ஜான் பாண்டியனுக்கு அறிமுகம் தேவையில்லை.
18 ஆண்டுகளுக்கு முன்பாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஊத்துக்குளி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த விவேக் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஜான் பாண்டியன் உள்ளிட்ட பதினோரு பேர் மீது கொலைவழக்கு தொடரப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கில் ஜான் பாண்டியன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. திருச்சி, வேலூர், கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் சேலம் மத்தியச் சிறையில் தண்டனைக் காலத்தை கழித்தார்.
இது ஒரு சாம்பிள்தான். ஜான் பாண்டியன் மீது ஏகப்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்துக்குள்ளேயே இவர் நுழையக்கூடாது என்று நீதிமன்றம் ஆணையிட்ட ஒரு காலமெல்லாம் உண்டு.
கொலைவழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, புரட்சித்தலைவியால் 2001ஆம் ஆண்டு எழும்பூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை அரிவாள் கொண்டு துரத்திய சாதனைக்கும் இவர் சொந்தக்காரர். சேலம் மத்தியச் சிறையில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை கொலைசெய்ய முயற்சித்த சம்பவமும் கூட நடந்தது.
கடந்தாண்டு ஐகோர்ட் இவருக்கு உறுதி செய்திருந்த ஆயுள்தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, இவர் உள்ளிட்ட ஐந்துபேரை விடுதலை செய்தது.
தமிழக முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் கட்சியை நடத்திவரும் ஜான் பாண்டியன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு, தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்.
ஜான் டேவிட்டுக்கும் அறிமுகம் தேவையே இல்லை.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்னுச்சாமி. இவரது மகன் நாவரசினை, சிதம்பரம் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற சக மாணவர் ஜான் டேவிட். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது.
கடலூர் செஷன்ஸ் கோர்ட் வழக்கை விசாரித்து ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம், குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 2001ல் விடுதலை செய்தது. கடலூர் சிறையில் இருந்து ஜான் டேவிட் விடுதலை ஆனார்.
தமிழக அரசு இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது. ஒன்பது ஆண்டுகள் தீவிர விசாரணை நடந்து கடந்த 20ஆம் தேதி தீர்ப்பு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தும், கடலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தின் இரட்டை ஆயுள் தீர்ப்பினை உறுதி செய்தும் இத்தீர்ப்பு அமைந்தது.
இடையில் ஜான் டேவிட் பாதிரியாராக மாறிவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார் என்றெல்லாம் புலனாய்வு பத்திரிகைகளில் செய்தி காணக்கிடைத்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தபிறகு, ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல (?) உதவிய வி.ஐ.பி. யாரென்று கூட சில ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
மாறாக ஜான் டேவிட் கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னையில் வசித்ததாக இப்போது தெரியவந்திருக்கிறது. கொலைவழக்கில் ‘உள்ளே’ போய், பிரேமானந்தா சாமியாரின் ஜெயில்மேட்டாக இருந்த ஜான் டேவிட், ஆன்மீகம் பக்கமாக தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கிறார். வெளியே வந்த பின்னர் திருந்தி வாழ நினைத்த அவர், சென்னைக்கு வந்து தனது பெயரை ஜான் மாரிமுத்து என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.
சென்னை வேளச்சேரியில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிக்கும் சேர்ந்திருக்கிறார். கடுமையான உழைப்பின் மூலமாக அதே நிறுவனத்தில் மேலாளராகவும் உயர்ந்து, கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ‘அந்த’ கொலைக்குப் பிறகு வேறேதும் வம்பு, தும்புகளில் ஜான் டேவிட் ஈடுபட்டதாக சாட்சியங்கள் ஏதுமில்லை.
உச்சநீதிமன்றம் இப்போது பழைய தீர்ப்பை உறுதி செய்ததை அடுத்து, கடலூர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட் சரணடைந்திருக்கிறார். இனி அவரது வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடிந்துவிடும்.
