11 பிப்ரவரி, 2012

பிட்டு பார்த்தது ஒரு குற்றமா?

கடந்த வாரம் முழுக்க கர்நாடக அமைச்சர்கள் பிட்டுப்படம் பார்த்தது ஒரு தேசத்துரோக குற்றம் என்பதைப் போல மக்களிடம் விவாதம் நடந்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஏசு சொன்னதைதான் இரண்டாயிரம் வருஷம் கழித்தும் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. “உங்களில் எவன் யோக்கியனோ, அவன் முதல் கல்லை எறியலாம்”.

பொதுவாக இதுமாதிரி ‘மேட்டர்’களில் கேரள அமைச்சர்கள்தான் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று யூகித்திருந்தேன். என் யூகத்துக்கு மாறாக கர்நாடக அமைச்சர்களும் – அதிலும் கலாச்சாரக்காவல் இயக்கமான பாஜகவின் அமைச்சர்கள் - முன்னோடிகளாக இருக்கிறார்கள் என்பது அறிந்து மெத்த மகிழ்ச்சி.

பிட்டுப்படம் பார்ப்பது ஒரு கலாச்சாரச் சீரழிவு என்பதாக வெறும் வாய் வார்த்தையில்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம் ஒவ்வொருவருக்கும் ‘செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்’ இருந்தாலும் கூட ‘பிட்டு’ பார்ப்பதில் இருக்கும் குறுகுறுப்பு எழுபது, எண்பது வயசானாலும் அடங்குவதில்லை. பெண்களுக்கு ‘பிட்’டில் ஆர்வமில்லை என்றுதான் ஒரு காலத்தில் அப்பாவியாக நினைத்திருந்தேன். அதுவும் வெத்து யூகம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பாக அனுபவப்பூர்வமாக உணரமுடிந்தது.

பிட்டு பார்ப்பதில் போய் என்னத்தை குற்றவுணர்ச்சி என்பது புரியவில்லை. சுய இன்பம் மாதிரி இதுவும் இயல்பான ஒரு சமாச்சாரம்தான். வேடிக்கை பார்க்கும் மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது. பிட்டு என்றில்லை. பரபரப்பான எந்த விஷயமாக இருந்தாலும் வேடிக்கை பார்ப்பது மட்டும் நமக்கு சலிப்பதேயில்லை. செக்ஸ் சர்வநிச்சயமாக பரபரப்பான விஷயம். எனவே பிட்டு பார்த்தவர்கள் அதற்காக தாம் தரமிறங்கி நடந்துகொண்டோமே என்று சுயகழிவிரக்கம் கொள்வதோ, பிட்டு பார்த்தவர்களை நோக்கி ‘அயோக்கியர்கள்’ என்று பழிப்பதோ அநியாயம்.

‘பிட்டு’ எடுப்பதுதான் குற்றம், பார்ப்பது ஒன்றும் பெரிய பாவமல்ல என்பது என் வாதம். பிட்டுக் கலாச்சாரத்துக்கு பலியாகிறவர்கள் பெரும்பாலும் பெண்கள். குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்கப் பெண்கள். பணத்துக்காக விருப்ப அடிப்படையில் பெர்ஃபாமன்ஸ் காட்டுபவர்கள் போய், கட்டாயத்துக்காக இதில் ஈடுபடுத்தப்படுபவர்கள், கேண்டிட் முறையில் மறைவாக கேமிரா வைத்து எடுக்கப்பட்டு வினியோகிக்கப்படும் பிட்டுகள் என்று இத்துறை நாம் எவ்வளவு பெரிய அயோக்கியர்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத படுமோசமான அயோக்கியத்தனமான முறையில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. ‘பிட்டு’ விவகாரத்தை எதிர்ப்பதாக இருந்தால், இந்த அரசியல் அடிப்படையில்தான் எதிர்க்க வேண்டும்.

பிட்டு மாதிரி எந்த சமகாலப் பிரச்சினையாக இருந்தாலும் உலகமயமாக்கலின் விளைவு மற்றும் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதைதான் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. உலகமயமாக்கல் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுப் படுத்தியிருக்கிறது. அதன் பலனாக விளையும் சாதகங்களோடு, பாதகங்களையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். இன்றைய தேதியில் இணையத்துக்கு இருக்கும் அகோரப்பசிக்கு, இந்த ‘பிட்டுகள்’ பெரும் தீனியைப் போட்டு வருகின்றன.

