11 டிசம்பர், 2012

அழியப் போகிறதா உலகம்?


கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? ஜாதகம், பெயர்ராசி எல்லாம் பார்க்காமல், வத்தலோ தொத்தலோ கிடைத்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள்.

யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள். ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஸ்டாக் மார்க்கெட், பொருளாதார மந்தம், வேலை இழப்பு, இடைத்தேர்தல், மின்னணு இயந்திரம் குளறுபடி, ஜெயலலிதா, கொடைநாடு, கலைஞர் கடிதம், பெட்ரோல் விலை உயர்வு, துவரம்பருப்பு விலை உயர்வு, தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு, எண்கவுண்டர், ஈழம், அல்குவைதா, அமெரிக்கா, கியூபா, எதிர்வீட்டு பிகர், பக்கத்து வீட்டு நாய்க்குட்டி, தெருமுனை பிள்ளையார் கோயில், 23சி பஸ், லேடீஸ் காலேஜ், பார்க், பீச், இத்யாதி.. இத்யாதி பிரச்சினைகள், மகிழ்ச்சிகள், கோபங்கள் எல்லா கருமத்தையும், கந்தாயத்தையும் மறந்துடுங்க. வாழும் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளுங்கள்.

ஏனெனில், உங்களுக்கு இன்னமும் இருப்பது இரண்டேகால் வருடம் மட்டுமே. 2012 டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது. இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில்.

மாயா என்றால் நமீதா நடிக்கும் கிளுகிளு படம் மட்டுமல்ல. மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

மாயர்களைப் போலவே உலகில் வாழ்ந்த பல இனத்தவர்களுக்கும் பிரத்யேக காலண்டர்கள் இருக்கிறது. அந்த காலண்டர்களும் கூட உலகம் அழியப்போவதாகவே பயமுறுத்துகிறது. என்ன ஆண்டுதான் கொஞ்சம் முன்னே, பின்னே 2011, 2013 என்று மாறியிருக்கிறது.

உண்மையில் 2012ல் என்னதான் நடக்கப் போகிறது?

எதிர்காலம் குறித்து சீட்டுக்கட்டிலிருந்து கிளி எடுத்துப்போடும் சீட்டை வைத்து சொல்லப்படும் பலன்களை நீங்கள் நம்புகிறீர்களா? இரத்தமும், சதையும், எலும்பும், மூளையும், சிந்தனைகளுமாய் வளர்ந்த உங்களின் எதிர்காலம் ஒரே ஒரு நெல்லுக்காக கிளி அவசரமாக எடுத்துப்போடும் சீட்டில்தான் இருக்கிறதா என்ன? கிளிஜோசியரின் கிளி மாதிரி தான் ஆளாளுக்கு புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள். நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து சரியாக பத்து வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?

உலகம் தோன்றியதிலிருந்தே உலகின் கடைசிநாளான ஜட்ஜ்மெண்ட் டே பற்றி பேசிக்கொண்டே தானிருக்கிறார்கள். உண்மையில் இன்று நம் பூமிக்கு அச்சுறுத்தலாக இருப்பது புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்). மனிதர்களுக்கு மூளை வீங்கிப்போய் அறிவியலில் அக்குவேறு, ஆணிவேறாக அலசி, எக்குத்தப்பாக கண்டுபிடித்து தொலைத்த கண்டுபிடிப்புகள், நவீன வசதிகள் தான் (குறிப்பாக வாயுமண்டலம் மாசடைவதற்கு காரணமான தொழிற்சாலைகள், ஏசி இயந்திரங்கள்) மனிதகுலத்துக்கு வினையாக தோன்றியிருக்கிறது.

நாம் எப்போது அழிவோம், எப்படி அழிவோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அழியவேண்டிய நேரத்தில் நிச்சயமாக அழிவோம். அது நிச்சயமாக இப்போது அல்ல. ஆகையால் இப்போதைக்கு உலகம் அழிவதைப் பற்றிய பழைய கணிப்புகளை வாசிக்காமல், ப்ரீயாக விடுவதே நம் மனநிம்மதிக்கு உத்தரவாதம் தரும் செயலாக இருக்க முடியும்.

