அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் கொஞ்சமாவது சீரியஸாக பரிசீலிப்பது திமு கழகத்தின் வாக்குறுதிகளைதான். அதற்கேற்ப திமுகவும் ஒவ்வொரு தேர்தலின்போது வாக்குறுதிகளை ரொம்பவும் மெனக்கெட்டே உருவாக்க வேண்டியிருக்கிறது.
நமக்கு ஓரளவு நினைவுதெரிந்த தேர்தல் 1989 சட்டமன்றத் தேர்தல். சென்னை நகரின் ஒவ்வொரு இல்ல முகப்பிலும் 'நாடு நலம்பெற, நல்லாட்சி மலர' என்கிற வாசகங்களோடு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தேர்தல் அது. 'பெண்களுக்கு சம சொத்துரிமை' போன்ற வாக்குறுதிகளை திமுக தந்திருந்ததாக நினைவு.
அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை என்பது ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆர் காலத்திலும் கூட. தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகள் கூட அதிமுக தலைவர்களுக்கு நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே. அதே நேரம் 'சொல்லாததையும் செய்வோம்' என்கிற திமுகவின் பிரபலமான வசனம் அப்பட்டமாக பொருந்துவது அதிமுகவுக்குதான். சத்துணவுத் திட்டம் போன்ற சமூகநலத் திட்டங்களை அதிமுக வாக்குறுதியாக தரவில்லை. ஆட்சிக்கு வந்து சொல்லாமலே கொடுத்தது. 91 தேர்தலின் போதுகூட 69 சதவிகித இடஒதுக்கீட்டை தேர்தல் வாக்குறுதியாக அம்மா தந்ததாக நினைவில்லை. ஆயினும் பல்வேறு தடைகளை உடைத்து இதனை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
2006 வரை திமுகவின் தேர்தல் அறிக்கை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தி முன்மொழியப்பட்டுக் கொண்டிருந்தது. கலைஞரின் மனசாட்சியான மாறனின் சிந்தனைகள் பலவும் வாக்குறுதிகளாக இடம்பெறும். 'மாநில சுயாட்சி' என்கிற வாசகம் ஒரு ஒப்புக்காவது இன்றும், திமுக அறிக்கைகளில் இடம்பெறுவது மாறன் காலத்திய பாரம்பரியமே. மாறன் மறைந்தபிறகு கலைஞருக்கு கிடைத்த பொருளாதார ஆலோசகர் நாகநாதன். 2006 தேர்தல் அறிக்கையை கவர்ச்சிகரமான வகையில் உருவாக்கியதில் அவரது பங்கு அளப்பறியது. உலகமயமாக்கல் நுழைந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொண்டு உருவாக்கிய அறிக்கை அது. 'நான் உனக்கு ஓட்டு போட்டால், தனிப்பட்ட முறையில் எனக்கென்ன கிடைக்கும்?' என்று ஒவ்வொரு வாக்காளரும் அரசியல் கட்சிகளிடம் பலனை எதிர்ப்பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.
அத்தேர்தலில் இலவச கலர் டிவி, அண்ணா பாணியில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு மாதிரியான அதிரடி வாக்குறுதிகள். ஆரம்பத்தில் இவையெல்லாம் சாத்தியமேயில்லை என்று சாதித்த ஜெயலலிதாவே பிற்பாடு பத்து கிலோ அரிசி இலவசமென்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீதி பத்து கிலோ அரிசியை கிலோ ரூ.3.50/- விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதன்படி பார்க்கப்போனால் ஒரு கிலோ அரிசி ரூ.1.75/-க்கு வழங்கப்படுமென்பது ஜெ.வின் வாக்குறுதி. இது திமுகவின் வாக்குறுதியை காட்டிலும் 25 பைசா குறைவு.
