19 ஏப்ரல், 2011

நன்றியோ நன்றி!





ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மனுஷ்யபுத்திரன் தொலைபேசி சொன்னபோது நம்பவே இயலவில்லை. “சொக்கா, சொக்கா... பத்தாயிரம் எனக்கா?” என்று மகிழ்ச்சியில் குதித்தேன்.

ஆம் நண்பர்களே. விருது, பாராட்டுப் பத்திரம், இதனால் கிடைக்கப்போகும் பெயர் இதையெல்லாம் விட ‘பத்தாயிரம்’தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஏனெனில் கடனட்டை நிலுவைத்தொகை கழுத்தை நெரிக்கிறது. இதுதான் சார் யதார்த்தம். மத்ததெல்லாம் சும்மா பதார்த்தம்.

‘நாட்டாமை’ கவுண்டமணியின் பிரச்சினை அப்போதுதான் எனக்கு புரிய நேரிட்டது. விஷயம் தெரிந்ததிலிருந்தே “டீச்சரை நாட்டாமை தம்பி வெச்சிருக்காரு டோய்” என்கிற டைப்பில் விஷயத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல், மென்று விழுங்கவும் முடியாமல்.. நேற்று மாலை ஆறு மணி வரை நான் தவித்த தவிப்பை எழுதிட தமிழில்/இங்கிலீஷில்/ஸ்பானிஷ் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க மொழிகளிலும் வார்த்தைகள் இல்லை. எகிறிக்குதித்து, தலையால் வானத்தை இடித்துப் பார்த்துவிடும் வண்ணம் சூப்பர்மேனாக பிறந்துத் தொலைக்கவில்லையே என்கிற ஆற்றாமை ஏற்பட்டது.

விருது பெற்றவர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்பது பொதுவிதி. சைக்கிள் கிடைத்தாலே மிதிமிதியென மிதிக்கும் அடங்காப்பிடாரியான எனக்கு புல்லட்டு கிடைத்திருக்கிறது. டபடபவென ஒலி எழுப்பி, ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துவிட மாட்டோமா?

குருநாதர் கெளதம்
காட்ஃபாதர் பா.ராகவன்
ஆசிரியர் மாலன்
அண்ணன்கள் யெஸ்.பாலபாரதி, சிவராமன்
பின் தொடரும் நிழலின் குரலான தோழர் அதிஷா

ஆகியோரே இவ்விருதுக்கான பெருமைக்கும், இனி எனக்கு எழுத்து அடிப்படையில் ஏதேனும் சிறப்புகள் நேர வாய்ப்பிருந்தால் அதற்கும் உரித்தானவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் நான் இயங்கிக் கொண்டிருக்க காரணமாக இருப்பவர்கள்.

பிறந்தவீடான கிழக்கையும், புகுந்த வீடான புதிய தலைமுறையையும் இவ்வேளையில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். எனது எழுத்துகளை பிரசுரித்த குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்தவிகடன், அகநாழிகை, பில்டர்ஸ் வேர்ல்டு, பெண்ணே நீ, குங்குமம், தினகரன் வசந்தம், கீற்று, 4தமிழ்மீடியா, யூத்ஃபுல் விகடன் உள்ளிட்ட அச்சு மற்றும் இணைய இதழ்களுக்கும் நன்றியோ நன்றி.

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், எழுத்தாளர் சாருநிவேதிதா, தினமலர் வாரமலர் ஆபிஸ்பாய் அந்துமணி, எழுத்தாளர் ராஜூமுருகன், க.சீ.சிவக்குமார் ஆகியோரின் எழுத்துக்களை பிட் அடிப்பதைத் தவிர்த்து வேறெதையும் இதுவரை புதியதாக செய்துப் பார்த்ததில்லை. கிடைத்திருக்கும் அங்கீகாரம் எனக்கான தனித்துவம் ஒன்றினை தேடிக்கண்டிட ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

குறைந்தபட்சம் 50 வயதுவரை இலக்கியவாதி ஆகும் எண்ணம் இல்லை என்பதைக்கூறி எனது வலைப்பூவை வாசிக்கும் தோழர்கள் வயிற்றில் இவ்வேளையில் பாலை வார்க்கிறேன்.

