4 ஜனவரி, 2013

‘ராஜா’ங்கம்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை ‘நீதானே என் பொன்வசந்தம்’. காதல், காதலர்கள், ஈகோ என்று ஏற்கனவே பார்த்து சலித்த கதையை ஃப்ரெஷ்ஷாக கவுதம் இயக்கியிருக்கிறார். ஆனாலும் இசைதான் படத்தை திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது.
முப்பத்தியெட்டு வருடங்களாக ஒரு இசையமைப்பாளர் எப்படி அதே consistencyயை தொடர்ச்சியாக maintain செய்ய முடியும் என்று எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை. அதனால்தான் இளையராஜா இசைஞானி. இதுவரை வந்த இளையராஜா படங்களிலேயே சிறைச்சாலையும், ரமணாவும்தான் பின்னணியிசையில் தலைசிறந்தது, அந்த சாதனையை உடைக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ.எ.பொ.வ மிகச்சுலபமாக உடைத்தெறிந்திருக்கிறது. எங்கே டிரம்ஸ் அடிக்க வேண்டும், எங்கே கிடாரை மீட்டவேண்டும், எங்கே வயலினை முழங்கவேண்டும் என்பது மட்டுமில்லாமல் எங்கே மவுனிக்க வேண்டும் என்கிற வித்தையை கற்றுத் தேர்ந்திருப்பதில்தான் ராஜாவின் இமாலய வெற்றி அடங்கியிருக்கிறது. இயக்குனர் எடுத்திருக்கும் காட்சிகளின் வீரியத்தை அல்லது பலகீனத்தை முழுமையாக உணர்ந்து, எங்கே மேம்படுத்த வேண்டும், எங்கே சரிக்கட்ட வேண்டும் என இளையராஜா அளவுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் உலகில் வேறு யாரும் இருந்துவிட முடியாது.
பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட முக்கா மணி நேரத்துக்கு ராஜா பாட்டுதான். பல பாடல்களை கவுதம் திரும்பத் திரும்ப ரிபீட் அடித்திருப்பதால் எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீ.எ.பொ.வ பாடல்களாலேயே நிறைந்திருக்கிறது. ஒரு சர்வதேசத்தரம் வாய்ந்த வீடியோ இசை ஆல்பத்தை காணும் அனுபவம் இதனாலேயே படம் பார்க்கும்போது கிடைக்கிறது. இந்த அற்புதமான, அழகான அனுபவத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாதவர்களை பார்த்து அனுதாபம்தான் கொள்ள முடிகிறது.
நீ.எ.பொ.வ.வின் எட்டு பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எட்டு அதிசயங்கள். ‘காற்றை கொஞ்சம் நிற்கச் சொன்னேன்’ என்று கார்த்திக் பாடும்போது, லேசாக காற்றடித்து உங்கள் முன்னந்தலை முடி அசைந்து நிற்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படவில்லையெனில், உங்கள் காதில் ஏதோ கோளாறு என்று பொருள். ‘சாய்ந்து சாய்ந்து உனை பார்க்கும்போது’ என யுவன்ஷங்கர் ராஜா உருகும்போது தேன்வந்து பாயுது காதினிலே. அப்போது காதைத் தொட்டுப் பாருங்கள். நிஜமாகவே தேனின் பிசுபிசுப்பு. ‘என்னோடு வா வா’வுக்கு உங்கள் கால்கள் தாளம் போடவில்லையெனில், சைக்காலஜிக்கலாகவே எதனாலோ நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளலாம். ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’, ’சற்று முன்பு பார்த்த’, ’முதல் முறை’ என்று, படத்தின் எல்லாப் பாடல்களிலுமே ராஜா நிகழ்த்தியிருக்கும் சாதனை அசாத்தியமானது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராஜாவின் இசையை மட்டுமே பிரதானமாக நம்பி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ராஜாவின் நண்பர்கள் அவருடைய இசையில் படமெடுத்திருக்கிறார்கள். ராஜாவே சொந்தமாக படம் எடுத்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்த இயக்குனரும் தன்னுடைய ஈகோவை சுத்தமாக விட்டுக் கொடுத்து, அவருக்கு தந்திராத மிகப்பெரிய இடத்தை, கவுரவத்தை நீ.எ.பொ.வ.வில் கவுதம் தந்திருக்கிறார். நாடி, நரம்பெல்லாம் ராஜாவின் இசைவெறி ஏறிப்போன ஒரு ரசிகனால் மட்டுமே இப்படிப்பட்ட படத்தை கொடுக்க முடியும். படத்தின் டைட்டிலே ராஜாவுக்கு செய்யப்பட்டிருக்கும் tributeதான் எனும்போது, மேலும் விளக்கி விளங்கிக்கொள்ள ஏதுமில்லை.
once again thank you gautham!