இந்த இருவரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏதோ ஒரு முரண் தட்டுப்படுகிறது. நம்முடைய இந்திய சட்டத்தில் ஏதோ மிகப்பெரிய - அதே நேரம் கண்ணுக்கும் தெரியாத - ஒரு பெரிய ஓட்டை இருப்பதாகப் படுகிறது. உங்களுக்குப் படுகிறதா? நமது இந்தியச் சட்டத்தில் ஒரு குற்றவாளி திருந்திவாழ இடமிருக்கிறதா இல்லையாவென்று சட்டமேதைகள்தான் விளக்க வேண்டும்.
ஜான் பாண்டியனுக்கும் ஜான் டேவிட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஜான் பாண்டியன் ஒரு தாதா. அதே நேரத்தில் ஜான் டேவிட் குற்றம் செய்த போது ஒரு மாணவராக இருந்திருக்கிறார். அந்த இளம் வயதில் தான் செய்வது என்னவென்றே தெரியாமல் டேவிட் மாபெரும் தவறை செய்துவிட்டார். மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் திருந்தி வாழ்வதும் அல்லாமல் சரணடைந்திருப்பதும் தன் தவறை உணர்ந்து தண்டனையை ஏற்றுக்கொள்ள முன் வந்திருப்பதும் நல்ல அறிக்குறியே.
பதிலளிநீக்குyou got it right.. !
பதிலளிநீக்குlaw is not the same to all.. !
sattam oru irutarai, adhanaal adhilulla ottaikal yaarukkum therivadhillai.
பதிலளிநீக்குசட்டத்துல ஓட்டைன்னு புதுசாத்தான் தெரியணுமா? 5,10 ஜேப்படிச்சவனையெல்லாம் நேரங்காலமெல்லாம் பாக்காம குண்டாந்தூக்கா தூக்கிட்டு போய் பிதுக்கியெடுத்து 6,7 மாசத்துக்கு உள்ள போடுற சட்டம் ஆயிரக்கணக்கான கோடிகளை அடிச்சவன அவன் எடத்துக்கே வந்து அவன் சொல்ற தேதிக்கே வந்து 'விசாரிச்சுட்டு' மட்டும் போகுது (நாமளே அதுக்கு சொம்படிப்போம் :); அது வேற விஷயம்.). இது தான்பா நிதர்சனம்.
பதிலளிநீக்குஜான் டேவிட் திருந்தி வாழ நினைக்கும் போது இந்த தண்டணை அதிகம்தான்.
பதிலளிநீக்குபதினைந்து வருடங்களுக்கு முன் அவர் மாணவராக இருக்கும் போது நடந்த தவறு இது. அப்போது கோபம்,வேகம் எல்லாமே கொஞ்சம் அதிகாமகத்தான் இருக்கும்.இருந்தாலும் இரட்டை ஆயுள் தண்டனை கொஞ்சம் அதிகம்தான்.
Irakkame illama oru nalla payyana kolluvaanam ivana mannikkanumam sethavanoda amma appa evlo vedhanapatruppanga? Ivanayum thookki ulla podanum intha maathiri oru kolakaarana petha ivanga appan David marimthuvayum aatha gnanasoosayayum thookki ulla podanum sthothram
பதிலளிநீக்குதப்பு பண்ணினா தண்டனை இருக்கத்தான் வேண்டும். ஜான் டேவிட் திருந்தினதா நடிக்கலாம் இல்லையா?
