ஒண்ணில்லே.. ரெண்டில்லே.. மூணு லட்டு. மொத்தமா அலெக்ஸ் பாண்டியனுக்குதான்.
சினைக்காக தன்னுடைய காளையை பசுக்களுக்கு கூட்டிக் கொடுக்கும் கவுரவமான வேலையை செய்து அமைதியாக கிராமத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். லட்டு மாதிரி அவருக்கு மூன்று தங்கைகள். தூரத்து சொந்தக்காரனாக வீட்டுக்கு வரும் அலெக்ஸ் பாண்டியன் லட்டுகளை கடித்துவிடாமல் எப்படி சந்தானம் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் என்பதுதான் இடைவேளை வரை கதை.
ஆதித்யா சேனல் பார்த்துக்கொண்டே திரைக்கதை எழுதியிருக்கிறார் சுராஜ். கவுண்டமணியின் சினிமா கேரியரில் வந்த அத்தனை காமெடிகளையும் திரும்ப ரீபூட் செய்திருக்கிறார். அட்வான்ஸ் வாங்கியாச்சி, ஏதாவது
கதை சொல்லணுமே என்று கார்த்தியிடம் ப்ரெஷ்ஷாக ஒரு கதையை சொல்லியிருப்பார் போல. டைட்டில்
சீன் முரட்டுக்காளையின் க்ளைமேக்ஸில் இருந்து உருவியது. செகண்ட் ஹாஃப் சென்ற ஆண்டின்
மெகா ஃப்ளாப்பான மாற்றானில் இருந்து உருவியது. இடையில் சந்தானத்தையும்,
கவர்ச்சிகரமான அவரது தங்கைகளையும் இட்டு நிரப்பி மானே, தேனே போட்டிருக்கிறார்.
இடையில் மக்கள் கட்சி என்று ஒரு கட்சியின் உள்கட்சிப்
பிரச்ச்னையை ஏன் காட்டுகிறார் என்றே புரியவில்லை. சரவணன் ஒரு ஆளை போட்டுத் தள்ளிவிட்டு
ஜெயிலுக்குப் போகிறார். அவருடைய தம்பிக்கு கார்த்தி மொட்டை போடுகிறார். சரவணன்
பெயிலில் வந்ததுமே அவரை சித்தப்பூ என்று கட்டிக் கொள்கிறார். பிறகு சரவணனையும்
காணோம். மொட்டைத் தம்பியையும் காணோம். படம் பார்த்தவனுக்கு கொட்டைதான் மிச்சம். ஐ
மீன் ருத்திராசக் கொட்டை.
மொக்கையாக இருந்தாலும் பர்ஸ்ட் ஹாஃப் செம மஜா. சந்தானத்தின்
மூன்று தங்கைகளும் நைட்டியோடு அலெக்ஸிடம் கதை கேட்கிறார்கள். கய் எல்லாம்
அப்பட்டமாக தெரிகிறது. ஸ்லீவ்லெஸ் என்பதால். கேரம்போர்ட் ஆடுகிறார்கள். அலெக்ஸை
பார்த்து மூன்று பேரும் இந்த காயை அடிங்க மாமா, அந்த காயை அடிங்க மாமா என்று
கொஞ்சுகிறார்கள். இந்த காட்சிகளை பார்க்கும் நமக்கே அலெக்ஸை நாலு அப்பு
அப்பவேண்டும் என்று தோன்றும்போது, லட்டுகளின் அண்ணன் சந்தானத்துக்கு எப்படி
இருக்கும்?
”உங்க தங்கச்சிகளை நான் பாதுகாப்பா பார்த்துக்கறேன் மச்சான்” - அலெக்ஸ்
"டேய் பாலுக்கு பூனை காவலா?” - சந்தானம்
“என்னை பால்னு சொல்றீங்களா மச்சான்?”
”நீ பால் இல்லைடா.. பூ.. பூ.. பூ... பூனை”
எப்பூடி?
”உங்க தங்கச்சிகளை நான் பாதுகாப்பா பார்த்துக்கறேன் மச்சான்” - அலெக்ஸ்
"டேய் பாலுக்கு பூனை காவலா?” - சந்தானம்
“என்னை பால்னு சொல்றீங்களா மச்சான்?”
”நீ பால் இல்லைடா.. பூ.. பூ.. பூ... பூனை”
எப்பூடி?
எல்லாவற்றையும் மன்னித்து விடலாம் இயக்குனர் சுராஜ்
அவர்களே. ஒரே ஒரு காட்சியை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏற்கனவே எட்டுநூறு வாட்டி
வயசுக்கு வந்துவிட்ட தோற்றத்தில் இருக்கும் சந்தானத்தின் மூன்றாவது தங்கச்சி பூப்படைந்து
விட்டதாக ஒரு சீன் வருகிறதே? சின்னத்தம்பியில்
பி.வாசு நிகழ்த்திய ரெக்கார்டை இந்த விஷயத்தில் உடைத்திருக்கிறீர்கள் என்று
நீங்களும், உங்கள் டீமும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
1947, ஆகஸ்ட் 15 அன்று என்னுடைய தாத்தா காஞ்சிபுரம் சிறுணை
நாராயணசாமி வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் பெற்று எப்படி விடுதலையாக ஃபீல் செய்திருப்பார் என்பதை கடைசியாக உணர்ந்தே
விட்டேன். ‘ரிட்டர்ன் & டைரக்டட் பை சுராஜ்’ என்கிற எண்ட் கார்டை பார்த்தபோது.
அனுஷ்க்காவைப் பற்றி சொல்லவே இல்லை.....
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு1947, ஆகஸ்ட் 15 அன்று என்னுடைய தாத்தா காஞ்சிபுரம் சிறுணை நாராயணசாமி வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் பெற்று எப்படி விடுதலையாக ஃபீல் செய்திருப்பார் என்பதை கடைசியாக உணர்ந்தே விட்டேன். ‘ரிட்டர்ன் & டைரக்டட் பை சுராஜ்’ என்கிற எண்ட் கார்டை பார்த்தபோது.''
இதைவிட சிறப்பாக படம் முடிந்ததும்
நேர்ந்த உணர்வைச் சொல்வது கடினமே
வாழ்த்துக்கள்
ரிட்டர்ன் & டைரக்டட் பை சுராஜ்
பதிலளிநீக்குSame feeling!
padam kuppai
பதிலளிநீக்குவிகடன்ல பிச்சு உதறி இருந்தாங்களே.... அதப் படிச்சப்புறமும் இந்தப் படத்துக்கு போன உங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்....
பதிலளிநீக்குகய் எல்லாம் காட்டுனாங்க இல்ல அப்பறம் என்ன?...
பதிலளிநீக்குஎனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது.
பதிலளிநீக்கு