2001ல் ஜெ. ஆட்சிக்கு வந்தார். கலைஞரை கைது செய்தார். வைகோவை கைது செய்தார். சுபவீயை கைது செய்தார். நெடுமாறனை கைது செய்தார். இன்னும் ஏராளமானோரை தகுந்த காரணம் ஏதுமின்றி, வெறும் காழ்ப்புணர்வு காரணமாகவே கைது செய்தார். வைகோ கைது செய்யப்பட்ட காட்சி இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்புகையில், விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதி மாதிரி கைது செய்யப்படுகிறார். போலிஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்ல "ஆணவக்காரியின் ஆட்சி ஒழிக" என்று கோஷமிட்டவாறே கம்பி போட்ட வாகனத்துக்குள் சென்றார்.
அகில இந்தியாவும் அமைதியாக கைகட்டி வேடிக்கைப் பார்க்க கலைஞர் மட்டுமே பதறினார். உடன்பிறப்பு ஆயிற்றே? ஆட்சியிலிருந்த பாஜகவோடு பொடாவில் முரண்பட்டார். திமுகவின் மத்திய அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கர்ஜித்தார்கள். வேலூர் சிறைக்கு நேராக சென்று வைகோவுக்கு ஆறுதலும் சொன்னார் கலைஞர். ஒருவழியாக 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வைகோ உள்ளிட்டவர்கள் வெளியில் வந்தார்கள். உள்ளே இருந்தபோது ஆதரவளித்த கலைஞருக்கு (நெடுமாறன் தவிர்த்து) நன்றியோடும் இருந்தார்கள். வைகோ, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார்.
இது பழைய கதை.
2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்று அவர்களது கட்-அவுட்டுகள் மாநாட்டு முகப்பில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. திமுகவினருக்கு இயல்பாகவே வைகோ மீது பாசம் அதிகம் என்பதால் 'கலைஞரின் போர்வாளுக்கு'தான் வரவேற்பு தொண்டர்கள் மத்தியில் அதிகம். மாலை நடைபெறும் நிகழ்வில் வைகோ பங்கேற்பார் என்று அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து மதிமுகவினரும் திரளாக வந்திருந்தனர்.
மாலை வைகோ வரவில்லை. மதிமுகவினர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். மாநாட்டு முகப்பில் திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது படம் ஒட்டிய சுவரொட்டிகளை நகரெங்கும் கிழித்து எறிந்தனர். ஏனெனில் அன்று மதியம் வைகோ, போயஸ் தோட்டம் சென்று அன்பு சகோதரியோடு 35 சீட்டுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். தாலிகட்டிக் கொள்ள மேடையில் காத்திருந்த மணமகளை ஏமாற்றிவிட்டு ஓடிய மணமகன் மாதிரியான காரியத்தை செய்திருந்தார் வைகோ.
திமுக கூட்டணியை விட்டு அவர் வெளியேற அப்போது சொன்ன காரணம் இருபத்தியொன்று.
ஆம். திமுக இருபத்தியொன்று சீட்டுகள் மட்டுமே தர முன்வந்ததால் அன்புச்சகோதரியோடு தேர்தலை சந்திக்க முடிவெடுத்ததாக சொன்னார் (திமுகவே அப்போது மொத்தமாக 132 சீட்டுகளில்தான் போட்டியிட்டது). இந்த அடாத முடிவினை மதிமுக தொண்டர்களை சுலபமாக ஒப்புக்கொள்ள வைக்க அவரால் முடிந்தது. ஒரே ஒருவரை மட்டும் அவரால் சமாதானப்படுத்த இயலவில்லை. கலிங்கப்பட்டிக்கே நேராக சென்று அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் வைகோவை ஈன்றெடுத்த அன்னையார். மகனை வெஞ்சிறையில் போட்ட சீமாட்டியுடனேயே, அதே மகன் தேர்தல் களம் காண்பதை அந்த தாயுள்ளத்தால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.
இதோ ஐந்தாண்டுகள் கழிந்துவிட்டது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.
இப்போதும் காரணம் அதே இருபத்தியொன்று.
அன்று கலைஞர் தருவதாக சொன்ன இருபத்தியொன்றை வைகோ உதாசீனம் செய்தார். இன்று புரட்சித்தலைவியிடம் அதே இருபத்தியொன்றை மட்டுமாவது தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடியும், அம்மாவின் மனம் இரங்கவில்லை. கடைசிவரை காக்க வைத்து கழுத்தறுத்திருக்கிறார்.
இப்போதும் வைகோ கலிங்கப்பட்டிக்கு விரைகிறார், அன்னையின் திருமுகத்தை காண. ஒருவேளை ஐந்தாண்டுகளுக்கு முன்பு அன்னையின் உள்ளத்தை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதற்காகவும் இருக்கலாம்.
நிச்சயமாக இருக்கலாம்.ஆனால் வைகோ எனும் மாமனிதனின் இழப்பு தமிழ் சமூகத்திற்க்கே பெரிய இழப்பு.ஜெயாவிற்க்கு இதுதான் கடைசி தேர்தல்.
