8 ஜூன், 2016

இறைவி

டைட்டிலே பெருமழை சத்தத்தோடுதான் தொடங்குகிறது.

இன்னும் எத்தனை ஆண்டுகளோ கழித்து நடைபெறவிருக்கும் கல்யாணம் குறித்து கனவு காணும் ஓர் இறைவி, மறுநாளே கல்யாணம் செய்துக்கொள்ளப் போகும் ஓர் இறைவி, கல்யாணம் முடிந்து கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து முடித்த ஓர் இறைவி.

அந்த மழைநாளில் இந்த இறைவிகளின் அப்போதைய மனநிலைதான் படத்தின் தொடக்கம். படம் முழுக்கவே பாத்திரங்களின் உணர்வுபூர்வமான எழுச்சியிலோ, வீழ்ச்சியிலோ சாட்சியாக ஜோவென மழை கொட்டுகிறது.

படத்தில் விஜய்சேதுபதி, “என்ன கான்செப்ட்?” என்று கேட்கிறார். ‘மழையில் நனைய விரும்பும் இறைவிகள்’ என்பதுதான் கான்செப்ட். இறுதியில் ஒரே ஒரு இறைவிதான் நனைகிறார் என்பதோடு படம் முடிகிறது.

பாலுமகேந்திரா, பாலச்சந்தர், சுஜாதா மூவருக்கும் tribute செய்யப்பட்டு படம் தொடங்குகிறது. நியாயமாகப் பார்க்கப் போனால் இந்தப் பட்டியலில் மணிரத்னத்தையும், ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணனையும் கூட சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும். ‘மவுன ராகம்’ ரேவதிக்குப் பிறகு மழையை அதிகம் காதலிப்பவர்கள் இவர்கள்தான்.

இறைவிகளின் கதையாக மட்டும் ‘இறைவி’ இருந்திருக்கலாம். கான்செப்டை மீறி இறைவன்களின் திருவிளையாடலாக மாறிவிட்டதுதான் ‘இறைவி’யின் சோகம்.

‘கோவலன் அல்ல கேவலன்’ என்கிற பாபிசிம்ஹாவின் கோபம் ஒருவகையில் நியாயமே. ‘வயிற்றுக்குள் இருக்கும் குட்டியை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, புதுக்குட்டியை எப்படி பிரசவிக்க முடியும்?’ என்கிற எஸ்.ஜே.சூர்யாவின் லாஜிக்கும் சரிதான். படைப்பாளியின் வலியை இன்னொரு படைப்பாளியாக புரிந்துக் கொள்ளும் சிற்பியான ராதாரவியின் பாத்திர வார்ப்பும் அருமை. வைப்பாட்டி மீதிருந்த ஆசையும், மோகமும் அற்றுப்போக மனைவியை நாடிவந்து வாழ விரும்பும் நேரத்தில் எல்லாம் ஏதோ பிரச்சினைகளால் பிரிய நேரும் விஜய் சேதுபதியின் பரிதவிப்பும் உணரக்கூடியதுதான்.

எல்லாம் இருந்தும் ‘இறைவி’யை ஏன் வழிபட முடியவில்லை என்றால் படத்தின் மையத்துக்கு தொடர்பில்லாமல் அலைபாயும் காட்சிகளாக தயாரிப்பாளரின் ஈகோ, சிலை கடத்தல் என்று திரைக்கதை கோட்டை தாண்டி ஓடிக்கொண்டே இருப்பதால்தான்.

நெடில் ஆண்கள், குறில் பெண்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்கிற பிரசங்கமெல்லாம் சரிதான். உண்மைதான். ஆனால், ஆண்கள் அவ்வளவுதானா?

இருபத்து நான்கு வயதில் தன் தலையை தவிர அத்தனையையும் அடகு வைத்து தங்கைக்கு திருமணம் செய்துவைத்த ஆணை எனக்குத் தெரியும். மனைவி உடல்நலிவுற்ற காலத்தில் urine pan பிடித்தவனையும் தெரியும். வாங்கும் சம்பளத்தை அப்படியே கவர் பிரிக்காமல் அம்மாவிடம் கொடுத்து, அம்மா கொடுக்கும் காசில் தன் செலவுகளை சுருக்கிக் கொள்பவனையும் தெரியும். எலாஸ்டிக் போன ஜட்டியை அரைஞாண்கயிறின் உதவியால் அட்ஜஸ்ட் செய்து மாட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கு பர்த்டே டிரெஸ்ஸை ஆடம்பரமாக எடுக்கும் ஆண்களை கார்த்திக் சுப்புராஜ் அறியமாட்டாரா என்ன?