2012 டிசம்பர் மாதம் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் முடிவடையும் என்று ஒக்கேனக்கல் செயல்பாட்டு கால அட்டவணைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திட்டம் முடிவடைந்தாலும் சரி, முடிவடையா விட்டாலும் சரி. ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறித்த புலனாய்வுக் கட்டுரை ஒன்றினை 2013 ஜனவரி மாத குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்களும், நானும் படித்துக் கொண்டிருக்கப்போவது மட்டும் உறுதி.

(குமுதம் ரிப்போர்ட்டர், 08-08-2009)

60 கருத்துகள்:

  1. குறிப்பிட்ட சில பத்திகள் இரண்டு முறை வருகின்றன. பூம் பூம். பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  2. Interesting post and nice ending.

    துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

    ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறி சீரும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிகள் மனிதக்குலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த அழிவுகளையே உறுதி செய்கிறது. //

    இது மட்டும் இரு முறை ரிப்பீட்டாகியுள்ளது. கவனியுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. சரி பண்ணிட்டேன் ரவி & விக்னேஷ்வரி!

    பதிலளிநீக்கு
  4. :)

    கூண்டோடு சிவனின் கைலாசமா...விஷ்ணுவின் வைகுண்டமா...ஏசு சொல்லிய பரலோகமா....நபி சொல்லிய சுவனமா ?

    எங்கே செல்லும் எந்தன் பாதை.......யாரோ யார் சொல்லுவாரோ !

    பதிலளிநீக்கு
  5. சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.//
    இப்போ என் முறை..

    இந்த பத்தி இருமுறை இருமூறை வந்து இருக்கு...கொஞ்சம் கவனிங்க...

    பதிலளிநீக்கு
  6. //சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.
    //

    this is also repeated twice.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ஸ்ஸ்.. யப்பா...

    மதிபாலா & ராஜன்!

    நீக்கிவிட்டேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  8. உலகம் அழியுமா இல்லையா என்பதில் சந்தேகம் இல்லை... ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் முடிந்திருக்குமா என்பது சந்தேகம் தான்...

    பதிலளிநீக்கு
  9. மன்னிக்கவும். என்னால் தற்போது இதைப் பற்றி மிக விளக்கமாக தட்டச்சு செய்து விளக்க இயலாத நிலை. ஆகவே கீழ்க்கண்ட சுட்டிகளில் உள்ள தகவல்களையும் அதன் பின்னூட்டங்களையும் படித்தால் அனைவருக்கும் கொஞ்சமாவது இது பற்றி 'விஞ்ஞான ரீதியாக' விளங்க வாய்ப்பு அதிகம்.


    1. பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ? (Earth’s Magnetic Pole Reversal)
    http://jayabarathan.wordpress.com/2009/06/05/katturai-59/

    2. பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள். (The Deadly Magnetars)
    http://jayabarathan.wordpress.com/2009/05/14/katturai-58/

    முடிவாக சொல்லப் போனால் இந்த விஷயத்தில் நவீன விஞ்ஞானத்தால் ஒன்றும் செய்ய இயலாது. அது தான் உண்மை. 'The Force" நாடினால் மீண்டும் இது பற்றி விவாதிப்போம். நன்றி. வணக்கம்.


    with care & love,
    Muhammad Ismail .H, PHD,

    பதிலளிநீக்கு
  10. 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம்.//

    தோழர் ஏதும் யாரையாவது கரெக்ட் செஞ்சு ஒரு 5 நாள் தள்ளி போட முடியுமா? ஏன்னா 17ஆம் தேதி கடைசியா ஒரு தபா பிறந்தநாள் கொண்டாடிவிடலாம் பாருங்க:)

    பதிலளிநீக்கு
  11. ohhh....

    atleast we can leave yuvakrishna blog from 13th Dec 2012.. :D


    stupid always be stupid

    பதிலளிநீக்கு
  12. எவ்வளவோ பாத்துட்டோம்.. இதப் பார்க்கமாட்டோமா தல..