23 கருத்துகள்:

  1. Its different kind of film which celebrates the music... Totally loved it.... As raja said every song is slow poison.... satru munbu chance eh illa..

    பதிலளிநீக்கு
  2. Yuva..I am die heart Raja's fan. But somehow Raja's own voice is not fit in this movie. Might be It is only my feeling. But i miss something which he had given with our local players but not in Hungary musicians.

    பதிலளிநீக்கு
  3. ராஜாவை மட்டும் நம்பி படம் எடுத்ததால் தான் படம் 2012 ன் மிக பெரிய ப்ளாப் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. //நீ.எ.பொ.வ.வின் எட்டு பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எட்டு அதிசயங்கள். ‘காற்றை கொஞ்சம் நிற்கச் சொன்னேன்’ என்று கார்த்திக் பாடும்போது, லேசாக காற்றடித்து உங்கள் முன்னந்தலை முடி அசைந்து நிற்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படவில்லையெனில், உங்கள் காதில் ஏதோ கோளாறு என்று பொருள்//

    அப்போ முன்னத்தலையில் "கொஞ்சம்" முடி இல்லாதவர்கள் நிலைமை என்ன?

    பதிலளிநீக்கு
  5. Ithu yeatho vancha pugazhchi mathiri theriyuthe...naanum ilayaraja padalgalai paithiyamaga ketpavan...aana "Bharathi" padathukku piragu avar hit kodutha nyabagame ille..NEPV padam sema mokkai, seri paatavathu kapathirumnu nenachen...Gautham slippen in selecting music director for this film...

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா2:37 PM, ஜனவரி 04, 2013

    //எப்படி அதே consistencyயை தொடர்ச்சியாக maintain செய்ய முடியும்

    stagnant என்றும் சொல்லலாமில்லையா ??

    90 களில் இருந்த மேற்கத்திய இசையை அஞ்சலி படத்தில் நன்றாக உபயோகப்படுத்தியிருப்பார் , அதே போலே 80 களிலும் ....ஆனால் 2010 வருடத்தில் அவரது இசை வளர்ச்சி அவ்வளவாக எடுபடவில்லையே ??

    - அருள் மணிவண்ணன்

    பதிலளிநீக்கு
  7. நான் feel பண்ணத அப்படியே எழுதி இருக்கீங்க தலைவா.. அற்புதம்.. படம் Musical treat...

    பதிலளிநீக்கு
  8. ராஜா உலகத் தரம் வாய்ந்த இசையமைப்பாளர் தான். சந்தேகமேயில்லை.

    படம் எப்படி....? அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

    பார்க்கலாமா? வேண்டாமா?

    பதிலளிநீக்கு
  9. பெரிய அண்ணன்5:09 PM, ஜனவரி 04, 2013

    ஒரே படத்திற்கு இரண்டு விமர்சனமா? அதுவும் பாட்டைக் கேட்கும் போது நிஜமாகவே காதில் தேன் ஒழுகும் என்றெல்லாம் எழுதியிருக்கிறாரே தம்பி... நியு இயர கொஞ்சம் பலமாக கொண்டாடிட்டாரோ?

    பதிலளிநீக்கு
  10. பெரிய அண்ணன்5:10 PM, ஜனவரி 04, 2013

    ஒரே படத்திற்கு இரண்டு விமர்சனமா? அதுவும் பாட்டைக் கேட்கும் போது நிஜமாகவே காதில் தேன் ஒழுகும் என்றெல்லாம் எழுதியிருக்கிறாரே தம்பி... நியு இயர கொஞ்சம் பலமாக கொண்டாடிட்டாரோ?

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா5:17 PM, ஜனவரி 04, 2013

    yuva, you did not tell about vaanam mella kilirangi..

    thats is an awesomatic extraordinary song.
    when varun and nithya decide to meet in that culturals, for the first 2 seconds there is a silence and then we hear the chorus and time freezes there!!

    i love it..