2006 தேர்தல் பிரச்சார காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி பசுமையாக நினைவில் நிற்கிறது. அதிமுக கூட்டணியின் பிரச்சாரப் பீரங்கி வைகோ ஒரு மேடையிலே முழங்கிக் கொண்டிருக்கிறார். "தோல்வி நிச்சயம் என்பதால், சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர். ஏற்கனவே மானியத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரிசியை இன்னும் எப்படி ஒண்ணரை ரூபாய் குறைத்து கொடுக்க முடியும்?" என்று கர்ஜித்தார். அவருக்கு ஒரு துண்டுச்சீட்டு வருகிறது. 'அம்மா இன்று மாலை ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் பத்து கிலோ அரிசி இலவசமென்று வாக்குறுதி தந்திருக்கிறார்'. அதுவரை பேசிய பேச்சை அப்படியே மாற்றிப்பேச வேண்டிய நெருக்கடி வைகோவுக்கு. தனது பேச்சாற்றலால் மாற்றியும் பேசினார். ஆனால், மதிமுகவினரே நொந்துப்போனார்கள். மக்கள் சிரிப்பாய் சிரித்தார்கள்.
வாக்குறுதிகளால் திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தலுக்கு முன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ப.சிதம்பரம்தான் முதன்முறையாக திமுக தேர்தல் அறிக்கையை 'கதாநாயகன்' என்கிற வார்த்தைகொண்டு Branding செய்தார் என்பதாக நினைவு.
2006ல் ஆட்சிக்கு வந்த திமுக தனது வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியும் இருக்கிறது.
ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு என்று சொன்னது. ஆனால் ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கே நியாய விலைக் கடைகளில் கொடுத்து வருகிறது.
ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி என்றது. ஏழை, பாழை மட்டுமில்லாமல் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்டிருந்த பெண்களுக்கான திருமண உதவித்தொகை மீண்டும் அமல்படுத்தப்பட்டு, ரூபாய் பதினைந்து ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித்தொகை ரூ.6000/- வழங்கப்படுகிறது.
இலவச கலர் டிவி, இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.
வேலையிழந்த சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை.
அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்.
இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு.
- இம்மாதிரி இன்னும் ஏராளமாக தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிஜமாகவே திமுக ஆட்சி முனைப்பு காட்டியிருக்கிறது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு மாதிரி சொல்லாததையும் செய்துக் காட்டியிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது என்கிற அதிசயம் தமிழகத்தில்தான் கடந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது.
இதோ அடுத்த தேர்தல். மீண்டும் ஒரு கவர்ச்சி அறிக்கை திமுகவிடமிருந்து. இம்முறை கலைஞர் 'கதாநாயகி' என்று தம் கழக அறிக்கையை branding செய்திருக்கிறார். ஊடகங்களோடு சேர்ந்து மக்களும் பரபரப்படைந்திருக்கிறார்கள். தேர்தல் அறிக்கைக்கு பின்பாக ஒரு சர்வே எடுக்கப்படுமாயின், திமுகவின் செல்வாக்கு ராக்கெட் வேகத்தில், கடந்துமுறையைப் போலவே உயர்ந்துக் கொண்டிருப்பதை இம்முறையும் அறிய முடியும்.
அம்மா ரொம்ப சிரமப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஆங்காங்கே எண்களை உயர்த்தி, மானே தேனே போட்டு சம்பிரதாயமாக வாசித்துக் காட்டி விட்டார். மிக மிக நகைச்சுவையான தேர்தல் அறிக்கை இது. ஒருவேளை நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுகவுக்கு நகைச்சுவைப் பிரச்சாரம் செய்வதை ஈடுகட்ட, அம்மாவே நகைச்சுவை வேடம் பூண்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. அம்மாவின் அறிக்கையை அவரது கட்சிக்காரர்கள் கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் பரிதாபம்.
கதாநாயகன் அறிவித்த அறிக்கை கதாநாயகியாகவும், கதாநாயகி அறிவித்த அறிக்கை காமெடியாகவும் அமைந்திருப்பது என்னமாதிரியான ஒரு சுவாரஸ்யமான முரண்!
wait.wait till the results to come!!!
பதிலளிநீக்குஆர் .ராசா , பெருந்துறை பெரியசாமி இன்னும் பல எபக்ட் எப்படி மக்களை சிந்திக்க வைக்கும் என்று சொல்லுவதற்கு இல்லை . அம்மாவிடம் இருந்து இன்னும் கொஞ்சம் அறிவு பூர்வமாக , ஸ்ட்ராங்கான தேர்தல் அறிக்கையை எதிர் பார்த்த என்னை போன்றோருக்கு இது ஏமாற்றம் தான் .