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா12:00 AM, ஆகஸ்ட் 06, 2009

    யுவா,

    வரும் நவெம்பரில் (2009) வெளியாக இருக்கும் ஹாலிவுட் திரை 2012
    படம்
    இதை பற்றிய கதைதான். அதன் முன்னோட்டம்
    இங்கு காணலலம்.


    http://www.youtube.com/watch?v=SRCJDDJnE-g

    or
    "2012 Trailer- Apocalypse Mayan Calendar" Youtubeil என்று
    தேடவும்



    நன்றி
    அருண்

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா12:19 AM, ஆகஸ்ட் 06, 2009

    ஏண்ணே
    2011 முதல்வரோட மாயிக்கும், உசிலம்பட்டி மலையாண்டி (or) கண்ணணில் படம் பார்க்கும் மொக்க மாயிக்கும் இந்த மாயங்களுக்கும் தொன்மையான வரலாற்று புரிந்துணர்வு இருக்குது, மொக்கமாயிங்கதான் மூத்தகுடி ன்னு (அய்யோ விருமாண்டி ஜீன் வேற ஞாபகம் வருது) ஏதாவது கொளுத்திப் போடமுடியுமாண்ணே..

    பதிலளிநீக்கு
  15. மேலே இருக்கும் பின்னூட்டம் ராஜேஷ் போட்டதா? :-)

    பதிலளிநீக்கு
  16. அழியாதுன்னு எனக்கு நல்லா தெரியும்....எனக்கு இன்னும் எழுவது வருஷம் ஆயுசு இருக்குன்னு கோழிப்பட்டி சோசியரு சோழிப் போட்டு சொல்லிருக்காரு....அவரு வாக்கு பலிக்காம போவுமா?

    பதிலளிநீக்கு
  17. அட டிசம்பர் 12, நம்ம தலைவர் பிறந்தநாள்.....

    பதிலளிநீக்கு
  18. தோழர் உங்கள் பதிவை என் பதிவிற்கு மேற்கோல் எடுத்துக் கொண்டேன். டென்கியூ

    பதிலளிநீக்கு
  19. ஆரம்பிச்சுட்டாங்கய்யா.....ஆரம்பிச்சுட்டாங்கய்யா.....

    பதிலளிநீக்கு
  20. அதுக்குள்ளே ஒரு தபா...பா..... நம்ம சேர்ந்துக்கலாமா.........

    பதிலளிநீக்கு
  21. 2012 ல உலகம் அழியப்போகுதோ இல்லையோ!
    வந்துருக்குற பன்றி காய்ச்சலில் மருதில்லாம எல்லோரும் போயிருவோம் போல!

    பதிலளிநீக்கு
  22. யுவா,

    குமுதம் ரிப்போர்ட்டர்ல நீங்க எழுதுனதா?

    பதிலளிநீக்கு
  23. அட 2012ல உலக அழிஞ்சுருமா???? அடப்பாவிகளா, அப்ப விஜயகாந்த், விஜய், சரத்குமார், விஜய டி.ராஜேந்தர் எல்லாம் சி.எம் ஆகுறது எப்போ???

    பதிலளிநீக்கு
  24. hi luckylook,
    mayan prophecies are based on cycles. that is 2012 is a beginning of new cycle. not the end of the world. see research people websites. not anonymous websites. anybody can write anything on websites. donot believe these things

    பதிலளிநீக்கு
  25. யுவ கிருஷ்ணா, இந்த பதிவை நான் படித்தது எதேச்சையாகத்தான், சில உண்மைகளை விளக்க மனிதனால் ஆதாரங்களை கொடுக்க முடியாது, அதிலும் நீங்கள் எழுதியிருக்கும் வானமண்டலத்திலுள்ள கிரகங்களையோ அதன் விவரங்களை அறிவதோ அத்தனை எளிதல்ல என்பது எல்லோரும் அறிந்தது, நீங்கள் குறிப்பிட்டிருப்பதுப் போல அதைப் பற்றி நாம் கவலைப்படுவதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லைதான், ஆனால் அழியப்போவது உண்மை என்பதையும் நீங்கள் குறிப்பிடாமலில்லை.

