4 டிசம்பர், 2012

அபிமானங்கள் உடையும் காலம்

2012. என்னுடைய பழைய ‘ஐடியல்’ பலரையும் ஒழித்துவிட்டது. வயது காரணமா என்று தெரியவில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாய் கமலுக்காக யாரிடமாவது எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருந்திருக்கிறேன். இப்போது கமல் அபிமானிகளிடம் நானே சண்டை போடுமளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. அதையெல்லாம் விடுங்கள். ரசனை, பார்வைக் கோளாறாக இருக்கலாம்.
தனிப்பட்ட முறையில் மிக அதிகமாய் பாதிக்கப்பட்டிருப்பது டாக்டர் ராமதாஸ் அவர்களின் சமீபகால செயல்பாடுகளால்தான். கமலை மாதிரியே நினைவுதெரிந்த காலத்தில் இருந்து இவர் என்னுடைய ஹீரோ.
பலரும் அவரை சாதிவெறியர் என்றோ, அரசியல் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தி என்றோ விமர்சித்தபோதெல்லாம் அதெல்லாம் பெரியதாக இம்பேக்ட் ஏற்படுத்தியதில்லை. வடமாவட்டங்களில் வஞ்சிக்கப்பட்ட சாதியாக வன்னியர்களை நான் கருதியதும் ஒரு காரணமாக இருக்கலாம். சாராயம் காய்ச்சுகிற சாதி என்று வன்னியர்களை கீழ்மைப்படுத்திப் பேசியவர்கள் என்னைச் சுற்றி நிறைய இருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமூகத்தில் பிறந்து தன்முயற்சியால் அந்த காலத்திலேயே டாக்டருக்கு படித்து வளர்ந்தவர். நாம்தான் மேலே வந்துவிட்டோமே என்கிற சுயநலத்துக்கு இடம்தராமல் தான் பிறந்த சமூகத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். உயிரைக் கொடுத்து போராடி ‘எம்.பி.சி. கோட்டா’ கொண்டுவர காரணமாக இருந்தவர். கல்வி குறித்த விழிப்புணர்வை ஊட்டி பல்லாயிரம் இளைஞர்கள் பட்டதாரிகளாக பரிணமிக்க கலங்கரை விளக்காய் நின்றவர். ராமதாஸை கொண்டாட இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளிலேயே வித்தியாசமான கட்சியாக பா.ம.க.வை உருவாக்கியவர். எளிய மக்களுக்கு இடம் தருவதோடு, அறிவுஜீவிகள் எளியவர்களோடு கலக்க அருமையான களம் அமைத்துத் தந்தவர். அரசின் பிரச்சினைகளை விமர்சிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வை அறிவுபூர்வமான முறையில் முன்வைப்பவர். வருடா வருடம் நிபுணர்களின் அறிவுறுத்தலில் அவர் போடும் ‘மாதிரி பட்ஜெட்’ போன்ற முயற்சிகள் இந்திய அளவில் எந்த கட்சியும் செய்யாத சாதனை.
மிகச்சரியான சந்தர்ப்பத்தில் வன்னியர் சங்கத்திலிருந்து பா.ம.க உருவானது. எம்.ஜி.ஆரின் இல்லாமையை அதிகம் பயன்படுத்திக்கொண்டது ஜெ.வா அல்லது டாக்டரா என்றால் டாக்டர்தான் என்று தோன்றுகிறது. ராஜீவ் மரண அனுதாபத்திலும் சட்டமன்றத்தில் தன் கணக்கை சரியாகவே துவக்கியது பா.ம.