சில நாட்களுக்கு முன்பாக அந்த நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். "எல்லோரும் சரோஜாதேவி, சரோஜாதேவி என்று பேசிக்கொள்கிறார்களே? அப்படியென்றால் என்ன?"
எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. என்ன மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் நாம்? நமக்கு முந்தைய ஒரு தலைமுறை பீடத்தில் ஏற்றிவைத்திருந்த உயர்ந்த மதிப்பீடுகளை, அதன் மதிப்பு புரியாமல் காலுக்கு கீழே போட்டு நசுக்குகிறோமே? எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி இது? இருப்பினும் பொறுமையாக அவருக்கு விளக்கி பதில் அனுப்பினேன்.
நெஞ்சின் அடியாழத்தில் புதைந்துப்போன நினைவோடையை மீண்டும் ஒருமுறை சலசலக்க வைத்தேன். தொண்ணூறுகளுக்கு முன்பான தலைமுறை எவ்வளவு சீரும், சிறப்போடும் வாழ்ந்திருக்கிறது. 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' வராத அக்காலத்திலேயே, அதற்கு மாற்றாக எவ்வளவு அச்சு ஊடகங்கள் அவர்களுக்கு தகவல்களை அள்ளித் தந்திருக்கிறது? விருந்து, மருதம், திரைச்சுவை, வெண்திரை, செக்ஸ் லைப், வாலிபம் என்று எத்தனை எத்தனை இதழ்கள்? எவ்வளவு கதைகள்? உயிர்ப்போடும், துடிப்போடும் வாழ்ந்த தமிழ் சமூகம், பாழாய்ப்போன உலகமயமாக்கலால் தனது பாரம்பரிய பாலியல் அடையாளங்களை இன்று இழந்துவருகிறது.
இன்றைய இளைஞன் பாலியல் புரிதலுக்காக இணையத்தை மேய்கிறான். பர்மாசந்தையில் குறுவட்டு வாங்குகிறான். இதைத்தவிர்த்து வேறென்ன வாய்ப்பு அவனுக்கு வழங்கப்படுகிறது? ஜோதி, பானு போன்ற திரையரங்குகளில் கூட இப்போது துண்டுப்படங்கள் போடப்படுவதில்லை. துண்டுக்குப் பேர் போன ஷகிலாவே, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அண்ணாசாலை சுரங்கப்பாதைக்கு அருகே 'சரோஜாதேவி' கிடைப்பதில்லை.
இணையத்திலும், குறுவட்டிலும் அப்பட்டமாக அனைத்தும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கு நம் மண்சார்ந்த தனித்தன்மை கிஞ்சித்தும் இல்லையே? கிளுகிளுப்புக்கு கூட அயல்நாடுகளை சார்ந்திருக்கும் அவலநிலை இன்றைய தமிழனுக்கு. அய்யகோ தமிழா. ஏனிப்படி தரம் தாழ்ந்தாய்? 'மண்சார்ந்த தனித்தன்மை' என்ற சொல், உங்களை குழப்பலாம். அது ஒன்றும் பெரிய காமசூத்திரமில்லை. "என் பெயர் ரமா. வயது 18. பார்ப்பதற்கு கடலோரக் கவிதைகள் ரேகா மாதிரி இருப்பேன்" என்று அந்தக் காலத்து 'மருதம்' கதைகள் தொடங்கும். இதற்கு நிகரான தமிழ்த்தன்மையை இன்றைய குறுவட்டுகளும், இணையமும் தருகிறதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்று நாற்பதைத் தாண்டியவர்களுக்கு, அவர்களின் இளமைப் பருவத்தில் கிடைத்த வீரியம், அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா? மாறாக எடுத்தவுடனேயே எல்லாவற்றையும் அப்பட்டமாக காட்டிவிடும் அயல் கலாச்சாரம், நம் இளைஞர்களுக்கு முழுமையாக, படிப்படியாக கிடைக்கவேண்டிய கிளுகிளுப்பின் கிறுகிறுப்பை கிஞ்சித்தும் கிட்டாமல் செய்துவிடுகிறது. சிட்டுக்குருவி புகழ் டாக்டர் கூட செத்துப்போய் விட்டாராமே?
எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அக்காலத்தில் 'சரோஜா தேவி' தயார் ஆனது தெரியுமா?