பதிலளிநீக்குகொலை எதிர்பாராமல் ஆத்திரத்தில் நடந்திருந்தால் நீங்கள் சொன்னபடி திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுப்பது பற்றி யோசிக்கலாம், தலையை அறுத்து இருக்கிறான், கையை காலை அறுத்திருக்கிறான், தலையை ஏரியில் போட்டான், முண்டத்தை சென்னைக்கு வந்து 21ஜி பஸ்ஸில் ஏர்பேக்கில் போட்டான், கால்களை சென்னை வரும் வழியில் ரயில்வே ட்ராக்கில் போட்டான், இந்த கொலைவெறிக்கு தரப்பட்டது தான் இந்த தாமதமான சொற்ப தீர்ப்பு. கொலைபாதகத்துக்கு அஞ்சுபவன் தண்டனையை ஏற்றுக்கொண்டு அனுபவித்திருக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொண்டு செத்திருக்க வேண்டும், மேல்முறையீடு செய்து பணத்தை தண்னீராக செலவழித்திருக்கக்கூடாது, இன்றைய தேதியில் சரியாக படிக்காமல் போன ,அல்லது நல்ல தன்நிறைவு வாழ்க்கை அமையாமல் போன அத்தனை பேருமே கடுமையாக உழைத்துதான் ஒரு நல்ல அந்தஸ்தை அடைய முடிகிறது. ஜான் பாண்டியனும் வீரமணியைபோல ஒரு நாள் என்கவுண்டர் செய்யப்படலாம், அல்லது பின்னாளில் கல்வித் தந்தையாகலாம்.
பதிலளிநீக்குஜான் டேவிட்டை இப்போது பார்த்தால் பாவமாக இருக்கிறது.
பதிலளிநீக்குநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே(சாமானியர்களுக்கு மட்டும்)....
இருவருக்கும் உள்ள வித்தியாசம் வெளிப்படை.
பதிலளிநீக்குசட்டம் திருந்தி வாழ அனுமதிக்கிறதா என்பதற்கு சட்டத்தில் அனுமதி இருப்பதாகத் தெரியவில்லை. ஜான் டேவிட்டுக்காக, நாவரசின் அப்பா திரு பொன்னுச்சாமி அவர்கள் மன்னிப்பு அளிக்கலாம். நீதி மன்றத்திலும் அதற்கான மனுவைச் சமர்ப்பிக்கலாம். அது இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையாக அமைவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஜான் டேவிட் சரணடைந்தபோது எனக்கு இதுதான் தோன்றியது. மன்னிப்பும் ஒரு வகையில் வாழ்நாள் தண்டனைதான்.
http://www.youtube.com/watch?v=GLUmNUavgCE
பதிலளிநீக்குஇந்தப் படம் வந்து 54 ஆண்டுகள் ஆகின்றன. உங்கள் இடுகையின் சராம்சம் கலந்தது.
1958: National Film Award for Best Film
1958: Berlin International Film Festival: OCIC Award
1958: Berlin International Film Festival: Silver Bear, Special Prize
1959: Golden Globe Awards: Samuel Goldwyn Award
@manjoorraja: I don't think he did it unintentionally. If it's unintentional, he doesn't have to slice him into pieces.. just a stab at the front or back should do.. so all he did was with his sound mind and knowledge..
பதிலளிநீக்கு@Yuva: There is always only a Good or Bad.. whether you are guilty or not.. IPC doesn't give justice based on the degree of bad or guilt one would be.. if we can rightly quantify them, then we will never have capital punishments. John david is not punish only for his wrong, but to state the society that justice always prevails.
2005ல் இண்டியாடைம் மூவிஸ் தொகுத்த கண்டிப்பாக பார்க்கவேண்டிய 25 பாலிவுட் படங்களில் அந்தப் படமும் இடம்பெற்றிருக்கிறது.
பதிலளிநீக்குகலைப் படமாக இல்லாமல் விருவிருப்பு நிறைந்த படம் அது.
சட்டத்துல பெரிசு பெரிசா ஓட்டைகள் இருக்கும் தைரியத்தில தானே டான்சி, 2 ஜி ஸ்பெக்ட்ரம் , ஆதர்ஷ் , காமன்வெல்த் எல்லா ஊழலும் நடக்குது ,
பதிலளிநீக்குAAMANGA SADDAM SARIYILLAI.... MADURAILA KUDA 3 PERAI KONDRA ORU RAVUDI IRUKARUNGA.. JOLYYA...
பதிலளிநீக்குமாவீரன் ஜான் பாண்டியனை பற்றி கவலைப் பட வேண்டாம் லாரியில் அடிபட்ட பன்னி போல் சாவது உறுதி ...