க., என்ன, ஒரு அரசியல் கட்சியாக மலர்ந்தபின் கொள்கை, கோட்பாடுகள் குறித்த குழப்பம் எல்லோரையும் போலவும் டாக்டருக்கும் வந்தது. ஆரம்பத்தில் தன்னை திராவிடக் கட்சிகளின் நீட்சி போல காட்டிக் கொண்டார். பிற்பாடு அறுபதுகளில் திமுக கைவிட்ட கொள்கைகளை கையில் எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட திராவிட தமிழ் தேசியம் மாதிரி. ஒருகட்டத்தில் தீவிரமான தமிழ்தேசியக் கட்சியைப் போன்ற தோற்றத்துக்கு பா.ம.க., வந்தது. ஆனால் இக்கட்டத்தில் அடைந்த தேர்தல் தோல்விகள் பா.ம.க.வின் எதிர்காலம் குறித்த குழப்பத்தை அதன் தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் பழைய திண்ணை அரசியலுக்கு மாறவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டதாக அக்கட்சியின் தலைமை கருதுகிறது. எவ்வகையிலும் இது பரிணாம வளர்ச்சியாக இருக்காது.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பாரம்பரியப் பெருமைகளை இழப்பதாக நாம் கருதினாலும் திராவிடக் கட்சிகளின் இருத்தலியல் என்பது, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சியை நிலைப்படுத்துவது, அதன் மூலமாக தாம் நம்பும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது வழக்கமாக இருக்கிறது. பா.ம.க. சந்தர்ப்பத்தங்களை பயன்படுத்தியதுண்டு. ஆனால் ‘கொள்கைகள்’ என்று தாம் நம்பியதை சந்தர்ப்பங்களுக்காக பலி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களோடு பகை போதும் என்கிற முடிவுக்கு இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்த கொள்கை முடிவை இன்று டாக்டர் ராமதாஸ் காற்றில் பறக்க விட்டிருப்பது இதைத்தான் காட்டுகிறது. திருமாவளவனோடு இணைந்து இரவும் பகலுமாக அவர் பாடுபட்ட முயற்சிகள் எல்லாம் இன்று விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. சமூக நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை என்று டாக்டரும் நம்பத் தொடங்கிவிட்டதையே தர்மபுரிக்கு பிறகான அவரது செயல்பாடுகள் உணர்த்துகிறது. மேலும் கட்சியின் பிடி டாக்டரிடம் இல்லாமல், காடுவெட்டி குரு போன்றவர்கள் கைக்கு போய்விட்டதையும் உணர்ந்து வருத்தப்பட வேண்டியிருக்கிறது.
கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் பெரியாரியக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியாகவே டாக்டரின் சமீபக்கால நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பா.ம.க., பண்பட்ட அரசியல் கட்சியல்ல, இன்னமும் அதே சாதிச்சங்கம்தான் என்பதை கோடிட்டுக் காட்டுவதாகவே டாக்டரும், பா.ம.க., தலைவர்களும் நடந்துக் கொள்கிறார்கள். கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் ஹீரோ, இன்று ‘காதல்’ படத்து வில்லனாய் தெரிவது காலத்தின் கோலம். சகிக்க முடியாத கொடுமை.