'கர்னாடகா பதிப்பகம், பெங்களூர்' என்று அச்சிடப்பட்டிருந்தாலும் எல்டாம்ஸ் ரோடிலும், ராயப்பேட்டையிலும்தான் சரோஜாதேவி பெரும்பாலும் அச்சிடப்பட்டது. சரோஜாதேவி என்ற பெயர் ஒன்றே போதும், தரம் எளிதில் விளங்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட பதிப்பாளர் என்றில்லாமல், இவ்வணிகத்தில் ஈடுபட்டிருந்த பல பதிப்பாளர்களும் 'சரோஜா தேவி' என்கிற பெயரை, அவரவர் படைப்புகளை தாங்கிவந்த புத்தகங்களுக்கு சூட்டினார்கள்.
ஏன் இந்த குறிப்பிட்ட பெயர்? பானுமதி என்றோ, டி.ஆர்.ராஜகுமாரி என்றோ இந்த செவ்விலக்கியப் பிரதிகளுக்கு ஏன் பெயர் சூட்டப்படவில்லை?
ஹரிதாஸ் காலத்தில் பாலியல் வறட்சியால் வறண்டுப்போன சமூகம் நம் சமூகம். படத்துக்கு 60 பாட்டுகள் இருந்தாலும், முதிர் கன்னிகளான கதாநாயகிகள் ஒரே ஒரு அங்குலம் இடுப்பை கூட காட்டாமல் (காட்டியிருந்தாலும் சகித்திருக்காது) சவுதிஅரேபியாத் தனத்தோடு திரைகளில் இயக்கப்பட்டார்கள். இந்த வரலாற்று பாலியல் சோகம் போக்கப்பட்ட காலத்தின் குறியீடுதான் 'சரோஜாதேவி'.
பழுப்பு வண்ண காகிதம். தேவைப்பட்டால் இடையிடையே படங்கள். கருப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட அந்த நிழற்படங்களில் என்னென்ன சமாச்சாரங்கள் ஒழுங்காக தெரிகிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே, பல பாக்யராஜ்கள் அந்தக் காலத்தில் கண்ணாடி போட்டுக் கொண்டார்கள். 70களில் இருவண்ணத்தில் அச்சிடப்பட்ட அட்டைப்படங்கள். 80களின் இறுதியில் கவர்ச்சிகரமான வண்ண அட்டைகளும் மட்டமான வழுவழு கண்ணாடி லேமினேஷனில் போடப்பட்டது உண்டு.
கதைகளை எழுதியவர்கள் ஒரே ஆளா பலரா, யார் யாரென்பது 20ஆம் நூற்றாண்டின் விடைத்தெரியா கேள்விகளில் ஒன்று. நமக்குத் தெரிந்து பலரும் எழுதியிருக்கிறார்கள். அவ்வாறு எழுதியவர்களில் சிலர் பிற்காலத்தில் சினிமாவில் கதையாசிரியர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும், பிரபல எழுத்தாளர்களாகவும் பரிணமித்திருக்கிறார்கள். எல்டாம்ஸ் ரோடு அச்சகத்துக்குப் போய் விறுவிறுவென்று ஒரு நாற்பது பக்க நோட்டில் தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தால் 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் சரக்கின் கிளுகிளுப்புத் தன்மைக்கு ஏற்றவாறு சன்மானம் கிடைக்குமாம். சுஜாதாவோ, பாலகுமாரனோ கூட அந்த காலத்தில் சம்பாதிக்காத பெருந்தொகையை சில சரோஜாதேவி எழுத்தாளர்கள் சம்பாதித்திருக்கிறார்கள்.
கதை பெரும்பாலும் பெண் எழுதுவதைப் போன்ற மொழிநடையில் இருக்கும். ஏனெனில் ஆண்களின் அனுபவங்களை வாசக ஆண்மனம் சகித்துக் கொள்ளாது. கதைக்கு எதுகை மோனையோடு கூடிய 'நச்'சென்ற தலைப்பு அவசியம். உதாரணம் : பாலைக் குடிச்சுக்கோ, பழத்தை உட்டுக்கோ.
