6 ஏப்ரல், 2011

நேஹா ஆண்ட்டி! (Strictly 18+)

நீங்கள் இணையத்தள கில்மா சைட்டுகளில் பரிச்சயம் கொண்டவரென்றால் நிச்சயம் ஆண்ட்டியை உங்களுக்கு தெரிந்திருக்கும். பெயரில்தான் ஆண்ட்டி இருக்கிறதே தவிர, தோற்ற அடிப்படையில் இவர் ஒரு ஃபிகர்தான். ஆண்ட்டி – ஃபிகர் இந்த இருவேறு பரிணாமங்களுக்கு துல்லியமான ஒரு வரையறையை இன்னமும் நம்மால் எட்ட முடியவில்லை என்பது நம் சமூக அறிவு குறித்த போதாமை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு சவிதா பாபி என்கிற சவிதா அண்ணி இந்திய மொழிகளில் காமிக்ஸாக சக்கைப்போடு போட்டார். இளசுகள் மொத்தமும் இளநீரை வெறித்த மாடுகளாய் இணையத்தில் போய் முட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது நேஹா ஆண்ட்டியின் முறை.

இவரது இயற்பெயர் நேஹா நாயர். பெங்களூரில் பிறந்தவர். பெற்றோர் பாகிஸ்தானில் வசித்த இந்துக்கள் என்கிறார். பிரிவினையின் போது அங்கிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களாம். பள்ளிப்படிப்பு ஒரு கத்தோலிக்கப் பள்ளியில். பதினான்கு வயதில் முதன்முறையாக முத்தமிடப்பட்டதாக சொல்கிறார் ஆண்ட்டி. 2004ல் பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவ மேற்படிப்புக்கு சென்றதாக குறிப்புகள் கூறுகின்றன.

2007ல் நேஹாவுக்கு திருமணம் நடந்தது. கணவர் பெங்களூரில் பணிபுரியும் ஒரு பொறியியல் வல்லுனர். திருமணமான முதல்நாள், நேஹாவை அவரது கணவர் ஆசையோடு அவரது கேமிராவில் படம்பிடித்தாராம். படம் ‘நச்’சென்று வர, நேஹாவை விதவிதமான போஸ்களில் படம்பிடித்து உலகுக்கு காட்ட இருவரும் சபதம் எடுத்தார்களாம். நல்ல கணவன். நல்ல மனைவி.

கோவாவில் நீண்ட தேன்நிலவு. பதினைந்து நாட்களாம். அங்கேதான் ‘முதல் அனுபவம்’ என்று சத்தியம் செய்கிறார் நேஹா. அந்த அனுபவத்தைப் பற்றி விலாவரியாக பல்வேறு மேட்டர் கதைகளில் எழுதியும் இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஆண்ட்டியின் கவர்ச்சியான வண்ணப்படங்கள், இப்போது ஃபார்வேர்ட் மெயில்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற தமிழ்க் கலாச்சாரத்தில் கண்ணகியாகதான் இப்போதும் வாழ்ந்து வருவதாக ஆண்ட்டி கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார். அவரது படங்களைப் பார்த்து ‘வளர்ச்சி’ அடைந்துவரும் இளைய சமூகத்துக்கு அது ஒன்றுதான் குறை. ஆண்ட்டிக்கு மெயில் போட்டு ‘எனக்கு மட்டும் விதிவிலக்கு தரக்கூடாதா?’ என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

நேஹா ஆண்ட்டிக்கு ஒரு பிரத்யேக இணையத்தளமும் உண்டு. அதில் அவரது கணவர் எடுத்த வண்ணப் படங்களோடு, அவரைப் பற்றிய முழு விவரங்களும் காணக் கிடைக்கிறது.

அந்த இணையத்தளத்தில் கிடைத்த ஒரு சுவாரஸ்யமான கேள்வி பதில்களில் சில சாம்பிள் :-

ஆண்ட்டி, நிஜமாகவே ‘அது’ ஒரிஜினல்தானா?

இதிலென்ன சந்தேகம்? 16 வயசு வரைக்கும் வளர்ச்சியே சுத்தமாக கிடையாது. அடுத்த இரண்டு வருடத்தில் அசுரவளர்ச்சி. புவியீர்ப்பு சக்திக்கு எதிராக போரிட்டு, போரிட்டு களைத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய இணையத்தளத்தை நீங்களேதான் நடத்துகிறீர்களா?

ஆமாம். தொழில்நுட்ப ‘வேலை’களை மட்டும் என்னுடைய கணவர் பார்த்துக் கொள்கிறார்.

நீங்கள் நிஜமாகவே ஒரு இந்திய ஹவுஸ் ஒய்ஃப் தானா?

நிறையபேர் இதே சந்தேகத்தை கேட்கிறார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையும், புரிதலும் கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களது அன்னியோன்னியத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது? இந்திய ஊடகங்கள் தங்களை அகன்ற மனப்பான்மை கொண்டதாக சொல்லிக் கொண்டாலும், அத்தகைய மனப்பான்மைக்கு ஓரிரு உதாரணங்கள் கூட இங்கே இல்லை.


நேஹா ஆண்ட்டியின் இணையத்தளத்தை பாவிக்கும்போது, அவரொரு அசலான இந்திய குடும்பத்தலைவி என்கிற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிடுகிறது. விட்டில் பூச்சிகளை ஈர்க்கும் வெளிச்சக்கீற்று இதுதான். நேஹா அத்தையின் இணையத்தளத்தை முழுவதுமாக மேய கட்டணம் செலுத்தவேண்டும் என்பதை இங்கே நினைவில் கொள்ளுங்கள். நாம் இந்த இணையத்தளத்தின் உறுப்பினர் அல்ல. அதற்காக நாம் உத்தமபுத்திரன் என்று பொருளும் அல்ல. (நம்முடைய வருமானம், நேஹா ஆண்ட்டியின் ரேட்டுக்கு கட்டுப்படியாகாது என்பதே உண்மை).

