இந்தச் சரக்கு நன்கு விலைபோகிறது என்பதால், இப்போதெல்லாம் பிறந்தபோதே பேனாவோடு பிறந்த எழுத்தாளனாகட்டும், கக்கூஸ் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை மனு எழுதிய ஒரே தகுதியால் திடீர் எழுத்தாளன் ஆகிவிட்டவனாகட்டும், ஆளுக்கு ஆள் கூவுகிறார்கள். கண்மணி குணசேகரன் போன்ற எழுத்தாளர்கள் ஒருபடி மேலே போய் எழுத்தாளனை சட்டமன்றத்துக்கு அனுப்பி அமைச்சர்களுக்கும், ச.ம.உ.க்களுக்கும் ஆலோசனை சொல்ல வைக்க வேண்டும் என்று அதிரடி கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
மரியாதை ராமன்களாகிய எழுத்தாளர்களுக்கு, தமிழ்ச்சமூகம் இன்னும் என்னென்ன சிறப்புகளை செய்யலாம் என்று ஒரு சின்ன ஆலோசனைப் பட்டியல் :
- கோயில் திருவிழாக்களில் எழுத்தாளர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யலாம்.
- தங்களது அபிமான எழுத்தாளர்களுக்கு ஞானபீடம், சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட பிரார்த்தித்து, வாசகர்கள் அலகு குத்திக்கொண்டு முப்பாத்தம்மன் கோயிலுக்கு தேர் இழுக்கலாம்.
- இலக்கிய நிகழ்ச்சிகளில் எழுத்தாள தரிசனம் வாசகர்களுக்கு கிடைக்கும்போது, ஒரு சேவகன் முன்வந்து "எழுத்தாதி எழுத்த.. எழுத்த மார்த்தாண்ட.." என்று ஆரம்பித்து, 'பராக், பராக்' சொல்ல வைக்கலாம்.
- சினிமாக்காரர்களுக்கு ஆஸ்கர் என்பது மாதிரி தமிழ் எழுத்தாளர்களுக்கு நோபல் ஆசை இருப்பதாக தெரிகிறது. இன்னும் எனக்கு மீதமிருக்கும் எழுபதாண்டு ஆயுட்காலத்தில் அந்த அதிசயம் நடந்தேற வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. எனவே தினகரன் சினிமா விருதுகள், விஜய் அவார்ட்ஸ் என்பது மாதிரி இவர்களுக்கு ஏதேனும் உள்ளூர் ஏற்பாடுகளை தற்காலிகமாகச் செய்யலாம்.
- ஆலமரத்துப் பஞ்சாயத்துகளில் எழுத்தாளர்களை கவுரவ நாட்டாமைகளாக்கி தீர்ப்பு சொல்ல சொல்லலாம். எதிர் எழுத்தாளர்களும், அவரது வாசகர்களும் 'நாட்டாமை தீர்ப்பை மாத்து' என்று ரப்ஸர் செய்வார்கள். இது ஒன்றுதான் பிரச்சினை.
- தேர்தலுக்காக வேட்பாளர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்வதைப்போல, எழுத்தாளர்களின் புதுப்புத்தகம் வெளிவரும்போது அழைத்துச் சென்று 'வாங்குங்கம்மா புக்கு' கோஷம் போடலாம். ஒரு லட்சம் பிரதிகள் விற்றுவிட்டால் நன்றியறிவிப்புக் கூட்டமும் நடத்தி விடலாம்.
தொழில்/வேலை என்பது அவரவர் தேர்வு. ஒழுங்காக வேலை பார்த்தவர்கள் சமூகத்தால் மதிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள், எழுத்தாளர்கள் உட்பட. லட்சக்கணக்கில் ராயல்டி வாங்கும் எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் எழுத்தாளர் சொன்னார். "நான் எழுதவந்தபோது எழுத்தாளன் வீட்டு அடுப்பில் பூனை தூங்கும் என்றார்கள். மாறாக என்னுடைய எழுத்து எனக்கு தலைவாழை இலை விரித்து சோறு போடுகிறது. சோறு மட்டுமல்ல. கறிக்குழம்பு ஊற்றி பொறியல் தொடங்கி ஊறுகாய் வரை வைக்கிறது". எழுத்து அதிகபட்சம் சோறுதான் போடும். சரக்கு எல்லாம் ஊற்றாது.