    பதிலளிநீக்கு
  12. Thanks Lucky for this wonderful post...I too felt the same when I watched the movie..but I could not express it...

    பதிலளிநீக்கு
  13. இப்பல்லாம் இந்த மாதிரி படங்களுக்கும் குவாட்டரும்,கோழி பிரியாணியும் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா?

    பதிலளிநீக்கு

  14. <<90 களில் இருந்த மேற்கத்திய இசையை அஞ்சலி படத்தில் நன்றாக உபயோகப்படுத்தியிருப்பார் , அதே போலே 80 களிலும் ....ஆனால் 2010 வருடத்தில் அவரது இசை வளர்ச்சி அவ்வளவாக எடுபடவில்லையே ??
    >>

    :) :) :)

    இதைத்தானே சார் நானும் சொல்கிறேன்

    :) :)

    மறுப்பு நிலையிலேயே இருக்கிறீர்களே

    ஏற்றுக்கொள்ளுங்கள் 

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா11:41 AM, ஜனவரி 05, 2013

    i low this movie very much, but somebody told this very bore nu. It is a mindblowing movie and songs also

    Prabhu

    பதிலளிநீக்கு
  16. Lakshmanan Marimuthu ராஜாவைப் பற்றி இப்படி ஒரு விமரிசனம் லேட்டாகவாவது வந்ததே என மகிழ்ச்சி அடைகிறேன். நான் பெற்ற இன்பம் மற்றவரும் பெறும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. பலே பலே
    லட்சுமணன்

    பதிலளிநீக்கு
  17. தொடர்ந்து இளையராஜாவுக்கு கவுதம் வாய்ப்பு வழங்குவாறேயானால் இதைவிட இன்னும் சிறந்த பாடல்களை கேட்கலாம்

    பதிலளிநீக்கு
  18. ஆஹா நான் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெற்று அதை கேள்வுறும் போது இன்பம் இரட்டிப்பு ஆகிறது.
    சந்தேகமே இல்லாமல் நூறு சதவிகிதம் சரியான கருத்து. இளையராஜா ராஜதானென்று நிருபித்து இருக்கிறார்.
    ஜீவா பாடும் நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடல் அப்படியே 80க்கு கொண்டுபோயிற்று. உண்மையில் வாழ்ந்தேன் அந்த நேரம்.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா2:55 PM, ஜனவரி 07, 2013

    நீ.தா.எ.பொ பாடல்கள் கேட்க நல்லா இருக்கு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனா ஆல்பம் என்று பார்த்தல் ஒரு சிறந்த ஆல்பம் என்று யாருமே ஒத்து கொள்ள மாட்டார்கள். ஒரு திரைபடத்தில் பாடல் (கேட்க) மட்டும் நல்லா இருந்து என்ன பயன்? அப்படிபர்தல் கட்டுமரக்காரன் கூட மிக சிறந்த படம் என்பதில் சந்தேகமே இல்லே.

    பதிலளிநீக்கு
  20. எனக்கும் இந்த படம் பிடித்திருந்தது இளையராஜாவின் இசைக்காக

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா9:54 AM, ஜனவரி 08, 2013

    யுவா,

    இந்தப் படத்தை உங்கள் இரண்டாவது விமர்சனத்திற்காகவே பார்த்தேன்... ஒன்றோ இரண்டோ பாடல்களைத் தவிர மீதி எல்லாமே, படத்துடன் இணைந்த உணர்வு கலந்த மியூசிக்கலாகவே எனக்குத் தோன்றியது. இயல் இசை நாடகம் என்கிற கலவையாகவே தோன்றியது.... மேலும், என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைச் சுட்டு கௌதம் படம் எடுத்திருக்கிறார். எனக்கு அவர் ராயல்டி தந்தாக வேண்டும். படம் பார்த்த ராத்திரியில் பித்துப் பிடித்தாற் போல் இரவு முழுவதும் தூங்காமல் உட்கார்ந்து, நடந்து, படுத்து, சிரித்து, அழுது எனது இரவுத்தூக்கத்தையும் கெடுத்த கௌதம் வாசுதேவ் மேனனுக்கு என் சார்பாக இரண்டு உதைகள் கொடுங்கள்...

    பதிலளிநீக்கு
  22. உங்களுடைய புகழ்ச்சியை இளையராஜாவே ஏற்க மாட்டார்....

    பதிலளிநீக்கு