27 டிசம்பர், 2012
நீதானே என் பொன்வசந்தம்
யானை விழுந்தால் எழ முடியாது என்பார்கள். ஒருவேளை எழுந்துவிட்டால் முன்பைவிட கம்பீரமாக நடக்கும். நடுநிசிநாய்களில் விழுந்த கவுதம் நீ.எ.பொ.வில், ராஜாவின் தோளில் கைபோட்டு கம்பீரமாக எழுந்து நின்றிருக்கிறார். கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளில் வந்த அத்தனை காதல் படங்களின் உணர்வுகளையும் ஒரே படத்தில் மொத்தமாக கொட்டித் தந்திருக்கிறார். உருகி, மருகி காதலித்த ஒருவராலேயே இம்மாதிரி படமெடுக்க முடியும். கவுதம் நல்ல காதலன். கொஞ்சம் விட்டாலும் ‘குஷி’யாகி விடக்கூடிய ஸ்க்ரிப்ட்டை லாகவமாகக் கையாண்டிருக்கும் கவுதமின் சாமர்த்தியத்தை எப்படி மெச்சுவதென்றே தெரியவில்லை. லைக் யூ கவுதம்.
‘நீதானே என் பொன் வசந்தம்’ உங்களுக்கு பிடிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட சில தகுதிகளில் ஏதேனும் ஒன்றேனும் இருக்க வேண்டும்.
• நீங்கள் ஆணாக இருக்க வேண்டும். அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்.
• உங்களுக்கு பார்ப்பதிலோ, கேட்பதிலோ பிரச்சினை இருக்கக்கூடாது.
• குறைந்தபட்சம் ஒரே ஒரு முறையாவது ஒருதலையாகவாவது காதலித்திருக்க வேண்டும்.
• காதலி/காதலன் திருமண ரிசப்ஷனுக்கு தெரியாத்தனமாகப் போய், மனம் நொந்து விடிய விடிய சரக்கடித்து மட்டையாகி இருக்க வேண்டும்.
இதெல்லாம் இல்லாமலேயே கூட பிடிக்கலாம். காதலைப் பிடிக்குமென்றால்...
வருணும், நித்யாவும் மட்டுமே வாழும் ஓர் உலகம். அந்த உலகத்துக்குள் அவர்களுக்கு தெரியாமல் உங்களால் பார்வையாளராக பிரவேசிக்க முடிந்துவிட்டால் போதும். நீ.எ.பொ. ராஜபோதை கொடுக்கும். பின்னணிக்கு ராஜா. போதாதா?
ஐந்தரை நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டாக நீளும் இண்டர்வெல் ப்ளாக் தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மகத்தான சாதனைகளில் ஒன்று. இவ்வாண்டின் சிறந்த நடிகை சமந்தா என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஒரே ஷாட் என்றாலும் குளோசப், மிட், லாங் என்று கேமிராமேன் நிகழ்த்தியிருக்கும் மேஜிக்கை உணரமுடியாதவர்கள் சினிமா பார்ப்பதே வீண்.
இசை ஒரு படத்தை எந்தளவுக்கு உச்சத்துக்கு கொண்டுச் செல்லும் என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம். காதலும், இசையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இதை உணர்ந்ததால்தான் கவுதம் ராஜாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். இருபது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் சிலிர்க்கவைக்ககூடிய இசையை இளையராஜா அள்ளித் தெளித்திருக்கிறார். ராஜா இன்றி இப்படம் சாத்தியமாகியிருக்க வாய்ப்பேயில்லை.
சகலகலா வல்லவன், மன்னன் என்று ஆணாதிக்க மனோபாவமாய் ரசித்து வளர்ந்தவர்களுக்கு நாயகன், நாயகி இருவரையும் ஸ்க்ரிப்ட்டில் பேலன்ஸ் செய்து, கழைக்கூத்தாடியாய் கயிற்றில் நடந்திருக்கும் ‘நீ.எ.பொ.’ மாதிரி சப்ஜெக்டுகளை உடனடியாக ஏற்றுக் கொள்வதில் தயக்கமிருப்பது இயல்புதான். பெண் பார்வையில் காதலை சொன்ன ‘பூ’வுக்கு நேர்ந்த கதிதான் நமக்கு ஏற்கனவே தெரியுமே?