18 கருத்துகள்:

  1. யுவக்ருஷ்ண அவர்களே ! நீங்களே சொல்லிவிட்டீர் ப ம க வும் ராமதாஸ் அவர்களும் எப்படி தன் பாதையையும் பயணத்தையும் ஒரு பொது நலத்துடன் சமுக அக்கறையுடன் தொலைநோக்கு பார்வையுடனும் பிற்படுத்தப்பட்ட கல்வியில் பொருளாதாரத்தில் நலிந்த பின் தங்கிய பல ஜாதி மக்களுக்காக யார் என்ன சொன்னாலும் யார் குறைகுறினாலும் தன் கொண்ட கொள்கையில் முனைந்து செயல்பட்டார் என்று . (நீங்கள் சொன்னவைகள் கூட ஒரு சிலதான்)
    . அத்தகைய நல் மனிதர் இன்று உங்களுக்கு மாறுபாடாய் தெரிவது காலத்தின் கட்டாயம் அது உங்களுக்கு தவறாக தெரியுமென்றால் அது அவருடைய தவறல்ல நண்பரே ! ///

    தாழ்த்தப்பட்டவர்களோடு பகை போதும் என்கிற முடிவுக்கு இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்த கொள்கை முடிவை இன்று டாக்டர் ராமதாஸ் காற்றில் பறக்க விட்டிருப்பது /// காற்றில் அவர் பறக்கவிடவில்லை தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் தரம் தாழ்ந்த செயல்களே அவரை இன்று அரண் செய்யும் வேலையில் நிறுத்தியுள்ளது எந்த சமூகத்தாரும் தழ்த்தப்பட்டவருடன் இத்தனை நல்லிணக்கம் காட்டியதில்லை தம் ஜாதிமக்குளுடநேக்கூட பகைத்து அவர்களுக்காய் நீதிக்கொண்ட பல சம்பவங்கள் உண்டு நீங்களும் அறியக்கூடும் ஒன்று நல்லாக புரிந்துக்கொள்ளுங்கள் ஒருவரை மேலும் மேலும் வஞ்சகம் செய்தால் காலம் அவரை திரும்பி நிற்க செய்யும் அதைத்தான் இன்று அந்த நிலையில்தான் வன்னியமக்களும் பிற சமுக பிற்படுத்தப்பட்ட மக்களையும் செய்ய வைக்கிறது நீங்கள் "பட்சம் வழக்கறியாது" என்பதைத்தான் நீங்களும் எல்லா ஊடகங்களும் மீண்டும் மீண்டும் தலித் என்றால் அப்பாவிகள் என்ற குருட்டான்போக்கு பொது தன்மை கருத்துகொண்டே வினவுகிறீர் . அவரவருக்கு வந்தால்தான் வலி என்னவென்று தெரியும். தினம் தினம் பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்படுபவர்களை கேளும் அங்கு ஒரு மாதம் நின்று வாழ்ந்துப்பாரும் . அவர்கள் தமக்கான சட்டங்கள் உள்ளது என்ற கர்வத்தில் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்று தயவு செய்து ஒருதலைபட்சமாகவே பட்சம் வழக்கறியாது என்ற உங்கள் நிலையை செயல்முறையோடு உண்மை உணர்ந்து பார்த்து எழுதுங்கள் ./// .திருமாவளவனோடு இணைந்து இரவும் பகலுமாக அவர் பாடுபட்ட முயற்சிகள் எல்லாம் இன்று திருமாவும் அவர்களின் மக்களும்தான் விழலுக்கு இறைத்த நீராக்குகின்றனர் ./// இதை எதோ நான் வெறும் தருமபுரி நிகழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்வதாய் நினைக்காதீர் உங்களுக்கு அந்த தருமபுரி நிகய்வு மட்டுமே தெரியவாய்ப்புண்டு அதைப்போல் எத்தணை அக்குருமங்கள் தினம் தினம் ஒவ்வொரு காலணியிலும்(அந்த வழியாகத்தான் ஒவ்வொரு ஊர்க்காரரும் செல்லவேண்டி இருக்கும்) நடக்கிறது என்பதை உண்மையில் உங்கள் மன சாட்சிக்கு தெரியவேண்டுமானால் நேரில் சென்று கவனியுங்கள். யார் அப்பாவிகள் என்று தெரியும்.
    தலித் மக்களுக்கும் கை கால் இருக்கிறது அவர்கள் ஒன்றும் முடவர்களல்ல அவர்கள் தப்பு செய்கிறார்கள் அது ஏன் உங்கள் மனதிற்கு தொடுவதில்லை ???????????

    சமூக நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை என்று டாக்டரும் நம்பத் தொடங்கிவிட்டதையே தர்மபுரிக்கு பிறகான அவரது செயல்பாடுகள் உணர்த்துகிறது. மேலும் கட்சியின் பிடி டாக்டரிடம் இல்லாமல், காடுவெட்டி குரு போன்றவர்கள் கைக்கு போய்விட்டதையும் உணர்ந்து வருத்தப்பட வேண்டியிருக்கிறது.///