இந்தியக் கலாச்சாரத்தில் முதன்முதலாக கோயில்களில் சிற்பவடிவில் ‘பிட்டுகள்’ காட்டப்பட்டன என்பது வரலாற்றில் அழுத்தமாக பதிவான ஒன்று. பிற்பாடு தொழில்நுட்பம் முன்னேற முன்னேற புகைப்படங்களில், சினிமாக்களில், வீடியோக்களில், விசிடிக்களில், இணையத்தில் என்று வளர்ந்து இன்று மொபைல் போன்களில் வந்து நிற்கிறது. இது ‘பிட்டு’களை விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி தவிர்க்க இயலாத சூழல். இக்கலாச்சாரம் ஜூராசிக்தனமாக வளர்ந்து எதிர்காலத்தில் நடுத்தெருவில் யாராவது இருவர் (ஆண் + ஆணாக இருந்தாலும் கூட) லைவ்ஷோ காட்டி, அதை சுற்றிலும் ஒரு ஐம்பது, நூறு பேர் வேடிக்கைப் பார்ப்பதாக இருந்தாலும் நாம் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அடையத்தேவையில்லை. ஏதேனும் ஒரு சேனல் இதை நேரடி ஒளிபரப்பாகவும் ஸ்பான்ஸர்கள் உதவியோடு ஒளிபரப்பக்கூடும்.

அபத்தமான, ஆபாசமான இந்தக் கட்டுரை மீண்டும் கர்நாடக அமைச்சர்களுக்கே வருகிறது. ஏதோ இரண்டு அமைச்சர்கள் ஆர்வத்தில் ‘பிட்டு’ பார்த்துவிட்டார்கள். ஒரு அமைச்சர் தன் மொபைலையே முல்லைக்கு தேர் கொடுத்த பாரியாய் கொடுத்து உதவியிருக்கிறார். இதையெல்லாம் குற்றமென்று சொல்லமுடியுமாவென தெரியவில்லை. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் இம்மாதிரி செல்போனில் பிட்டு பார்ப்பார்கள் என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கருக்கு தெரியாது. எனவே இதுகுறித்த சட்டப்பிரிவு எதையும் அவர் வரையறுத்திருக்க வாய்ப்பில்லை. நம்மிடம் இருக்கும் அரைநூற்றாண்டுக்கும் மேலான கிழடு தட்டிப்போய்விட்ட சட்டத்தை வைத்து அவர்கள் மீது கிரிமினல் குற்றமாக வழக்கு தொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பப்ளிக் நியூசன்ஸ் மாதிரி ஏதாவது கேஸுதான் போடமுடியும். அவ்வாறு இதற்கு முன்பாக ‘பிட்டு’ பார்த்தவர்கள் யார்மீதாவது என்ன பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் யாராவதுதான் சொல்லியாக வேண்டும்.

இந்த விஷயத்தில் அமைச்சர்கள் செய்த குற்றத்தைவிட, அதை ‘ஜூம்’ செய்து உலகுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கேமிராமேன் செய்த குற்றத்தின் அளவுதான் பெரியது என்று கருதுகிறேன். இரண்டு பேர் பார்த்ததை இப்போது உலகமே பார்க்க ஆசைப்படுகிறது. பர்மாபஜாரில் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ‘மினிஸ்டர் பார்த்த பிட்டு கொடுப்பா’ என்று கேட்டு, டிவிடி வியாபாரிகளை ‘டார்ச்சர்’ செய்துக் கொண்டிருக்கிறார்களாம். அவசரத்துக்கு கையில் கிடைக்கும் ஏதோ மொக்கைப் பிட்டை கொடுத்து ‘இதைத்தான் மினிஸ்டர்கள் பார்த்தார்கள்’ என்று அவர்களும் வாடிக்கையாளர்களை ‘திருப்தி’ செய்ய வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ‘பிட்டுவெறி’ சமூகம்தான் அப்பாவி அமைச்சர்களை ‘ராஜினாமா’ லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

24 கருத்துகள்:

  1. பல சிறப்புகள் நிறைந்த பார்வை..தெளிவான அலசல்..ஆழமான கருத்தை ரொம்ப ஞாயபடுத்தி சொல்லியுள்ளீர்கள்..என் நன்றிகள்.தங்களது வாசகனாக ஆனதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
    Liebster Blog Award - அவார்டு கொடுக்க போறேன்..

    பதிலளிநீக்கு
  2. என் பக்கத்து வீட்டுப் பெண் ஒரு முறை என்னிடம் பிட்டுப்படங்களை மொபைலில் ஏத்திக் கொடுக்குமாறு கேட்டாள். நான் நாகரிகமாக மறுத்தேன். இருப்பினும் தொடர்ந்து இரண்டாம் முறை கேட்டதால் என்னிடம் இருந்த 300 3GP படங்களைப் போட்டு விட்டேன். அடுத்த நாள் வந்து எல்லாம் இங்கிலிஷா இருக்கு. தமிழ் இல்லையா என்றாள்.எனக்குள் நொந்து கொண்டு யப்பா விட்டுடுங்கன்னு ஓடிட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. //சட்டமன்றத்தில் அமைச்சர்கள் இம்மாதிரி செல்போனில் பிட்டு பார்ப்பார்கள் என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கருக்கு தெரியாது. //

    ரொம்ப ரசித்தது இதைத் தான்.

