26 மார்ச், 2011

குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம்.

தேசிய முற்போக்கு திம்மி கழக தலைவரான விஜயகாந்த் தற்போது தங்கத்தாரகையோடு கூட்டணியில் இருக்கிறார் என்பதால் அவரை குறித்து தேசத்தில் எண்பது கோடி ஹிந்துக்களும் பெருமை அடைந்திருக்கிறார்கள். அதே நேரம் அவர் குறித்து தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கொடூர வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

மூத்த திம்மியின் லேட்டஸ்ட் அல்லக்கை திம்மியாக நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறியிருக்கிறார். திருவாரூரில் நடந்த திம்மிகள் முன்னேற்ற கழக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஈ காக்கை கூட இல்லையாம். அந்த மேடையில்தான் வடிவேலு குடித்துவிட்டு 'குடிகார' வாந்தி எடுத்திருக்கிறார். தங்கத்தாரகையோடு கூட்டணி அமைத்திருக்கும் விஜயகாந்த் குடிகாரர் என்று பேசியிருக்கிறார். அன்புச் சகோதரர் விஜயகாந்த் குடிக்கும்போது, இவரென்ன ஊறுகாய் வாங்கிக் கொடுத்தாரா?

அதெல்லாம் இருக்கட்டும். அன்புச் சகோதரர் குடிப்பார் என்கிற விஷயத்தையே இவர்தான் கண்டுபிடித்தது போல பீத்திக் கொள்கிறாரே? அதை கேட்டு மூத்த திம்மியும், அவரது மகன்களான மதுரை திம்மி, கொளத்தூர் திம்மி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரிக்கிறார்களே? இந்த அநியாயத்தை தட்டிக் கேட்பார் இல்லையா? தட்டிக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் அயல்நாட்டு அண்டோமேனியாவின் அடியாளான தாடிவைத்த சர்தார்ஜியோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாராம்.

அன்புச் சகோதரருக்கு சோமபானம் அருந்தும் பழக்கம் இருப்பதை கண்டறிந்து முதன்முதலாக உலகுக்கு தெரிவித்த பெருமை நம் தங்கத்தாரகையே சாரும். இண்டெலிஜென்ஸ் பிராப்பர்ட்டி ரைட்ஸ் என்கிற சட்டம் மூலம் பார்க்கப் போனாலும் கூட, புரட்சித்தலைவியே இந்த கண்டுபிடிப்புக்கான உரிமை பெற்ற சொந்தக்காரர் ஆவார். நேற்று வந்த வடிவேலுவோ அல்லது யாரேனும் குடிவேலுவோ இதை தங்கள் கண்டுபிடிப்பு என்று மக்கள் முன் சொன்னால், அதை நம்பிவிட தமிழக மக்கள் என்ன மாங்காய்களா? வாழை மட்டைகளா?

அம்மா அன்புச் சகோதரரை குடிகாரர் என்று செல்லம் கொஞ்சியதும், பதிலுக்கு குடிகாரச் சகோதரர், நீதான் ஊத்திக் கொடுத்தாயா என்று அன்பாக பதிலளித்ததையும் திம்மிக்கள் மறைக்க நினைத்தாலும், தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். ஆயிரம் பாட்டில்கள் மறைத்து நின்றாலும், இரட்டை இலை மறைவதில்லை.

இந்த வதந்தியைப் போலவே இன்னொரு வதந்தியும் உலவுகிறது. ஏதோ 'டாஸ்மாக்' என்கிற சேவை அமைப்பினை முதன்முதலாக மூத்த திம்மிதான் அமைத்ததைப் போல குடிகார வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து, அவர்களது வாக்கினை கவரும் அடாத செயலிலும் திம்மிக்கட்சியினர் ஈடுபட்டிருக்கிறார்கள். டாஸ்மாக் பெயரில் சரக்கு விற்கமுடியும் என்கிற பேருண்மையை அண்ட சராசரங்களுக்கும் முதன்முதலாக உணர்த்தியவர் அம்மா. தங்கத்தாரகையின் ஆட்சியில்தான் தமிழகம் வளமாக, பசுமையாக இருந்தது என்பதை குறிக்கும் பொருட்டு, டாஸ்மாக் போர்டுகளை பச்சை வண்ணத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டவரே அம்மாதான் என்பதை தமிழக குடிகார வாக்காளர்கள் அவ்வளவு விரைவில் மறந்து விட மாட்டார்கள். அந்த டாஸ்மாக்குக்கு சரக்கு பஞ்சம் ஏற்பட்டு விடுமோவென்று அஞ்சி, 'மிடாஸ்' தொழிற்சாலையை உருவாக்கியவரும் அம்மாதான்.