ஆனாலும், ஐஸ்ப்ரேக்கர் என்கிறவகையில் இது முக்கியமான படம். அனுபவ நிகழ்வுகளை அப்பட்டமாக, கொஞ்சம் கூடுதல் புத்திசாலித்தனத்தோடு திரைக்குக் கொண்டுவந்திருக்கும் பரிசோதனை முயற்சி. பின்னால் வருபவர்கள் இதை பின்பற்றி நிச்சயம் சிகரமேறுவார்கள்.
வெர்டிக்ட் : சான்ஸே இல்லை மச்சான். சச் எ வொண்டர்ஃபுல் மூவி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்த படத்தை பொருத்தவரையில் இரண்டே இரண்டு விஷயங்கள்தான்.
பதிலளிநீக்குகாதலிக்கும் அளவிற்கு பிடிக்கும்.
கடுப்பேற்றும் அளவிற்கு வெறுக்க வைக்கும்.
முதல் வகை ரசிகர்களுக்கு இன்னமும் நமது ஒட்டு மொத்த தமிழ் சினிமா சூழல் தயாராகவில்லை என்றே இதன் ரிசல்ட்டை பார்க்கும்போது தெரிகின்றது.
நல்ல விமர்சனம்.
பதிலளிநீக்குஹீரோவின் பேரு வருண்-நு ஞாபகம்.. :)
y...ur review always differ from other bloggers...billa 2 also..
பதிலளிநீக்குvarun...nt tharun...
பதிலளிநீக்குI agree with you.
பதிலளிநீக்குits true
பதிலளிநீக்குமொக்கை படத்துக்கு சக்கையாய் ஒரு விமர்சனம்
பதிலளிநீக்குபிணத்துக்கு அலங்காரம்.....
பதிலளிநீக்குBy---Maakkaan.
Yuva, same ditto feelings, see if you can write 1 more article on this movie wrt Samantha's expression, reactions.
பதிலளிநீக்குசரி வுடுங்க பாஸ்,
பதிலளிநீக்குபடம்தான் மொக்கை..
விமர்சனமாவது நல்லார்ந்துச்சேன்னு சந்தோஷப்பட்டுக்கலாம்.
நானாவது டி.வி.டில பார்த்தேன். அதுனால அப்பப்ப படத்த ஓட்டிவிட்டுட்டு பாட்டு பாக்க முடிஞ்சுது. பய புள்ளங்க தியேட்டருல போயி எம்புட்டு கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நெனச்சா கண்ணுல தண்ணிதான் வருது....
நல்லாருங்க உடன்பிறப்பே...
அனேகமாக நீங்களும் சுரேஷ் கண்ணனும் தான் பாராட்டி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குயுவா... சூப்பர்...
பதிலளிநீக்குநச்சுன்னு விமர்சனம்... ரொம்ப சந்தோசமா இருக்குது....
யெஸ்...
காதல்.... இனிமையின் இமயம்... மனித உணர்வுகளிலே ஒரு உச்சம்....
என்ன, இந்த ஒரு அற்புத உணர்வு.... காதலின் உயர்வு சிந்தனை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை...
ஏனெனில் காதல் என்பது... யசகு பிசகானது....
உலகம் கூட பிசகானது என பிழையாகத்தான் சொல்கிறது...
காதல் ஒரு காக்டெயில்.. மரியாதை, அக்கரை, அபரிமிதம், அவரை தவிர வேறொன்றுமில்லை....... இப்படி... ஒரு ரகளையான கலவை....
காதல் சரிவர புடிபடாமல், புரியப்படாமல்... இருப்பதே நிசர்சனம்... அதனால் தான் காதலர்களும் காதல் எதிர்ப்பாளர்களும் காதலுக்கு கல்லறை கட்டுகிறார்கள்...
இன்று இன்னொரு இம்சை...
ஆம்.... இங்கு காமத்திலிருப்பவர்கள், இச்சை கொள்பவர்கள், ஈகோ தலை தூக்குபவர்கள், எதையோ சாதித்தேன் என நண்பர்களிடன் சொல்லி பெருமை பேசுவோர்கள் எல்லாம் தங்கள் உட்டாலங்கடியை... காதல் என நாமகரணம் செய்து கொள்கிறார்கள்...
அதனால் தான் காதல் சரிவர புரிந்து கொள்ளப்படுவது இல்லை...
காதல் அது உள்ளத்தின் குத்தாட்டம்.. உணர்வுகளின் கொச கொச ஆட்டம்...