யாருமே யாராலும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதால் மட்டுமே மதிக்கப்படுவதில்லை. இது நீதியானதா/அநீதியானதா என்பது வேறு விவாதம். ஆனால் தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கும் எல்லா சமூகமுமே இப்படியானதாகதான் இருக்கிறது.
"எங்களால்தான் தமிழ் வாழுகிறது!" என்கிறார்கள் இவர்கள். எப்படிப்பட்ட அறியாமை இது? இப்படி மார் தட்டிக்கொள்ள இன்றைய தேதியில் முழுமையாக தகுதியானவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தினர் மட்டுமே.
last lyn sema punch lucky.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஇன்றைய தேதியில் முழுமையாக தகுதியானவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தினர் மட்டுமே
//
நீங்க இதை பலமுறை சொல்லி வரீங்க. நானும் ஒரு சில தமிழ் பாட புத்தகங்களை படிச்சி பார்த்தேன். (8th and 7th). உரைநடை பயங்கர முரட்டுத்தனமா இருக்கு. அதுவும் கம்ப ராமாயண உரைன்னு நினைக்கறேன். ரெண்டு வாக்கியம் கூட படிக்க கஷ்டமா இருக்கு.
மணி!
பதிலளிநீக்குஅவர்கள் நடை, பாடம் எல்லாம் மொக்கையானதுதான். சந்தேகமில்லை.
ஆனால் நம்மில் 99.9 சதவிகிதம் பேர் அவர்கள் மூலமாகதான் தமிழ் எழுத படிக்க கற்றுக் கொள்கிறோம்.
யுவகிருஷ்ணாவின் கவனத்திற்கு:
பதிலளிநீக்குபொய்களைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள்
http://kalachuvadu.com/issue-132/page68.asp
சூப்பர் பதிவு. நானும் ஒரு யுக்தி சொல்கிறேன், ரொம்ப ஆசையா இருக்கிறது. எழுத்தாளர்களும் வாசகர்களை வாங்கலாமே, அரசியல்வாதிகள் ஓட்டுகளை வாங்குவது போல்? மக்களுக்கும் மகிழ்ச்சி, எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் கிடைத்த மாதிரி இருக்கும்.
பதிலளிநீக்குsuper...
பதிலளிநீக்கு\\ ஒழுங்காக வேலை பார்த்தவர்கள் சமூகத்தால் மதிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள், எழுத்தாளர்கள் உட்பட. \\
பதிலளிநீக்குஒரு எழுத்தாளரைத் தமது தலைவராகவும், முதல்வராகவும் ஏற்றுக் கொண்டிருக்கும் சமூகம்தான் நமது தமிழ்ச் சமூகம்!
ஒருவரின் உண்மையான திறமை-தகுதி-அறிவு-உழைப்பு-ஐப் பொறுத்ததே, அவருக்குக் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும்.......
//பொய்களைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள்//
பதிலளிநீக்குஇருக்கலாம்.
ஆனால் தமிழை கற்பிக்கிறது என்கிற விஷயத்தில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்!
இவரு சாருவை ஆதரிக்கிறாரா..?எதிர்க்கிறாரா..?
பதிலளிநீக்குஎழுத்தாளர்களை இந்த சமூகம் மதிப்பதில்லை என்பதை கண்கூடாக காண முடிந்தது.
பதிலளிநீக்குநேற்று மாலை என் டி.வி.எஸ் பிப்டியில் ஸ்பென்சர் அருகில் வந்துகொண்டிருந்தேன். ஒரு எழுத்தாளன் வந்துகொண்டிருக்கிறானே என்ற மரியாதை கூட இல்லாமல் சிக்னலில் சொல்லி வைத்தாற்போல் சிகப்பு போடுகிறார்கள்.