'குடி'யரசு என்கிற உயர்ந்த சித்தாந்தம் அடிப்படையில் பார்க்கப்போனாலும் எந்த திம்மியை விடவும், புரட்சித்தலைவி அம்மா தலைசிறந்தவர் என்பதை நாடு மறக்காது. நாட்டு மக்கள் நன்றி மறக்கவும் கூடாது. காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த தமிழன், நிம்மதியாக குவார்ட்டர் வாங்கி சரக்கு அடிக்கக்கூடிய நிலைமை இன்று தமிழகத்தில் நிலவுகிறதென்றால், நாமெல்லாம் நன்றி கூற கடமைப்பட்டவர் உலகம் போற்றும் உத்தம அம்மா புரட்சித்தலைவி டாக்டர் தங்கத்தாரகை அவர்கள்தான். எனவே 'குடி'யாட்சி நீடிக்க, குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம். அம்மாவின் சின்னம் இரட்டை இலை.

குடியுயர அம்மா வரவேண்டும், அம்மா உயர நாடுயரும். அம்மா வாழ்க. திம்மி வீழ்க.

23 கருத்துகள்:

  1. சரக்கினை ஊற்றிக் கொடுத்தவரும், வாங்கிக் குடித்தவரும் சேர்ந்து அமைத்துள்ள இந்தக் கூட்டணிக்காக, உயர்தர சவால்கார மதுபான ஆலை அதிபர்தான், குடித்து விட்டு மட்டுமே சட்டசபைக்கு வருபவருக்குப் பெரும் நிதியளித்த உபயதாரராம்..........

    பதிலளிநீக்கு
  2. A very cheap comment. A writer or critic should do write like this. While accepting the agony behind the spirit of the comment, the way in which the writeup is carried is of below taste.
    My humble request to every writer to motivate, instigate and inspire the readers, who ever they are.
    Paa Krishnan

    பதிலளிநீக்கு
  3. கலைஞருக்கு இணையான ஒரு தகுதியாவது எதிரணியில் உள்ளவர்களுக்கு உண்டா. சமூக நீதி என்றால் என்ன என்று ஒரு 10 வரி எழுத முடியுமா. கேப்டனால். ஒரு பத்து வரி பேச முடியுமா நடிகர் சரத்குமாரால். ஒரு பத்து வரி மேடைகளிலே உரையாற்ற முடியுமா அம்மா அவர்களால். சமூக நீதி என்ற சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் கலைஞரை எதிர்க்கிறார்கள்.

    எல்லாம் தோற்றம் அளிக்கிற தலைவர்கள். கொஞ்சம் சிரமப்பட்டாவது சிரித்து பேசு மற்றவர்களிடம் என்று சொல்லி உட்காரவைத்து சிரிக்கச்சொல்வார்கள். மேடைக்கு வரும்போதாவது கொஞ்சம் நேரம் உள்ளுக்குள் போடாமல் பேசு என்று சொல்லி மேடையிலே ஏற்றி வந்து நிறுத்துவார்கள். ஏதாவது எழுதி தந்தாவது படி என, அறிக்கையை எழுதித் தந்து படிக்கச் சொல்வார்கள். அப்படி எழுதித் தருகிற அறிக்கையை படிக்கிற தலைவர்கள். அவர்கள் தோற்றம் அளிக்கிற தலைவர்கள்.

    திராவிட இயக்க கொள்கைகள் என்றால் என்ன. அண்ணா சொன்ன கொள்கை எது. மாநில சுயாட்சிதான் அண்ணாவின் இறுதி மூச்சு கொள்கையாக இருந்தது என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மாநில சுயாட்சியை பற்றி ஓரிரு வரிகளாகவது எழுதுகிற ஆற்றல் கலைஞரை எதிர்ப்பவர்களுக்கு உண்டா. என்ன தகுதி இருக்கிறது.



    கலைஞரை போல குறளோவியம் எழுத வேண்டாம். கலைஞரைப் போல தொல்காப்பிய பூங்கா எழுத வேண்டாம். கலைஞரைப் போல இலங்கிய நடையிலே அறிக்கைகள் எழுத வேண்டாம். சொந்தமாக சுயமாக ஒரு பிரச்சனையைப் பற்றி அறிக்கை எழுதுகிற ஆற்றல் அந்த எதிரணியில் இருப்பவர்களுக்கு உண்டா. எந்த தகுதியுமே இல்லை. மக்களை நேரிக்கிற பண்பு உண்டா. கலைஞரை விமர்சிப்பது மட்டும்தான் அவர்களது கொள்கை.

    - Thiruma's speach
    http://www.nakkheeran.in/users/Election2011.aspx?E2011=436

    பதிலளிநீக்கு
  4. இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை லக்கி ! அம்மா ஆரம்பித்தார் அய்யா வளர்த்துவிட்டார் இப்போது அமோகமாக வியாபாரம் நடக்கிறது . முந்தைய அரசின் நல்ல திட்டங்களை அடுத்த அரசு கிடப்பில் போடும். அதிமுகவின் நல்ல திட்டங்களான தொட்டில் குழந்தை , மழை நீர் சேகரிப்பு திட்டங்களை திமுகவும் , திமுகவின் உழவர் சந்தை , நமக்கு நாமே திட்டங்களை அதிமுகவும் ஒழித்துக் கட்டின இது போல எண்ணற்ற நல்ல திட்டங்களை அடுத்து வந்த ஆட்சியில் காலி செய்தனர் , சத்துணவு திட்டம் மட்டுமே விதி விலக்கு . ஆனால் டாஸ்மாக்கை மட்டும் இரு கழகங்களும் பாராட்டி , பீருட்டி வளர்க்கின்றனர் , இவர்களின் சமூக சிந்தனையை நினைத்தால் .............. டாஸ்மாக் வியாபார ஒப்பந்தங்களைப் பார்த்தால் தான் தெரியும் திமுகவும் , அதிமுகவும் எவ்வளவு அருமையான கூட்டணி அமைத்துள்ளார்கள் என்று , நாம் வெட்கி தலை குனிய வேண்டிய விஷ

