1991ல் அம்மா ஆட்சிக்கு வந்த காலக்கட்டத்தில் அரக்கோணம் பக்கமாக போய்வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். வாழப்பாடியார், வீரப்பாண்டியார் ஸ்டைலில் "மூர்த்தியார்" என்ற பெயர் சுவர்களில் மெகா சைஸில் எழுதப்பட்டிருக்கும். இந்த 'யார்' என முடியும் பெயர்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. ஊர் பெயரை மையப்படுத்தி பெயர் வைத்திருப்பர்களுக்குதான் இந்த 'யார்' அந்தஸ்து கிடைக்கும். உதாரணம் மதுராந்தகத்தார். முதன் முதலாக தனது பெயருக்குப் பின்னால் 'யார்' சேர்த்து கூடுதல் மரியாதையை ஏற்படுத்திக் கொண்டவர் பூவை மூர்த்தியார்தான். இவர் ஏன் பூவையார் என்று போட்டுக் கொள்ளாமல், மூர்த்தியார் என்று போட்டுக் கொள்கிறார் என்று அப்போது ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இப்போது சுவரொட்டிகளில் 'ராசாத்தியார்' லெவலுக்கு வந்துவிட்டதால், அது ஒன்றும் பெரிய பிரச்சினையாக தெரியவில்லை.
பா.ம.க. அரசியல் கட்சியாக உருவெடுத்து விஸ்வரூபமாக வடமாவட்டங்களில் வளர்ந்து வந்த காலக்கட்டம் அது. 'அந்த' சாதிக்காரர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றதுமே, அப்பகுதியில் பெரும்பான்மையானவர்களாக வசித்து வந்த தலித் மக்கள், தங்களுக்கும் ஒரு அமைப்பினை எதிர்நோக்கி இருந்தார்கள். தங்களுக்குள் ஒரு தலைவன் தோன்ற மாட்டானா என்று ஏங்கிப் போய் கிடந்தார்கள். அம்மக்களது விருப்பத்தைப் புரிந்துகொண்டு திடீரென்ற களத்தில் குதித்தவர் பூவை மூர்த்தியார். புரட்சியாளர் அம்பேத்கர் பாணியில் இவரும் வக்கீல். எப்போதும் கோட்டு, சூட்டு போட்டு ஜம்மென்றிருப்பார். அரசியலுக்கு வாகான, களையான கருப்பு முகம்.
94 அல்லது 95 என்று நினைவு. புரட்சியாளர் பூவை மூர்த்தியார் தனது 'புரட்சி பாரதம்' கட்சியினை பெரும் கூட்டம் கூட்டி, அரக்கோணத்தில் துவக்கினார். துவக்கி வைத்தவர் புண்ணியவதி புரட்சித்தலைவி என்று சொன்னால் நீங்கள் இப்போது நம்பித்தான் ஆகவேண்டும். பா.ம.க.வுக்கு 'செக்' வைக்க அம்மாவுக்கு கிடைத்த ஆயுதம் புரட்சி பாரதம். பொதுவாகவே இன்றுவரை தலித் மக்களின் விருப்பத்துக்குரிய கட்சியாக அதிமுகதான் இருக்கிறது. எனவே புரட்சி பாரதத்தை, புரட்சித்தலைவி ஆதரவோடு மூர்த்தியார் தொடங்கியது பொருத்தமானதுதான். திமுக, அதிமுக கட்சிகளே இங்கில்லையோ என்று நினைக்குமளவுக்கு அரக்கோணம் சுற்று வட்டார கிராமங்களில் புரட்சி பாரதத்தின் நீலக்கொடி பறந்தது.
