10 பிப்ரவரி, 2012

அற்புதம், ஆனால் உண்மை!

வடஇந்தியாவில் ஜமால்புரி என்றொரு நகரம். அதற்கு பக்கத்தில் பக்காரா என்றொரு கிராமத்தில் ஷங்கிமங்கீஸ்வரர் என்றொரு ஆலயம். ஒரு சமயம் இந்த ஆலயத்துக்கு திடீரென ஒரு நல்ல பாம்பு வந்தது. இதைப் பார்த்த பூசாரி பயந்து ஓட முயற்சித்தார். உடனே பாம்பு மனிதக் குரலில் பேசியது.

“நான் சில நாட்கள் பூமியில் அவதாரம் எடுப்பேன். தர்மத்தை யார் கெடுக்கிறார்களோ அவர்களை அழிப்பேன். இங்கே நடந்த அதிசயத்தை யார் கதையாக எழுதி அவர்களது வலைப்பூவில் பதிவிடுகிறார்களோ, அவர்களுக்கு 24 நாட்களில் நினைத்ததை எல்லாம் தீர்த்து வைப்பேன். இந்த கதையை படித்துவிட்டு இன்று, நாளை என்று நாட்களை கடத்துபவர்களை தெருநாயை விட்டு கடிக்கச் செய்வேன்”

இவ்வாறாக கூறிவிட்டு நல்ல பாம்பு மறைந்துவிட்டது.

விஷயத்தை கேள்விப்பட்ட முகர்ஜி என்பவர் தன்னுடைய பெங்காலி பிளாக்கில் இந்தக் கதையை எழுதினார். இருபத்து ஐந்தாவது நாள் அவருக்கு திருமணம் ஆனது. அமெரிக்காவில் ஜார்ஜ் பராக் என்பவர் கூகிள் டிரான்ஸ்லேட்டரில் முகர்ஜியின் கதையை மொழிமாற்றி வாசித்து, தனது வலையில் ஒரு கதையாக போட்டார். இருபத்தி ஆறாவது நாள், நீண்டநாட்களாக தொல்லை கொடுத்து வந்த அவரது மனைவியிடமிருந்து அவருக்கு விவாகரத்து கிடைத்தது.

உகாண்டாவைச் சேர்ந்த அடிஜமீன் என்பவர் இந்தக் கதையை கேள்விப்பட்டு கேலியும், கிண்டலும் செய்தார். அவர் ஜெர்மனிக்குக்கு போயிருந்தபோது, பெர்லின் தெருவிலிருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் நான்கு அவரைப் பாய்ந்து பிடித்து, கடித்துக் குதறிப் போட்டது. தொப்புளைச் சுற்றி ஊசியே போடமுடியாத அளவுக்கு தொப்புள் எது, மார்பு எதுவென்று அடையாளம் தெரியாத அளவுக்கு நாய்க்கடி படு கோரமாக அமைந்துவிட்டது.

விஷயத்தை கேள்விப்பட்டு, நான் இந்தக் கதையை எழுதி டிராஃப்டில் போட்டு மிகச்சரியாக நேற்றோடு, இருபத்தி நான்கு நாட்கள் முடிந்துவிட்டது. இன்று அதுவாகவே பப்ளிஷ் ஆகிவிட்டது. இருபத்தி ஐந்தாவது நாளான இன்று, நீங்கள் இதைப் படித்துவிட்டு என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கதையை வாசித்துவிட்ட பாவத்துக்காக இதை கட் & பேஸ்ட் செய்து உங்கள் வலைப்பதிவில் இடாமல் அலட்சியப்படுத்தும் பட்சத்தில், அடிஜமீனுக்கு நேர்ந்த கோராமை உங்களுக்கும் நேரலாம். ஜட்டி போட கூட இடமில்லாத அளவுக்கு நாய்க்கடி மோசமாக அமையலாம் என்றும் எச்சரிக்கிறேன்.

9 கருத்துகள்:

  1. குறைந்தபட்சம் பின்னூட்டம் போட்டவர்களுக்கு ஏதேனும் விமோசனம் இருக்குமா என்று சொல்லமுடியுமா?

    பதிலளிநீக்கு
  2. சாருவின் பாணியில் எழுதும் முயற்சியா இது

    சாருவின் ஒரு புத்தகம் உண்டு, பெயர் மறந்து விட்டேன். அவருக்கு ஒரு நண்பர் கடிதம் எழுதுவதாக ஆரம்பிக்கும், பின்பு இடையில் டிவி சீரியல் போல பல கேரக்டர்கள் சிறுகதைகள்

    பதிலளிநீக்கு
  3. சரி... இந்த கதையை படிச்ச பாவம் நீங்க போட்டிருக்கிற படத்தை பார்த்ததும் போயிடுமா ??

    பதிலளிநீக்கு
  4. @@ குறைந்தபட்சம் பின்னூட்டம் போட்டவர்களுக்கு ஏதேனும் விமோசனம் இருக்குமா என்று சொல்லமுடியுமா? @@
    ஏங்க என்ன மாதிரி அப்பாவிகளும் இதில் சிக்கனுமா..இல்ல இது சீரியஸா..??
    என்ன ரொம்ப வாட்டுதே...நன்றிகள்..

    .சஸ்பிஷன் ஒரு பார்வை - ஒரு ஹிட்ச்காக் திரை படைப்பு.

    பதிலளிநீக்கு
  5. சாருவின் பாணியில் எழுதும் முயற்சிதான் இது என்று எண்ணுகிறேன்... .....

    "நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com"

    பதிலளிநீக்கு
  6. இங்கே நடந்த அதிசயத்தை யார் கதையாக எழுதி அவர்களது வலைப்பூவில் பதிவிடுகிறார்களோ, அவர்களுக்கு 24 நாட்களில் நினைத்ததை எல்லாம் தீர்த்து வைப்பேன்.///


    அடுத்து வரப்போகும் ஆட்ச்சியில் உங்களுக்கு செய்தித்துறை மாதிரியான அமைச்சர் பதவி ஏதாவது கிடைக்கலாம். இப்பவே வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்...

    அதுவும் 24 நாட்களில் நடந்தால் என்னை போல சந்தோசம் அடைபவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  7. இந்த மாதிரி மொக்கை விசயங்களை எழுதி தரம் தாழ்த்தி கொள்ள வேண்டாம். அன்பு வேண்டுகோள்

    பதிலளிநீக்கு
  8. குமுதத்திற்கு அடுத்த கதை எப்போ எழுதி அனுப்ப போறீங்க.

    பதிலளிநீக்கு