பதிலளிநீக்குஆனால் ஜான் டேவிட் ,அப்படி அல்ல திருந்தி " நல்ல முறையில் " வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார் ..
அவருக்கு சிறை தண்டனை அளிப்பதை விட அவரை ஒரு சிறந்த உதாரணமாக கொண்டு விலக்கு அளிக்கலாம் ..
** அவரது வாழ்க்கை ஒரு பாடம் ,சிறை கைதிகளுக்கு எப்படி அவர் சிறை சென்று வந்த பின் உயர்ந்தார் என்றும்..
**மாணவர்களுக்கு எப்படி கன நேரத்தில் உணர்ச்சி வய பட்டதால் தான் அடிந்த துயரங்களையும் எடுத்து கூற வகை செய்யலாம் .
**அவர் சிறையில் அடைந்த மன மாற்றங்கள் அந்த காலங்களில் அவர் நினைத்தவை ஆகியவற்றை புத்தகமாக்கி கிழக்கே வெளியிடலாம்..
மிக சிறந்த வழிகாட்டி நூலாய் அமையும் ..
உங்களின் பார்வையில் ஒருவன் இன்னொருவனை துண்டு துண்டாக வெட்டி வீசி எரிந்து ,தன் பெயரை மாற்றி போலி சான்றிதல் கொடுத்து வேலை செய்து கொண்டு இருந்தால் அவரை மன்னித்து விடலாம்
பதிலளிநீக்குஅப்படியானால் இறந்த நாவரசு வின் பெற்றோர்கள் அவரை இழந்து வாடும் துன்பத்திற்கு என்ன பதில்
ஜான் திருந்துபவனாக இருந்தால் தான் செய்த செயலுக்கு வருந்தி நீதிமன்றத்தில் உண்மை ஒற்றுகொண்டிருக்க வேண்டும், அதை விட்டு விட்டு பணம் இருக்கின்ற தைரியத்தில் மேல் முறையீடு செய்து விடுதலை வாங்கி ,போலி பெயரில் நல்லவன் வேஷம் போட்டால் அவனை சட்டம் விட்டு விட வேண்டும் என்ன உங்கள் கருத்து
யுவா,
பதிலளிநீக்குஒரு செய்தி, பலரின் மனதையும் அரிக்கும் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதை சரியான் முறையில் எழுதியிருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள். 21 வயதில், உணர்ச்சி வேகத்தில்(அல்லது ஏதோ ஒரு போதையில்) செய்த ஒரு கொலைக்கு 5 வருடங்கள் சிறையிலும், 10 வருடங்கள் வெளியிலும் இருந்திருக்கிறார் ஜான் டேவிட். சிறையைவிட வெளியில் இருப்பதே கடினம் என்பது என் கருத்து. அவர் கண்டிப்பாக தான் செய்தது மாபெரும் தவறு என்பதை உணர்ந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அதற்கு காரணங்கள்:
1. போலி பாஸ்போர்ட், விசா இதெல்லாம் மிக மலிவாக கிடைக்கும் நம் நாட்டை விட்டு இன்னும் ஓடிப்போகாமல் இருப்பது.
2. 120 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள நம் நாட்டிலேயே, அடையாளத்தை மறைத்து திருமணம் செய்து ஒரு பெண்ணை ஏமாற்றாமல் 37 வயதாகியும் தனியாக வாழ்ந்து கொண்டு, தீர்ப்பை மதித்து சரணடைந்திருக்கும் அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
இந்த தீர்ப்பின் மூலம், ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், இன்னும் அதிகபட்சமாக 9 ஆண்டுகள் மட்டுமே உள்ளே இருக்க நேரிடும். நன்னடத்தை, தலைவர்கள் பிறந்தநாள் என்று ஓரிரு ஆண்டுகள் குறைய வாய்ப்பிருக்கிறது. செய்த தவறுக்கு வருந்தினாலும், கொலைக்குற்றத்திற்கு இந்த அளவு தண்டனையாவது வேண்டாமா?
