2 ஏப்ரல், 2011

மின்வெட்டு – யார் காரணம்?

இது நடந்து ஒரு பத்து ஆண்டுகள் இருக்குமென்று நினைக்கிறேன். நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைகிறேன். நான் நுழைந்ததுமே ஓடிக்கொண்ட மின்விசிறி பவர்கட்டால் நின்றது (திமுககாரன் ராசியே இதுதான்). நண்பர் கோபமாக சொன்னார். "விவசாயிகளுக்கு இலவச கரெண்டுன்னு கலைஞர் அறிவித்ததால்தான், நமக்கு அடிக்கடி கரெண்டு கட் ஆவுது"

என்னதான் கல்வி கற்றிருந்தாலும், நகர்ப்புற மக்கள் அரசியலறியாத மொன்னைகள் என்பதற்கு அந்த நண்பன் நல்ல உதாரணம். எனக்குத் தெரிந்து என்னுடைய வட்டாரத்தில் 'ஜெயா செய்திகளை' சீரியஸாகப் பார்ப்பவன் அவன் மட்டுமே என்பதால், அவனோடு விவாதிப்பதும், சுவற்றில் தலையைக் கொண்டு முட்டிக் கொள்வதும் ஒன்று என்று எனக்குத் தெரியும்.

"எனக்கு ஃபேன் சுற்றுவதை விட, பசியெடுத்தால் சோறு தின்பது முக்கியம். எனவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தால் மின்வெட்டு ஏற்படுகிறதென்றால், அந்த மின்வெட்டை நான் வரவேற்கிறேன்" என்று சொல்லிவிட்டு அப்போதைக்கு விவாதத்தை முடித்தேன். சோற்றுக்கும், மின் வெட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்ததால், நான் சுலபமாக தப்பிக்க முடிந்தது.

நகர்ப்புற மக்கள் இப்படித்தான் தெனாலி போல யோசிக்கிறார்கள். 'தெனாலி' பாட்டில் கமலஹாசன் பாட்டுக்கு நடந்துக்கொண்டே இருப்பார். அவரால் ஊரே பற்றியெரியும். அதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. தெரிந்தாலும் கவலை இல்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வீடு என்பது ஒரு சிறிய சமையலறையும், கொஞ்சம் பெரிய வரவேற்பரையும் மட்டும்தான். ஒரு போர்ட்டபிள் டிவி, ஒரு மின்விசிறி, ஒரு வெண்குழல் விளக்கு, சமையலறையில் ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு, ஆறு மணி ஆனால் வாசலில் ஒரு குண்டு பல்பு. பாத்ரூமில் 40 வாட்ஸுக்கும் குறைவான மங்கிய ஒளி கொடுக்கக்கூடிய ஒரு பல்பு. போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுக்க மோட்டார் இல்லை. கைப்பம்பில் அடித்துதான் உபயோகப்படுத்தினோம். பகலில் என்ன வெக்கையாக இருந்தாலும் மின்விசிறியை பயன்படுத்துவதில்லை. இரவு தூங்கும்போதுதான் ஸ்விட்ச் போடுவோம். யாராவது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், சும்மா விருந்தோம்பலுக்காக ஃபேன் ஸ்விட்ச்சை ஒரு பத்து நிமிடம் தட்டி விடுவதுண்டு. மின் பயன்பாட்டை பொறுத்தவரை நாங்கள் மட்டுமல்ல. எல்லோருமே கொஞ்சம் கறாராக இருந்த காலம் அது.

இன்று என்னுடைய வீடு டூப்ளக்ஸ் ஆக உருமாறியிருக்கிறது. ஒரு வரவேற்பரை, ஒரு சமையலறை, இரண்டு படுக்கை அறைகள். மாடியிலும் இதே அமைப்பு. ஒவ்வொரு அறையிலும் பகலிலும் கூட விளக்குகள் எரிந்துகொண்டே இருக்கிறது. மின்விசிறிக்கு ஓய்வே இல்லை. சமையல் அறையில் கூட ஒரு மின்விசிறி. இரவு முழுக்க ஏ/சி. ஃப்ரிட்ஜ். மிக்ஸி. கிரைண்டர். அயர்ன்பாக்ஸ். மோட்டார். கம்ப்யூட்டர். இரண்டு 29 இன்ச் டிவிகள் – இரவு ஒரு மணியில் இருந்து காலை 7 மணி தவிர்த்து என்னேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. வீடியோ கேம் விளையாட போர்ட்டபிள் டிவி. இன்னும் நிறைய. வீட்டுக்குள் போய் எதைப்பார்த்தாலும் மின்சாரத்தை சார்ந்த வீட்டு உபயோகப்பொருளாகவே இருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் நான் நிரம்பவும் சொகுசு ஆகிவிட்டதை உணர்கிறேன். ஏப்ரல்-மே வெயில் காலங்களில் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டில் போட்டுப் படுப்பது அப்போதெல்லாம் வழக்கம். மல்லாந்துப் பார்த்தால் வானில் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும். சப்தரிஷி மண்டலம், கார்த்திகை நட்சத்திர கூட்டம் இதையெல்லாம் வெறும் கண்களால் தெளிவாகப் பார்த்து 'விண்வெளி அறிவியல்' பேசிக் கொண்டிருப்போம். யதேச்சையாக நேற்று வானத்தைப் பார்த்தேன். மேகமூட்டம் இன்றி தெளிவாக இருந்தாலும், பல லட்சம் நட்சத்திரங்கள் இந்த இருபது வருடங்களில் காணாமல் போய்விட்டதைப் போல உணர்வு. நாடெங்கும் பெருகிவிட்ட மின்னொளி விளக்குகளால் வானம் 'பளிச்'சென்று தெரிவதில்லை. என்றாவது உங்கள் மின்வெட்டு ஏற்பட்ட இரவில் மொட்டை மாடிக்குச் சென்று வானத்தைப் பாருங்கள். நான் சொல்லவரும் இந்த வித்தியாசம் புரியும்.