96 தேர்தலில் புரட்சி பாரதம் ஆதரித்த அதிமுக படுதோல்வி அடைந்தது. ஏனெனில் அப்பகுதியில் பா.ம.க.வுக்கு இணையான செல்வாக்கு பெற்றிருந்த ஜெகத்ரட்சகன் திமுக அணியில் நின்றார். மாநில அளவில் வீசிய அதிமுக எதிர்ப்பலையும் முக்கியமான காரணம். இந்த தோல்விக்குப் பிறகு புரட்சி பாரதத்தின் 'மவுசு' கொஞ்சம் ஸ்ருதி குறைந்தே காணப்பட்டது. இடையில் 98-99 பாராளுமன்றத் தேர்தல்களில் பா.ம.க.வின் செல்வாக்கும் அசுரபலம் பெற்றது. ஜெகத்ரட்சகனும் திமுகவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
இதற்கிடையே பூவை மூர்த்தியாரின் தொழில்கள் குறித்து வெவ்வேறு விதமான பேச்சுகளும் கெட்டவிதமாக நிலவ ஆரம்பித்தன. குறிப்பாக சென்னையின் ஒரு பிரபலமான 'சாதி' பிரமுகரோடு இணைந்து, பெட்ரோல் கலப்படத் தொழிலில் அவர் கொடிகட்டிப் பறந்ததாக செய்திகள். 'கட்டைப் பஞ்சாயத்து' இன்னொரு முக்கியத் தொழில். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி புள்ளிகளே பூவையாருக்கு அஞ்சும் காலமும் இருந்தது.
இதெல்லாம் மூர்த்தியாரின் திடீர் மரணம் வரை நீடித்தது. ஒரு நாள் காலை செய்தித்தாளை திறந்துப் பார்த்தபோது, மூர்த்தியார் மாரடைப்பில் காலமாகி விட்டதாக அறிந்துகொள்ள முடிந்தது. புரட்சி பாரதத்தின் அடுத்தத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரது தம்பி ஜெகன். தனது பெயரை ஜெகன் மூர்த்தியார் என்று மாற்றிக்கொண்டு, அண்ணன் பாணியில் அரசியல் நடத்த தொடங்கினார். ஒரே ஒரு வித்தியாசம், அண்ணன் அதிமுக ஆதரவாளர். தம்பி, திமுக ஆதரவாளர்.
கடந்த 2006 தேர்தலில், அரக்கோணம் தொகுதி, திமுக கூட்டணியில் புரட்சி பாரதத்துக்கு ஒதுக்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெகன் மூர்த்தியார், சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கலைஞர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் கூட்டத்தில், புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த அப்பகுதி புள்ளி (வயது 21 அல்லது 22 இருக்கும்) கொச்சையான முறையில் ஜெ.வைத் திட்டியதை (அது பேயி, பிசாசு, யாருக்கும் அடங்காது. ஓட்டு போட்டீங்கன்னா செத்தீங்க) கலைஞர் மேடையில் பலமாக சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தும், அதை சரியாக ஜெகன் மூர்த்தியார் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இடையில் இப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய பா.ம.க.வின் வேலு, தன் பெயரை வலுவாக தொகுதியில் நிலைநாட்டி இருக்கிறார். குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்திருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்று புரட்சி பாரதம், ஒரு காலி பெருங்காய டப்பா.
இந்த தேர்தலிலும் தனக்கு திமுக கூட்டணியில் சீட்டு கிடைக்குமென்று ஜெகன் நம்பிக் கொண்டிருந்தார். அத்தொகுதியை பா.ம.க.வுக்கு கொடுக்கும் எண்ணம் திமுகவுக்கு இருப்பதாக தெரிகிறது. அல்லது ஜெகனை நிறுத்தினால் வெல்ல வாய்ப்பில்லை என்றும் திமுக தலைமை உணர்ந்திருக்கலாம். திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் பேசிவிட்டு வெளியே வந்த ஜெகன் இறுக்கமாகவே இருந்திருக்கிறார்.