கேரளத்தில் இது மாதிரி நடப்பதில்லை. அங்கே எழுத்தாளனை கொண்டாடுகிறார்கள். டிராபிக் போலீசுக்கும் எழுத்தாளனை அதுவும் தமிழ் எழுத்தாளனை தெரிந்திருக்கிறது.
அங்கே ஒரு முறை இப்படி நான் வருவதை கவனித்து சிக்னலை மாற்றி நான் டி.வி.எஸ். பிப்டியோடு டேங்கர் லாரியின் அடியில் அடைக்கலம் புகுந்தது வேறு கதை.
தோழர், one more யோசனை ...கலைஞர் கிட்ட சொல்லி இவர்களுக்கு மாத மாதம் எதாவது ஊக்க தொகை கொடுக்க சொல்லாம், முதியோர் பென்ஷன் மாதிரி
பதிலளிநீக்குஇதோடு புத்தகம் வெளிவந்து நூறு நாட்கள் ஆகிவிட்டால் அதற்கு ஒரு விழாவும் எடுக்கலாம்.
பதிலளிநீக்கு"எழுத்து அதிகபட்சம் சோறுதான் போடும். சரக்கு எல்லாம் ஊற்றாது."
பதிலளிநீக்குha ha ...same side goal
World is a tightly knotted bag,economically valuable goods are worthable others are rotten waste
பதிலளிநீக்குயுவா யாருமேல கோவம் உங்களுக்கு ????
பதிலளிநீக்குவிசா - அடி ஏதும் படலேயே??
அனைவருக்கும் புத்தக திருவிழா வாழ்த்துக்கள்
ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சந்தேகம் "கக்கூஸ்" தமிழ் சொல்லா? இச் சொல்லின் சரித்திரம் என்ன? யாராவது Phdக்கு ஆராச்சி செய்துள்ளார்களா?
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஇன்றைய தேதியில் முழுமையாக தகுதியானவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தினர் மட்டுமே
//
இது மட்டும் நூறு விழுக்காடு உண்மை.
இதைப் புரிந்து கொள்ளாதோர் ஆங்கில வழியில் படித்தவராக இருப்பர். இல்லை தமிழ் வழியில் ஏனோ தானோவென்றுப் படித்தவராகவோ படிப்பவராகவோ இருப்பர்.
--
ஞெலிநரி வெய்யோன்
http://goo.gl/RoMyo
ஒரு விஷயத்தை தன் அறிவுக்கு உட்பட்ட நடுவு நிலைமையோடு (சாதி, மத, அரசியல் பேதமில்லாமல் ) அணுகுகிற எழுத்தாளன் தமிழில் மிக மிக குறைவு.
பதிலளிநீக்குஎன் இனிய தமிழ் எழுத்தாளர்களே...
பதிலளிநீக்குகல்கி, சுஜாதா போன்றவர்கள் எழுத்தாளர்கள் இல்லையா??
தன் எழுத்தை படிக்காதவனெல்லாம் மூளையே இல்லாத உயிரினங்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் எந்த எழுத்தாளரையும் நம் மக்கள் மதிக்கமாட்டார்கள். தன்னால் மக்களை கவரும் விதமாக எழுத முடியாவிட்டால் மக்களை திட்டும் மூடர்களை எழுத்தாளர்கள் என் கூறாதீர்.
Sema post... 100 % true
பதிலளிநீக்குஅரசே டாஸ்மாக்குல அக்கவுண்ட் ஒப்பன் பண்ணி தரலாம்!
பதிலளிநீக்கு//பொய்களைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள்//
பதிலளிநீக்குபுத்தகங்கள் மட்டுமல்ல, நாம் சந்திக்கும் மனிதர்களும் பொய் முகம் கொண்டவர்கள் தான், வாழ்க்கை கற்றுக்கொடுப்பது தான் உண்மையான பாடம்.
யுவகிருஷ்ணா சொல்வது தமிழ் கற்றுக்கொடுப்பது பாடநூல் தான் என்று!