இன்றைய மின் பற்றாக்குறை ஒரு குற்றமென்றால், நானும் ஒரு குற்றவாளி. தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உருவிக் கொண்டிருக்கிறேன். என் வீட்டில் ஆளில்லாத அறைகளிலும் கூட மின்விசிறிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. விளக்குகள் எரிந்து கொண்டிருக்கிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வழிந்தாலும், பதறிப்போய் நான் மோட்டாரை நிறுத்துவதில்லை. அலட்சியம்.

நான் சிறு குற்றவாளி. எறும்பு மாதிரி. அரசாங்கத்திடம் இருந்து ஒரே ஒரு சர்க்கரைத் துண்டை எடுத்து உருட்டி சென்று கொண்டிருக்கிறேன். கரும்புக்கட்டையே தூக்கிச் செல்லும் யானைகள் மாதிரி மெகா குற்றவாளிகள் நிறைய பேர் உண்டு. தமிழகத்தின் தொழில் வளத்தை பெருக்குகிறோம் என்கிற பெயரில் இங்கே வந்து பட்டறை போடும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள். அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும்போதே 'தடையற்ற தரமான மின்சாரம்' என்கிற ஒரு பிரிவினை ஒப்பந்தத்தில் கறாராக சேர்த்துவிட்டே இங்கே தொழில் ஆரம்பிக்கிறார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உறிஞ்சிக் கொண்டிருக்கும் மின்சாரத்தை தடையின்றி தந்துக் கொண்டிருக்க வேண்டுமானால், தமிழக மின்சார வாரியம் இனி சூரியனுக்குப் போய் ஒரு ஃபவர் பிளாண்ட் அமைத்துதான் நேரிடையாக மின்சக்தி பெற்றுத்தர வேண்டும். இந்நிறுவனங்களால் வேலைவாய்ப்பும், தொழில்வளமும் பெருகுகிறது என்று சப்பைக்கட்டு கட்டும் அதே வாய்கள்தான், மேட்ச் பார்க்கும்போது ஃபவர்கட் ஆனதுமே அரசாங்கத்தை சபிக்கின்றன.

சரி. நாம்தான் அறிவுகெட்டத் தனமாக மின்சாரத்தை அதிகமாக உபயோகிக்கிறோம். தொழில்நிறுவனங்கள் அசுரத்தனமாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் என்ன செய்யவேண்டும், புதிய மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தி கூடுதல் மின்சாரத்தை தயாரிக்க முடியாதா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். நியாயமான கேள்வி.

தமிழகத்தின் மொத்த மின் தேவை 12,000 மெகாவாட். 2001ல் தொடங்கி எந்த புதிய மின் திட்டமும், அதற்கான கட்டமைப்பும் ஏற்படுத்தப்படாத நிலையில், இன்று நமக்கு 4,000 மெகாவாட் பற்றாக்குறை நீடிக்கிறது. 2004 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயலலிதா அரசு, எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் 2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்கிற வெறியில் 2004-06 காலக்கட்டத்தில் ஊதாரித்தனமாக மின்சாரத்தை செலவு செய்திருக்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது நாம் சந்தித்துவரும் மின்வெட்டுக்கு காரணம் நிச்சயமாக திமுக அரசு அல்ல. முந்தைய அதிமுக அரசுதான் இவ்விஷயத்தில் குற்றவாளி. கடந்த ஜெயலலிதா அரசின் துக்ளக் தர்பாரால் வீணடிக்கப்பட்ட மின்சக்தியால், இன்று தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்சாரம் என்றில்லை. எந்தவித கட்டமைப்பு வசதி பற்றியும் அதிமுக கவலையே படுவதில்லை என்பதுதான் தமிழக வரலாறு. அவர்களுக்கு நீண்டகாலத் திட்டங்கள் போடத்தெரியாது. தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பது, நியாயமாக படித்தவர்களுக்குதான் தெரியவேண்டும். துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டில், கல்வி கற்றவர்கள்தான் பாமரனையும் விட மோசமாக சிந்திக்கக்கூடிய அறிவினைப் பெற்றிருக்கிறார்கள்.

முந்தைய அதிமுக அரசின் பாவமூட்டையை தன் தலையில் சுமந்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது பல்வேறு புதிய மின்திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக 2012 வாக்கில் 6800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும். இது நம் தேவைக்கும் அதிகமான சக்தி. எதிர்காலத்தில் திமுக வழங்கப்போகும் மிக்ஸி அல்லது கிரைண்டர் பயன்படுத்த தேவைப்படும் கூடுதல் மின்சாரத்துக்கு இது உதவும்.

தற்போது நடந்துவரும் சில மின் திட்டங்கள் :

-  வடசென்னையில் 1200 மெகாவாட் விரிவாக்கம்

-  மேட்டூரில் 600 மெகாவாட் விரிவாக்கம்

-  என்.டி.பி.சியோடு இணைந்து தமிழக மின்சார வாரியம் உருவாக்கி வரும் வள்ளூர் 1500 மெகாவாட் மின் திட்டம்

-  பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தமிழக மின்சார வாரியம் உருவாக்கி வரும் உடன்குடி 1600 மெகாவாட் திட்டம்

-  நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனோடு இணைந்து தூத்துக்குடியில் தமிழக மின்சார வாரியம் உருவாக்கி வரும் 1000 மெகாவாட் திட்டம்

இவையெல்லாம் கடந்த ஐந்தாண்டுகால திமுக அரசு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் திட்டங்கள். இந்த திட்டங்களின் பயனை தமிழக மக்கள் 2012ல் அறுவடை செய்யலாம்.

இதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலையும் இவ்வாண்டின் இறுதியில் இருந்து மின்சாரம் தயாரிக்கத் தொடங்கும் என்று தெரிகிறது. தற்போதைய பற்றாக்குறையை உடனடியாக இதைக்கொண்டு சமாளித்துவிட இயலும்.

மின்வெட்டு குறித்து திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் கண்ணை மூடிக்கொண்ட பூனைக்கு ஒப்பானவர்கள். பூலோகம் இவர்களால் இருண்டுவிடப் போவதில்லை.

நமக்கான திட்டங்களை தீட்டியவர்களுக்கா நம் வாக்கு, அல்லது திட்டங்கள் தீட்ட வக்கில்லாத ஊதாரிகளுக்கா என்பதை மக்கள் ஏப்.13 அன்று முடிவெடுக்க வேண்டும்.

42 கருத்துகள்:

  1. /தற்போது நாம் சந்தித்துவரும் மின்வெட்டுக்கு காரணம் நிச்சயமாக திமுக அரசு அல்ல. முந்தைய அதிமுக அரசுதான் இவ்விஷயத்தில் குற்றவாளி. /

    Why did you missed usual Mk's statement ? See Andhra , See West Bengal . Both parties and people are culprit . Without the knowledge and vision about power demand/supply both gave approvals to many companies and people are also wasting the power .

    If the government takes steps to prevent power theft by business and by political parties we can save lot of power , also people should do things to reduce their power consumption. Save Energy Save Nation
    Whichever party comes to power should concentrate on taking actions against power theft and also about power generation through renewable sources.

    Lucky day by day you are becoming like ADMK grandma who believed MGR's hug and voted for him saying "He is white he wont lie" , he is affectionate and even today he is sleeping in Marina Beach.

    பதிலளிநீக்கு
  2. //கடந்த ஜெயலலிதா அரசின் துக்ளக் தர்பாரால் வீணடிக்கப்பட்ட மின்சக்தியால், இன்று தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது//
    அதாவது, அந்த இரண்டு வருடத்தில் அதிகமாக மின்சாரத்தை செலவழித்துவிட்டர்கள் , அதை சேமிக்கவில்லை என்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  3. மின் பயன்பாடு அதிகரித்துள்ளதை காமன் ஸென்ஸ் உள்ள அனைவரும் அறிவார்காள். இவ்வளவு நீண்ட விளக்கமெல்லாம் தேவையில்லை. படித்தவன் நகர்ப்புறத்தில் வாழும் சுயபுத்தி உடையவன், பகுத்தறிவுவாதி என்ற கிரீடம்/முகமூடிகளை அணிந்துகொண்டே "முந்தைய அதிமுக அரசுதான் இவ்விஷயத்தில் குற்றவாளி. கடந்த ஜெயலலிதா அரசின் துக்ளக் தர்பாரால் வீணடிக்கப்பட்ட மின்சக்தியால், இன்று தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது." என்ற பசப்புறையை போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!

    அதிமுக எப்படி அடுத்த ஐந்தாண்டுகளுக்கான மின்சாரத்தை முன்கூட்டியே வீணடிக்க முடியும்? சரி எந்த மின் வளர்ச்சித்திட்டமும் அவர்கள் செய்யவில்லை என்றால் ஐந்து வருடங்களில் இவர்கள் போட்டு மின் பற்றாக்குறையை தீர்க்கவேண்டியது தானே?!

    கடந்த நான்கு வருடங்களாகவும் பலரும் கேட்டுக்கொண்டிருந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கலாமே, ஒரு வீட்டின் மின்செலவு தொழிற்சாலையின் மின் செலவு இதெல்லாம் பத்து வருடம் முன்பு என்ன இப்போது என்ன னம் உற்பத்தி என்ன, கடந்த அரசின் உற்பத்தி என்ன என்று தெளிவாக சொல்லி ஊடகங்களில் அப்போதே விளம்பரம் செய்திருக்கலாமே. சுயதம்பட்ட திட்டங்களுக்கு மட்டும் கோடிகோடியாக அரசு செலவில் (இவர்களின் டிவி ரேடியோக்களின் வரவில்) விளம்பரம் செய்தார்களே.

    உலகத்திலேயே ஒரே அறிவாளியான திமுக தலைவரும், நகர்ப்புறங்களிலேயே அதிபுத்திசாலிகளான திமுக தொண்டர்களும் இதை அப்போதே விளக்கியிருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  4. ஆத்தாவுக்கு ஆய் வரலைன்னா கூட அதுக்கும் கருணாநிதிதான்னு காரணம்னு சில,பல எணைய பொரட்சியாளய்ங்க ஆணித்தரமா சொல்லிக்கிட்டு இருக்கும்போது நீங்க என்னமோ மின்வெட்டுக்கு செயா தான் காரணம்னு புதுப்புருடா விடுறீங்க.

    நம்பத்தகுந்தமாதிரி இல்லண்னே.

    பதிலளிநீக்கு
  5. //2004 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயலலிதா அரசு, எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் 2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்கிற வெறியில் 2004-06 காலக்கட்டத்தில் ஊதாரித்தனமாக மின்சாரத்தை செலவு செய்திருக்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.//

    if you explain this, then it will great to understand.

    பதிலளிநீக்கு
  6. பேய்க்கு பயந்து பிசாசிடம் தமிழகம் மாட்டிக்கொள்ளக் கூடாது...