இப்போது தெளிவாக அறிவித்து விட்டார். "புரட்சி பாரதம், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்"
எனக்குத் தெரிந்து, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கட்சிகள் இரண்டுதான். ஒன்று பா.ஜ.க. மற்றொன்று புரட்சி பாரதம். டெபாசிட் தேறுவதே கடினம் என்று தெரிந்தும், சுயமரியாதையோடு தனித்து நின்று அக்னிப்பரிட்சை மேற்கொள்ளவிருக்கும் இக்கட்சிகளை ஒரு வகையில் பாராட்டலாம். மற்றொரு வகையில் பரிதாபப் படலாம்.
// புரட்சியாளர் அம்பேத்கர் பாணியில் இவரும் வக்கீல்
பதிலளிநீக்கு//
அவர் பெயருக்குப் பின்னே எம்.ஏ., எம்.எல். பி.எச்.டி என்று போட்டுக்கொள்வார். ஆனால் அத்தனியும் டுபாக்கூர் என்பதில் எனக்கு இன்றும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
இல்லை. அவர் வழக்கறிஞர். கல்லூரியில் என் தந்தைக்கு சீனியர்.
நீக்குhmm...guindy to porur pora valila evarukku neraya banners vachi erupanga.. pakkurathuku suntv kalakkapovathu yaru "madurai" muthu pola erukararae yaru evarunu yosichittae poven...
பதிலளிநீக்குபாரதிய ஜனதா தனித்து போட்டியிடவில்லை. சுப்பிரமணிய சாமி ஜனதா கட்சியுடன் இணைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. - சென்னைத்தமிழன்
பதிலளிநீக்கு'பூவை மூர்த்தி' என்ற தனிப்பட்ட மனிதனின் ஆளுமைதான் புரட்சி பாரதம் என்ற இயக்கத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருந்தது. அவரும் தன் இன மக்களின் மனப்போக்குக்கு ஏற்றவாறே அந்த கட்சியை நடத்தினார். தனிக்கட்சி என்ற பலத்தை கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தலித் மக்களை ஒருங்கிணைக்கும் மையமாக அவர் செயல்பட்டார். அதனாலேயே எந்த அரசு பதவியும் இல்லாமலேயே அவரால் அத்தகைய பெயரை அடைய முடிந்தது. நீங்கள் சொன்னது போல் பூவை மூர்த்தி இறப்பு பத்திரிகைகளில் சிறு செய்தியாக வந்த போதிலும் சென்னை, செங்கல்பட்டு, பூந்தமல்லி சுற்றுவட்டார பேருந்துகளிலும், மின்சார ரயில்களிலும் "பூவை மூர்த்தியார் மரணம்" என்று செல்போன் சேவைகள் அந்த காலத்தில், மாலைக்குள் எழுதப்பட்டிருந்தது. அரசியல் தொலைநோக்கு இல்லாத காரணத்தால் ஜெகனால் அவரின் இயக்கத்தை சரியான் பாதையில் எடுத்து செல்ல முடியவில்லை. டார்வினின் 'Survival of the Fittest'தத்துவம் அரசியலில் தான் அதிக அளவு செயல்படுவதை பார்க்க முடிகிறது. பெரியாரின் கொள்கைப்பிடிப்போ, அண்ணாவின் கண்ணியமோ, காமராஜரின் நேர்மையோ இல்லாவிடினும் கலைஞர் இவ்வளவு காலமாக தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருப்பதன் ரகசியம் அவர் எப்போதும் அந்த ஃபிட்னஸோடு இருப்பது தான். அதை உணராமல் அவரை காப்பி அடிக்கும் அரசியல் கத்துகுட்டிகள் சின்னதாக ஒரு பதவி கிடைத்துவிட்டாலே, அதன் சுகத்தில் மூழ்கி தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த இயக்கத்தை வலுப்படுத்த மறந்துவிட்டு அடுத்த தேர்தல் வரும்போது பதவி மடிமேல் வந்து விழும் என்று ஏமாந்து போகிறார்கள். ஜெகன் மூர்த்திக்கு ஒன்று மட்டும் தான் சொல்ல முடியும் "Best of Luck!"