    பதிலளிநீக்கு
  26. எப்படி தொடங்க வேண்டும்? தொடர்ந்ததை எதனுடன் தொடர்பு படுத்தி முடிக்க வேண்டும்? ஊடான புகைப்பட பொக்கிஷம். கற்றுக்கொள்வதை பெற்றுக்கொள்கிறேன்.


    தேவியர் இல்லம். திருப்பூர்.

    பதிலளிநீக்கு
  27. என்ன இது? டெம்ப்ளேட்ல ஒரே பத்ரி வாசனை அடிக்குதே.

    பதிலளிநீக்கு
  28. Ethai koncham padichu parungo...

    Unmai vilangum!!!

    Ethai endu kekrireerkala?

    Ungalaiya padichu...Purinchu Kolungo!!!

    Nantri
    Jacob Thambi -

    பதிலளிநீக்கு
  29. I have not read here the full post. But i have read in Kumudam websiter, where some where you have written that in 1999 lot of males did gang rapes, raped so many women etc.

    But Like that nothing was happened. so do not wrong/false history please.

    பதிலளிநீக்கு
  30. ராம்ஜீயாக டீசண்ட் ஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் குப்பன்!

    தயவுசெய்து படித்துவிட்டு பின்னூட்டம் போடுங்கள். வெப்சைட்டிலும் தப்பாக தான் படித்துத் தொலைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது :-)

    பதிலளிநீக்கு
  31. Now i have seen in your post too. You have mentioned that in 1999 lot of rapes happened in agri fields and gardens.

    I have not heard any such cases in Tamilnadu.

    பதிலளிநீக்கு
  32. உலகம் அழியும் ஆனால் முழுமையாக அல்ல , சிறு பகுதிகள் மட்டும் தான். சுனாமி, பூபங்கம் எல்லாம் அதான் வெளிப்பாடுகாள்.

    பதிலளிநீக்கு
  33. eppadiyo thalaivar birthday kondadidalaam.............

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா3:56 PM, ஆகஸ்ட் 28, 2009

    eppadiyo thalaivar birthday kondadidalaam.

    பதிலளிநீக்கு
  35. //eppadiyo thalaivar birthday kondadidalaam.//

    இதுவும் ரெண்டு தடவ வருது. :)

    பதிலளிநீக்கு
  36. கொத்து கொத்தாய் மரணம் மொத்த மொத்தமாய் பிணம் இது மாசி 13 முதல் பங்குனி 30வரை வருடம் 2011ல் பொருந்தும். சனி 12 ராசிகளுக்கும் 8ம்மிடத்தோடும், 12மிடத்தோடும் தொடர்பு கொள்கிறது. இதனால உலகின் ஏதோ ஒரு பகுதியில் அழிவிருக்கும் என்று நம்பப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா4:48 PM, மார்ச் 14, 2011

    மறுபடியும் கொத்து கொத்தாய் மரணம் மொத்த மொத்தமாய் பிணம். காரணம் சித்திரை 4முதல் சித்திரை 18 வரை வருடம் 2011ல் குரு கிரகத்துடன் சேர்க்கையாகும் பிற கிரகங்கள் உணர்த்துகின்றது. இது அணுக்கதிர்வீச்சு மரணமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  38. all said it is 21, december, 2012

    பதிலளிநீக்கு
  39. //eppadiyo thalaivar birthday kondadidalaam.//

    எந்த புரட்ச்சிக்கு தலைமை தாங்கியவருங்கோ.