    ஜெயலலித்தா ஒரு பார்பன வெறியாட்டம் போடும் சூனியக்காரி....

    சட்டமன்றத்தில் நான் ஒரு 'பாப்பாத்திதான் என உரக்கச் சொன்ன ஆணவக்காரி....

    கஞ்சா வழக்கு, பாலத்தில் ஊழல்.., போடா சட்டம் என புகுந்து விளையாடியவர் ஜெ...

    ஜெ ஆட்சிக்கு வந்தால் நாடு சுடுகாடாகும்...

    தமிழகத்தை ஆள இன்று உள்ளதில் மிகச்சிறந்த நிர்வாகி ஸ்டாலின் ஒருவர்தான்....

    ஸ்டாலின் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்....

    ஸ்டாலின் கொண்டுவந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பெறுமைகளை சொல்லி முடிக்க இந்த ஆண்டு நாட்கள் போதாது....

    இலவச பட்டா...

    மருத்துவ காப்பீடு...

    குடிசை வீடு கான்கிரீட் வீடாக மாற்றம்....

    மகளிர் சுய உதவிக்குழுக்களுக்க கடன் ....

    கந்து வட்டி ஒழிப்பு....

    ஒரு ரூ. அரிசி.... என அடுக்கிக் கொண்டே போகலாம்....

    கருணாநிதி ஆட்சியிலும் ஊழல் உண்டு... இரவுடிகளின் அராஜகம் உண்டு....

    ஆனால் நிச்சயமாக ஜெ. வால் கருணாநிதியை விட சிறந்த ஆட்சியை தரமுடியாது...

    ஏழைகளின் பிரதிநிதியாக இருந்து சிந்தித்தால் நாம் திமுக விற்கு வாக்களிப்பதே சால சிறந்தது...

    திமுக - தாம் செய்த சாதனைகளைச்சொல்லி வாக்கு சேகரிக்கிறது...

    ஜெ.- மற்றவர்களின் குறையெச்சொல்லி வாக்கு கேட்கிறார்...

    (குறிப்பு நான் திமுக ஆதரவாளரும் இல்லை.... ஜெ -வின் எதிரியும் இல்லை....)

    பதிலளிநீக்கு
  7. எனக்கு ஆசை தி.மு.க. விற்கு ஓட்டு போட ஆசை தான். ஆனா எங்க தொகுதிய காங்கிரசுக்கு ஒதுக்கி இருக்கே திமுக என்ன பன்னுறது. dont vote for cogress

    பதிலளிநீக்கு
  8. //தற்போது நாம் சந்தித்துவரும் மின்வெட்டுக்கு காரணம் நிச்சயமாக திமுக அரசு அல்ல. முந்தைய அதிமுக அரசுதான் இவ்விஷயத்தில் குற்றவாளி.//

    To my knowledge there was no power project started after 1996. If we accept JJ doesn't have any foresight to start a power project in 2001~2006, what was Kalaingar doing from 1996~2000? Why haven't he started anything in that period? Was he so short sighted?

    Come on lucky, you should be fair on either side, when you put facts into the writing. MK has done equally bad to the state. Even those power projects which would bear the fruits by 2012 are started in 2009 after so much of irritation in 2007 and 2008. It was more of fear rather than responsibility that lead to such thing.

    MK always behaves like a manager and not a leader. He fails to look forward what is required. Instead he tries to manage with whatever he has in the present. It's not good for a country and people who run the administration. On the other hand JJ is more of autocratic, but a good Administrator. She knows how & from whom the work should be done. Believe it or not, she is known for hiring good folks in her Administration. Alas, its her head weight which ruins the whole show every time.

    பதிலளிநீக்கு
  9. சபாஷ். சிந்தனையை வெகுவாக தூண்டி விட்டீர்கள். இந்த மக்களே இப்படித்தான். சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவர்கள் காரில் போகத் தொடங்கி விடுவார்கள். ரோடு பழுதடைந்து விடும். தினமும் மூன்று வேளை சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். உணவுப் பண்டங்களின் விலையேறி விடும். தாங்கள்தான் ரோடு பழுதடைவதற்கும், உணவு விலையேற்றத்திற்கும் காரணம் என்று தெரியாமலே அரசாங்கத்தைத் திட்டிக் கொண்டிருப்பார்கள். சரியான மட சாம்பிராணிகள்.

    பதிலளிநீக்கு
  10. கத்திரி வெயில் பாவம் என்ன தான் செய்வீர்கள், கருத்து கணிப்புவேறு தலைகீழாக உள்ளது, நடத்துங்கள் நடத்துங்கள், நீங்கள் சொன்ன அனைத்து காரணங்களும் மொன்னையாக உள்ளது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் , ஓட்டு போட்ட மக்களுக்கு மின் வெட்டு என்ன நியாயம் சார், சென்னையை விட்டு எங்களை போன்று கிராமங்களில் வசிப்பவர்களையும் நினைத்து பாருங்கள், கிராமத்தில் வாழும் விவசாயிகளின் நிலையை எண்ணி பாருங்கள் , அதுவும் என்னை போன்று சிறு தொழில் புரிபவர்களுக்கு தான் மின் வெட்டின் வலியும் வேதனையும் அதிகமாக உள்ளது சார். திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 5 வருடத்தில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்ட 2 மணி நேர மின் வெட்டு மற்றும் அறிவிக்கப்படாத பல மணி நேர வெட்டுகளை அனுபவித்து சகித்துக் புழுங்கிக் கொண்டு இருக்கும் மக்கள் நிச்சயமாக தகுந்த பதிலடி கொடுப்பார்கள் சார். ஆனாலும் உங்கள் தைரியம் மிகவும் எனக்கு பிடித்துள்ளது ,
    பார்ப்போம் தமிழக மக்களின் சிந்தனை ஓட்டத்தை
    அன்புடன்ராகவேந்திரன்,தம்மம்பட்டி

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா2:17 AM, ஏப்ரல் 04, 2011

    What about the impact of free TV's? Do they operate without power? Also villages are the worst hit by the power cut especially farmers.