நேஹா ஆண்ட்டி என்கிற கேரக்டர் நிஜமா என்றால், சர்வசத்தியமாக நிஜமாக இருக்க வாய்ப்பேயில்லை. சென்னையில் சமீபமாக சக்கைப்போடு போட்டுவரும் திரைப்படம் ‘துரோக காதல்’. இன்னமும் இப்படத்தை கண்டுகளிக்கும் புண்ணியம் நமக்கு வாய்க்கவில்லை என்றாலும், போஸ்டரில் தரிசனத்தை பெறமுடிந்தது. ஹீரோயின், அட நம்ம நேஹா ஆண்ட்டி. இதன் மூலமாக தெரியவரும் உண்மை என்னவென்றால், நேஹா ஆண்ட்டி என்பவர் ஒரு ‘B’ க்ரேட் பாலிவுட் நடிகை. அவரை முழுக்க உரித்து, ‘குடும்பத்தலைவி’ மாதிரி பிம்பத்தை கட்டமைத்து, எவனோ ஒரு மொள்ளமாரிப் பயல் வெப்சைட் நடத்தி துட்டு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

விர்ச்சுவல் உலகத்தில் எது மெய், எது பொய்யென்றே தெரியாமல் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது...

15 கருத்துகள்:

  1. துப்பறியும் சாம்பு உருவாகிறார் :)))

    பதிலளிநீக்கு
  2. உங்களோட சமூக பற்று புல்லரிக்கவைக்குதுண்ணா?

    பதிலளிநீக்கு
  3. என்னத்த சொல்ல..!?
    இப்படி எல்லாம் இருக்கிறது தெரியாம...நான் சுத்த 'அசமஞ்சமா' இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. க்கும்...இதுக்கு 18+ வார்னிங் வேற....

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் உங்கள் முன் பழைய யுவா!

    பதிலளிநீக்கு
  6. Lucky,

    Also please write about Facebook atrocities..in the name of gals or even gals lot many interesting things are happening which i am sure you know better than i do...

    பதிலளிநீக்கு
  7. //நம்ம நேஹா ஆண்ட்டி. இதன் மூலமாக தெரியவரும் உண்மை என்னவென்றால், நேஹா ஆண்ட்டி என்பவர் ஒரு ‘B’ க்ரேட் பாலிவுட் நடிகை. அவரை முழுக்க உரித்து, ‘குடும்பத்தலைவி’ மாதிரி பிம்பத்தை கட்டமைத்து, எவனோ ஒரு மொள்ளமாரிப் பயல் வெப்சைட் நடத்தி துட்டு பார்த்துக் கொண்டிருக்கிறான்///
    y can't this be reverse?
    I request you to watch this movie and post review here so that we all can know the truth :-)

    பதிலளிநீக்கு
  8. இதைப் படித்து விட்டேன் என்பதற்காக இந்தப் பின்னூட்டம். இல்லைன்னா நம்மள -18ன்னு நெனைச்சுடுவாங்களே..

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா4:45 AM, ஏப்ரல் 07, 2011

    அருமையான எழுத்து நடை. கண்டவனெல்லாம் புக்கு எழுதி படிங்க படிங்கன்னு கூவறான். நீர் இன்னமும் விஜயகாந்து புக்குக்கு அப்பறம் ஒன்னும் எழுதமாட்டேங்கறீங்க.

    பதிலளிநீக்கு
  10. உங்களோட சமூக பற்று புல்லரிக்கவைக்குதுண்ணா... [+2]

    பதிலளிநீக்கு
  11. தங்கள் மூலமாகத்தான் சவீதா பாபி பற்றி தெரிந்துக்கொண்டேன். இப்பொழுது நேஹா ஆண்ட்டி.. அருமை... உங்களிடம் இருக்கும் பீஸையெல்லாம் அடிக்கடி எங்களுக்கு கொடுத்து உதவவும்.

    பதிலளிநீக்கு
  12. அப்புடியே ஆண்ட்டியோட வெப்சைட் அட்ரஸும் குடுத்திருந்தீங்கன்னா ரெம்ப புண்ணியமா போயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா11:00 AM, ஏப்ரல் 07, 2011

    யுவகிருஷ்ணா இப்படியான பதிவுகள் தேவை தானா..

    யாரோ ஒருவன் நேஹா ஆண்டி என இணையத்தளம் நடத்துவதற்கு நீங்களே நல்லதொரு புரோக்கராய் இருந்து இப்பதிவை இட்டு உள்ளீர்களா?

    இல்லை இந்த இணையத்தளத்தை நீங்கள் நடத்துகின்றீர்களோ என சந்தேகம் கொள்ளவும் தோன்றச் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  14. 18 + போட்டு ஏமாத்துராங்கய்யா

    பதிலளிநீக்கு
  15. இளைய சமுதாயம் ஏமாந்துவிட கூடாது என நினைக்கும் உங்கள் மேலான சிந்தனை ..கண்கலங்கவைகிறது தோழர் ..ஆனால் சில ஆரிய சக்திகள் இது தாங்கள் ஏமாந்த கதை என அவதூறு பரப்புகிறார்கள்.....

    " வாழ்க வசவாளர்கள்"

    பதிலளிநீக்கு