24 மார்ச், 2009

லாடம், அருந்ததீ!

லாடம்!


ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் ‘நச்’சென்று வந்திருக்கக் கூடிய படம். ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட்டிருக்கலாம். எக்ஸ்ட்ராவாக ஒரு மணி நேரத்துக்கு ஜவ்வென்று இழுத்தது இயக்குனரின் தவறு. இந்தப் படத்துக்கு எதற்கு ஹீரோயின், எதற்குப் பாடல்களெல்லாம் என்றே தெரியவில்லை. படத்தின் மேக்கிங்கில் கலக்கியிருக்கும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் வேகமான திரைக்கதைக்காக மெனக்கெட்டிருக்கலாம்.

இரண்டு தாதாக்கள். ஒரு தாதாவின் மகனை இன்னொரு தாதா கொன்றுவிட, அந்த இன்னொரு தாதாவின் மகனை இந்த தாதா பதினாறு நாட்களுக்குள் கொன்றுவிடுவேன் என்று சபதம் செய்கிறார். இரு தாதாக்களுக்கும் இடையில் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். ஏதாவது புரிகிறதா? இதுதான் படத்தின் அவுட்லைன். அட்டகாசமான ஆக்சன் த்ரில்லராக வந்திருக்க வேண்டியது இடையிடையே லூசு ஹீரோயின் ஒருவரால் தொய்வடைகிறது.

படம் முழுக்க ப்ளூ டோன் வன்முறையை தீவிரமாக காட்ட உதவுகிறது. இருந்தாலும் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தேவையற்ற உறுத்தலையும் தருகிறது. ஹீரோ நல்ல தேர்வு. ஹீரோயின் அச்சு அசலாக ஜோதிகாவை மிமிக்ரி செய்கிறார். முதலிரவுக் காட்சியில் அவரது காஸ்ட்யூம்.. அடடா.. ‘சிறுதொடுதலில்’ பாட்டு சூப்பர் மெலடி. இன்னும் பத்து வருடம் கழித்தும் சன் மியூசிக்கில் யாரோ ஒரு கோவிந்தராஜ் தனது காதலி மாலதிக்காக டெடிகேட் செய்யலாம்.

லாடம் - நன்றாகவே அடிக்கப் பட்டிருக்கிறது!

* - * - * - * - * - * -


அருந்ததி!


நெஜமாகவே பயப்படும்படி ஒரு படத்தைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது. சந்திரமுகியின் பத்துநிமிட க்ளைமேக்ஸ் நினைவிருக்கிறதா? அதே எஃபெக்டில் முழுநீளமாக எடுக்கப்பட்டிருக்கும் படம் அருந்ததி. கொல்டித் தேசத்திலிருந்து டப் செய்யப்பட்டு வந்திருப்பதால் உடை, கலாச்சாரம் இத்யாதி சமாச்சாரங்கள் மட்டும் உதைக்கிறது. ஆனால் திகிலுக்கு ஏது மொழி?

அந்த சமஸ்தானத்து பிளாஷ்பேக் அபாரம். சால பாக உந்தி. மூன்று தலைமுறை கழித்தும் வில்லனின் ஆவி ஹீரோயினின் மறுபிறப்புக்காக காத்திருக்கிறது. இதே அவுட்லைனில் தேவதை என்றொரு படத்தை நாசர் இயக்கியிருந்ததாக நினைவு.

இதுவரை வெறுமனே காட்டிக் கொட்டிருந்த அனுஷ்கா முதல்முறையாக நடித்துக் காட்டியிருக்கிறார். முகம் முழுக்க மஞ்சள் பூசி, பெரிய குங்குமப் பொட்டோடு.. வாவ்.. பகுத்தறிவாளர்கள் கூட கையெடுத்துக் கும்பிடக் கூடிய தெய்வத் தோற்றம். வில்லனாக வருபவருக்கு மேக்கப் போட்டவருக்கு ஒரு ஆஸ்கர் கொடுக்கலாம். வில்லனின் முகத்தில் எப்போதும் பிணக்களை.

படத்தின் ஒவ்வொரு காட்சியும், அடுத்தக் காட்சியோடு இணைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்லிசன் அட்டகாசம். மொக்கை கதைக்கு சூப்பராக திரைக்கதை எப்படி எழுதுவது என்பதற்கு இப்படத்தை பாடமாகக் கூட வைக்கலாம். கேமரா, கிராபிக்ஸ், இசை, கலை, எடிட்டிங், கலர் கிரேடிங் என்று டெக்னிக்கல் ஆஸ்பெக்டில் இந்தப் படம் இந்தியத் திரையுலகுக்கே ஒரு மறுமலர்ச்சி.

அருந்ததி - அசல் தீ!

2 கருத்துகள்:

  1. பெயரில்லா1:36 PM, நவம்பர் 03, 2009

    /ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் ‘நச்’சென்று வந்திருக்கக் கூடிய படம். ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட்டிருக்கலாம்./
    you didnt see Lucky Number 7 still?
    :-)

    பதிலளிநீக்கு
  2. நெஜமாகவே பயப்படும்படி ஒரு படத்தைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது- அப்புடியா என்ன? நாங்களும் தான் பார்த்தோம், மண்டை காய்ஞ்சு ஓடியாந்துட்டோம்லா

    பதிலளிநீக்கு