உண்மையோ, பொய்யோ அது தமிழில் தானே கற்றுக்கொடுக்குது!
"வழக்கறிஞர் சுந்தரராஜன் 2:32 PM, January 04, 2011
பதிலளிநீக்குயுவகிருஷ்ணாவின் கவனத்திற்கு:
பொய்களைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள்
http://kalachuvadu.com/issue-132/page68.asp"
thanks for your link.
இதை படித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தேன்.நாம் இன்னும் முகம் தெரியாத நாடுகளின் அடிமைகளாக இருப்பது போலவே உணர்கிறேன்.
நெத்தி அடி...
பதிலளிநீக்குHats Off Mr.Yuvakrishna....
நீங்க சொல்றது ரொம்ப சரி....
You are right...(Thx மே.சு)
ம்ஹூம்...உங்கள நம்பறதுக்கில்லை...லெப்ட்-ல கை போட்டு, ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, ஸ்ட்ரைட்-ஆ போற ஆள் நீர்...இப்போ இன்னாத்துக்கு இந்த பதிவு...சார்(ரு) எதாவது உங்கள திட்டி போட்டுருக்காரன்னு பார்த்தா ஒன்னும் இல்லியே...என்ன எளவோ, இந்த எழுத்தாளர்களோட உள்குத்து நமக்கு விளங்கறது இல்ல..
பதிலளிநீக்குvisa, ROFL...
பதிலளிநீக்குநான் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. தினத்தந்தி படித்துதான் தமிழ் கற்றுக் கொண்டேன்.
பதிலளிநீக்குஇப்போ வர்ற பத்திரிக்கை எல்லாம் அப்பிடியே ஆங்கில வார்த்தைய எழுதுறாங்க. ஹ்ம்ம். அது வேற கத..
//ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சந்தேகம் "கக்கூஸ்" தமிழ் சொல்லா?// Portuguese endru kelvi pattean,
பதிலளிநீக்குமுதலில் "தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை மதிக்கவில்லை" என்றார் சாரு.
பதிலளிநீக்குதமிழ்ச் சமூகம் நூல் வெளியீட்டு விழாவில் பீராபிஷேகம் செய்ய முனைந்த போது, தான் தமிழ்ச் சமூகம் என்று சொன்னது "தி ஹிந்து" பத்திரிகை படிக்கும் புத்திசாலி மக்கள் என்று தெளிவுபடுத்தினார். பீராபிஷேகம் முயன்ற முட்டாள்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.
செம ஃபார்முல இருக்கீங்க போல! சரோஜாதேவி பதிவுல சிக்சர் அடிச்சுட்டு, அடுத்த பதிவுல கிரவுண்டுக்கு வெளியில விளாசுறீங்க!
பதிலளிநீக்குஎழுத்தாளனே ஒருத்தன ஒருத்தன் கொண்டாடுறது இல்லை. அடுத்தவன் புத்தகம் அதிகமா வித்ததுனால, 'தமிழ் வாசகன் சரியில்லை, என்னுடைய படைப்பெல்லாம் ஒரு லடசம் பிரதிகள் விக்க வேணாமா?'ன்னு ப்ளாக்ல பொலம்பறாங்க.
உங்க பதிவையும் நல்லா திட்டி தீர்ப்பாங்கன்னு நினைக்கிறேன்!
நெத்தியடி!
indha katturai charu peyarai damage panrrapola irukke,idhu yuvakrishna ezhudinadha?inna thalai,katchi mariteya?
பதிலளிநீக்குஎழுத்தாளர்களுக்கு எங்கள் புதுக்கடையில் சோறு தண்ணி எதுவும் இலவசம் இல்லை என்று அனானியாக சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
பதிலளிநீக்குஆமா
ஒரு தொழிலை எப்படி செய்கிறோம் என்பதை பொறுத்தே மரியாதை கிடைக்கும் என்ற உங்கள் கருத்து எனக்கு உடன்பாடுதான் . தமிழ்நாடு பாடநூல் நிறுவன புத்தகத்தில் நான் படித்த விஷயங்கள் , என் பணியில் மிகவும் உதவுகின்றன .