    பதிலளிநீக்கு
  12. // 2004 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயலலிதா அரசு, எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் 2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்கிற வெறியில் 2004-06 காலக்கட்டத்தில் ஊதாரித்தனமாக மின்சாரத்தை செலவு செய்திருக்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.//

    மின்சாரத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ( மிகவும் குறைந்த அளவு மட்டுமே உதாரணம் பேட்டரி...) சேமித்து வைக்க முடியாது. ஜெயலலிதா அரசு எதிர்காலத்திற்கு திட்டமிடவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்... ஊதாரித்தனமாக செலவு செய்தது என்று சொல்லாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. தேர்தல் நேரத்தில் மிகத் தேவையான பதிவு...

    நன்றி யு கி

    மயிலாடுதுறை சிவா...

    பதிலளிநீக்கு
  14. நாடு தழுவிய பிரச்னையாய் இருந்தால் பாகிஸ்தானையாவது கைகாட்டி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. ஜெயலலிதா அரசு, எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் 2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்கிற வெறியில் 2004-06 காலக்கட்டத்தில் ஊதாரித்தனமாக மின்சாரத்தை செலவு செய்திருக்கிறது

    - Request you to please explain the above statement in detail

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா12:36 PM, ஏப்ரல் 04, 2011

    i fully agree with your view....

    பதிலளிநீக்கு
  17. நல்லா சொன்னீங்க..ஊழல் அமௌன்ட் கூட ரொம்ப ஜாஸ்தியாக ஆயிருக்கு...ஜெயலலிதா ஊழலால் பண்ணுவதில் கூட முட்டாள் தான்...மு.க. அதிலும் கில்லாடி...அடுத்த பதிவு மதுரையில் அழகிரி அடாவடித்தனத்தை நியாயப்படித்தி வருமென்று எதிர்பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. கலைஞரிடம் சொல்லி சோலார் பனேல்களை(solar energy system)இலவசமாக தர சொல்லுங்கள்.ஒரே கல்லில் இரண்டு அடிக்கலாம்

    பதிலளிநீக்கு
  19. லக்கி ...உங்க நேர்மை எனக்கு பிடிக்கவில்லை ...

    பதிலளிநீக்கு
  20. நல்ல வேளையா தி.மு.க. அரசு பொட்டி பொட்டியா மின்சாரத்தை சேமிச்சி வெச்சிட்டதால அடுத்த அஞ்சு வருஷத்துக்கு ஜெயலலிதா கவலைப்படாம இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா11:00 PM, ஏப்ரல் 04, 2011

    you have correctly said about the difference of planning btwn dmk and aiadmk.

    there is no commom sense about power conservation among the people. the sad thing is even the educated people lack that commom sense.

    பதிலளிநீக்கு
  22. //எந்தவித கட்டமைப்பு வசதி பற்றியும் அதிமுக கவலையே படுவதில்லை என்பதுதான் தமிழக வரலாறு. அவர்களுக்கு நீண்டகாலத் திட்டங்கள் போடத்தெரியாது. தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பது, நியாயமாக படித்தவர்களுக்குதான் தெரியவேண்டும்.//
    ஆமாமாம்....வீராணம், மழை நீர் சேகரிப்பு போன்ற தொலை நோக்கு திட்டங்கள் எல்லாம் முக கொண்டுவந்த திட்டம்தான்!!

    பதிலளிநீக்கு
  23. புதிய சட்டமன்ற கட்டிடம் மற்றும் தலைமை செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை மெட்ரோ ரயில், அடையார் பூங்கா,14 புதிய மேம்பாலங்கள் (கத்திபாரா, பெரம்பூர்...), கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கூவம் நதி தூய்மைபடுத்தும் திட்டம், மெரினா கடற்கரை அழகுபடுத்த திட்டம், சாலையின் இருமருங்கிலும் தமிழக பெருமையை பறைசாற்றும் ஓவியங்கள் !!!
    தலைநகர் வ...ளர்ச்சிக்கு ஆதரிப்பீர் உதயசூரியன்.
    தேர்தல் நாள் ஏப்ரல் 13

    பதிலளிநீக்கு
  24. துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டில், கல்வி கற்றவர்கள்தான் பாமரனையும் விட மோசமாக சிந்திக்கக்கூடிய அறிவினைப் பெற்றிருக்கிறார்கள்
    How do you know that? When you support your party leader...then your party's leader's sons. daughters keep's daughter and later her son.....and keep supporting their family....unfortunately you will be the same and keep supporting your leader....
    But you DMK cadres go on and make rubbish statements about common man...i dont care whether your party or the Amma party in power, the bottom line is i need to work and make a living....

    don't make generalized statements...

    Dont care if you do not publish as well.

    பதிலளிநீக்கு
  25. என்ன யவா சொல்றீங்க.. ?!!

    பதிலளிநீக்கு
  26. Yuvakrishna,

    Better you go and prepare election campaigns for DMK. You are writing very well especially when you write white lies.

    Just fyi :

    No one can save/preserve electric power in large scale except if that imaginary super conductors are made available for public at lower cost.

    Also no one can over spend electric power unless he is some kind of super man.

    It is called science ! Go and read 11th standard physics book.