இந்தப் புத்தகங்களின் வினியோகம் எவ்வாறு நடந்தது என்பது ஒரு உலக ஆச்சரியம். மருதம், விருந்து போன்ற இடைபாலியல் நிலை இதழ்களை பேருந்துநிலைய பெட்டிக்கடைகளில் விற்கலாம். ஆனால் சரோஜாதேவி போன்ற நேரடி கலகப் புத்தகங்களை விற்பவர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட நிலையிருந்தும், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் இவை விற்கப்பட்டிருக்கின்றன. வாசிக்கப்பட்டிருக்கின்றன. சரோஜாதேவி வாசகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஏதோ ஒரு மர்ம வலைப்பின்னல் இருந்திருக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக கூட அண்ணாசாலையில் பழைய சரோஜாதேவி புத்தகங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. விலைதான் கொஞ்சம் அதிகம். 60 ரூபாய். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, "ஏதாவது காமிக்ஸ் புக் இருக்காண்ணா?" என்று கேட்டோமானால் கடைக்காரர் புரிந்துகொள்வார். "படம் போட்டு ஓணுமா இல்லைன்னா வெறும் கதையா?" என்பார். வெறும் கதை என்றால் சரோஜாதேவி. படம் போட்டவை ஃபாரின் கந்தாயங்கள். அவை விலை இன்னும் கொஞ்சம் கூடுதல்.
இப்போதும் அண்ணாசாலையில் கடைகள் இருக்கின்றன. வாலிப நிலா, சினிக்கூத்து, வண்ணத்திரைதான் விற்கிறார்கள். சரோஜாதேவி இலக்கிய உற்பத்தி தேக்கநிலை அடைந்து, இன்று கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. சரோஜாதேவி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையும் உருவாகிவிட்டது.
எது எப்படியோ. ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் காலத்திலும் வாசக அனுபவ அடிப்படையில் சரோஜாதேவியை, சபீதாபாபி வென்றுவிடவே முடியாது.
இன்றைக்கும் 40 வயதை கடந்தவர்களின் வீட்டில் கட்டிலுக்கு அடியிலும்,பரணையிலும் சரோஜாதேவி வகை புத்தகங்கள் காணகிடைக்கலாம்
பதிலளிநீக்குexcellent writeup..
பதிலளிநீக்குஉண்மை தான்.. இணையம் என்று வந்த பின்னர் அவையெல்லாம் எங்கு போனதென்றே தெரியவில்லை.. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நண்பர்களிடமும் வகுப்பறைகளிலும் இந்த மாதிரி புத்தகங்கள் அதிகமாக தென்படும். இது போன்ற புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால் கேரளாவின் எல்லைபகுதிக்கு செல்ல வேண்டும். (பக்கம் தான்). அங்கே எதோ நியூஸ் பேப்பர் தொங்கவிடுவது போன்று கடைகளில் வரிசையாக தொங்கவிட்டிருப்பார்கள். அந்த புத்தகங்களை வாங்கப்போய் கூச்சத்துடன் வாங்காமல் வந்த நாட்களும் உண்டு. அந்த காலத்தில் இது போன்ற கதைகள் ஒலிவடிவத்தில் கூட வந்தன என்று நண்பர்கள் செல்ல கேட்டிருக்கிறேன். இப்போது அங்கே கடைகளில் இந்த சரோஜா தேவிகள் இருக்கிறார்களா என்று கூட தெரியவில்லை.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு..
6 வருசத்துக்கு முன்னாடி கூட ஸ்கூல்ல லாஸ்ட் பெஞ்ச் அடியில இந்த மாதிரி புக்ஸ் படிச்சிருக்கேன்
பதிலளிநீக்குஆயிரம் தான் இண்டர்நெட்ல வசதிகள் இருந்தாலும் இந்த மட்டரகமான பேப்பர்ல படிக்கறதே கிக் தான்
Superappu
பதிலளிநீக்குSuper...super...one of the best from you :-)
பதிலளிநீக்குஇப்டிலாம் இருந்துருக்கா அடடா :)
பதிலளிநீக்கு// உயிர்ப்போடும், துடிப்போடும் வாழ்ந்த தமிழ் சமூகம், பாழாய்ப்போன உலகமயமாக்கலால் தனது பாரம்பரிய பாலியல் அடையாளங்களை இன்று இழந்துவருகிறது.//
பதிலளிநீக்குமைசூர் மல்லிகைக்கு என்ன குறைச்சல்?
