங்கர் போன்றவர்கள் இதை புத்தக வடிவில் கொண்டுவர முயற்சித்தவர்கள். உலகநாதன் பதிப்பாளர். நண்பர் சுகுமார் அட்டைப்படத்தை வடிவமைத்தவர். டிஸ்கவரி புக் பேலஸ் நண்பர் வேடியப்பன் விற்பனை உரிமை பெற்றிருப்பவர். சிவராமன், நரேன் போன்ற இன்னும் நிறைய நண்பர்கள் மறைமுகமாக இதில் பங்களித்திருக்கிறார்கள். இந்நாவல் திரைப்படமாக வருகிறது என்றால் என்னைவிட அதிக மகிழ்ச்சி அடையப் போகிறவர்கள் அவர்கள்தான். அப்படியிருக்க எங்களுக்கு சம்பந்தமேயில்லாத யாரோ மொத்தமாக இதன் பலனை அறுவடை செய்வது நியாயமா?
என்ன செய்யலாம்? சொல்லுங்கள், நண்பர்களே!