பதிலளிநீக்குTill today I thought jagan is the son of murthy(ar) . Its good that Kalaignar dint gave seat to this fellow , puratchi bharathams main business is rowdyism . I have noticed murthiyars name in lot of walls in our area ( especially in kanchipuram , tambaram and poonamallee areas ) . In 2001 Kalaignar gave seats to lot of caste based parties ( acs , kannappan , etc . ) and lost the election , it should not happen this time
பதிலளிநீக்கு"யாருமே இல்லாத கடையிலே யாருக்காக டீ ஆத்துரிங்க"
பதிலளிநீக்கு----உங்கள் கடமை உணர்ச்சிக்கு எல்லை இல்லையா
உங்கள் இடுகைகள் அனைத்தையும் உடனுக்குடன் படித்துவிடுவேன். ஆனால் எப்படி ஓட்டு போடுரதுன்னுதான் தெரியல..
பதிலளிநீக்குலக்கினா, இந்த முறை பிரசாரத்தில் இல்லையா? ஆனா நீங்க எழுதுற பத்திரிகைகளின் நிறம் உங்களுக்கு விரைவில் தெரியபோகுதுனா. அப்போ என்ன செய்விங்க? அப்போ என்ன செய்விங்க?
பதிலளிநீக்குஒரு காலி பெருங்காய டப்பா yarunnu pappoom !!! bad judgement
பதிலளிநீக்குHis asset worth is more than 500 Crores. He is a disturbing fact among the industrialist in Sriperumbudur + area, This was informed to CM and this is the main reason for Jegan's downfall.
பதிலளிநீக்குWe are expecting next step to recover the illegal assets
People Movement for Anti Corruption
லக்கி.,
பதிலளிநீக்குஉண்மையில் சென்னை வரும்போதெல்லாம் பூந்தமல்லியிலிருந்து ஆரம்பிக்கும் நீலக்கலர் விளம்பரங்கள் உருவாக்கும் பயம் சென்னையை விட்டு வெளிவரும் வரை நீடிக்கும்.இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து ஆட்களை ஆரம்பம் முதலே கட்டம் கட்டியிருக்க வேண்டும்.
வன்முறை ஒன்றை மட்டுமே தங்களின் பலமாக வைத்து சிலர் பணம் பன்ன அந்த சமூகமே ஒரு இஞ்சு கூட முன்னேறாமல் அப்படியே கிடக்கிறது..
இந்த தலித் வன்முறை பிரயோகங்களை கட்டுப்படுத்தி வைத்ததில் அய்யாவை விட அம்மா எவ்வளவோ மேல்...
ஒரு ஆங்கிளில் பார்த்தால் போட்டோவில் இருப்பவர் லக்கி மாதிரியே இருக்காரே...
பதிலளிநீக்குநீங்கள் கடைந்தெடுத்த வன்னிய வெறியன் என்று கேள்விப்பட்டதுண்டு. அனால் அடக்கமாக யாருக்கும் தெரியாமல் அடக்கி வாசீப்பீர்கள் என்பதும் சொல்லியிருக்கிறார்கள். உங்கள் உண்மை முகம் அப்பட்டமாக இக்கட்டுரையில் தெரிகிறது.
பதிலளிநீக்குமூர்த்தியார் கட்சி ஆரம்பிக்க காரணமே பா.ம.க தான் என்பது திருவள்ளூர், அரக்கோணம் பகுதி மக்களுக்கு தெரிந்த விசயம். ஏனெனில் உமது குருநாதர் குச்சிகொளுத்தியின் சாதிய வன்மத்தின் காரணமாகவே அவர் உருவானார்.
மூர்த்தியின் வருகைக்குப் பின் வன்னியவெறியாட்டம் குறைந்ததன் காரணமே உங்களைப் போன்ற வன்னியர்களின் கோபம் இப்படி எழுதத்தூண்டுகிறது
neengaal Paraiyara
நீக்கு