    பதிலளிநீக்கு
  27. so u r saying that the past government wasted lot of power during 2004-06.
    First of all we cannot save power like water in tank.It is not an renewable energy.U can use the power WHAT U HAVE TODAY and cannot save for tomorrow.
    the meaning of saving is using less.

    Then what did the DMK Govt did to improve power from 2006 to 2008.
    kodankulam is an central Govt project.
    In the Dmk period production level of various power units went down to half due to mismanagement in TNEB.
    The production of the Dmk Govt power was approximately 2000 MW less than previous Govt.
    Why did the loss in production of power happened?
    Why one unit thuthukudi have not worked on that time?
    The imported coal from Indonesia was 2nd quality which led to less production of power and high financial crises to TNEB.
    The power crises happened during this Govt was only due to the Mismanagement of TNEB over various plants in tamilnadu.
    The action taken by the DMK govt was TOO LATE AND TOO LITTLE.
    According to me the power problem for Tamilnadu cant be solved less than 5 years.Due to poor administration and poor infrastructure of TNEB.

    பதிலளிநீக்கு
  28. ======="புதிய சட்டமன்ற கட்டிடம் மற்றும் தலைமை செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை மெட்ரோ ரயில், அடையார் பூங்கா,14 புதிய மேம்பாலங்கள் (கத்திபாரா, பெரம்பூர்...), கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கூவம் நதி தூய்மைபடுத்தும் திட்டம், மெரினா கடற்கரை அழகுபடுத்த திட்டம், சாலையின் இருமருங்கிலும் தமிழக பெருமையை பறைசாற்றும் ஓவியங்கள் !!!"===========

    All these things are like MAKEUP for a actress in movie.go and see the interior part of TN.Where it shows its true face.
    For an example DRAINAGE project in Cuddalore till now not completed for more than 4 years. The rumor is the Dmk politicians are asking for commission of more than 40%.
    If u have done more than enough in capital means why DMK leaders are going out of the capital for election.

    In cuddalore District still there has been 3-4 hours power cut but not in chennai.
    There is not enough power for Farmers for cultivation.
    The prices of all the matirials increased in market, But price of cultivated products like vegetables are decresed when it is bought by agents from farmers.

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா10:35 PM, ஏப்ரல் 06, 2011

    2006-ல் பதவியேற்றவுடன் போர்க்காட்டார் சொன்னது, ஜெயலலிதா அரசு மின்திட்டங்கள் தொடங்காததால் இப்போது மின்வெட்டு தவிர்க்க முடியாதது. ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துதான். சரி, இந்த ஐந்து வருட ஆட்சியில் அவர் என்ன புடுங்கினார்? பாராட்டு விழா மேடையில் கருணாநிதியின் கைத்தடியாகவும், மானாட மயிலாட நிகழ்ச்சியின் மேஸ்திரியாகவும் இருந்தததைத் தவிர.

    பதிலளிநீக்கு
  30. சென்னைத்தமிழன் 2:53 PM, April 03, 2011
    (குறிப்பு நான் திமுக ஆதரவாளரும் இல்லை.... ஜெ -வின் எதிரியும் இல்லை....)
    ..........................//////////////////////

    போங்க பாஸ் சிரிப்பு மூட்டாதீங்க ..........
    எனக்கு சிப்பு சிப்பா வருது .............

    பதிலளிநீக்கு
  31. @Luckylook ///

    அருமையான பதிவு..அழகாக எழுதியுள்ளீர்கள்.. ( இந்த திமுக காரனுகளுக்கு வாக்கப்பட்டு எம்புட்டு பொய்ய வாய்கூசாம சொல்ல வேண்டியதா இருக்கு..! ஏன் லக்கி அண்ணேன், அப்போ டாஸ்மாக்ல நல்ல சரக்கு கெடைக்காததுக்கு காரணம் விஜயகாந்தா...? )

    பதிலளிநீக்கு
  32. /தற்போது நாம் சந்தித்துவரும் மின்வெட்டுக்கு காரணம் நிச்சயமாக திமுக அரசு அல்ல. முந்தைய அதிமுக அரசுதான் இவ்விஷயத்தில் குற்றவாளி. /

    சேச்சே . . என்ன இப்புடி சொல்லிப்புட்டீங்க. . அதுக்குக் காரணம் ஆரு தெரியுமா? நம்ம விசயகாந்த்துலே . . என்னாது ஏனா ? அட அவருதாமுல்ல ட்ரான்ஸ்ஃபார்மரைப்போயி கட்டிப் புடிச்சிகினாரு, நரசிம்மா படத்துல? அப்ப வெடிச்ச ட்ரான்ஸ்ஃபார்மர்தாம்யா இப்பவும் ரிப்பேரு பண்ணமுடியாமக் கெடக்கு! உங்க பாயிண்ட்டை விட இது நல்லாருக்குல? இதையே இனிமே பிரச்சாரமா பண்ணலாமே :-) நல்லா புடிக்கிறீங்கய்யா பாயிண்ட்டு . .:-)

    பதிலளிநீக்கு
  33. நான் தமிழன்னு
    இன உணர்வோட சொல்லறத எப்படி நீங்க பெருமையா பார்க்கிறீர்களோ, அதை போலவே நான் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் அப்படின்னு சொல்ல்றதையும் பார்க்கலாமே... தமிழன்,கன்னடன்,தெலுங்கன்,மலையாளின்னு...திராவிடர்களுக்குல்லேயே இத்தனை பிரிவினைய வச்சுக்கிட்டு இருக்கிற நமக்கு அந்த அம்மா தன்னை பாப்பாதினு சொல்லறத ஏன் தப்ப நினைக்கிறீங்க...சென்னை தமிழன்???