அறிவார். ஆனால், பெண்ணியம்தான் இப்போது பேஷன். அது நிஜமான பெண்ணியமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை. பெண்ணியம் மாதிரி ‘போலச் செய்துவிட்டால்’ போதும். ‘கல்யாணமெல்லாம் வேணாம், just fuck me’ என்று பூஜா திவாரியா, விஜய் சேதுபதியை கூப்பிட்டு கூடும்போது சத்யம் சினிமாஸில் ஐடி ரசிகர்கள் விசில் அடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். போதாதா?

‘வித்தியாச விரும்பி’ என்று நாலுபேர் புகழ்ந்து, அப்படியொரு பெயரெடுத்து தொலைத்து விட்டதாலேயே, இயல்பாக இருக்க முடியாமல் சொந்த வாழ்க்கையிலும் கூட ஏதாவது வித்தியாசமாக இருந்துத் தொலைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆட்பட்டு மெண்டல் ஆகிப் போனவர்கள் சினிமாவிலும், இலக்கியத்திலும் ஏராளம்.

சினிமாவை சினிமா என்று சினிமாக்காரர்கள் அழைத்துக் கொண்டிருந்த போதெல்லாம் தயாரிப்பாளரில் தொடங்கி தியேட்டர் வாசலில் கடலை விற்றுக் கொண்டிருந்தவர்கள் வரை சந்தோஷமாகதான் இருந்தார்கள். ‘படைப்பு’, ‘படைப்பாளி’ என்று எப்போது கெத்து கூட்ட ஆரம்பித்தார்களோ, அன்று பிடித்தது ஏழரை நாட்டு சனி. இன்றுவரை தொடர்கிறது.

இறுதிக்காட்சியில் பாபிசிம்ஹாவை விஜய்சேதுபதி கொல்கிறார். விஜய்சேதிபதியை எஸ்.ஜே.சூர்யா கொல்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ரசிகர்களை கொன்றுவிட்டார்.

‘இறைவி’ முடிந்ததும் நல்ல மழையில் நனைந்தேன். ஆண்கள், நனைய விரும்புவதுமில்லை. மழையில் நனைய அச்சப்படுவதுமில்லை.

11 கருத்துகள்:

  1. நல்ல விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா7:38 PM, ஜூன் 08, 2016

    இறைவி - ஏன் பார்க்க கூடாது , 11 காரணங்கள்
    1. படம் ஆரம்பத்தில் இருந்து , இறுதி வரை யாரோ ஒருவர் நைநைன்னு அழுதுகிட்டே இருக்காங்க , அவனவன் கவலைய மறந்து பொழுது போக்க படத்துக்கு வரான்.. இப்படி இருந்தா எப்படி ?
    2. படம் முழுதும் ஒரு இறுக்கமான சூழ்நிலையே இருக்கு , மனழுத்தம் தரப்போவது உறுதி, ஆசுவாசத்திக்கு நேரமே இல்ல.