    அந்த நிலைக்கு ராமதாசும் இன்னும் பல மக்களும் தள்ளப்பட்டுலார்கள் என்பதுதான் வருத்தப்படவேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் பெரியாரியக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியாகவே டாக்டரின் சமீபக்கால நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. //////
    இன்றுவரை மருத்துவரும் சரி ,காடு வெட்டி குருவும் சரி ,வன்னிய மக்களும் சரி கலப்பு திருமணம் ,சாதி மறுப்பு திருமணதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ... அதன் பெயரை உபயோகித்து சாதி பழிவாங்கல் எண்ணத்தில் போல பெண்களை திருமாவளவன் கட்சியினர் செய்துள்ளனர் .... கடலூரில் மட்டும் பெண்கள் , இப்படி குறிவைத்து நடக்கும் போலி திருமனதைதான் எதிர்க்கிறோம் ..... நீங்கள் உங்கள் பதிவில் இந்த வார்த்தையை மாற்றினால் சரியாக இருக்கும் ...

    பதிலளிநீக்கு
  3. இந்தப் பிரச்சனையில் ஏதோ பாட்டாளி மக்கள் கட்சி பின்புலத்திலிருந்து செயல்படுவது போலவும் ஒரு பிரச்சாரம் நடக்கிறது. ஆனால் பா ம க வினர் இந்த விசயத்தில் எதிலுமே இல்லை என்பதுதான் உண்மை. முதல் நாள் சாலை மறியல் நடந்தபோது அனைத்துக் கட்சிகளையும் சார்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அனைத்து சாதிகளைச் சார்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
    மறுநாள்தான் வெள்ளாளப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜா (பா.ம.க) கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அப்போது கலெக்டர் கண்ணெதிரிலேயே விடுதலைச் சிறுத்தைகள் ஆட்கள் அவரைத் தாக்கி மண்டையைப் பிளந்துள்ளனர். காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தின் மூலமே காவல்துறையும் கலெக்டரும் யார் பக்கம் உள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். கலவரம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் கூட பா.ம.க சார்பில் யாரையும் சந்திக்கவில்லை. என்ன நடந்தது என்று விசாரிக்கவில்லை. அவர்களும் அவர்கள் பங்குக்கு கண்டன அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்களே ஒழிய இந்த தரப்பு நியாயத்தை யாருமே தேடவில்லை.
    குறிப்பிட்ட இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பா.ம.க இந்தக் கலவரத்தை நடத்தியதாக போஸ்டர் அடித்து ஒட்டியபோது பா.ம.க வினர் தாங்கள் செய்யாத காரியத்திற்கு தங்களை சம்பந்தப் படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டியது குறித்து சந்தோ­சப் பட்டார்களாம்.http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

    பதிலளிநீக்கு
  4. இந்தப் பிரச்சனையில் ஏதோ பாட்டாளி மக்கள் கட்சி பின்புலத்திலிருந்து செயல்படுவது போலவும் ஒரு பிரச்சாரம் நடக்கிறது. ஆனால் பா ம க வினர் இந்த விசயத்தில் எதிலுமே இல்லை என்பதுதான் உண்மை. முதல் நாள் சாலை மறியல் நடந்தபோது அனைத்துக் கட்சிகளையும் சார்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அனைத்து சாதிகளைச் சார்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
    மறுநாள்தான் வெள்ளாளப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜா (பா.ம.க) கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அப்போது கலெக்டர் கண்ணெதிரிலேயே விடுதலைச் சிறுத்தைகள் ஆட்கள் அவரைத் தாக்கி மண்டையைப் பிளந்துள்ளனர். காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தின் மூலமே காவல்துறையும் கலெக்டரும் யார் பக்கம் உள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். கலவரம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் கூட பா.ம.க சார்பில் யாரையும் சந்திக்கவில்லை. என்ன நடந்தது என்று விசாரிக்கவில்லை. அவர்களும் அவர்கள் பங்குக்கு கண்டன அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்களே ஒழிய இந்த தரப்பு நியாயத்தை யாருமே தேடவில்லை.
    குறிப்பிட்ட இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பா.ம.க இந்தக் கலவரத்தை நடத்தியதாக போஸ்டர் அடித்து ஒட்டியபோது பா.ம.க வினர் தாங்கள் செய்யாத காரியத்திற்கு தங்களை சம்பந்தப் படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டியது குறித்து சந்தோ­சப் பட்டார்களாம். http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