பதிலளிநீக்குஅப்படியே வரிக்கு வரி வழிமொழிகிறேன்..........
பதிலளிநீக்கு\\ முன்னாள் கலைஞரின் போர்ப்படைத் தளபதியுமான வைகோவும் \\
என்றிருப்பதை மட்டும்,
“கலைஞரின் முன்னாள் போர்ப்படைத் தளபதியுமான ” என,
மாற்றி விடுங்கள்... தயவுசெய்து...........
அருமையா சொல்லிருக்கீங்க லக்கி.
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை லக்கி.
பதிலளிநீக்கு//தாலிகட்டிக் கொள்ள மேடையில் காத்திருந்த மணமகளை ஏமாற்றிவிட்டு ஓடிய மணமகன் மாதிரியான காரியத்தை செய்திருந்தார் வைகோ//
சில சீட்டுகளுக்காக தி.மு.க வை விடுத்து அ.தி.மு.க விடம் சென்றதை இதை விட எளிய முறையில் சொல்ல முடியாது. அவர் மீது இருந்த மதிப்பு உருக்குலைந்து போனது அந்த சம்பவத்தில் தான்.
இன்றைக்கு அவர் தேர்தலில் நிற்காதது சரி என்றே தோன்றுகிறது. நல்ல வழி வேறு இல்லை
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டிய தலைவனுக்கும் துரோகம் செய்து விட்டு,
பதிலளிநீக்குபெற்றெடுத்த அன்புத் தாயின் சொல்லையும் தட்டிவிட்டுச்,
சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தார் அன்று....
இன்று செல்லும் திக்கறியாமல் தனது எதிர்காலத்தினை மட்டுமின்றித் தன்னை நம்பித் தன்னுடன் வந்தவர்களின் எதிர்காலத்தினையும் சூனியமாக்கி விட்டு நிற்கிறார்.....
// "ஆணவக்காரியின் ஆட்சி ஒழிக"
பதிலளிநீக்கு//
அண்ணே, அது ”பாசிஸ ஜெயலலிதா ஒழிக” கோஷம். வரலாறு முக்கியம் :)
மனம் ஆறவில்லை. மிகப்பெரிய கோழையும், மிகப்பெரிய துரோகியுமான வைகோ அழியவேண்டியவர் தான். நம்பியவரை என்றைக்குமே அவர் கரைசேர்த்ததில்லை, தற்பொழுதுள்ள அவர் கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். செய்வதறியாது திகைத்துப் போய் அவமானத்தில் கூனிக்குறுகிப் போய் நிற்கிறார்கள். வைகோவுக்காக அல்ல அந்த தொண்டர்களுக்காகத் தான் என் மனம் பதபதைக்கின்றது.
பதிலளிநீக்குஉவமை சரி.
பதிலளிநீக்குசிறு மாற்றம் கூடச் செய்யலாம்.
கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்த பந்தி பரிமாறும் ஒப்பந்தக் காரர் மண்டபத்திற்கு வந்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போவது போன்ற நிகழ்வு
இவர் போனால் என்ன, இருக்கும் நபர்கள் பந்தி பரிமாறி கல்யாணத்தை சிறப்பாக நடத்துவோம்
2006ல் போயஸ் தோட்டத்தின் பட்டுக் கம்பள வரவேற்புடன், 35 தொகுதிகளையும் பெற்றுக் கொண்டு, அம்மையாருடன் கூட்டணி கண்ட கலிங்கப்பட்டியாரின் இன்றைய நிலைதானே,
பதிலளிநீக்குதற்போது 41 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு அம்மையாரிடம் அடைக்கலம் அடைந்திருக்கும் நடிகர் விசயகாந்தின் எதிர்கால நிலையும்............
இவற்றையெல்லாம் பார்த்த பிறகும் அம்மையாரின் காலடியில் மீண்டும் மீண்டும் விழுபவர்கள் இருக்கும் பொழுது அம்மையார் எப்படி மாறுவார்?
///@ஆண்டாள்மகன் said...
பதிலளிநீக்கு/
போடா வை ஆதரித்து பேசிய போதே மாமனிதன் அந்தஸ்தை அவர் இழந்து விட்டார். He is now just another dirty politician.
Before saying anything, let me clarify one thing. I am neither a support of Jayalalitha nor Karunanidhi. Have voted with DMK and co,believing that they do atleast some good, compared to AIADMK thats synonymous to scams and nothing else.
பதிலளிநீக்குHaving read all your articles in your blog, I cannot understand how any sane person could overlook the SPECTRUM and go with the DMK this time. I am not telling anyone to vote for AIADMK, but completely ignoring this SCAM is totallay mind blogging. Selling out the country for what 200 crores?
Mr.Karunanidhi was in a unique position to do much good. Instad he chose to waste the public tax monney on various schemes that does not last very long, save a few. Its very sad to think what he has become now..
You, ignoring all this, and still trumping for the DMK is somthing thats incomprehensible to me. You can't simply say that, Jaya is going rob the country even worse, but even that, does not excuse M.K doing the same or your supporting it.