    பதிலளிநீக்கு
  5. நீங்க Jayalalithaa வை திட்டுரீங்களா ஆதரிகிண்றீன்களா.. புரியல.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா11:50 PM, மார்ச் 26, 2011

    Hi Lucky

    What ever u have written in the article - your decision is sensible - Amma Vazhga

    DMK Veezhga

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா8:10 AM, மார்ச் 27, 2011

    good .... y r right.... super

    பதிலளிநீக்கு
  8. what to do sir!
    when 60,000 tamils were massacred on 14.5.2009,no one in TN made any noise: to keep,MANJAL THUNDU & CABARA DANCER in the CHAIR, TN people are spending overtime: Oh what a TN It is?

    பதிலளிநீக்கு
  9. அஞ்சா நெஞ்சன் அண்ணன் டி.ஆர். இந்த தடவை தேர்தல்ல போட்டியிடாம ஒதுங்கிட்டாராமே!!!

    பதிலளிநீக்கு
  10. ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா முடியலடா சாமீ.. இப்பவே கண்ண கட்டுதே, மூத்த திம்மியின் பேச்சு முழுசா கேட்டா மூச்சு நின்னுரும் போல!

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா8:43 PM, மார்ச் 27, 2011

    typical karunanidhi type response... wont say why you did something, but will point to someone else... if u r tamizh thalaivar who wants to improve tamil people, jus shut tasmac down and instead of pointing to what happened in past.....

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா9:52 PM, மார்ச் 27, 2011

    enna oru nakkal..padichumudikkiravaraikkum sirichukitte irunthen....

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா11:41 PM, மார்ச் 27, 2011

    Please post about the number of liquor licences given during JJ and MK. Recently 12(5 of them for DMK ministers and 2 for congress) licences were given by MK which is more than the number of licences given during JJ.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா4:30 AM, மார்ச் 28, 2011

    hi

    its "intellectual" property rights - not "intelligent"

    பதிலளிநீக்கு
  15. ரைட்டு நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டா போச்சு ...!

    அதென்ன திடீர்னு கச்சி மாறிடீங்க..! முந்திய பதிபுல வந்த எதிர்ப்பு காரணமாவா...?

    பதிலளிநீக்கு
  16. @ ப்ரகாஷ் : நீங்க சொல்றதப் பார்த்தா என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களானு கேட்பது மாதிரி இருக்கு , நீங்க சொல்ற கலைஞர் 1967ல் இருந்தார் கொஞ்சம் 1989ல் வி.பி.சிங் இருக்கும் போது இருந்தார் . அவரே மறந்து போன கொள்கைகளை நீங்கள் ஏன் இன்னும் மறக்கவில்லை.திருமா நன்றிக் கடனுக்காக பேசுறார்னா நீங்களும் அதை நம்பிட்டு .....இது ஜெ சொல்கிற "அண்ணா நாமம் வாழ்க , புரட்சி தலைவர் நாமம் வாழ்க " மாதிரி , ரொம்ப ஆராயக் கூடாது

    பதிலளிநீக்கு
  17. மதுரையில் நடந்த கூட்டத்தில் மூத்த திம்மி மற்றும் இளைய திம்மிகள் ஆசி இல்லாமல் கைப்பிள்ளை இவ்வளவு உளறியிருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். எனக்கு என்ன ஒரே வருத்தம் என்னவென்றால் இத்தனை திம்மிக்களின் ஆதரவு இருந்தும் நம்ம குஷ்பு ஆண்டிக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கவில்லை என்று ஒரே விசனம் போங்கள், சுந்தர்.சி. கூட இவ்வளவு கவலைப்பட்டு இருக்கமாட்டார் 2 நாட்களாக சாப்பிடவே இல்லை தெரியுமா

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா3:05 PM, மார்ச் 29, 2011

    1000 பாலோயர்கள் மற்றும் 775 போஸ்ட்களை கடந்த மாமனிதன் ஜாக்கியைவிட நீ உயர்ந்தவனா? திருந்துடா,டோமர்,இல்லாட்டி திருத்துவோம்.உன்கிட்ட ஒரு திமிர் தெரியுது ஆனா,மிகத்தரமான ஜனரஞ்சக எழுத்தாளர் ஜாக்கியிடம் ஆணவமே இல்லை.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா10:21 AM, மார்ச் 30, 2011

    'licences were given by MK which is more than the number of licences given during JJ'

    But still the purchasing orders from Tasmac are going to the JJ/Sasikala owned benami breweries.

    பதிலளிநீக்கு