மேலும், இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆதரவும், ஊக்கமும் அளித்த தோழர்கள் முத்து (தமிழினி), முத்துக்குமரன், குழலி, பொட்டீக்கடை சத்யா, வரவனையான் செந்தில், செந்தழல் ரவி, சுகுணாதிவாகர், கோவி.கண்ணன், கேபிள்சங்கர், அகநாழிகை, பொன் வாசுதேவன், கார்க்கி, முரளி கண்ணன், பரிசல்காரன், அப்துல்லா, தமிழ்குரல், பகுத்தறிவு, லெனின், மதன் செந்தில், அருண், சுத்தத்தமிழ், வேக்கப்கால் உள்ளிட்ட ஏராளமான இணையத் தோழர்களும் எனது நன்றிக்குரியவர்கள். (விடுபட்ட பெயர்கள் மறதிப்பிழையால் நேர்ந்தது என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்)

வலைப்பூ எழுதுவதற்கு முன்பாக நான் எழுதிப் பழகிய கருத்துக் களங்களான சிஸ் இந்தியா, தட்ஸ் தமிழ் மற்றும் தமிழ்நாடுடாக் ஆகிய தளங்களுக்கும் நன்றி.

எனது குடும்பத்தார் யாரும் எனது இணையத் தளத்தையோ, புத்தகங்களையோ வாசிப்பதில்லை என்பதால் அவர்களுக்கு எனது நன்றிகளில் எந்தப் பங்குமில்லை.

எனது வலைப்பூவை 2011ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகளுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் சாருநிவேதிதா, தமிழ்மகன் மற்றும் ஷாஜி ஆகியோருக்கு 100 மடங்கு நன்றிகள். உயிர்மை பதிப்பகத்துக்கும், அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், சுஜாதா அறக்கட்டளைக்கும் கோடி நன்றிகள்.

பி.கு : என்னுடைய தனித்துவ அடையாளமாக (?) நான் திரும்பிப் பார்க்கும் திமுக கொடி கலர் சர்ட்டு போட்ட படம் சமீப ஆண்டுகளாக உருவெடுத்திருக்கிறது. நான் எழுதும் புத்தகங்களின் பின்னட்டையிலும், விக்கிப்பீடியா பக்கத்திலும், இன்னும் ஏராளமான இடங்களிலும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை 2007ஆம் ஆண்டு எடுத்த தோழர் மோகன்தாஸ். லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணாவுக்கு முகம் கொடுத்த அத்தோழருக்கும் இவ்வேளையில் ஸ்பெஷல் நன்றி.

107 கருத்துகள்:

  1. அடையப்போகும் வெற்றிகளுக்கும் வாழ்த்துக்கள் - வாசகன் நடராஜன்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் லக்கி...

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் லக்கி...

    பதிலளிநீக்கு
  4. //எனது குடும்பத்தார் யாரும் எனது இணையத் தளத்தையோ, புத்தகங்களையோ வாசிப்பதில்லை என்பதால் அவர்களுக்கு எனது நன்றிகளில் எந்தப் பங்குமில்லை.//

    லக்கி.. அவங்க வாசிக்காம இருக்கறதுனாலத்தான் உங்களால சிலுக்கான மேட்டர் எல்லாம் எழுத முடியுது.

    அதனால, வாசிக்காதததுக்காக அவங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளவும். :-)

    வாழ்த்துக்கள்!!!!!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் பாஸ்....