- Sinna
than vinai thannai sudum. thannaiparri sariyaaga therinthukollaathavar pinnaal ithanai pera!
பதிலளிநீக்குKaalam ellathukum pathil sollum... Vai ko avargale.. andru 2006 neengal kalaignaruku pakkathil irunthirunthaal, thi mu ka vukku suyamaaga aatchi seiya thevayaana thoguthigal kidaithirukum... ithanaal congress ah pidithukondiruka vendiya avasiyam irunthirukaathu... innum evvalavo nanmai irunthirukum... aanaal.. andru neengal edutha thavaraana mudivaal ethanai ezhappugal..Eezha thamizhargal visayathil onnum seiya mudiyaatha nilayil irunthatharke neengal thaan kaaranam....
பதிலளிநீக்குIndru athe eezhathai aatharithatharkaaga neengal thooki veesapattirukireergal...
ki. veeramani ayya avarkalin azhaipai etru kalaignarodu kai koodungal... therthal purakanippu endra tharkolai mudivai edukaatheergal...
கலைஞர் தருவதாக சொன்னது 27 இல்லையோ?
பதிலளிநீக்குஅதே மூன்று...
பதிலளிநீக்கு2006 பொதுத்தேர்தலில் 3 தொகுதிகள் அதிகம் கேட்ட வைகோ வின் கோரிக்கையை நிராகரித்தார் கருணாநிதி. 2011 பொதுத்தேர்தலில் 3 தொகுதிகள் அதிகம் கேட்ட காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விளகுவதாக அறிவித்து, வெட்டி வீராப்புக் காட்டி, வாங்கிக் கட்டிக்கொண்டார் கருணாநிதி. காங்கிரஸ் கேட்ட அதிகப்படியான 3 தொகுதிகளையும் கொடுத்து விட்டு அசடு வழிந்தார் (கலைஞர் சரணாகதி- நன்றி ஞாநி). "ஊழ்வினையில் நமக்கு நம்பிக்கையில்லை. அது பகுத்தறிவுக்கு எதிரானது. அதே நேரம் 'எல்லா வினைக்கும், இணையான எதிர்வினை உண்டு' என்கிற அறிவியல் கூற்றை நாம் நம்புகிறோம்".
"ஏற்கனவே ஒரு இடுகையில் நீங்கள் குறிப்பிட்டது போல ஆறாவது முறையாக..." நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விட்டதென்னவோ உண்மை.
- கிருஷ்ணமூர்த்தி
With Respect to Vaiko both DMK and ADMK are same "They dont want Vaiko to be the alternate force or they dont want him in assembly or parliament" . Both used and cheated Vaiko . Only difference is with admk it is 21 and with dmk it is 36 . Tamilnadu misses alternate voice again in the assembly. Vaikos weakpoint is , he is too emotional. His decision not to contest elections would be better for him and his party men as they dont need to waste their efforts and money for somebody . He might look like joker with DMK and ADMK but with me he is a leader who stands tall after Kamaraj and Nallakannu
பதிலளிநீக்குvery well written..great facts..
பதிலளிநீக்குசீறும் புலி கிரிச்சிடும் எலியானது
பதிலளிநீக்குMika arputhamana pathivu lucky..Thannudaya arasiyal mudivai thaane thedikkondaar Vaiko.Pathriya kaariyam sitharippogum..
பதிலளிநீக்குநண்பரே, இன்றைக்கு தேடும் இந்திரஜித்தனை அன்றே கேட்ட தொகுதி கொடுத்து தக்க வைத்திருக்கலாமே அப்போது நீங்களும் ஜே போலதானே நடந்து கொண்டீர்கள்
பதிலளிநீக்குநண்பரே, இன்றைக்கு தேடும் இந்திரஜித்தனை அன்றே கேட்ட தொகுதி கொடுத்து தக்க வைத்திருக்கலாமே அப்போது நீங்களும் ஜெ போலதானே நடந்து கொண்டீர்கள்
பதிலளிநீக்குவைகோ சரியான சந்தர்ப்பவாதி. தமிழீழம் பிசுபிசுத்துப்போன பிறகு அவருக்கென்று ஒரு கொள்கையும் இல்லை. அவரால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்?
பதிலளிநீக்குSo that u also posted this article on "21"st march a brother..?
பதிலளிநீக்கு~Banu
Vaiko has Age Advantage. With in next 5 yrs, he will reestablish himself...
பதிலளிநீக்குElegant! I was a great fan of Vaiko when he left DMK and when the series of happenings which you mentioned...changed my opinion towards him. Yes! he met his mother to get apology!
பதிலளிநீக்குada ada enna karisanam vaiko mel.. kalaignar romba nallavar.. amma oru kudikedi.. vaiko vazhi thavariyavar..
பதிலளிநீக்குezhuthu touching-a irukku.. aana innikku makkalukku enna choice irukko (dmk / admk), adhudhan vaikovukkum.. adhu daan nelavaram..
saatchikaaranukkum sandaikaarananukkum naduvula maatikittu muzhikkiraar. adhanaalayey saatchikaarano, sandaikaarano nallavanga aayidamudiyaadhu.