    பதிலளிநீக்கு
  5. சாதி எதிர்ப்பு விஷயத்தில் இரண்டு அடி முன்னேறினால் நான்கு அடி பின்னுக்கு தள்ளப்ப்பட்டுவிடுகிறோம் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. மிகவும் வருத்தமடைய வேண்டிய விஷயம்

    பதிலளிநீக்கு
  6. "இப்போது கமல் அபிமானிகளிடம் நானே சண்டை போடுமளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது"

    இனிய மாற்றம்

    பதிலளிநீக்கு
  7. பெருமாள் ஷிவன் அவர்களே!
    ”காற்றில் அவர் பறக்கவிடவில்லை தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் தரம் தாழ்ந்த செயல்களே அவரை இன்று அரண் செய்யும் வேலையில் நிறுத்தியுள்ளது”

    அவர்கள் என்ன தரம் தாழ்ந்த செயல்கள் செய்கிறார்கள்? ”உயர்ந்த” சாதியை சேர்ந்தவர்களை காதலிப்பது அல்லது மணம் செய்வது, தரம் தாழ்ந்த செயலா? தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரையிலிருந்து வெளிவந்து மற்றவர்களைப் போல கவுரவமாக வாழ முற்படுவது தரம் தாழ்ந்த செயலா?

    “அவர்கள் தமக்கான சட்டங்கள் உள்ளது என்ற கர்வத்தில் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள்”

    அதுதான் பிரச்சினையே! மற்ற சாதியினர், இவர்களுக்கு எப்படி கர்வம் வரலாம் என நினைப்பதுதான். என்னுடைய ”படித்த” நண்பர் ஒருவரே, “இவனுங்களுக்கு திமிர் வந்து அலையிரானுங்க. பண்ணையத்துக்கு வரமாட்டாங்கரானுங்க, முன்னய மாதிரி, நம்மள பாத்தா துண்ட அக்குள்ள வச்சுக்க மாட்டங்கரானுங்க” என லாண்ட்ரி லிஸ்ட் வாசித்தபோதுதான் புரிந்தது, பிராமணீயம் என்ற் பீடை “உயர் சாதி” மக்களை விட்டு அகல்வது, சாதாரண விஷயமல்ல என்பது.

    “எத்தணை அக்குருமங்கள் தினம் தினம் ஒவ்வொரு காலணியிலும்”

    இந்த 21ம் நூற்றாண்டில் கூட, அவர்கள் “காலனி” யில்தான் வாழவேண்டியுள்ளது என்பது வெட்கக்கேடான விஷயம் அல்லவா?

    -மு.க


    பதிலளிநீக்கு
  8. பெருமாள் மிக அருமையாக பதில் அளித்துள்ளீர்கள்.