    பதிலளிநீக்கு
  4. நீங்களாவது அந்த அமைச்சர்கள் என்ன பிட்டு பார்த்தாங்கன்னு சொல்லி மக்கள் கண்டதையும் பார்த்து ஏமாறாம தடுத்து இருக்கலாம்ணே....

    பதிலளிநீக்கு
  5. SMALL BIT(?) OF TRAGEDY IN B.J.P. MINISTER`S POLITICAL LIFE...........

    பதிலளிநீக்கு
  6. அமைச்சர்கள் பிட்டு பார்த்தது குற்றம் இல்லை என்பது சரியாக இருக்கலாம். ஆனால், மக்கள் பிரச்சனைகளை பேசுகிற சபையில்,பேசுகிற நேரத்தில் பிட்டு பார்த்தது தவறு தானே?

    பதிலளிநீக்கு
  7. யப்பா.... நீதான்யா எழுத்தாளன்...

    பதிலளிநீக்கு
  8. BJP - Bada Jollu Party

    என சொல்வதுண்டு

    அதுக்காக இப்படியா . . . ?

    இதுவே காங்கிரஸ் மந்திரின்னா

    இந்த பிரச்னை supreme கோர்ட் போய்

    அப்புறந்தான் resign எல்லாம் . . .

    நல்ல பகிர்வு நன்றி

    பதிலளிநீக்கு
  9. // ஆனால், மக்கள் பிரச்சனைகளை பேசுகிற சபையில்,பேசுகிற நேரத்தில் பிட்டு பார்த்தது தவறு தானே?//

    Sex-m மக்கள் பிரச்சனை thane ?

    பதிலளிநீக்கு
  10. இது தப்பு இல்லைதான். அவுங்களுக்கு ஏதாச்சும் பட்டம்கூட கொடுக்கலாம். பதவி உயர்க்குகூட சிபாரிசு செய்யலாம். இனி மேற்கொண்டு பெரிய ஸ்க்ரீல பாருங்க. சின்ன ஸ்க்ரீன்ல பார்த்தா டீடெய்லா தெரியாதுன்னு அட்வைஸ் பண்னலாம்.

    பதிலளிநீக்கு
  11. how about this news? three weeks ago, bittu was telecast in a railway station in orissa for 10 minutes.. as one of the operators had loaded some clips on the television server...

    http://zeenews.india.com/news/orissa/porn-film-in-bhubaneswar-railway-station_752630.html

    பதிலளிநீக்கு
  12. இந்த வீடியோவை பார்க்க சந்தா செலுத்துங்கள்னு “தொங்கு முறுக்கு மீசைக்காரர்” ”பக்கீரன்”ல விளம்பரப்படுத்தலியா?

    பதிலளிநீக்கு
  13. பிட்டு பார்ப்பது குற்றம் என்று சொன்னால் அதைவிட பைத்தியக்காரத்தனம் எதுவும் இல்லை. நானெல்லாம் பிட்டிலேயே ஊறி வளர்ந்தவன்தான்.

    ஆனால் அதற்கும் இடம் பொருள் ஏவல் என்று இருக்கிறது அல்லவா? .

    நான் விவாதிக்க வில்லை இது என் கருத்து தட்ஸ் ஆல் யுவா!

    பதிலளிநீக்கு
  14. பிட்டு படம் பார்ப்பது தவறில்லை என்ற உங்கள் வாதத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் பொது இடத்தில் பார்த்தது தவறு. இதையே ஒரு மாணவன் வகுப்பறையில் செய்திருந்தால் அவனை பள்ளியிலிருந்து நீக்கியிருப்பார்கள். அதே முறையில் இவர்களும் சட்டசபையிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்தான்.
    கு வை பா

    பதிலளிநீக்கு
  15. விடுங்க பாஸு. ஆனானப்பட்ட சிவனே பிட்டுக்கு அடிவாங்கியிருக்கிறாரு...இத போயி சீரியஸா எடுத்துகிட்டு ;)

    பதிலளிநீக்கு
  16. மாண்பு மிகு சட்டமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட விவகாரங்களையே, சட்டசபையிலேயே , சபா நாயகர் அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பது, உரிமை மீறல் பிரச்சினை..இது கர்னாடக அரசியல்வாதிகளுக்கு புரியவில்லை.. கவுண்டர் அட்டாக் செய்யும் வாய்ப்பை விட்டு விட்டார்கள்..