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா7:27 PM, ஏப்ரல் 07, 2011

    செம காமெடி பாஸ்...உங்க அய்யா கோவைல மாநாடுங்கர பேர்ல குடும்ப விழா நடத்தினாரே...அப்போ என்ன அவசியமான மின்சார உபயோகமா ??

    ----மணிகண்டன்.M

    பதிலளிநீக்கு
  35. சிறப்பான கட்டுரை... விடுதலையில் இருந்து வந்து வாசிக்கிறேன்.. வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  36. தமிழக அரியணையை பேண்டு மோண்டு அசிங்கப் படுத்தியது மட்டுமில்லாமல் தன்னை புதைக்கும் போதும் தமிழக மக்களை உடன் அழைத்துக் கொள்ள துடியாய் துடியாய் துடிக்கும் கலைஞருக்கு ஓட்டு போட்டு அரியனையில் சமாதியை கட்டுங்க.

    1,76,000 கோடியை அடித்துவிட்டு மொன்னையர்கள் அனைவருக்கும் 1,76,000டிவி யை கொடுத்துவிட்ட ஒருவனை எப்படி ஐயா மீண்டும் தேர்ந்தெடுக்க வெட்கப் படாமல், கூசாமல் கூறுகிறீர்கள்.

    ஒரு டிவி சுமாராக ஒரு மணி நேரத்திற்கு 50 வாட்ஸ் எடுக்கும், 2 லட்சம் டிவி ஒருநாளைக்கு 200,000,000 அதாவது 200 மெகாவாட்ஸ் எடுக்கும் இதனாலும் மின்வெட்டு ஏற்பட காரணமாக இருக்கலாம்.

    ஊழலில் கைது செய்யப் பட்ட மந்திரி ஜெயிலில் இருக்கும் போது எப்படித்தான் மானங்கெட்டதனமாக ஓட்டு கேட்க மனசு வருகிறது.

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா10:25 AM, மே 05, 2011

    தமிழகத்துக்கு மின்சாரத் தட்டுப்பாடு என்பது புதிதல்ல. தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் கணிசமான இடைவெளி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. மின்தேவையைக் கருத்தில் கொண்டு, மின்உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் தேவைகளும் இருமடங்காக அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்தப் பற்றாக்குறை அடிவானம் போல அடையமுடியாத இலக்காக நீண்டுகொண்டே செல்கிறது.

    ஆனாலும், இதற்கு முன்பிருந்த ஒவ்வொரு ஆட்சியின்போதும் ஒவ்வொரு விதத்தில் இந்தப் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போதைய தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்துறையைச் சரியாகக் கவனிக்காமல் விட்டதன் விளைவுதான், இன்றைய தினம் மின்தட்டுப்பாட்டில் மிகப்பெரும் நெருக்கடியும், நாளொன்றுக்கு மூன்று மணி நேர மின்தடையும் அவசியம் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்த உண்மை.

    தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தப் பொறுப்பில் இருந்தாலும்கூட, அவர் உடல்நலக் குறைவு காரணமாக இத்துறை நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. ஏற்கெனவே இருக்கும் பற்றாக்குறை பிரச்னையோடு இந்தச் செயலின்மையும் சேர்ந்துகொண்டதில், தமிழகத்தில் மின்சாரம் இல்லாமல் மக்களும், குறிப்பாக தொழிற்கூடங்களும் பல இழப்புகளைச் சந்திக்கும் நிலைமை உருவாகிவிட்டது.

    தமிழகத்தின் மின்தேவை 12,000 மெகாவாட். ஆனால் உற்பத்தியோ வெறும் 7,000 மெகாவாட் மட்டுமே. இந்தக் குறைந்த மின்உற்பத்தியைக் கொண்டு, மக்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை. தொழிற்கூடங்களையும் திருப்தி செய்ய இயலவில்லை. இதன் காரணமாக, தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டு மாநிலம் முழுவதும் மே 5-ம் தேதி வேலைநிறுத்தம் செய்வதென சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கம் (டான்ஸ்டியா) அறிவித்திருக்கிறது.

    மின்துறை அமைச்சர் தனது உடல்நிலை காரணமாக அதிக கவனம் செலுத்தத் தவறியிருந்தாலும்கூட, இத்தகைய இக்கட்டான சூழல் ஏற்படும் என்பதைக் கணிக்க பெருந்திறமைகள் ஏதும் தேவையில்லை. இந்த நிலைமையைச் சமாளிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசுக்குப் பரிந்துரைத்து, அதை அமல்படுத்தியிருக்க வேண்டிய அதிகாரிகள், மெத்தனமாக இருந்துவிட்டு இப்போது வெறுமனே மின் பற்றாக்குறையை மட்டும் காரணமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    மற்ற மாநிலங்களில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்து, அதற்கு முன்பாகவே மின்சாரத்தைப் பெறும் ஒப்பந்தங்களைப் போட்டிருக்க வேண்டும். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே இப்போது மின்சாரத்தை மற்ற மாநிலங்களிலிருந்து பெறுவது சாத்தியம் என்று இப்போது கூறுகிறார் மின்துறையின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் தலைவர் சி.பி.சிங். ஏன் இந்த நிலைமையை முன்கூட்டியே அறிந்து, முன்பதிவு செய்திருக்கவில்லை என்பதுதான் நம் கேள்வி.