பதிலளிநீக்குwriter is not a person who should be compared with other professionals. writers bring the desired social change in their works first and it follows in the society. What is wrong in expecting a recognition for themselves? What is wrong in celebrating a writer for his thought provoking ideas and concepts? Wherever marginalisation springs up subalterns voice for their rights. is this wrong?
பதிலளிநீக்கு\\முன்பெல்லாம் சாருநிவேதிதா மட்டுமே கூவிக்கொண்டிருந்த வாசகம் "தமிழ்ச்சமூகம் எழுத்தாளர்களை மதிப்பதில்லை".// சாரு நிவேதிதா எழுத்துலகின் தங்கர்பச்சான்!
பதிலளிநீக்குஒண்ணு விட்டுட்டீங்க. எழுத்தாளர்ங்க எல்லாம் சேர்ந்து கலைஞருக்குப் பாராட்டு விழா எடுத்தா, அதுல தலைவரு கலந்துக்கிட்டு, ‘நான் உங்கள்ல ஒருத்தன். தமிழக முதல்வர்னு சொல்லிக்கிறதைவிட தமிழ் எழுத்தாளன் சொல்லிக்கிறதுதான் எனக்குப் பெருமை’ அப்ப்டி இப்படின்னு ஏதாவது பேத்துவாரு... ஸாரி, பேசுவாரு. அதுக்கப்புறம் தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை மதிக்க ஆரம்பிச்சுடும். சரியா?
அன்பு யுவகிருஷ்ணா
பதிலளிநீக்குசாரு சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. அதே சமயத்தில் மற்றவர்கள், தகுதியற்றவர்கள் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
தனுஷ்
யுவா,
பதிலளிநீக்கு//"தமிழ்ச்சமூகம் எழுத்தாளர்களை மதிப்பதில்லை".,..இன்றைய தேதியில் முழுமையாக தகுதியானவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தினர் மட்டுமே.//
தவறான தகவலை சந்தடி சாக்கில் சொல்லிவிடதிர் , எல்லாரும் எழுத்தாளன் ஆகி விட முடியாது , திரும்ப திரும்ப ஒரோ தகவலை அச்சு செய்யும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தினர் எழுத்தாளர் ஆகி விட முடியாது , எட்டாம் வகுப்பு பட நூலை ஒருவனால் இருபது வருடம் கழித்து படிக்கச் முடியாது , அனால் எழுத்தாளனின் படைப்பை ஏக காலத்திலும் வாசிக்க முடியும் . அரிதாரம் பூசி அறிவு ஜீவிகள் என்ன தங்களை காட்டி கொண்டு இருபவர்களை கொண்டாடும் நமக்கு எழுத்தாளர்களை மதிக்க தெரியவில்லை என என்ன தோன்றுகிறது .
ராஜ் குமார்
Wow...great and different view....Adinna Adi...nethi adi..
பதிலளிநீக்குஅண்ணே..எப்பவும்போல அருமையான் பதிவு..அடிக்கடி முப்பாத்தம்மனை வம்பிழுக்கிறீங்களே..ஏன்?
பதிலளிநீக்குசோக்கா சொன்ன போ..
பதிலளிநீக்குஎன்ன மாமு சைடு மாறிட்டியா? சேம் சைடு கோல் மாறி கீது..
>> எழுத்தாளர்களை இந்த சமூகம் மதிப்பதில்லை என்பதை கண்கூடாக காண முடிந்தது.
பதிலளிநீக்குநேற்று மாலை என் டி.வி.எஸ் பிப்டியில் ஸ்பென்சர் அருகில் வந்துகொண்டிருந்தேன். ஒரு எழுத்தாளன் வந்துகொண்டிருக்கிறானே என்ற மரியாதை கூட இல்லாமல் சிக்னலில் சொல்லி வைத்தாற்போல் சிகப்பு போடுகிறார்கள்.