    பதிலளிநீக்கு
  6. சிலுக்கலூர்ப்பேட்டை,நேஹா ஆன்ட்டி,சவீதா பாபி போன்ற பல கட்டுரைகளை எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. லக்கி வாழ்த்துக்கள். உங்கள் வலைத்தளத்தில் புதிய தலைமுறை கட்டுரைகளை வெளியிடாமல் உங்கள் பாணியில் எழுதப்படும் கட்டுரையை மட்டும் வெளியிடுங்கள் !

    புதியதாக இணையத்தில் அதிமுக கொடியுடன் உள்ள சட்டை போட்டு வலம் வருகிறீர்கள். யாரோ போட்டோஷாப் தெரிந்தவரின் வேலையாக இருக்குமோ என்னவோ !

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் லக்கி...

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் லக்கி!!!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் பாஸ்....

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள்!...

    குஷியில ஜாக்கி சேகர்,மணிஜி, நர்சிம் பேர மறந்துட்டீங்களே!..

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் பாஸ்!

    என் மன்னிப்பும் உண்டு பாஸ்:)))

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள்.

    // விடுபட்ட பெயர்கள் மறதிப்பிழையால் நேர்ந்தது என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்

    //


    மன்னிச்சிட்டேன்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் லக்கி !!!

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா2:51 PM, ஏப்ரல் 19, 2011

    //விருது, பாராட்டுப் பத்திரம், இதனால் கிடைக்கப்போகும் பெயர் இதையெல்லாம் விட ‘பத்தாயிரம்’தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஏனெனில் கடனட்டை நிலுவைத்தொகை கழுத்தை நெரிக்கிறது//

    ...இது தான்.. இதேப்போன்ற யாரும் எதிர்பார்க்க முடியாத வரிகள் தான், அமரர் சுஜாதா அவர்களின் ஆன்மாவையே நடுவர்கள் மனதில் நிற்க வைத்து உங்களுக்கு 'இதை' கொடுக்க வைத்து கௌரவித்திருக்க வேண்டும்!!!

    "வாழ்த்துக்கள்" - இதேப் போன்று இன்னும் பலப் பல படிகளில் ஏறி உச்சத்தைத் தொட.

    பதிலளிநீக்கு
  16. நாச்சிமுத்து3:01 PM, ஏப்ரல் 19, 2011

    வாழ்த்துக்கள் யுவா உங்களின் எழுத்தும், வாழ்வும், இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  17. அன்பு நண்பர் யுவகிருஷ்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா3:04 PM, ஏப்ரல் 19, 2011

    வாழ்த்துக்கள் யுவா உங்களின் எழுத்தும், வாழ்வும், இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. congrats guru, en mobilil tamizhai thaarai vaarthavare vaazhthukkal.

    what's next... aim for the next peak....


    all the best YOUNG MAN...

    ELTECH JAYAVEL
    9840398398

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா3:14 PM, ஏப்ரல் 19, 2011

    வாழ்த்துகள் உடன்பிறப்பே..
    தலை வி.ம-வின் சங்கத்தின் சார்பாய் மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துக்கள்.
    இனிமேல் நல்ல விஷயங்கள் மட்டும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துகள் யுவா.. உங்களுக்கு சீக்கிரமே ஐம்பது வயது ஆக கடவது :)

    பதிலளிநீக்கு
  23. கலக்குய்யா.

    இதுல என் பேரைக் காணாததுக்கு கண்டனம் தெரிவிச்சு வெளிநடப்பு செய்யறேன்.. என்னைப் பார்த்தா உமக்கு வைகோ மாதிரி இருக்குல்ல?

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துகள். .. மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  25. ச்சே.. முரளிகண்ணன், அப்துல்லா, பரிசல் பேரை எல்லாம் எப்படிதான் மறந்து தொலைத்தேனோ? :-(

    எனது அன்புக்குரியவர்கள் பெயரைதான் அடிக்கடி மறந்து தொலைக்கிறேன்.

    இதுபோல விடுபட்ட பெயர்களே இன்னும் குறைந்தது நூறு இருக்கும் போலிருக்கு...