    பதிலளிநீக்கு
  38. பெயரில்லா10:25 AM, மே 05, 2011

    தொழில்நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடக் கோரிய சி.பி.சிங், அடுத்த ஆண்டு நிலைமை சரியாகிவிடும் என்று கூறுகிறார். எப்படிச் சரியாகும்? எத்தனை அனல் மற்றும் புனல் மின் நிலையங்கள் புதிதாகத் தங்கள் மின் உற்பத்தியைத் தொடங்கவுள்ளன, எப்படி விநியோகத்தடத்தில் மின்இழப்பு விகிதாசாரத்தைக் குறைக்கப் போகிறீர்கள் என்கிற கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. எந்தவிதத் திட்டமும் இல்லாமல் அடுத்த ஆண்டு சரியாகிவிடும் என்று கூறுவது எதனால்? எப்படியும் அடுத்தமாதம் புதிய அரசு அமைந்துவிடும், அதன் பின்னர் அவர்களது தலைவலி என்கின்ற மனோபாவம்தான் இதில் வெளிப்படுகிறது.

    தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் மின்பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாதது. இதைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு மின்துறைக்குத் தலைமையேற்கும் அதிகாரிகளின் திறமையால் மட்டுமே சாத்தியம். இதில் எந்தத் துறைக்கு முன்னுரிமை அளிப்பது என்பதைத் தீர்மானிப்பது வேண்டுமானால் அரசியல்வாதிகளின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், மின்தேவை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதையும், எந்த மாநிலத்தில் மின்சாரம் பெற முன்பதிவு செய்வது என்பதையும் முன்கூட்டியே செயல்படுத்தும் வேலை அதிகாரிகளுக்குரியது. அவர்கள் அரசியல் தலைவர்களைச் சார்ந்து இல்லாமல், செயல்பட்டாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடுமே!

    தமிழகத்தின் மொத்த மின் உபயோகத்தில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் வெறும் 16% மட்டுமே. வியாபார நிறுவனங்கள், கடைகள், ஷோ ரூம்கள் போன்றவற்றுக்காக 26% பயன்படுகிறது. தொழிற்சாலைகளுக்கான உயர் அழுத்த மின்சாரம் 42%மும் குறைந்த அழுத்த மின்சாரம் 12% மும், உபயோகப்படுத்தப்படுகின்றன. மின்கசிவால் ஏற்படும் விரயம் ஒருபுறம் இருக்கட்டும். மின் திருட்டால் ஏற்படும் இழப்பு மட்டுமே ஏறத்தாழ ரூ.6,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரை என்று கூறப்படுகிறது. இதுவும், ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே நடைபெறுகிறது என்று கேள்விப்படும்போது அதிர்ச்சி அதிகரிக்கிறது. அப்படியெல்லாம் இருக்காது, இருக்கக்கூடாது என்று சமாதானப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி.

    இந்தப் பிரச்னைக்காக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கம் முன்பே களத்தில் இறங்கியிருந்தால், தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பே பிற மாநிலங்களில் அப்போதைய விலைக்கே மின்சாரத்தைப் பெற முன்பதிவு செய்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். தடையில்லாமல் மின்சாரமும் கிடைத்திருக்கும். மின்வாரியத்துக்கு இழப்பும் ஏற்பட்டிருக்காது. தேர்தல் வாக்குகள் எண்ணப்படாமல், திரிசங்கு நிலையில் இருக்கும் இப்போது இப்படியொரு வேலைநிறுத்த முடிவு அவர்களுக்கும் பயன்தராது. மக்களுக்கும் இடையூறு. அதிகாரிகளும் தேர்தல் நடத்தைவிதி என்று காரணம் சொல்லிக் கைவிரிப்பார்கள், வேறென்ன?
    http://www.dinamalar.com/Inner_Main.asp?cat=31

    பதிலளிநீக்கு
  39. விகடனில் இந்த ப்ளாக் பார்த்தேன் . மின் தடை பற்றி என்னுடைய கருத்து ஒன்றையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் . இன்று நெறைய வீடுகளில் இன்வேர்டோர் உபயோகப்படுத்துகிறார்கள் மற்றும் நிறைய tube lights உபயோகப் படுத்தபடுகிறது , இன்வேர்டோர் முதலிலேயே மின்சாரத்தை உறிஞசி விடுகிறது இதனாலும் மின் தடை செய்யும் பொழுது மின்வாரியத்திற்கு மின் சிக்கனம் ஏற்படுவது இல்லை

    கேரளா வில் tube லைட் களுக்கு பதில் CFL லைட்களை அரசாங்கமே இலவசமாக கொடுத்ததாக கேள்விபட்டேன் அதைபோல் இங்கும் எல்லா வீடுகளுக்கும் கொடுக்கலாமே

    சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு தேவையான உபகரணங்களுக்கு மானியமும் கொடுக்கலாமே. எல்லா வணிக கட்டடங்களிலும சூரிய ஒளி மின் உற்பத்திக்கு தேவையான சாதனங்களை கட்டாயம் நிறுவ வேண்டும் என்று உத்தரவிடலாமே.

    பதிலளிநீக்கு
  40. பெயரில்லா1:31 PM, மே 17, 2011

    I think I am very late in posting a comment to this post.. But I keep on saying the same to everyone who says ADMK is responsible for this power shortage.. I can totally accept that.. and the reason which you say is acceptable in first 2-3 years of DMK rule.. It is not acceptable even at the end of the five year. I can see that Govt had proposed lots of plans, but it should have also proposed Short term plans for this power shortage..

    பதிலளிநீக்கு
  41. 2004 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயலலிதா அரசு, எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் 2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்கிற வெறியில் 2004-06 காலக்கட்டத்தில் ஊதாரித்தனமாக மின்சாரத்தை செலவு செய்திருக்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்// could you please explain this ,i.e how to restrict/save the power , in which from , if the power can be saved for the future days, then, why not the DMK Govt., saved for the next 5 years ?

    பதிலளிநீக்கு