இடைவேளை விடும் ஒரு காட்சி... அந்த ஐந்தரை நிமிடங்கள் சொன்னீர்களே.... அது என்ன...
காதலிக்கும் போது... சில கணங்களில்.. கண் மண் தெரியாமல்... நம் கடமைகள் கூட மறந்து... அப்படியே அதில் விழுந்து கிடப்போம்... 24 மணி நேரமும் அதே நினைப்பு... அதே உணர்வு...
அப்போது ஒரு கில்ட் கூட வரும்... ஐய்யய்யோ நான் செய்வது தவறோ... இத்தனை ஆர்வம் கூடாதோ... கொஞ்சம் குறைச்சுக்கணுமோ என்று...
அந்த உணர்வை நயமாக திரையில் கொண்டு வந்தார் என்றே சொல்ல வேண்டும்....
ம்.... இந்த படத்தை ஒன்றி பார்த்தவர்களுக்கு ஒரு பரவச அனுபவம் வருவதை தவிர்க்க முடியாது...
படம் ஒருவருக்கி பிடிக்கும் பிடிக்காது என்பது பொருட்டில்லை. ஆனால் பிடிக்காதவங்க்க்ள ஓட்றது இருக்கே. :)))
பதிலளிநீக்குநடத்துங்க பாஸ். லீலைக்கு பிறகு உங்களுக்குபிடித்த இன்னொரு ரொமான்ட்டிக்மூவியாக இது அமைந்ததில் எனக்கு சந்தோஷம் தான்:)
படம் மரண மொக்கை.
பதிலளிநீக்கு//ஆணாதிக்க மனோபாவமாய் ரசித்து வளர்ந்தவர்களுக்கு // இதுதான் இந்த விமர்சனத்திலேயே செமை காமெடி.
படத்தில் உள்ள காட்சிகளை வைத்து ஹீரோ தன் காதலியிடம் ஆணாதிக்க மனோபாவத்தோடு கேவலமாக நடந்துகொள்கிறான் என்று வேண்டுமானால் புரிந்துகொள்ளலாம். இந்த அழகில் படம் பிடிக்காதவர்கள் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களாம். :-))))
தண்ணிய கிண்ணிய போட்டுட்டு படத்துக்கு போனீரா? அந்தப் பழக்கம் உமக்கு கிடையாதே!
I liked the movie as well. It was Gautam's antics during the audio release that was repulsive and as a result i didn't like the songs. Now, after listening many times, the songs are really good and the movie itself is pretty good.
பதிலளிநீக்குintha padatha paakrathukku, kannum kaathum venumnu solla marathuteenga le Yuva...
பதிலளிநீக்குBTW Hero peru tharun illa Varun...
no super film, super review, no super feeling. i vijay fan.film not good like sura, villu, vettaikaran etc.. you get love feelings only when you closely watch vijay. i love vijay.. he is the next super star and lover boy. next to sivaji ganesan
பதிலளிநீக்குகலக்குறிங்க.
பதிலளிநீக்குநீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!
பதிலளிநீக்குhttp://arulgreen.blogspot.com/2012/12/Neethaane-En-Ponvasantham.html
Icebreaker? you meant pathbreaker maybe?
பதிலளிநீக்குகெளதம் மேனர் படமாச்சா, அதான் இங்கிலீசு கொஸ்டின் வந்துருச்சு :)
நல்லது நன்றிங்க...
பதிலளிநீக்குஇன்னும் படம் பார்க்கவில்லை...
பார்க்கிறேன்..
நல்ல விமர்சனம்....
பதிலளிநீக்குநச் சுன்னு ரெண்டுவரியில சொல்லிபுட்டிங்க நன்றி கிங் விஸ்வா! :)
நான் இரண்டாம் ரகம்.
படத்துல பாட்டு வைங்கடான... பாட்டுல படத்த வைசுருக்கானுங்க.
NEP - தூர்தர்ஷனில் வில்லுபாட்டு பார்க்கற மாதிரியே
The Shawshank Redemption - படம் வந்த போது நொந்து போற அளவுக்கு அடி விழுந்துச்சு. இப்ப இது தான் டாப் படம்னு கொண்டாடுறாங்க.
பதிலளிநீக்குஅதே நிலைதான் இந்த படத்திற்கும். இரண்டு Extreme ஆன விமர்சனங்கள் வருவதில் இருந்தே.. படம் ஒரு க்ளாசிக் ஆகிவிடும் இன்னும் சில வருடங்கள் கழித்து.