ஜாமீன் தொகையான 2 ஆயிரம், 5 ஆயிரம் கூட கட்ட வழியில்லாமல், ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகள் நம் சிறைகளில் முடங்கி கிடக்கிறார்கள் என்பது தெரியுமா? இவர்களில் பலரும், கண்டுபிடிக்க குற்றங்களை கணக்கு காட்டுவதற்காக போலீசாரால் உள்ளே தள்ளப்பட்ட அப்பாவிகள். ஊருக்கு செல்ல காசில்லாமல் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் சந்தேகத்துக்குரிய முறையில் நடமாடியதற்காக கைது செய்யப்படும் சூதுவாது தெரியாத ஆண்களின் பாடு இது தான். பெண்கள் என்றால் என்ன ஆவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
சட்டம் என்னதான் செய்யும்?
It is a debatable points..Very simply we cannot answer this point..The PUNISHMENT IS BEING GIVEN TO the accused for their grave misdeeds/murders...\If any one say simply that he has changed his character and conduct for escaping from major punishment how it is possible to believe it ?? At the same time the death penalty/and life sentences (which according to SC clarification until death)should not be given to anybody...A long punishment till he completes 50 years may be given instead of life/death sentences..However the accused must be punished and the affected persons family must be satisfied with the punishment also important--vimalavidya@gmail.com
பதிலளிநீக்கு//**அவர் சிறையில் அடைந்த மன மாற்றங்கள் அந்த காலங்களில் அவர் நினைத்தவை ஆகியவற்றை புத்தகமாக்கி கிழக்கே வெளியிடலாம்..
பதிலளிநீக்குமிக சிறந்த வழிகாட்டி நூலாய் அமையும் ..//
நல்ல ஜோக்!!
//**அவர் சிறையில் அடைந்த மன மாற்றங்கள் அந்த காலங்களில் அவர் நினைத்தவை ஆகியவற்றை புத்தகமாக்கி கிழக்கே வெளியிடலாம்..
பதிலளிநீக்குமிக சிறந்த வழிகாட்டி நூலாய் அமையும் ..//
தண்டனையை அனுபவிச்சிட்டு வெளியே வந்த பின் நீங்கள் சொல்வது போல் ஒரு மாடலாகட்டும். அப்போது அவனது வாழ்வே மிக சிறந்த வழிகாட்டி நூலாய் அமையும்.
என்ன நியாயங்களோ உங்கள் நியாயங்கள்!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநாவரசு யாருன்னே தெரியாது சார்!
பதிலளிநீக்குமுதலில் இருந்து ஆரம்பிக்கும் ஜான் டேவிட்!
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கு, தமிழகத்தை மீண்டும் பரபரப்பாக்கி உள்ளது. கடந்த 20-ம் தேதி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 'ஜான் டேவிட் உடனே சரணடைய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த தீர்ப்பு வந்தவுடனேயே ஜான் டேவிட் மீது, தேடுதல் சுற்றறிக்கை வெளியிட்டார் கடலூர் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ். மேலும், தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