    அவர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளாலும் அதிகார வர்க்க தோரனைகளாலும் நம்மை நாம் காத்துக்கொள்ளவே, இம்மாதிரி கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. வேறு சாதியில் திருமணம் செய்து கொண்ட ஆண்களை ஒதுக்கி வைத்து விடுவார்களா
    இல்லை எதிர்ப்பு பெண்களின் காதலுக்கு மட்டும் தானா
    கட்டிய மனைவி இருக்கும் போது வைப்பாட்டிகள் வைத்து கொண்டிருக்கும் தலைவர்கள்,தொண்டர்களை பெரும்பான்மையாக கொண்ட சாதிகள் பெண்களுக்காக போராடுவது போல கூவுவது ஏன்
    பெண்களுக்காக என்றால் அனைத்து இட ஒதுக்கீட்டிலும் சரிபாதி பெண்களுக்கு என்று பிரிக்க சொல்லி போராடலாமே
    வைப்பாட்டி வைத்திருந்தாலும் பரவாயில்லை,அவனோடு வாழ் என்று சொல்லாமல் பல பெண்களோடு தொடர்பு உள்ளவனை எச்சரிக்கலாமே,அப்படிப்பட்டவர்களை பயமுறுத்த அவர்களின் குடும்பங்களை ஒதுக்கலாமே
    அதிக அளவில் குழந்தை திருமணம் நடைபெறும் மாவட்டத்தில் பெரும்பான்மை பொருந்தாத் திருமணம்.நன்கு படிக்கும் பெண்ணை தாய்மாமனுக்கு கொடுக்க வேண்டும் என்று 15 வயது வித்தியாசத்தில் கட்டி கொடுப்பவர்கள்,இரண்டாம் தாரமாக கட்டி கொடுப்பவர்கள் பெண்களுக்காக பேசுவது போல
    கொஞ்சம் கூட வெட்கம்,கூச்சம் இல்லாமல் பேசுவது ,அதை பலர் ஆதரிப்பது வேதனை தான்

    பதிலளிநீக்கு
  10. தொண்ணூறுகளில் இறுதிவரையில், வட மாவட்ட சிறு நகர்கள் பக்கதில் இருந்த அரசு கலைகல்லூரிகளில் வன்னியர் - தலித் சண்டைகள் அதிகம்.....குறிப்பாக செய்யாறு கல்லூரியில் படித்த எனது நண்பர்கள் அவர்களுடைய பராக்கிரம செயல்களை சொல்லுவர்....அதின் பின் திருமா - ராமதாஸ் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக அது படிப்படியாக குறைந்தது..... எனது ஊரான ஆரணியிலும், அப்போதெல்லாம் பள்ளி தெரு, களத்து மேடு தெரு - அம்பேத்கார் நகர் இளைஞர்களுக்கு இடையே அடிக்கடி சிறு சிறு மோதல்கள் நடக்கும்.... தியேட்டர்களில், மசான கொள்ளை, காணும் பொங்கல் போன்ற சமயங்களில் அவை இருக்கும்... 2000ஆம் ஆண்டுகளின் துவக்கதில்லிருந்து இந்த மோதல்கள் முற்றிலும் காணாமல் போய்விட்டன... ராமதாசின் இப்போதைய புதிய அவதாரத்தால் நிலைமை எப்படி மாறும் என்று தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
  11. சாதி ஒழிப்புக்கு மற்ற சாதி பெண்களை காதலித்து திருமணம் செய்வது தான் வழி என்றால், தலித்கள் அருந்ததியர் வீட்டு பெண்களிடம் இருந்து அதை ஆரம்பிககலாமே? பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்களோடு சம்பந்தம் செய்து கொள்ளலாமே?இன்னமும் காலனிக்குள் ஒரு காலனியை வைத்திருக்கும் இவர்கள் , தங்கள் கரு, வன்னியர் அல்லது கவுண்டர் பெண் வயிற்றில் வளருவதால் சாதி ஒழியும் என்று கூறுவதை எப்படி ஏற்கமுடியும்?கருணாநிதி, ஜெயலலிதாவை விட சாதி ஒழிப்புக்கும் சமூக நல்லிணத்திற்கு அதிகம் பாடுபட்டவர் டாக்டர் என்பதை நடுநிலையோடு பாத்தால் புரியும்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு...


    By---Maakkaan.

    பதிலளிநீக்கு
  13. அதிதீய சாதிய உணர்வால் தங்கள் வீட்டு பெண்களை இழிவுப் படுத்தும் இவர்களை என்னவென்று சொல்வது...?

    பதிலளிநீக்கு
  14. டாக்டர் ஐயா சாதிகள் அதாவது அவர் வார்தையில் சமூகங்கள் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார்,ஆனால் எல்லோரும் காதல் காதல் என்று சாதி தாண்டி திருமணம் செய்து சாதிகளே ஒழிந்து விடும் சூழல் வருமென்றால் சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் அவரால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?

    பதிலளிநீக்கு