காதலிக்க நேரமில்லை படம் வந்தபோது மொக்கைப்படம் என்று பார்க்க தடை போட்ட காலம் இருந்தது...
நேர்மையான விமர்சனம்.நீண்ட நாளுக்குப் பின் நல்ல காதல் படம் பார்த்த உணர்வு.
பதிலளிநீக்குஇப்போதுதான் இப்படத்தை பார்த்தேன். அற்புதமான படம். ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனம் படித்து விட்டு போனதால் ஒரு 10 நிமிடத்திற்கு படத்தில் ஒட்ட முடியவில்லை. ஆனால் அதன் பிறகு படத்திற்குள் எப்படி நுழைந்தேன் என்று தெரியவில்லை. இப்படி ஒரு காதல் படத்தை இது வரை பார்த்ததில்லை. அற்புதம் அற்புதம் அற்புதம். ஒரு உண்மையான காதலினுள் வரும் அனைத்து இன்பம், பிரச்சனை அனைத்தையும் இவ்வளவு துல்லியமாக காட்ட முடியுமா என்று ஆச்சர்ய பட்டு போனேன். ஏன் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்று இப்போது வரை புரியவில்லை. ஒரு வேளை அண்ணனையும், குடும்பத்தையும் அவமானபடுத்திய பிறகு ஜீவா, வேறு ஒரு அவதாரம் எடுத்து அந்த இன்னொரு குடும்பத்திற்கு ஒரு படம் கற்பித்து இருந்தாலோ, சமந்தா 2 மாதம் கழித்து திரும்ப வரும் பொது அவரை கூடிக்கொண்டு ஓடி, இரண்டு குத்து பாட்டு பாடி இருந்தாலோ, நிறைய பேருக்கு பிடித்து இருக்கலாமோ என்னவோ !!! அதற்கு பதில் ஒரு தெளிவான முடிவு எடுத்து கேட் பரிட்சையில் தேர்ச்சி பெரும் ஒரு நல்ல இளைஞன் ஆக இருப்பது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அல்லது, இன்று உள்ள சூழலில், இப்படி பல வருடம் கழித்து பிரிந்து வாழ்ந்த பிறகும் வெற்றி பெறும் பொறுமையான காதல் சாத்தியம் இல்லை என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. பாடலும் படமும் இணைந்து செய்யும் மாயத்தை போற்ற வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு காதல் காட்சியும் அற்புதம். காதலை காதலிக்க முடிந்தவராலேயே இப்படி ஒரு நல்ல காதலை படமாக எடுக்க முடியும். கெளதம் வென்று விட்டார். ஆனால் நம் ரசனை வளர வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது. உங்கள் விமர்சனமும் அற்புதம்.
பதிலளிநீக்குI Love this film......
பதிலளிநீக்குIt's true
எதிர்மறை விமர்சனங்களாலேயே இப்படத்தை இவ்வளவு நாட்களாகியும் பாராமல் இருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. படம் பார்க்கப் பார்க்கப் பிடித்து ஒன்றிவிட்டேன். காதலை விட பாடம் முக்கியம் என படிக்கப் போன ஜீவா!.. இதேதான் வாரணம் ஆயிரத்தில் முதல் ஹீரோயின் செய்வாள்.
பதிலளிநீக்குஇப்போது வரும் ஆயிரம் மொக்கைப் பட டாஸ்மாக் குடிகார பாடல்களைக் கொண்ட படங்களுடன் ஒப்பிடும்போது இது செம க்ளாஸ் படம். அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்திராவின் கேரக்டர் க்ளைமேக்சில் பாடம் நடத்தாமல் நருக். சுருக் என தந்தி வசன நடையில் அமைதியாக கண்ணியம் காத்தது - டைரக்டரின் டச். மற்ற படமாக இருந்தால் (உ.ம். ஜெயப்பிரகாஷ் (பசங்க) அப்பாவாக இருந்தால் 15 நிமிடத்துக்குப் பாடம் நடத்தி இருப்பார். இன்னும் ஒரு வாரத்துக்கு என் தலைக்குள் இந்தப் படம் வந்து வந்து போகப் போகிறது. உங்கள் விமர்சனத்தை முன்னமே பார்த்திராரது என் தவறு. மன்னிக்கவும்.