    சென்டர் வாவ விட சைடு வாவுதான் மச்சி உனக்கு நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  40. என்ன யுவா... போட்டோல்லாம் மாத்திட்டீங்க போல சொல்லவேயில்ல...

    பதிலளிநீக்கு
  41. தளபதி ரஜினி போட்டோ

    எங்கய்யா காணோம் ?

    பதிலளிநீக்கு
  42. ஆதிரப்படமாட்டேன்னு சொன்னா மட்டும் போதாது, போட்டோக்கு போஸ் குடுக்கும்போதும் அதே மாதிரி இருக்கணும். யாரையோ அடிக்க கிளம்புறப்ப தெரியாம யாரோ போட்டோ புடிச்ச மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  43. ரொம்ப நல்லது.. சந்தோசம்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    பதிலளிநீக்கு
  44. My dear yuva change ur image previous was good this images looking little rough

    பதிலளிநீக்கு
  45. சிங்கை ஜெயராமன்7:16 AM, டிசம்பர் 24, 2011

    யுவா கட்டுரை நல்ல இர்ருந்தது. இந்த கலாச்சாரம் மாயா அல்ல மாயன் கலாச்சாரம். உலகம் அழியும் கருத்து அவர்களிடமே விட்டு விட்டு நாம் என்ன நடக்கிறது தென்று பார்க்க வேண்டியது தான். எப்படி ஆங்கில அரசு இந்திய கலாசாரத்தை அளிக்க முயற்சி எடுத்ததோ அதே போல ஸ்பெயின் அரசு மெக்ஸிகோ மீது படையெடுத்து வஞ்சகமாக அழித்தார்கள். அது கொலம்பஸ் புதிய உலகம் கண்டு பிடித்த பிறகு. நியாபகம் இருக்கிறதா 7 , 8 ஆம் வகுப்பு வரலாறு. கொலம்பஸ் ஸ்பெயின் ராணியிடம் பணம் பெற்று தன இந்தியாவிற்கு வழி கண்டு பிடிக்கிறேன் என்று புறப்பட்டார். இந்தியாவில் நமக்கு இதை பற்றி வரலாற்றில் படிபதில்லை அதனால் நாம் நினைத்து கொள்கிறோம் இவர்களை பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று. மெல் கிப்சன் படம் Apocalypse பார்த்தீர்கள் என்றால் நன்றாக புரியும். மெக்ஸிகோ கொடியுள் உள்ள உருவங்கள் மாயன் கலாசாரத்தை குறிப்பவையே. வாய்பு கிடைத்தால் மெக்ஸிகோ நாட்டு வரலாற்றை படியுங்கள். மிக சுவரச்யமாக் இருக்கும். தென் அமெரிக்க நாடுகளின் வரலாற்றை நாம் மேலோட்டமாக படித்து விடுகிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  46. சரியா பாக்கச்சொல்லுங்க, 2022 ஆ இருக்கப்போகுது, என்ன போனசா?
    ஆமா நம்ம வேலையே அதுதானே!

    பதிலளிநீக்கு
  47. just few hours to go! (6.50 p.m. 11/12/2012)

    i'm waiting!....................

    பதிலளிநீக்கு
  48. வாழும் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  49. Please visit
    தேவையா இந்த ஆர்பாட்டங்கள்!
    http://nidurseasons.blogspot.in/2012/12/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  50. வத்தலுக்கும் தொத்தலுக்கும் கூட இப்ப ஏகப்பட்ட கிராக்கி!!!

    பதிலளிநீக்கு
  51. Yuva, nothing happened today.....:-)


    பதிலளிநீக்கு
  52. உலகம் எல்லாம் அழிஞ்சு போகல .சீக்கிரம் வீட்டை விட்டு வெளிய வாங்க

    பதிலளிநீக்கு
  53. Breaking News: Endof the World, which was scheduled for 2012 has been postponed to 3012 due to some technical problems! Please cooperate and contunue living withour any regrets.....

    பதிலளிநீக்கு