அததுக்கு எங்கே போகணுமோ அங்கங்கே தேடிப் பாக்கணும். இணையத்தின் சந்து பொந்துகளில் நாட்டுச் சரக்கும் நச்சுனு இருக்கு.
என்ன, உள்ளூர் சரக்கை வெளிநாட்டுச் சரக்கென்பது கடைவீதியில்.
வெளிநாட்டுச் சரக்கை உள்ளூர் சரக்கென்பது இணைய வீதியில்.
தல மஜாமல்லிகா வெப்சைட் பார்த்ததில்லையா?
பதிலளிநீக்குபழைய லக்கிலுக் எழுத்தை(லொள்ளை) நியாபக படுத்துகிறது ;)
பதிலளிநீக்குஅந்த மஜா மல்லிகா லிங்க் கிடைக்குமா?
ஹ்ம்ம்... நானெல்லாம் ஒரு காலத்தில் மருதத்தையும் விருந்தையும் சேகரித்து ஒரு லெண்டிங் லைப்ரரியே நடத்தியவனாக்கும்! அது ஒரு நிலாக்காலம்யா... இப்படியெல்லாம் ஏக்கப் பெருமூச்சு விட வெச்சிட்டீரே!
பதிலளிநீக்குAyya, Neenga Nallavara Kettavara.......
பதிலளிநீக்குஇந்த பைக்கோ , மொப்பெடோ இருக்கிறதே...அது புதுசா வாங்கி அப்படி இப்படி ஒட்டி, லாவகம் புலப்பட்டு , ஒரு நேரத்தில் கச்சிதமாக, கியர் மாற்றி ப்ரேக் போட்டு அன்னிச்சையாக ஒரு கண்ட்ரோல்/கிரிப் கிடைக்குமே...அது உங்களுக்கு எழுத்தில் சாத்தியம் ஆகியிருக்கிறது என்பது என் அவதானிப்பு (இந்த வார்த்தைய பிரபலப்படுத்தினது நீ தான்யா..)..இந்த கட்டுரையை எடிட் செய்வது கடினம்...அவ்ளோ கச்சிதம்..கீப் இட் அப் மை பிரெண்ட். ஹாப்பி நியு இயர்..
பதிலளிநீக்குஅசத்தீட்டீங்க.
பதிலளிநீக்குஇணையத்தில் ஏற்றப்படுபவை எல்லாம் நிரந்தரம் என்றார் சுஜாதா. எங்கே சரோஜாதேவி பற்றிய குறிப்புகள் எதுவும் இணையம் ஏறாத பாவத்தால், கால வெள்ளத்தில் நிரந்தரமாக அடித்துக் கொண்டு செல்லப்படுமோ என்று அஞ்சியிருந்தேன். அந்த அச்சத்தைப் போக்கி விட்டீர்கள்.
hehe
பதிலளிநீக்கு@ வெறும்பய
Bad boy
\\பாலைக் குடிச்சுக்கோ, பழத்தை உட்டுக்கோ.//
பதிலளிநீக்குஇந்த மாதிரி தலைப்புதான் தல சரோஜா சாமான் நிக்காலோ-ன்னு அப்போ எல்லோரையும் சுத்த வைத்து இருக்கும்.
;-) ரசித்தேன், சரோஜாதேவியை இல்லை உம்ம பதிவை
பதிலளிநீக்குநான் ஸ்கூல் படிச்ச காலத்தில் இந்த மாதிரியான புஸ்தகங்களை வைத்திருக்கும் பசங்களை ஏதோ பெரிய ஹீரோ மாதிரி பார்போம் ...