கரூரில் உள்ள ஜான் டேவிட்டின் மாமா மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை சோதனை செய்ததில், குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் மற்றும் அழைப்புகள் அதிகமாக வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எண், சென்னை அடையார் 'வி வான்டேஜ் அபார்ட்மென்ட்’ என்ற முகவரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.தனிப் படையில் இருந்த இன்ஸ்பெக்டர் சதீஷிடம் பேசினோம்.''சாமுவேல் என்ற பெயரில் இங்கு தங்கியிருந்த ஜான் டேவிட், வேளச்சேரியில் உள்ள கால் சென்டர் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அலுவலகத்தில், ஜான் மாரிமுத்து என்று பெயரை மாற்றிக் கொடுத்து சேர்ந்து உள்ளார். அபார்ட்மென்ட் ஓனரிடம் நடத்திய விசாரணையில், ஜான் டேவிட் பயன்படுத்திய செல்போன் நம்பர்களைக் கொடுத்தார். சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு அந்த எண்களை தொடர்ந்து கண்காணித்தோம். புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் வசந்த் நகரில் சிக்னல் காட்டியது. உடனே எஸ்.பி-க்குத் தகவல் கொடுத்தோம். சிக்னல் தொடர்ந்து ஒரே இடத்தில் காட்டியது. 22-ம் தேதி இரவு முழுவதும் ஜான் டேவிட் அங்கே தங்கி இருந்தான். அவனைச் சுற்றி வளைக்க போலீஸ் படை புறப்பட்ட நேரத்தில், சிக்னல் திடீரென கட் ஆனது. மறுநாள் காலையில் மஞ்சக்குப்பம், வண்டிப்பாளையம் என்று சிக்னல் தொடர்ந்தது. கடலூரில் பிடித்துவிடலாம் என முடிவு செய்தோம். போலீஸ் நடவடிக்கைகளையும் நண்பர்கள் மூலம் அறிந்த ஜான் டேவிட், இதற்கு மேல் தப்பிக்க முடியாது எனத் தெரிய வந்ததும், 23-ம் தேதி கடலூர் மத்திய சிறையில் சரணடைந்துவிட்டான்!'' என்றார்.
ஜான் டேவிட் சரணடைந்த நேரத்தில் நடந்தவற்றை நம்மிடம் விளக்கினார் ஒரு காவலர். ''காரில் தனது தாயாருடன் வந்த ஜான் டேவிட், ஜூனியர் வக்கீல் ஒருவரை சிறை அதிகாரிகளை சந்திக்க அனுப்பினார். அதற்குள், காரில் ஜான் டேவிட் இருப்பதை அறிந்துகொண்ட திருப்பாப்புலியூர் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, இரண்டு காவலர்களை காருக்கு முன்னும் பின்னும் காவல் வைத்தார். இதனால் கடுப்பான ஜான் டேவிட்டின் தாயார் எஸ்தர், 'என் பையன் எந்தப் பாவமும் பண்ணலை. எங்களை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க? சொந்த பந்தம் மூஞ்சியில முழிக்க முடியாத அளவுக்கு பண்ணிட்டீங்க. நாங்க நிம்மதியா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா?’ என்று கூச்சல் போடவே... அந்த இடத்தில் கூட்டம் கூடியது. உடனே இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு வீடியோகிராஃபரை வரச் சொல்லி, அவர்களைப் படம் பிடிக்கச் சொன்னார். அதுவரை அமைதியாக இருந்த ஜான் டேவிட் தடாலடியாக காரில் இருந்து இறங்கி, 'அமைதியா இருங்கம்மா... எனக்கு எதுவும் ஆகாது’ என்று ஆசுவாசப்படுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்த எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், ஜான் டேவிட்டிடம், 'என்ன வழக்குக்காக சரண் அடைய வந்திருக்கீங்க?’ என்று எதுவும் தெரியாதவர்போல் கேட்க... 'நாவரசு யாருன்னே தெரியாது சார், யாரோ செஞ்ச கொலைப் பழி என் மேல விழுந்துடுச்சு’ என்றார் ஜான் டேவிட். அருகில் இருந்த ஒரு சீனியர் காக்கி, 'சார் நல்லா ரீல் விடுறான். நாவரசு தலையை இங்கதான் போட்டேன்னு குட்டைக்கு எங்களைக் கூட்டிட்டுப் போய் அடையாளம் காட்டினதே இவன்தான்’ என்று அவர் அவசரமாக எஸ்.பி. காதில் கிசுகிசுக்க, அமைதியாகக் கேட்டுக்கொண்டார்.