கேரளத்தில் இது மாதிரி நடப்பதில்லை. அங்கே எழுத்தாளனை கொண்டாடுகிறார்கள். டிராபிக் போலீசுக்கும் எழுத்தாளனை அதுவும் தமிழ் எழுத்தாளனை தெரிந்திருக்கிறது.
அங்கே ஒரு முறை இப்படி நான் வருவதை கவனித்து சிக்னலை மாற்றி நான் டி.வி.எஸ். பிப்டியோடு டேங்கர் லாரியின் அடியில் அடைக்கலம் புகுந்தது வேறு கதை. >>
ROFL :))
I feel our society is not a reading society.. Reading has never been our habit but for the last couple of centuries. In someways, our peoples' lifestyle still remain the same (for all the urbanization that happened). So its no wonder we don't think much about books or writers. Its a pity that our culture is in such a state of insensibility towards our core values of what makes us a tamil or an indian. We are slowly losing our respect for the elders, hospitality, spirituality and integrity. And thats very saddening.
பதிலளிநீக்குSinna
நாடு நிலையான பார்வை யுவா.
பதிலளிநீக்கு"ஒரு உழவனோ, தச்சு வேலை செய்பவனோ, ஆலைத் தொழிலாளியோ, வேறு எவரோ தன்னை இச்சமூகம் மதிப்பதில்லை என்று புலம்பித் திரிவதில்லை.
அன்று சினிமாக்காரர்கள் புலம்பினார்கள்."
இன்னும் புலம்புகிறார்கள் என்பதே சரி.
ஒரு உதராணம்:
TMS "தமிழ் எனக்கு என்ன செய்தது ?" என்று ஒரு முறை ரொம்ப குறைபட்டு கொண்டார்.
அதற்கு பிறகு அழகிரி அவருக்கு மதுரையில் விழா எடுத்தார்.
அது போல இவர்களும் எதிர்பார்கிறார்களோ என்னவோ ?
sema post anna !!
பதிலளிநீக்குபுலி வருது புலி வருது
பதிலளிநீக்குகரடி உறுமுதுடா......
பட்டாகத்தி பளபளக்க இந்த
வேட்டைக்காரன் நடைய பாத்து
கிலி வருகுதுடா.....
யுவா,
பதிலளிநீக்குநாயகன் ஸ்டைலுல, எழுத்திலக்கியம் என்பது தொழிலா படைப்பா?
"ஒழுங்காக வேலை பார்த்தவர்கள் சமூகத்தால் மதிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள், எழுத்தாளர்கள் உட்பட. " சபாஷ்! சரியாச் சொன்னீங்க தலை! அந்த கிறுக்குபய சுப்பிரமணி மட்டும் ஒழுங்கா வேலை செஞ்சிருந்தா இன்னொரு 100 பேர் அவன் சாவு ஊர்வலத்துல கலந்துகிட்டு டின்னு கட்டி ஆடியிருப்பாங்களே! அதை வுட்டுட்டு முண்டாசு கட்டிக்கிட்டு முரண்டு புடிச்சா சமூகம் எப்படி மதிக்கும்னு எதிர்பார்க்கலாம்?
"யாருமே யாராலும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதால் மட்டுமே மதிக்கப்படுவதில்லை. இது நீதியானதா/அநீதியானதா என்பது வேறு விவாதம்ஆனால் தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கும் எல்லா சமூகமுமே இப்படியானதாகதான் இருக்கிறது." - இதுதான் correct! நடிகைகளுக்கு கோவில், 100 அடி ப்ளெக்ஸ் பேனர் இதெல்லாம் கூட எல்லா சமூகமும்தான் செய்யுதுன்னு சொல்லி கண்ண மூடிக்குவோம்-உலகமே இருட்டா தெரியும், சுகமா தூங்கலாம்- இந்த நொஸ்பு டமில் எழுத்தாளன் தொல்லை இல்லாம!
மொத்தத்துல, வெளக்கிட்டீங்க. வெளங்கிட்டோம்.