பதிலளிநீக்குஇப்பொழுது சென்னையில் பல ஏரியாக்களில் ஜல்சா புக் எல்லாம் விக்குறாங்க... இன்னும் சில இடங்களில் பல குமுதம் அட்டை போட்டு வைச்சு இருப்பாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன். புஸ்தகத்தை போல ஆயில் பிரிண்ட் கூட ரொம்ப பிரபலம் எங்க ஊர் பக்கம்
உலகம் முழுவதும் அதிக பேர் விரும்பி படிப்பது எது தெரியுமா? பாலியல் கதைகள்தான். கட்டுரையை ரசித்தேன். 90களில் எல்லா பழைய புத்தக கடைகளிலும் இந்த புத்தகம் கிடைக்கும். பள்ளிக்கூட நண்பர்கள் எல்லாம் கூட்டாக சேர்ந்து கைக்காசைப் போட்டு வாங்கி படிப்போம். இப்போது அது கிடைப்பதில்லை. இப்போது இருக்கும் பள்ளிக்கூட மாணவர்கள் செல்போன் சர்வீஸ் செண்டர்களில் காசு தந்து மேட்டர் பிட்டு படங்களை செல்போனில் ஏற்றி பார்க்கிறார்கள்.அவர்களுக்கு வாசிப்பனுபவம் இருப்பதில்லை. :)
பதிலளிநீக்குரொம்ப நாளைக்கு அப்புறம்.. லக்கி ஸ்டைலில் விறு விறுப்பான கட்டுரை...அப்படியே மனது ரீவைண்ட் ஆனது..
பதிலளிநீக்குஒரு நல்ல சமையல்காரனிடம் "சும்மா இருப்பதை வச்சு ஒரு உப்புமா செய்யேன்" என சொன்னாகூட ஒரு அசத்து அசத்துவான் பாருங்க அப்படி ஒரு ஸ்டைல் எழுத்து. விஷயத்தை விடுங்க. அதை கூட இப்ப லாவகமா சொல்ல முடியும் என சொன்ன உங்க எழுத்து பாணி இருக்கே.. ரொம்ப நல்லா இருந்துச்சு லக்கி!
பதிலளிநீக்குபை தி பை விஷயமும் நச் வகை தான்:-))
பதிலளிநீக்குநேர்மையான விமர்சனம். படப் பகிர்வுக்கு நன்றி! :-)
பதிலளிநீக்குஇவன்-பாலைவனக் கிளை, சவுதி அரேபியா!
HAPPY NEW YEARR
பதிலளிநீக்குsuper boss
பதிலளிநீக்குaana itha matterkum globalizationukkum oru connection potturukeenga paarunga
asatheetinga
நண்பரே..
பதிலளிநீக்குமனுஷ்யபுத்திரன் புத்தக வெளியீட்டு விழாவில் உங்களுடன் உரையாட நினைத்தேன்..
ஆனால் நீங்கள் பிசியாக இருந்தீர்கள்..
நாளை கால் செய்கிறேன்...
பிச்சைக்காரன்: exclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அனுப்பிய மனுஷ்யபுத்திரன் - கலகலப்பான புத்தக வெளியீட்டு விழா தொகுப்பு
தூரத்தில் நிலவு இங்கோ
பதிலளிநீக்குதூற்றல் விழுந்த பாலை நிலம்
வெற்று மணலில் விழுந்து
காற்றைக் கடித்து துப்பி
எழுந்தேன் ஆங்கோர் பழுப்பு
தாளில் பாதி கிழிந்த புத்தகம்
கண்டேன் கண்டது எடுத்தேன்
நான் படித்துக் கொண்டிருக்கையில்
பருத்திபால் காரன் என்னைக் கடந்து
சென்றான்....சரக் ....சரக்...
கவிதை எப்படி சார் ?
நாகப்பன்.
romba naal kazhithu super post. Kalakeetinga.
பதிலளிநீக்குInnumum inaiyathil, scanned sarojadevi puthagam kidaikiruthu. Aana athuku romba menakedanum.
ரொம்ப நாளக்கப்புளம் லக்கியைப் பார்த்ததில் மெத்த மகிழ்ச்சி. அந்த கறை படிந்த புத்தகங்களை மறக்க முடியாது. சில specific கதைகள் இன்னும் மனதில்...
பதிலளிநீக்குஅன்பு நித்யன்
லக்கி,
பதிலளிநீக்குஅட்டகாசமாக புது வருஷத்தை தொடங்கி உள்ளீர்கள் :)
டிரவுசர் போட்ட அந்த வயதில்,இந்த புத்தகங்களில் வரும் ஒரு சில படங்கள் தந்த அடிவயிறு அமில சுரப்பினை, இதுவரை வேறேதும் தந்ததில்லை :)
உங்கள் நடை ரசிக்கும்படி இருந்தது! வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇறுதியில் "நன்றி : புதிய தலைமுறை" என்று இருந்துவிடுமோ என நினைத்தேன்!!! நல்லவேளை.. அப்படி ஆகவில்லை!