    பதிலளிநீக்கு
  26. மிஸ்டர் புல்லட்.. நீங்க யாருன்னு எனக்கு தெரியுமே? :-))))

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துகள் லக்கி.. தல பாலா சொன்னது போல் போக வேண்டிய தூரம் நிறைய இன்னும் இருக்கிறது :)

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா5:28 PM, ஏப்ரல் 19, 2011

    Congrats Lucky. You deserve it! All the best for your wonderful career as writer.

    பதிலளிநீக்கு
  29. தேர்தல் முடிவ சரியா சொல்லியிருக்கிறதால மே 13 அன்று இன்னொரு விருது காத்திருக்கு.

    வாழ்த்துக்கள். நண்பரே.

    பதிலளிநீக்கு
  30. ஒரு வழியாக சுஜா தா விருது வாங்கியாச்சு, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. வாழ்த்துகள் யு கி

    // விடுபட்ட பெயர்கள் மறதிப்பிழையால் நேர்ந்தது என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்

    //


    மன்னிச்சிட்டேன்.

    என்ன இருந்தாலும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பட்டியலில் எனது பெயரை சொல்லி இருக்கலாம் ;-))

    நன்றி

    மயிலாடுதுறை சிவா...

    பதிலளிநீக்கு
  32. இனிய யுவா,

    வாழ்த்துக்கள்.

    மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    விடுப்பட்ட பெயரில் என் பெயரும் உண்டுதானே!

    பதிலளிநீக்கு
  33. Naan yaarunu therinja en peyara solunga paarkalam.......... :) :) :) :) :)

    Bulletnu sola koodathu

    பதிலளிநீக்கு
  34. வாழ்த்துகள், எழுத்தாளரே (இதற்கு முந்தைய பதிவு சாட்சியாக)!

    பதிலளிநீக்கு
  35. இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ் உங்க லெவலுக்கு நீங்க ஆஸ்கார் அவார்டே வாங்கலாம் . :)

    வாழ்த்துக்கள் உ.பி ...

    பதிலளிநீக்கு
  36. ஒருசேர மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது மச்சி! உங்கள் ஒவ்வொரு வாழ்வின் முன்னேற்ற கட்டங்களையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வந்திருக்கிறேன். எப்போதும் லக்கி என் நண்பன் என்பதில் பெருமைபட வைத்திருக்கிறார். உங்களின் அபாரமான உழைப்புதான் இதற்கு காரணம். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் லக்கி!

    பதிலளிநீக்கு
  37. வாழ்த்துக்கள் தோழர், கலக்குங்க

    பதிலளிநீக்கு
  38. You are one of my fav blogger and am happy for you. Congrats.

    பதிலளிநீக்கு
  39. உடன்பிறப்பே. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  40. என் பெயரை எப்படி மறந்தீங்க!! :-))சரி.. சரி.. வாழ்த்துகள் யுவா சார்!!

    பதிலளிநீக்கு
  41. சிறுகதை முயற்சி பாராட்டப்பட வேண்டியது.தொடர்ந்து எழுதி தங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள்! ஆனால் இதற்கெல்லாம் முதல் இடம் என நினைக்கும் போது! சாரு,ஷாஜி போன்றவர்கள் தேர்வுக் குழுவில் இருக்கும்போது இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
  42. வாவ்வ்வ்வ்.. கலக்கு தல.. வாழ்த்துகள்ல்

    //எனது அன்புக்குரியவர்கள் பெயரைதான் அடிக்கடி மறந்து தொலைக்கிறேன்.//

    அப்போ என் பேரு முதலிலே இருந்துதா?? :((

    பதிலளிநீக்கு
  43. எனது வாழ்த்துக்கள் லக்கி....