பதிலளிநீக்குஆர் .ராசா , பெருந்துறை பெரியசாமி இன்னும் பல எபக்ட் எப்படி மக்களை சிந்திக்க வைக்கும் என்று சொல்லுவதற்கு இல்லை . அம்மாவிடம் இருந்து இன்னும் கொஞ்சம் அறிவு பூர்வமாக , ஸ்ட்ராங்கான தேர்தல் அறிக்கையை எதிர் பார்த்த என்னை போன்றோருக்கு இது ஏமாற்றம் தான் 4 ஆடு கொடுப்போம் என்று சொல்லி இருப்பது தான் காமடியீன் உச்ச கட்டம் . கல்விக்கு , தொழிலுக்கு , விவசாயத்திற்கு என்று எதாவது ஆக்க பூர்வமான அறிக்கை இருந்து இருந்தால் ஒரு நம்பிக்கை வந்து இருக்கும். கடந்த தேர்தலை பார்த்து அம்மாவும் பயந்து பொய் உள்ளதை தான் இந்த தேர்தல் அறிக்கை காட்டுகிறது. அம்மவகட்டும் , இல்ல அப்பாவகட்டும் இந்த இலவசத்தை ஒலித்து கட்டி விட்டு ஒரு நல்ல ஆட்சியை தாங்கப்பா...!
பதிலளிநீக்கு89 தேர்தலில் கும்பகோணத்தில் கோசி மணி போட்டியிட, நானும் என்னுடைய பிரதரும் அவர் பெயர் இடம்பெற்றிருந்த சுவர் விளம்பரத்தில் மூச்சா போனது சூடாக நினைவுக்கு வருகிறது...
பதிலளிநீக்குகட்டுரையை இன்னும் எளிமையா
பதிலளிநீக்கு"உங்கள் ஓட்டு திமுக கூட்டணிக்கே ன்னு" மட்டுமே
எழுதியிருக்கலாம்
நன்றி
பாஸ்,
பதிலளிநீக்குஇதனைப் பின்னூட்டமாக வெளியிடாமல், பதிவில் இவற்றையும் சேர்த்துக் கொண்டால் மகிழ்வேன்.....
வாரத்திற்கு 3 முட்டை-1அல்ல,
விவசாயக் கடன் 7,000கோடி ரூபாய் தள்ளுபடி,
அம்மையார் அடியோடு ரத்து செய்திருந்த ஆதரவற்ற முதியோர், விதவைகள் மாதாந்திர உதவித் தொகையினைக் கலைஞர், ரூ100-ரூ250-ரூ400-ரூ500 என்று தொடர்ந்து உயர்த்தி வழங்கி வருவதோடு, தற்போதைய தேர்தல் அறிக்கையில் ரூ750ஆக உயர்த்துவேன் என்றும் சொல்லியிருக்கிறார்.....
ராஜ்குமார்.. மதுரை
கலைஞர் 2006ல் திமுகவின் தேர்தல் அறிக்கையிலே கலைஞர் அன்று சொன்னவைகளைச் செய்ததோடு, சொல்லாதன பலவற்றையும்- உதாரணமாக,
பதிலளிநீக்கு”முதல் தலைமுறை பட்டப்படிப்புப் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்,
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம்,
108,
கலைஞர் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட இன்னும் பற்பல திட்டங்களைச் -செய்து காண்பித்து விட்டுத்தான், தற்போது புதிய சலுகைகளை 20011 தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்....
ஆனால் அம்மையாரோ,
பதிலளிநீக்குஇலவச மின்சார ரத்து,
ஆதரவற்ற முதியோர் ஓய்வூதிய ரத்து,
திருமண உதவித்தொகை ரத்து, சத்துணவில் முட்டை ரத்து,
உழவர் சந்தை மூடல்,
குடும்ப அட்டைகளைப் பல வண்ணங்களாகப் பிரித்து அவற்றைச் செல்லாததாக்கியது,
அரசு ஊழியர்கள் ஒரே நாளில் கூண்டோடு பணி நீக்கம் செய்தது மட்டுமிலாமல் அவர்களை, இரவோடு இரவாகக் கைது செய்தது,
இன்னும் இதுபோல எத்தனை? எத்தனையோ? கொடுஞ்செயல்களைச் செய்தவர் இந்த அம்மையார்...........