ம்ம் . அது ஒரு காலம். புதர்ல, பாறைக்கு அடில மறச்சி வச்சி வெயில், மழைல இருந்து காப்பாத்துன இலக்கிய பொக்கிஷம் அதுலாம். நம்ம போய் நின்னாலே புதுசா எதுவும் வரலப்பானு, கடைக்காரர் சொல்ற அளவுக்கு நம்ம எலக்கிய ஆர்வம் இருந்த காலம் அது.
பதிலளிநீக்குஹேய்... லக்கி... யூ பேட் ஃபெலோ.. (போக்கிரி வடிவேல் இஷ்டைல் டயலாக்)
பதிலளிநீக்குStill romba supera iruuku Boss. Katturaiyaum than!!!
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை! உண்மைதான் சார்... இண்டர்னெட் வந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சு... ! எங்க ஹாஸ்டல்ல எல்லா ரும்லேயும் பெட்டுக்கு கீழ ஒரு புக்காவது இருக்கும்! கொஞ்ச நாள் முன்னாடி மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்ல பின்னிரவு நேரங்க்கள்ல இந்த வேற பத்திரிக்கை நடுவுல வெச்சு இந்த புக்ஸ் வித்துக்கிட்டு இருந்தாங்க!
பதிலளிநீக்குலக்கியின் டாக்குமெண்ட்ரி எழுத்துக்குப் பிறகு
பதிலளிநீக்குநீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவேளைக்கு பிறகு
லக்கியின் ட்ரேட் மார்க் எழுத்து.
மிக ரசித்தேன்
நம்ப முடியுமான்னு தெரியல. இன்னும் பெங்களூர் மார்கெட் பஸ் ஸ்டாண்ட் சமீபம் கடையில் தொங்குகிறது. தமிழில்! இன்னும் வாங்குகிறார்களா என்ன? அதுவும் பெங்களூரில்?
பதிலளிநீக்கு"நடிக்க வந்தவள்" நான் பத்து வயதில் படித்த சரோஜா தேவி கதை.
பதிலளிநீக்குகதைதானே பின்ன எப்படிச் சொல்வது?
பல மரப் பொந்துகளில் இருந்து என் புத்தக அலமாரிக்கு அந்தப் புத்தகம் வரும் போது எனக்கு வயசு 18. இனிமேல் இது எதற்கு? அதுதான் எல்லாமே கெடைக்குதே என்று தூக்கிப் போடவில்லை.
எல்லாம் பழைய நெனப்புதான்.
Do you know how to differentiate agmark 100% sarojadevi book and ordinary books?
பதிலளிநீக்கு1st one will have identical front & back covers.
I still remember few titles "sudha sugam tha" "vasntha vasam vaa" :)
பதிலளிநீக்குgood post.
90 களின் ஆரம்பத்தில் ((இலங்கை) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நாங்கள் மாணவர்கள். Librarian குமார் என்று அறியப்பட்ட நம் நண்பன் குமாரின் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) கட்டில் மெத்தைக்கு அடியில் பொக்கிஷங்கள் தான். பல்வேறு அறிவு வளர்ச்சிக்கு உதவும் புத்தகங்கள். திரைச் சித்திரா என்பது மட்டும் ஞாபகத்திற்கு வருகின்றது. வேறு பெயரிலும் இருந்ததிருக்கலாம். பெயர் முக்கியமா? எல்லாக் கதைகளும் "என் பெயர் --- (ஆண் பெயர்) . வயது 18 . பக்கத்து வீட்டு ஆண்டியின் வயது 32 . 32 வயது என்றாலும் பார்க்க 'தள தள ' என்று இருப்பாள். ஒரு நாள் கரண்ட் போனபோது பல்பு மாற்ற (ஏன்??) கூப்பிட்டாள். ................................" என்று போகும். எல்லாக் கதைகளிலும் "அப்படியே செஞ்சு கிட்டு இருங்க" என்று பெண் சொல்வாள். அதிசயம் என்னவென்றால் "இந்தப் பூனையும் பால் குடிக்குமா?" என்ற மாதிரி இருக்கும் "அப்பாவி" களும் இரகசியமாக "புத்தகங்களை" கெஞ்சிக் கடன் வாங்குவது. குமார் அக்காலங்களில் ஒரு ஹீரோ தான். ஆனால் கடைசி மட்டும் யாருக்கும் அந்தப் புத்தகங்களை எங்கு வாங்குவான் என்று சொல்லவில்லை.