    பதிலளிநீக்கு
  44. // “டீச்சரை நாட்டாமை தம்பி வெச்சிருக்காரு டோய்” என்கிற டைப்பில் விஷயத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல், மென்று விழுங்கவும் முடியாமல்..//

    //பின் தொடரும் நிழலின் குரலான தோழர் அதிஷா//

    //குறைந்தபட்சம் 50 வயதுவரை இலக்கியவாதி ஆகும் எண்ணம் இல்லை என்பதைக்கூறி எனது வலைப்பூவை வாசிக்கும் தோழர்கள் வயிற்றில் இவ்வேளையில் பாலை வார்க்கிறேன்//

    //எனது குடும்பத்தார் யாரும் எனது இணையத் தளத்தையோ, புத்தகங்களையோ வாசிப்பதில்லை என்பதால் அவர்களுக்கு எனது நன்றிகளில் எந்தப் பங்குமில்லை//

    :-)))

    வாழ்த்துகள் லக்கி! :-)

    பதிலளிநீக்கு
  45. பெயரில்லா12:26 AM, ஏப்ரல் 20, 2011

    எனது வலைப்பூவை 2011ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகளுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் சாருநிவேதிதா, தமிழ்மகன் மற்றும் ஷாஜி ஆகியோருக்கு 100 மடங்கு நன்றிகள்.

    adane pathaen...

    பதிலளிநீக்கு
  46. வாழ்த்துக்கள் லக்கி.

    பதிலளிநீக்கு
  47. many congratulations Yuva. I have been a regular reader of your blog for a year.

    Keep flying high...

    Ramesh,
    Mexico

    பதிலளிநீக்கு
  48. யுவகிருஷ்ணா.... என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பாரதி மணி

    பதிலளிநீக்கு
  49. சுஜாதா விருது பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் லக்கி....

    தாங்கள் மேலும் பல சிகரங்கள் அடைய வாழ்த்துகிறேன்...

    பதிலளிநீக்கு
  50. முருகவேல் ச. சென்னை 1810:14 AM, ஏப்ரல் 20, 2011

    மேலும் பல வெற்றி படிகளை தண்டி மேலே செல்ல எனது நல் வாழ்த்துக்கள் யுவ. திட்டச்சேரி முருகவேல் ச ஆழ்வார்பேட்டை

    பதிலளிநீக்கு
  51. பெயரில்லா7:35 PM, ஏப்ரல் 20, 2011

    வீட்டில் உள்ளவர்கள் தொந்தரவு செய்யாமலிருப்பது எவ்வளவு பெரிய உதவி... அவங்களுக்கும் ஒரு தபா தேங்க்ஸ் சொல்லிக்குங்கோ...

    அப்பறம், மே 13, பார்ட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்...

    வாழ்த்துக்களுடன்
    செளந்தர்.

    பதிலளிநீக்கு
  52. Wish you all the best! As a matter fact... I believe you can still do better!

    Wish you more success in your future too!!

    Best wishes,

    Jayasankar.N
    We the People India

    பதிலளிநீக்கு
  53. பெயரில்லா9:20 AM, ஏப்ரல் 21, 2011

    வாழ்த்துக்கள் லக்கி. Long time follower.

    பதிலளிநீக்கு
  54. வாழ்த்துக்கள் லக்கி...

    பதிலளிநீக்கு
  55. நல்ல
    வலைப்பூ கட்டுரைகள்
    மேன்மேலும் எழுத
    இது ஒரு அடையாளம்.
    யுவகிருஷ்ணா,
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  56. பெயரில்லா12:25 PM, ஏப்ரல் 21, 2011

    Many Congratulations! You deserve it.

    -Sinna

    பதிலளிநீக்கு
  57. வழக்கம் போல மன்னிச்சுட்டேன்:-))))))))))) வாழ்த்துக்கள் லக்கி! படித்து கொண்டே வரும் போது மோகந்தாஸ் பதிவர் பட்டறைல எடுத்த போட்டோ பற்றி சொல்லாம விட்டுடுவீங்க போலிருக்கேன்னு நினைச்சுகிட்டே படிச்சேன். அதை படித்ததும் சின்ன குஷி! அது ஒரு நல்ல போட்டோ!வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  58. வாழ்த்துக்கள் நண்பரே!