அப்படியிருக்கையில் இருவரில் யாருடைய வாக்குறுதிகளை மக்கள் நம்புவார்கள்......
எனவே மக்களால் கலைஞரின் அறிக்கை கதாநாயகியாகவும்,
பதிலளிநீக்குஇந்த அம்மையரின் அறிக்கை லொள்ளு சாபா மிமிக்ரி அறிக்கையாகவும் மதிப்புப் பெறுவதில் வியப்பேதும் தேவையில்லை.......
அன்றைக்கு அம்மையாரின் ஆட்சியிலே, தஞ்சைத் தரணியிலே, ஏருழுத ஏழை உழவர்கள் உண்ண உணவு கிடைக்காது, வயல் வெளியிலே திரிந்த எலிகளைப் பிடித்து உண்டு, தங்கள் பசியாற்றிட முனைந்த போது, அது நஞ்சாய் மாறி அவர்களில் சிலரின் உயிரினைப் பறித்ததே.........
பதிலளிநீக்குஇந்த அம்மையாருக்கு மக்களின் மேல் அணுவளவாவது இரக்கமிருந்திருந்தால் அன்றல்லவா அரிசியினை இலவசமாகக் கொடுத்திருக்க வேண்டும்.....
அதை விடுத்து ” எலிக்கறி தின்பது தமிழர்களின் வழக்கம்தான், பசிக்காக அல்ல, ருசிக்காகத்தான் உண்டு மாண்டனர்” என்று அம்மையார் எத்தனை ஆணவத்தோடு, தமிழனை எள்ளி நகையாடி அறிக்கை விட்டார் அன்று.........
தனது ஆட்சியிலே, பட்டினியால் மக்கள் மாண்டு கொண்டிருந்த போது கூட அரிசியினை, இலவசமாகத் தர முன்வராமல் கேலி பேசிய ஒருவர் இன்று இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டால் யார் தான் நம்புவர்..........
ஹா ஹா .. மிக சரி.. அ தி மு க வினரே சுரத்தே இல்லாது தேமே என்று அம்மா படித்த கட் அண்ட் பேஸ்ட் தேர்தல் அறிக்கையை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது
பதிலளிநீக்குஹா ஹா .. மிக சரி.. அ தி மு க வினரே சுரத்தே இல்லாது தேமே என்று அம்மா படித்த கட் அண்ட் பேஸ்ட் தேர்தல் அறிக்கையை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது
பதிலளிநீக்கு//ப.சிதம்பரம்தான் முதன்முறையாக திமுக தேர்தல் அறிக்கையை 'கதாநாயகன்' என்கிற வார்த்தைகொண்டு Branding செய்தார் என்பதாக நினைவு.
பதிலளிநீக்கு//
ஆம். அவர்தான் முதலில் அப்படிக் குறிப்பிட்டார்
// மீதி பத்து கிலோ அரிசியை கிலோ ரூ.3.50/- விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதன்படி பார்க்கப்போனால் ஒரு கிலோ அரிசி ரூ.1.75/-க்கு வழங்கப்படுமென்பது ஜெ.வின் வாக்குறுதி.//
பதிலளிநீக்குஇந்தக் கணக்கு சுத்தமா புரியலை தோழர், விளக்க முடியுமா? :)
// மீதி பத்து கிலோ அரிசியை கிலோ ரூ.3.50/- விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதன்படி பார்க்கப்போனால் ஒரு கிலோ அரிசி ரூ.1.75/-க்கு வழங்கப்படுமென்பது ஜெ.வின் வாக்குறுதி.//
பதிலளிநீக்குஇந்தக் கணக்கு சுத்தமா புரியலை தோழர், விளக்க முடியுமா? :)
பொதுவாக ஆளும் கட்சிக்கு எதிரான என்னபோக்கு ஏற்படுவது சுலபம். திமுக அரசு இலவசங்களை அள்ளி கொடுத்து நல்ல பெயர் எடுத்தது முதல் மூன்று வருடங்கள் தான். பினனர்
பதிலளிநீக்குஅரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
1 ரூபாய் அரிசி கடத்தல் ,
மணல் அள்ளுவதில் முறைகேடு மற்றும் விலை ஏற்றம்,
செம் மொழி மாநாட்டிற்கு செலவு,
சினிமா துறையை குடும்ப நபர்கள் கட்டுபடுத்துதல்,
திமுக கோட்டை ஆகிய சென்னைக்கு மட்டும் மின்வெட்டு இல்லாமல் மற்ற இடங்களில் அறிவிக்கப்பட்ட 3 மணிநேர மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்பட்டத மின்வெட்டு,
நில ஆக்கிரமிப்பு (nkkp ராஜா )
போன்றவை வாக்கு பதிவில் பிரதிபலிக்கும்
/அண்ணாவின் ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி வாக்குறுதி/
பதிலளிநீக்குஆட்சியைப் பிடித்த அடுத்த நாளே "மூன்று படி லட்சியம் ஆனால் ஒரு படி நிச்சயம் " என்றார் . ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது , நம் திராவிடப் பேச்சாளர்கள் மக்களைத் தங்கள் பேச்சு சாதுர்யத்தால் என்பதற்கு இது ஒன்றே சாட்சி . இந்தி எதிர்ப்பும் , அரிசி வாக்குறுதியுமே காமராசரின் தோல்விக்கு முக்கிய காரணம் .