பதிலளிநீக்குநல்ல பதிவு ஒய். :-) . எங்கள் "கல்லூரி " நாட்களை ஞாபகப் படுத்தியமாதிரி இருந்தது.
பதிலளிநீக்குVery funny.
பதிலளிநீக்குஎங்க அண்ணனுக்கு அனுபவம் அதிகம்னு தெரியும்...இதிலயும்.இவ்வளவு அனுபவம் இருக்கும்னு முப்பாத்தம்மன் மேல சத்தியமா நினைக்கலை..
பதிலளிநீக்குஅண்ணே கடைசி வரி நிஜம்..
பதிலளிநீக்குசெமயா இருக்கு
என்ன ஒரு அலசல்! பின்னிட்டீங்க தல! :)
பதிலளிநீக்குஅருமையாக இருந்தது. அப்படியே ஒரு புக்க ஸ்கேன் பண்ணி வச்சீங்கன்ன இன்னும் நல்லா இருக்கும். அப்பல்லாம் பயந்து பயந்து புத்தகத்துக்குள்ள மறச்சு வச்சு படிச்சது. இப்ப நீங்க எழுதுறதையே பயமில்லாம படிக்க முடியுதே. புத்தகமா இருக்கும் போது அருமையான காதல் இருந்தது அது படமா மாறுன போது கள்ளக்காதலா மாறிருச்சோ.
பதிலளிநீக்குஒரு சிறந்த படைப்பில் தேவையற்ற வார்த்தைகளே இருக்கக்கூடாது என்ற கருத்தை சுஜாதா அடிக்கடி வலியுறுத்துவார். உங்கள் கட்டுரையில் தேவையற்ற வார்த்தைகளே இல்லை. முன்னரே யாரோ ஒருவர் கமென்ட்டில் சொன்னதைப் போல எடிட் செய்யவே முடியாதபடி இருக்கிறது. நல்ல நடை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகல்லூரி நாட்களில் எங்களுக்கு மொத்தமாக விருந்து மருதம் சரோஜா தேவி சப்ளை
பதிலளிநீக்குசெய்த என் தூத்துக்குடி நண்பனை மறக்க முடியுமா?
MOORTHY
dear yuvi
பதிலளிநீக்குarumaiyaga irundhadhu saroja devi katturai andha naal nyabagam vandhade nanbane nanbane
ippoluthu one or two books irukkirathu avvappoluthu eduthu parthu vaippathundu
regards iniya puthandu valthukkal
நான் ஸ்கூல் படிச்ச காலத்தில் இந்த மாதிரியான புஸ்தகங்களை வைத்திருக்கும் பசங்களை ஏதோ பெரிய ஹீரோ மாதிரி பார்போம் ...
பதிலளிநீக்குMe the Hero. My school always சரோஜாதேவி. Great Thala
Now Komlogam doing same service for high cost
arumaiyaga irundhadhu saroja devi katturai andha naal nyabagam vandhade nanbane nanbane
பதிலளிநீக்குippoluthu one or two books irukkirathu avvappoluthu eduthu parthu vaippathundu
regards iniya puthandu valthukkal
லக்கி, ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவை வாசிக்கிறேன். மேலே பலர் சொல்லியுள்ளது போல் பிரமாதமான நடை. அத்துடன் ஒரு கலாச்சார ஆய்வாளனாக்வும், வரலாற்றுக் கரிசனம் கொண்டவராகவும் நீங்கள் உருவெடுப்பது உள்ளபடியே உவகை தருகிறது.
பதிலளிநீக்கு/சரோஜாதேவியை, சபீதாபாபி வென்றுவிடவே முடியாது./
பதிலளிநீக்குநைஸ் பன்ச்
Excellent ....
பதிலளிநீக்குவரலாறு எவ்வளவு முக்கியமென்று நல்லா புரிய வச்சுடீங்க தோழர்...
பதிலளிநீக்கு