ஆனால் புத்தனின் பெயரால் பவுத்த தேசியவாதிகள் மியான்மரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்...
இஸ்லாமியர்களின் புனித எண் 786. அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக மியான்மர் பவுத்த சன்னியாசிகள் தேர்ந்தெடுத்திருக்கும் எண் 969. பவுத்தத்தின் அடிப்படையான மூன்று ரத்தினங்களை (three jewels : புத்தர், தர்மம், சங்கம்) இந்த எண் குறிக்கிறது என்கிறார்கள். இந்த எண்ணை பெயராக கொண்டு மியான்மரில் தொடங்கப்பட்ட 969 இயக்கத்துக்கு உள்நாட்டில் மெஜாரிட்டியான பவுத்தர்களிடையே பலத்த ஆதரவு. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த இயக்கத்தை புதிய நாஜிக்குழு என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969.
பவுத்த தத்துவங்களை பரப்பும் அமைதி அமைப்பு என்று 969 தன்னை சொல்லிக் கொண்டாலும், அஸின் விராத்து என்னும் பவுத்தத் துறவி இவ்வியக்கத்தில் ஈடுபட்டதில் இருந்தே இதன் பாதை வன்முறைக்கு திரும்பியிருக்கிறது. 1968ல் பிறந்த விராத்து பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு துறவியானார். 2001லிருந்து 969 இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். வன்முறைக்கு வித்திடும் அவரது பிரச்சாரங்களின் பேரில் 2003ல் கைது செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் 2010ஆம் ஆண்டே அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்படும் போது இவரும் சேர்த்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினார். வெளியே வந்தவர் சும்மா இல்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவுகளை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களில் 969 இயக்கம் மூலமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை உலகம் முழுக்க பரவலாக பரப்பினார்.

விராத்துவின் விபரீத கருத்துகள்
· நீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக்கொண்டு தூங்க முடியாது.
· நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை பவுத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்
· கலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக பவுத்த-இஸ்லாமிய கலப்பு.
· அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களை கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.
· மதமும், இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.
· இஸ்லாமியரின் கடைகளில் எந்த பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்.
மியான்மரின் அதிபர் தைன் சைன் 969 இயக்கத்துக்கு ஆதரவாகவே இருக்கிறார். குறிப்பாக விராத்துவை பாதுகாக்கிறார். அரசால் அனுமதிக்கப்பட்ட வன்முறையாகவே இன்றுவரை இது நீடிக்கிறது. சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலைகளை மிஞ்சும் வகையிலான வெறியாட்டம் மியான்மரில் நிகழக்கூடும். அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த இனவன்முறையை கண்டிக்காமல் கள்ளமவுனம் சாதிக்கிறார் என்று வருத்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் நடுநிலையாளர்கள்.
(நன்றி : புதிய தலைமுறை)
அமைதின்னு...சத்தம் போடறாங்க!
பதிலளிநீக்குMadotica
//· நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை பவுத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்
பதிலளிநீக்கு· அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களை கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.//
Valid points...
பர்மாவுக்கும் (மியான்மர்) தழிழ் நாட்டுக்கும் உள்ள பழைய தொடர்பு வரலாறு சொல்லும் .
பதிலளிநீக்குதமிழ் மக்கள் பர்மாவிலிருந்து அகதிகளாக திரும்பும் நிலையை உண்டாகியவர்கள் மியான்மிய ஆட்சி கொடுங்கோலர்கள் .அந்த வெறித்தன்மை இன்னும் அங்கு தொடர்கிறது .உலக நாடுகள் ஏதோ ஒரு ஆதாயம் தேடி இதனை கண்டு கொள்வதில்லை
இளவரசன் மரணம் பற்றியும் பாமகவின் அடாவடி பற்றியும் நீங்கள் கூடத்தான் கள்ள மவுனம் சாதிக்கிறீர்கள்.
பதிலளிநீக்குthe relegions wich call for one god.. aims at UNIFICATION OF CULTURE..wher as diversifed relegiions dont aim for unificaton.. they respect diverse beliefs..
பதிலளிநீக்குHas Aang Saang Su Kiyi spoken about this so far ?
பதிலளிநீக்குஅங்க அடிச்சா இங்க பீகார்ல ஏன்டா குண்டு வைகிறிங்க இந்தியா அவ்வளவு கேவலமான நாடா !!
பதிலளிநீக்குஅந்த விராத்துவிற்கு ரெண்டு பக்கமும் கொஞ்சம் முடியும், ஒரு கண்ணாடியும், வெள்ளுடையும் போட்டால் நம்ம மருத்துவர் அய்யாவே தான்..
பதிலளிநீக்குEven the home minister said, they have no clue.. but here our CID Satraj had found the real culprits... This is how the media had prepared the general public who dont care about finding the real truth beyond the headlines, rather happy to blame someone for everything. Boss, think beyond the headlines....
பதிலளிநீக்கு//· நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை பவுத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்
பதிலளிநீக்கு· அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களை கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.//
Valid points...
மூணு,நாலு ப்ளாக் எழுதுற படிச்ச மூதேவிகளே இப்படி கமென்ட்
போடும்போதுதான் தெரிகிறது காவிக்கும்பலின் பொய் பிரசாரதின்
வலிமை.
@@@ அங்க அடிச்சா இங்க பீகார்ல ஏன்டா குண்டு வைகிறிங்க
பதிலளிநீக்குஇந்தியா அவ்வளவு கேவலமான நாடா !! @@@
*** இதுல டவுட்டு வேற இருக்கா ஒனக்கு? ***