நம் நிதி நிலைமைக்கும் திமுக , அதிமுக தேர்தல் அறிக்கைகளுக்கும் சம்பந்த்மே இல்லை , ஏற்கனவெ 90000 கோடி துண்டு ! சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறை தலைவராக இருந்த நாகனாதன் இப்படி ஒரு அறிக்கைத் த்யாரிப்ப்தை ஜீரணிக்க முடியவில்லை ( அதிமுகவிற்கு யார் த்யாரித்தார்கள் என்று தெரியவில்லை ) . ஆனால் இரண்டு அறிக்கையிலும் சில நல்ல விஷயங்களும் உள்ளன . சமீப காலங்களில் பாமகவின் அறிக்கை சிறப்பாக உள்ளது , இந்த முறை வெளியிட்டார்களா என்று தெரியவில்லை
\\ அதிமுகவிற்கு யார் த்யாரித்தார்கள் என்று தெரியவில்லை \\
பதிலளிநீக்குஎன்ன கேள்வி இது, ஜெராக்ஸ் கடைக்காரர்கள்தான்..........
இலவசங்களே குப்பை எனும்போது, இவன் குப்பையை அவன் காப்பி அடித்தான் என்பது தமாஷ். சிந்திப்பவர்கள் இந்த இரண்டையுமே தள்ளி வைத்துவிட்டு ஸ்பெக்ட்ரம், டாஸ்மாக்கின் விபரீத வளர்ச்சி போன்றவற்றைகளை சிந்திப்பார்கள். சிந்திக்காதவர்கள், யார் அதிகம் கொடுப்பதாக சொல்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள்! முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு?
பதிலளிநீக்குLucky
பதிலளிநீக்குYou have yourself called Amma as "KathaNayaki" - She will definitely win
தமிழினியன்
பதிலளிநீக்கு// மீதி பத்து கிலோ அரிசியை கிலோ ரூ.3.50/- விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதன்படி பார்க்கப்போனால் ஒரு கிலோ அரிசி ரூ.1.75/-க்கு வழங்கப்படுமென்பது ஜெ.வின் வாக்குறுதி.//
இந்தக் கணக்கு சுத்தமா புரியலை தோழர், விளக்க முடியுமா? :)
10 கிலோ இலவசம் 10 கிலோ அரிசி ஒரு கிலோவுக்கு 3.50 ரூபாய். மொத்தம் 20 கிலோ அரிசி 35.00 ரூபாய். 35.00ரூபாய்/20 கிலோ = 1.75, இந்த கணக்கே தெரியாத நீங்க எல்லா ஓட்டு போட்டு தான் நம்ம எதிர்காலம் விடியபோகுதா!!!!!!!
உங்க தல கேபிள் டிவி பத்தி மூச்சே விடலியே ! குடும்ப மடியில் கைவைக்க அவருக்கு என்ன பைத்தியமா ? இன்னுமா இந்த ஊரு அவர நம்புது ?
பதிலளிநீக்குஜூ வி படிங்க. அம்மாவின் அறிக்கை கதாநாயகனாம் , ஏகபட்ட வரவேற்பாம்.