    உங்கள் கட்டுரைகள் மேன்மேலும் எழுத
    இது ஒரு அடையாளம்.

    உங்களின் எழுத்தும், வாழ்வும், இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ..

    S.Ravi
    Kuwait

    பதிலளிநீக்கு
  59. வாழ்த்துக்கள் தல!!

    இன்னும் வெவ்வேறு விருதுகளும்..
    பட்டங்களும் தங்களை வந்தடைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  60. அன்பு லக்கி...

    இப்படியானதொரு அங்கீகாரத்திற்கு நீங்கள் சாலப் பொருத்தமானவர். பதிவுலகம் பரவலாக பிரபலமாகத் தொடங்கிய காலக்கட்டத்தில் உங்களின் தளம் பரபரவென்றிருக்கும்.

    கிட்டத்தட்ட தினமும் பலமுறை சென்று உங்களை வாசித்திருக்கிறேன்.

    மிக்க நன்றி.

    வாழ்த்துக்கள் பல...

    அன்பு நித்யன்

    பதிலளிநீக்கு
  61. சுஜாதாவின் எழுத்துக்களைப் போலவே உங்களது எழுத்துக்களிலும் ஒரு வசீகரம் இருக்கிறது. தகுதியான விருது பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  62. நல்வாழ்த்துகள் பாராட்டுக்கள் லக்கி, பெயரை குறிப்பிட்டு நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  63. ஓசை செல்லா4:21 PM, ஏப்ரல் 26, 2011

    பெயரைக்குறிப்பிடாவிட்டாலும் வாழ்த்துக்கள் தம்பி ! ( கோவியின் பின்னூட்டத்தின் தாக்கம் ! :-) )

    பதிலளிநீக்கு
  64. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மற்றவை நேரில்! என் பங்குக்கு ஸ்பெஷல் பரிசு.. 12-ம் தேதி வந்து வாங்கிக் கொள்ளவும்! :-)

    பதிலளிநீக்கு
  65. கெளதம் சார் நன்றி.

    எனக்கு சுஜாதா விருது கிடைத்ததை விட, திமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்கிற செய்திதான் அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

    நிஜமான கொண்டாட்டம் 13ஆம் தேதிதான்!

    பதிலளிநீக்கு
  66. I am reading your writing for the first time.
    Congats for 'Sujatha Award'
    K.V.Pathy

    பதிலளிநீக்கு
  67. லக்கிலுக் ஒன்லைன் சுஜாதா விருது கிடைத்தமை அறிந்தேன். வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  68. தாய்வீட்டிலிருந்து வாழ்த்துகள்! இந்த உறவு எப்போதும் உங்கள் வலைத் தளத்தைப் படிக்கும் உறவுதான்!

    பதிலளிநீக்கு
  69. I never forgive you sweet rascal...


    congrats..........

    பதிலளிநீக்கு
  70. வாழ்த்துக்கள் யுவா.

    பதிலளிநீக்கு
  71. Congratulations!
    I have started reading your blog in the last month and I am liking it a lot.

    பதிலளிநீக்கு
  72. congrats yuva.........today only i know about this feeling happy...all the best friend.......

    பதிலளிநீக்கு
  73. வாழ்த்துகள் யுவா

    இந்த விருது உங்களுக்கு எழுதுவதற்கு மேலும் தெம்பூட்டும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் பல உயரிய விருதுகள் உங்களுக்கு சொந்தமாகட்டும்.

    பதிலளிநீக்கு
  74. இதெல்லாம் வெறும் ட்ரைளர் தான் சார் இன்னும் எவளவோ வெற்றிக்கனிகளை ருசிக்க போகிறீர்கள்

    பதிலளிநீக்கு