    பதிலளிநீக்கு
  17. சங்க இலக்கியங்களில் கூட காதலியின் முலையை ரசிக்கும் பாக்கள்தான் உள்ளன, வேற்றுப்பெண்களை அல்ல. விரைவின் மகளிர் போற்றப்படுவதும் இல. பிறவை ஆரியம் கற்றுத்தந்த கலாச்சாரமே, நமதல்ல நாயைப்போல் அலைவது

    பதிலளிநீக்கு
  18. லக்கி... பிட்டு பார்த்தது குற்றமில்லையே என்று வாதாடுகிறீர்கள். செக்ஸ் வைச்சுக்கிறது யாராவது தப்புன்னு சொல்றம்னா.. அது எப்ப, எங்க, யார் கூட அப்படிங்கிறதப் பொறுத்து தப்பா சரியான்னு மாறுது. அது மாதிரிதான் இதுவும். இந்தப் பன்னாடைகள் வீட்டிலோ அல்லது கட்சி ஆபீஸிலோ இதைப் பார்த்திருந்தால் யார் கேட்கப் போகிறார்கள்?

    போகிற போக்கில் தற்போதையப் பிட்டுப் படங்களின் இடத்தில் இதுகாறும் இருந்து வந்த 'சரோஜா தேவி' புத்தகங்களைக் குறிப்பிட மறந்த குற்றத்திற்காக உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. YOUR THOUGHT'S GOING ANOTHER DIRECTION EVERY BODY HAVE OWN FREEDOM, THIS MOVIE WATCHING NO WRONG BUT WHERE THERE ARE WATCHED??????????? THERE ARE NOT ABLE TO LISTEN IN ASSEMBLY. WHAT THEY ARE GOING TO DO SERVICE.

    DON'T DIVERT YOUR ARTICLE OTHER DIRECTION

    பதிலளிநீக்கு
  20. Dear YuvaKrishan,

    ****
    I have never expect this article from you.
    ****

    (THE ENTIRE HUMAN BEINGS ARE RUNNING FOR SEX ONLY. WITHOUT SEX OUR LIFE WILL BE VERY MUCH BORED - ITS A GREAT FEELING)

    No body says that watching a BITTU FILM is a offence.


    BUT WATCHING IN ASSEMBLY HALL IS A GREAT OFFENCE.

    As you said that it is not a wrong thing, Another day If any body having sex in the assembly hall, Will you allow it???
    ***
    (BECAUSE SEX IS NOT A OFFENCE ONE IS IT)
    ***

    You are misguiding the readers.
    (Already 12 followers out of 19 are saying that it is not a wrong thing)
    *****

    DO NOT SAY THAT "this is my personal blog, I can write whatever I wish"
    ****

    IF EACH AN INDIVIDUAL ARE DISCIPLINE THEN THE SOCIETY WILL DISCIPLINE.
    ****
    SOCIETY IS NOTHING BUT COLLECTIONS OF INDIVIDUALS.
    ****

    I hope you will understood my point.

    ****

    பதிலளிநீக்கு
  21. Dear Arjun, (Comment No.2),

    Do you have Guts to give the 300GB "BITTU SCENES" to any of your female family members, atleast male family members.

    NEVER!!!!!


    PLEASE DO NOT MORALISE THAT EVERYTHING IS CORRECT, BECAUSE WE ARE MODERNISED PERSON.

    IF YOU WANT BE A MODERNISED PERSON,

    1. MARY A WIDOW OR A WOMAN WHO WAS HAVING NO SOURCE OF LIFE,

    2. EDUCATE A POOR NEIGHBOUR CHILD.

    3. AT LEAST KEEP YOUR HOME VERY CLEAN BY YOURSELF.


    ***
    My intention is not arguing with you.

    ****
    But I will raise my voice always whenever a bad thing happening in and around me.
    *****
    I thought your comment was bad/ugly (YOU ARE THINKING-WOMEN ARE CHEAP)
    SO, I raised my comment.
    ***

    பதிலளிநீக்கு
  22. மிகவும் அருமை ......

    எப்படி உங்களால் மட்டும் முடிகிறதோ.......


    "நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com"

    பதிலளிநீக்கு
  23. Boss neega seriousa yeluthiirukeengala? comedya yeluthi irukeengala?

    பதிலளிநீக்கு
  24. \\@சீனு... விடுங்க பாஸு...\\

    இது போன்ற ஒரு கேவலமான கமெண்ட் அடித்த சீனுவுக்கும் அதை அனுமதித்த லக்கிக்கும் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்...

    இறை நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்பதற்காக இறைவனை கேவலப்படுத்த வேண்டாம். அது சிவனோ, யேசுவோ, அல்லாவோ யாராக இருந்தாலும் சரி... இந்த பதிவும் அதை பற்றியது அல்ல.

    பதிலளிநீக்கு