சிறைக்குள் எடுத்துச் செல்வதற்காக ஒரு காலேஜ் பேக், பெய்ன் ஸ்பிரே, முகம் பார்க்கும் கண்ணாடி, பக்கெட், ஆகியவற்றுடன் ஒரு சிலுவையையும் எடுத்து வந்திருந்தார் ஜான் டேவிட். ஆனால், அவற்றை சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 'சிலுவையை மட்டுமாவது கொண்டுசெல்கிறேன்’ என்று ஜான் டேவிட் எவ்வளவோ கெஞ்சியும் விதிகளைக் கூறி மறுத்துவிட்டனர். இறுதியில், தான் வைத்திருந்த பைபிள் ஒன்றை ஜான் டேவிட்டின் கையில் கொடுத்து சிறைக்குள் அனுப்பிவைத்தார் தாயார் எஸ்தர்!''தேடுதல் வேட்டை விரைவில் முடிவுக்கு வந்ததில், அனைவருக்கும் நிம்மதி!
- க.பூபாலன், படம்: ஜெ.முருகன்
வெளியே வந்த வேகத்தில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து ஒரு கவுன்சிலராகவாவது ஆயிருந்தால் டேவிட் ஒருவேளை தப்பியிருக்கக் கூடுமோ என்னவோ. நாவரசின் இறப்புக்கு காரணம் என்ற அளவில் மட்டும் இருந்திருந்தால் ஒருவேளை மன்னிக்கும் மனப் பக்குவம் எல்லோரும் வந்திருக்கலாம். ஆனால் துண்டு,துண்டாக ஏதோ மட்டனை வெட்டுவது போல வெட்டியதுதான் இன்னும் டேவிட்டை அருவருப்பான ஆசாமியாக சமுதாயத்தை பார்க்க வைக்கிறது.
பதிலளிநீக்குநாவரசுவின் நினைவு இருக்கும் வரை அவன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
பதிலளிநீக்குதண்டனை என்பது தப்பு செய்தவன் திருந்துவதற்கு மட்டுமல்ல. தண்டனையின் கடுமை தப்பு செய்ய நினைக்கும் எவனும் இனிமேல் தப்பு செய்யாமலிருக்கத்தான்.
இவன் திருந்தி நாட்டுக்கு என்ன பலன். தற்கொலை செய்து கொண்டு இறந்திருந்தாலாவது சமூகத்திற்கு நன்மை.அநியாமாக கொலை செய்தால் தற்கொலைதான் முடிவு என்றாவது பயம் ஏற்படும்.
தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் ஒருவனது முடிவை தன் கதையில் சுஜாதா இப்படித்தான் முடித்திருப்பார்.
திருந்த நினைப்பவன்தான் "எனக்கு நாவுக்கரசு யாரென்றே தெரியாது.." என்கிறானோ?
பதிலளிநீக்குஇந்த கொலையை இவன் மட்டும் செய்திர்க்க வாய்ப்பு இல்லை . காலேஜ் இல் படித்த அனைவருக்கும் நன்றாக தெரியும் ராக்கிங் குறைந்தது மூன்று அல்லது நான்கு பேராவது சேர்ந்து செய்வார்கள் , அங்கேயும் இப்படிதான் நடந்திருக்க வேண்டும் . அவன் ஹோச்டேல் ரூமில் வைத்து துண்டங்களாக வெட்டி இருந்தால் கண்டிப்பாக அவனது ரூம் மேட்ஸ்இற்கு அல்லது நண்ட்பர்களுக்கோ தெரியாமல் நடந்திருக்கோது . கண்டிப்பாக இந்த சம்பவத்தில் குறைந்தது மூன்றிர்ருகும் மேற்பற்றவர்கள் ஈடு பற்றிர்ருக்க கூடும் .
பதிலளிநீக்குமாற்றுச்சிந்தனைகள் காதுகொடுத்துக்கேட்கப்படவேண்டியவைதான். ஆனால் எல்லாவற்றிலும் மாறியே சிந்திக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.
பதிலளிநீக்குஉங்களுக்கு குறைந்தது ஜான் டேவிட் செய்த மற்ற கொலைகள், குற்றங்கள் பற்றியெல்லாம் தெரியுமா? வெறும் ராகிங் மட்டும் இல்லை, சகபாலின மாணவர்களோடு வன்புணர்ந்ததும் ஒரு முக்கிய குற்றம்.