பதிலளிநீக்கு"இம்முறை கலைஞர் 'கதாநாயகி' என்று தம் கழக அறிக்கையை branding செய்திருக்கிறார். ஊடகங்களோடு சேர்ந்து மக்களும் பரபரப்படைந்திருக்கிறார்கள். தேர்தல் அறிக்கைக்கு பின்பாக ஒரு சர்வே எடுக்கப்படுமாயின், திமுகவின் செல்வாக்கு ராக்கெட் வேகத்தில், கடந்துமுறையைப் போலவே உயர்ந்துக் கொண்டிருப்பதை இம்முறையும் அறிய முடியும்".
பதிலளிநீக்குஆமா ஆமா அப்டிதான் பேசிக்கறாங்க ... குத்துவாணுக வெயிட் பண்ணு
Lucky,
பதிலளிநீக்குYou have missed an important one. Kalaignar gave 2 acres of land to landless poor in bay of bengal.
69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது எம்ஜிஆர் காலத்தில் என்று நினைக்கிறேன். எம்ஜிஆர் ஆட்சியில் வேலை விண்ணப்பத்திற்கான அரசு விளம்பரத்தில் OC என்பதற்கு விளக்கம் Other caste என்று இருந்தது. கி.வீரமணி வழக்கு தொடர்ந்து அது Open Competition என்று நீதிமன்றத்தால் திருத்தப்படவும், கோபத்தில் எம்ஜிஆர் ஒருபடி மேலே போய், BC ஒதுக்கீட்டை 50% அளவிற்கு உயர்த்தினார். ஜெயலலிதா ஆட்சியில் இட ஒதுக்கீடு மண்டல் கமிஷன் தீர்ப்புபடி 50%க்கு மிக கூடாது என்று வழக்கு தாக்கல் செய்த வக்கீல் விஜயன் காலை உடைத்தனர். பின்னர் அந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. ஆண்டுதோரும் இடங்களின் எண்ணிக்கையை கூட்டி 69% மெயிண்டெய்ன் செய்து வருகிறார்கள்...எனவே 69% இடஒதுக்கீடு கிரெடிட் ஜெயலலிதாவுக்கு கிடையாது. ஆனால் அதிமுகவுக்கு உண்டு!
பதிலளிநீக்குஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்.
பதிலளிநீக்குhttp://www.vinavu.com/2010/03/15/hrpc-case-2/
Sema comedy boss neenga. Same side goal illayae:)
செய்ங்க சாமி செய்ங்க... யாரு வாக்குறுதி நெறையா குடுக்குறா? யாரு அதை சரியா நிறைவேத்துறா? ன்னு மட்டும் பாருங்க... அது தேவையா இல்லையான்னெல்லாம் பாக்காதீங்க...
பதிலளிநீக்குவேலைக்குப்போகாம சும்மா இருக்குற வெட்டிப்பசங்கள்லாம் இலவசம் வாங்கி வாழட்டும்...
வேலைக்குப்போறவன்லாம் டாக்ஸ் கட்டியே சாவட்டும் (செலவெல்லாம் அரசாங்கம் தானே செய்யுது.. டாக்ஸ் வருமானத்துல தானே.)
சார்! இந்த இலவசங்கள் எல்லாம் பாமர மக்களுகாக அறிவிக்கப்பட்டது.
பதிலளிநீக்குகருணாநிதி தான் இலவசங்கள் அளித்து மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கினர்.
இவரால் தான் "அம்மா" இலவசங்கள் கொடுக்க வேண்டியதாயிற்று
கடைசியில் கருணாநிதி ஏன் இப்படி படுதோல்வி அடைந்தார் காரணம் உங்களால் சொல்ல முடியுமா ?
சார்! இந்த இலவசங்கள் எல்லாம் பாமர மக்களுகாக அறிவிக்கப்பட்டது.
பதிலளிநீக்குகருணாநிதி தான் இலவசங்கள் அளித்து மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கினர்.
இவரால் தான் "அம்மா" இலவசங்கள் கொடுக்க வேண்டியதாயிற்று
கடைசியில் கருணாநிதி ஏன் இப்படி படுதோல்வி அடைந்தார் காரணம் உங்களால் சொல்ல முடியுமா ?