17 ஜனவரி, 2013

சமர்

ஒரு கும்பல் சட்டவிரோதமாக காட்டில் மரம் வெட்டுகிறது. டார்ஜான் பாணியில் பாய்ந்துவரும் ஹீரோ அத்தனை பேருக்கும் அல்லு கழண்டிட சுளுக்கெடுக்கிறார். ஓபனிங் பில்டப் சாங்.

அய்யய்யோ இன்னொரு விஷால் ஃபார்முலா படமா என்று நொந்து, தளர்ந்துப் போனால்.. சட்டென்று பாங்காக்குக்கு பைபாஸில் அழைத்துப்போய் சீட்டு நுனிக்கு நகர்ந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர். பிறகு க்ளைமேக்ஸ் வரை நிமிர்ந்த முதுகு தளரவேயில்லை. ‘தீராத விளையாட்டுப் பிள்ளைஎன்கிற படாபேஜாரான மொக்கைப்படத்தை எடுத்த பாவத்துக்கு புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர் திருவும், ஹீரோ விஷாலும்,.

படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் கவுதம சித்தார்த்தமன் ஃபேஸ்புக்கில் அட்ராசிட்டி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடையது என்று சொல்லும் கதைக்கும், சமர் படத்தின் கதைக்கும் ஒருவரி ஒற்றுமை இருப்பது உண்மைதான். ஆனால் முன்பாகவே ஹாலிவுட்டில் இதுமாதிரி நிறைய பார்த்திருக்கிறோம். இதே கதையை காமிக்ஸாக கூட படித்திருப்பதாக நினைவு. ‘டெத் ரேஸ்மாதிரியான கேம் சப்ஜெக்ட். நம்மோடு படம் பார்த்த சினிமாப் பத்திரிகையாளர் ஒருவர்அச்சு அசலாக ஒரு கொரியன் படத்தை தழுவியிருக்கிறார்கள்என்றார்.

இந்தப் பஞ்சாயத்தை எல்லாம் தாராளமாக மன்னித்து விடலாம். தரைக்கு நாலடி மேலே மிதந்துக் கொண்டிருந்த சூப்பர் ஹீரோவான புரட்சித்தளபதி விஷாலை வைத்து விறுவிறுப்பான, புதுமையான மாஸ் த்ரில்லரை எடுத்திருப்பதால். கதைக்களம் தாய்லாந்து என்பதால், சாக்காகபலானமேட்டரை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தவில்லை. ஃபாரினில் படமெடுக்கிறோம், ஃபாரினில் படமெடுக்கிறோம் என்று கூவிக்கூவி தேவையில்லாமல் ஊர் சுற்றிக் காட்டவில்லை. திரைக்கதைக்கு நேர்மையாக விறுவிறுவென சீன்பிடித்து உழைத்திருக்கிறார் இயக்குனர்.

இரண்டாம் பட இயக்குனருக்கும், இரண்டாம் நிலை ஹீரோவுக்கும் குருவித்தலையில் பனங்காய் மாதிரி வெயிட்டான சப்ஜெக்ட்தான். ஆக்ச்சுவலி விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்க வேண்டிய அளவுக்கு கூடுதல் கனமான கதையிது. ஆனாலும் குருவிகள் சாமர்த்தியமாக பனங்காயை சுமந்திருக்கின்றன. யுவன்ஷங்கர் ராஜாவின் பலவீனமான இசையைத் தாண்டியும்பக் பக்காட்சிகள் திரையை நோக்கி நம்மை ஈர்க்கின்றன. அடுத்தடுத்த ட்விஸ்டுகள் சுனாமியாய் அறைந்து சுவாரஸ்யப்படுத்துகின்றன.

படம் முழுக்க பிரும்மாண்டமாக தெரிந்தாலும், க்ளைமேக்ஸ் எடுக்கும்போது தயாரிப்பாளரின் பேங்க் பேலன்ஸ் தீர்ந்துவிட்டிருக்கலாம். மெரீனா பீச்சிலேயே சிம்பிளாக முடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் விஷாலின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வண்ணமாகபஞ்ச்டயலாக் ஃபயர் பற்றிக்கொண்டு எரிகிறது. வில்லன்கள் இருவரையும் அஜீத்தாகவும், விஜய்யாகவும் நினைத்து விஷாலின் ரசிகர்கள் விசில் அடிக்கிறார்கள்.

இந்தியில் பத்தாண்டுகளுக்கு முன்பே இம்மாதிரி கதைகளை கொடுத்து ரசிகர்களை தயார்படுத்தி விட்டார்கள். அவ்வகையில் தமிழுக்குசமர்ஒரு ஓபனர். இயக்குனர் திரு திறந்துவிட்ட இந்த வாசலில் இன்னும் நிறைய இயக்குன இளைஞர்கள் புகுந்து சிந்தித்து, உருவாக்கி வித்தியாசமான களங்களை வணிக சினிமாவில் உருவாக்குவார்கள்.

சமர் : எழுந்து நின்று இருகை தட்டி வரவேற்க வேண்டிய திரைப்படம்!

11 கருத்துகள்:

  1. என்னவோ என்னால் விஷால், சிம்பு , விஜய், அஜித்,போன்றவர்கள் நடித்த பட்ங்களை பார்க்கவே பிடிப்பதில்லை படங்கள் நன்றாக இருந்தாலும் கூட..

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:09 PM, ஜனவரி 18, 2013

    Vishal-ku fans ellam irukangala mr.yuva...

    பதிலளிநீக்கு
  3. //‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்கிற படாபேஜாரான மொக்கைப்படத்தை எடுத்த பாவத்துக்கு புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர் திருவும், ஹீரோ விஷாலும்,.// ஹ ஹா..அருமை

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:47 PM, ஜனவரி 20, 2013

    //இந்தியில் பத்தாண்டுகளுக்கு முன்பே இம்மாதிரி கதைகளை கொடுத்து ரசிகர்களை தயார்படுத்தி விட்டார்கள். //

    adhe.. adhe..

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா11:26 PM, ஜனவரி 20, 2013

    Perumal Karur... your age is 43.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா11:16 AM, ஜனவரி 21, 2013

    oops, i think this is the only review where u did not mention about the heroine..lol..

    பதிலளிநீக்கு
  7. மிஸ்ட்டர் பேரில்லா பெரியசாமி

    அந்த நான் சொன்ன நடிகர்கள் லிஸ்ட்ட்ல தனுஷ் இல்லை . கவனிக்க வில்லையா?

    எனக்கு வயது 33

    என் மனதிற்கு வயது 15

    ரஜினி கமல் கார்த்திக் பிரபு சத்தியராஜ் சரத்குமார் போன்ற திறமையான மேன்லியான நடிகர்கள் இருந்த இடங்களில் இப்பொழுது மிகவும் திறமைக்குறைவானவர்கள் இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் சொல்ல வந்தேன்.. தலைமுறை இடைவெளி எல்லாம் இல்லை பெரியசாமி :-)

    பதிலளிநீக்கு
  8. gud review my point of view this is style y need story in review how they handle film that's a review ,i need to ask yuva. y every body decreasing copy other stories.u tell most of book here translate only that's not taking every body. but in film?

    this movie please watch guys

    பதிலளிநீக்கு