துண்டம்துண்டமாக வெட்டிப்போட்டு, பார்சல் செய்தது எல்லாம் உங்களுக்கு வேண்டுமானால் "மாணவப்பருவத்து தவறா"கத் தெரியலாம். ஆனால் இப்படிப்பட்ட மிருகங்கள் திருந்தியோ திருந்தாமலோ வாழ்ந்துகொண்டிருப்பதால் சமூகத்துக்கு எந்தப்பயனும் இல்லை. மரண தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் கொடுக்க மாட்டார்களே, ஐயோ.
இதில் சிறைக்குள் செல்லும்போது பைபிள் வேறு. த்தூ!
ஜான் டேவிட் பல கொலைகள் செய்தவனா? இது உங்கள் கற்பனையா இல்லை உண்மையா என்பதை விளக்கவும் . அவன் ஹோமோ என்று ஜூனியர் விகடன் தவிர வேறு எந்த பத்திரிகைளும் செய்தி வரவில்லை. ஜூனியர் விகடன் தான் அவன் ஆஸ்திரேலியாவில் பதிர்யராக இருக்கான் , தப்பிவிட்டான் என்று செய்தி வெளி இட்டது. ஜூனியர் விகடனின் செய்திகள் பல மிகை படுத்த பட்ட செய்திகளை வெளி இடுவதில் வல்லவர்கள். நக்கீரன் போன்ற மற்ற பத்திரிகை வாசித்தவர்களுக்கு இது நன்கு புரியும் . அவன் நல்லவன் என்றும் கூறவில்லை , ஜான் டேவிட் நிரபராதி என்பதும் என் கருது அல்ல ஆனால் இந்த கொலை சம்பவத்தில் கண்டிப்பாக மூன்று நபர்களாவது செய்திருக்க வேண்டும் . அவன் பிரிஎண்ட்ஸ் கண்டிப்பாக இதில் சம்பந்த படாமல் இருக்க வாய்பேயில்லை .
பதிலளிநீக்குI dont want to comment on john pandian , he will have the same fate like veeramani .
பதிலளிநீக்குAfter Navarasus Murder Ragging deaths have reduced a lot , I wont say ragging has been eliminated totally in the campus but it has created awareness among the student community and parents. If John David has been pardoned it will surely create negative effect on the student community . It is not an emotional murder , it is a planned one . After his sons death Prof. Ponnusamy has started a school in madurai and providing opportunities to poor students
மரண தண்டனைதான் பொருத்தமாக இருக்கும். நாவரசு குடும்பத்தினர் மன நிலையை உணர வேண்டும்...
பதிலளிநீக்குஜான் டேவிட்டுக்கு கொடுத்த இரட்டை ஆயுள் தண்டனை என்பது மிகவும் குறைவான தண்டனை, முறையாக அவருக்கு மரண தண்டனைதான் சரியாக இருக்கும் ஏனென்றால் நாவரசுவின் குடும்பம் என்ன பாடுபடும் தன் மகன் இன்னேரம் ஒரு டாக்டராகியிருந்தால் அவர்களுடைய குடும்பம் சூழ்நிலை எப்படியெல்லாம் மாறி இருக்கும்...
பதிலளிநீக்குகுற்றம் செய்தவன் திருந்தி வாழ வேண்டும் என்று நினைக்கும் ந்ல்ல உள்ளங்கள்? தங்களின் ஒரே மகனை அநியாயமாக ப்றி கொடுத்த நாவரசு குடும்பம் என்னவேதனையில் இருக்கும் கவலை படாது போலும். மேலும் இரண்டு சம்பவ்ங்களிலும் கொலை செய்யபட்டவர்கள் ஒரே சமுதாய்த்தினர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?? அந்த குறிப்பிட சமுதாய்த்தினர் மீது அப்படி என்ன வெறி??
பதிலளிநீக்கு