    3.அம்மி கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போல் உள்ளது திரைக்கதை
    4. Again All mens are same category Movie
    5. இதை தான் பெண்ணியம் போற்றும் படம்ன்னு சொன்னாங்களா ??? அப்போ , அவள் ஒரு தொடர்கதை , மனதில் உறுதி வேண்டும் , புதுமை பெண் இதெல்லாம் ??
    6. படத்தோட basic point ரொம்ப வீக்கா இருக்கு.. தன் படம் வெளிய வராதுன்னாலே தான் இவ்ளோ பிரச்சனையும், ஆனா ப்ராக்டிலா அப்படி இருக்க மாட்டங்க..புது படம் ஸ்டார்ட் பண்ணத்தான் ட்ரை பண்ணுவாங்க
    7. சரி, அதுக்கு S J சூர்யா சொல்ற வசனம் கேக்க நல்ல இருக்கு , பட் கண்வீன்சிங்கா இல்ல
    8. சரி, படத்தோட அடித்தளம் என்ன ? என் அறிவுக்கு இது தான் தோனுச்சு , புருஷன் சரி இல்லன்னா , விவாகரத்து பண்ணிட்டு, பெண்கள் சுதந்தரிமா புது வாழ்க்கை வாழனும். 100 % agreed .. பட் இது 1950ல 1960ல வர வேண்டிய படம். இக்காலத்து பெண்கள் அப்படி தான் இருக்காங்க.. எவ்ளோ விவாகரத்து கேசு நீதிமன்றம்ல இருக்குன்னு பாத்தாலே இது தெரியும்
    9. சரி, கிராமத்துல இன்னமும் பெண்கள் அப்படி தான் அடிமையா இருக்காங்கன்னு சொல்றிங்களா ? agreed . அதே அளவுக்கு ஆண்களும் பெண்களால மன உளைச்சளுக்கு ஆளாகி குடும்பம் பிரியகூடாதுன்னு சகிச்சிட்டு வாழறவங்களுக்கு இருக்காங்களேன்.. அந்த வகைல பொண்ணுங்க எல்லாருமே அப்படி தான் முடிவு பண்ண முடியுமா ??
    10. இந்த படத்த பத்தி ஏன் இவ்ளோ பேசுறனா ? இது ஒரு கமரிசியல் குப்பைன்னு ஒதுக்க முடியாது.. பெண்ணியம் பற்றி பேசும் படம்ன்னு சொல்றாங்க.. பட் பெண்ணியம் பத்தின அரைவேக்காட்டு தனமான பதிவு, infact பெண்ணியம் பத்தி பேசவே இல்ல
    11. மொத்தத்தில் , பாலச்சந்தர் , பாலு மகேந்திர மாதிரி ஒரு படைப்பு கொடுக்க ஆசைபட்டு , கார்த்திக் சுப்புராஜ் மொக்க வாங்கின படம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! காப்பாத்திட்டீங்க !!
      உலக சினிமா,மசுரு சினிமான்னு உசுர வாங்க
      நெறைய பேரு கெளம்பிட்டானுங்க.
      பாலா,பிரபு சாலமன் போன்ற மன நோயாளிகளின்
      படங்கள் தட்டு தடுமாறி ஓடி விடுவது இந்த
      பன்னாடைகளுக்கு உந்துதல் என்றே
      நினைக்க வேண்டியுள்ளது.
      (கார்த்திக் சுப்பராஜ் இந்த லிஸ்டுல
      ஐயோ பாவம்)

      நீக்கு
  3. உங்கள் பதிவை எதிர்பார்த்துக்காத்திருந்தேன். மகிழ்ச்சி.

    //சினிமாவை சினிமா என்ற அழைத்த காலத்தில்...// செம்ம..!

    பதிலளிநீக்கு
  4. இந்த படம் நான் இன்னும் பாக்கலை, அதனால கருத்து சொல்ல முடியாது, ஆனா நீங்க தெலுகு படம் மட்டும் பாக்குறது உங்க உடம்புக்கும் மனசுக்கும் நல்லது.

    பதிலளிநீக்கு
  5. This is best and honest review till now.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா5:07 PM, ஜூன் 09, 2016

    இந்த படம் disturbed me. ஆண்களது knee jerk reaction for situations எப்படி அவர்களைச் சார்ந்திருக்கும் பெண்களை பாதிக்கிறது என்ற கோணத்தைச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். எல்லா ஆண்களும் இப்படி என்று brand செய்ததாகத் தெரியவில்லை (of course அந்த நெடில் குறில் வசனம் is a reflection of the character based on his experiences). எவ்வளவு பாடல்கள் காதலை ஏற்காத பெண்களைப் பற்றி அடிடா அவள ரேஞ்சில் எழுதப்படுகிறது. காதலுக்கு உண்மையாக இருந்த பெண்கள் பலர் இந்த சமூகத்தில் இல்லையா என்ன...

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா5:20 PM, ஜூன் 09, 2016

    Thank God.. You have not reviewed this film like you were there in the septic tank with your hands and legs tied..I have not seen this movie So I can not comment on your review. But any comments on Arivazhagan's review on Iraivi?

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா9:39 PM, ஜூன் 09, 2016

    அருமை. pizza படத்தை பார்த்து வியந்த நான், இந்த படத்தை பார்த்து நொந்து நூடல்ஸ் ஆனேன். எரிச்சலை கொடுக்கும் படம்.

    பதிலளிநீக்கு
  9. நம்
    நாட்டிலும் ஒரு இயக்குனர இருக்கிறார். என்பதை அடையாளப்படுத்திய படம் இது.இன்னுமா ஆடைய கட்டினு ஆடி.வசனம் பேசி.அப்பாடா.மணிதனே ஒரு மாறுபட்ட படைப்புதான்.அதில் இவன் மட்டும்ந்தான் மக்களுக்கு மாறுபட்ட படைப்பை கொடுக்க முன்வந்துள்ளான்.

    பதிலளிநீக்கு