12 ஏப்ரல், 2011

பொன்னர் சங்கர்


கடைசியாக கலைஞருடைய ரசிகர்களின் இருபதாண்டுகால சோகம் நிறைவு பெறுகிறது. கடந்த இரு தசாப்தங்களாக கலைஞர் மொக்கையாக மட்டுமே வசனம் எழுதுவார் என்கிற தமிழ் சினிமா செண்டிமெண்டை தூள் தூளாக்கியிருக்கும் திரைப்படம் பொன்னர் சங்கர்.

ஆனாலும் கலைஞரின் அசலான நாவலும், பாத்திரங்களும் பாஸ்பரஸ் குண்டு போட்டு இயக்குனரால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பது சற்றே கவலையான விஷயம். குறிப்பாக ‘அருக்காணி’ பாத்திரம். படத்தில் ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாக வந்துபோகிறது. நாவலை வாசித்தவர்கள், படத்தைப் பார்த்தால் நிச்சயம் நொந்துவிடுவார்கள். அவ்வளவு அபாரமான கதைக்கு, எவ்வளவு மொன்னையான திரைக்கதை.

மகன் ஹீரோ என்பதால், அப்பாவான இயக்குனர் நிறைய ஹீரோயிஸ காட்சிகளை ஹாலிவுட்டிலிருந்து சுட்டு ‘பில்டப்’ கொடுப்பதற்கே முழு உழைப்பையும் செலவழித்திருக்கிறார். ஹீரோவுக்கு நடிக்க ஓரிரு காட்சிகளையாவது கொஞ்சம் வலிவாக, சிரத்தையெடுத்து அமைத்திருக்கலாம்.

ஆனாலும் எல்லா மைனஸ் பாயிண்டுகளையும் சுனாமியாக சுருட்டித் தள்ளுகிறது தயாரிப்புத் தரம். இவ்வளவு கலர்ஃபுல்லான படத்தை சமீபவருடங்களில் கண்டதாக நினைவேயில்லை. எல்லா காட்சியிலுமே குறைந்தது இருபது பேர் நிரம்பியிருக்கும் பிரம்மாண்டம். அட்டகாசமான ஆர்ட் டைரக்‌ஷன். தைரியமாக தமிழில் சரித்திரக் கதைகளை சிந்திக்கலாம் என்கிற நம்பிக்கையை இளம் இயக்குனர்களுக்கு விதைத்திருக்கிறார் தியாகராஜன்.

செக்கச் செவேலேன ஹாலிவுட் நடிகைகளைப் போல இரட்டை ஹீரோயின்கள் எப்போதும் பாக்கெட் மற்றும் பெல்ட் போர்ஷனை தாராளமாக காட்டியவாறே அலைகிறார்கள். தப்பித்தவறி டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்துவிட்ட இளசுகளுக்கு பெரும் ஆறுதலான சமாச்சாரம் இதுதான்.

சரித்திரப் படத்துக்கு இளையராஜா இசை. வூடு கட்டி அடித்திருக்க வேண்டாமா? பாடல்கள் பரவாயில்லை. ஒரு டூயட் மட்டும் காதில் தேனாய் பாய்ந்தது. பின்னணி ஓவர் இரைச்சல்.

சமகால சமூகப்படம் இல்லை என்பதாலேயோ என்னமோ, கலைஞர் ரெக்கை கட்டி பறந்திருக்கிறார்.

வெண்தாடிக் கிழவர் ஒருவர் பேசும் வசனம், “என்னை அடையாளம் தெரியலையா? ஈரோட்டுக்குப் பக்கத்துலே இருக்குறதாலே ‘அவர்’னு நெனைச்சுக்கிட்டியா?”

“வளைபூட்டிய கரங்களால் வாளேந்தவும் முடியும்”

“ஆண்டவனுக்கு படைக்க வேண்டிய அமுதத்தை அர்ச்சகர் சுவைக்கலாமா?”

இப்படியாக நிறைய இடங்களில், பழைய கலைஞர் மீள்வருகை செய்திருப்பது தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கொங்கு மண்டலத்தையும், கொ.மு.க.வையும் ‘குஜால்’ செய்யும் விதமாக, தேர்தலுக்கு முன்பே படத்தை வெளியிட்டிருக்கிறார் கலைஞர். நிச்சயமாக பாதகமாக அமைந்துவிடாது என்பதே உடன்பிறப்புகளுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

இறுதிக் காட்சியில் உறையூர் சோழ அரசுக்கு, பொன்னிவள நாடு பணிந்துவிடாது என்று அமைக்கப்பட்ட காட்சியில், சோனியா காந்திக்கு மறைமுக செய்தியையும் தலைவர் சொல்லியிருக்கிறார். ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ எனும் திமுக கொள்கையை வாழைப்பழத்தில் ஊசியாக ஏற்றியிருக்கிறார். விடுங்க தலைவரே. அதுதான் அறுவத்தி மூணை அள்ளிக் கொடுத்திட்டீங்களே, அப்புறமென்ன பேச்சு?

பொன்னர் சங்கர் – கொள்கை முழக்கம்!

10 கருத்துகள்:

  1. மனோகரா டிவிடி தான் எல்லா கடையிலும் கிடைக்குதே. பிறகெதற்கு பொன்னர் சங்கர் படத்தி போய் பார்க்கிறீங்க.
    இளஞ்சிங்கத்தை, இளைஞனை பார்த்து கொட்டாவி விட்டவர்களுக்கும், மொக்கையான வசனங்களுக்குப் பதில, கண்ணுக்கு கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கட்டும்னு ரெண்டு பொம்பளப் பிள்ளைகள இயக்குநர் தியாகராஜன் காண்பிச்சுருக்காரு. உங்களுக்குப் பொறுக்கலையா?

    பதிலளிநீக்கு
  2. என்ன தோழர் இது, சப்பைக்கட்டு. ஆசை ஆசையா முதல் நாள் பார்த்தபடம். நாவல் மாதிரி இல்லைன்னு அதே செண்டி டயலாக்கெல்லாம் விடமாட்டேன். ஆனா பிள்ளையார் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு குரங்கைப் பிடித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  3. நீண்ட காலத்திற்குப் பிறகு சரித்திரப் படம் , ஆர்ட் டைரக்‌ஷன் அருமை , மிகவும் சிரமப் பட்டு எடுத்து இருக்கிறார்கள் கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் ஒகே .

    / ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’/

    இப்போது தலைவரை பொறுத்த வரை மத்தி என்பது சென்னை , மாநிலம் என்பது மதுரை

    பதிலளிநீக்கு
  4. vara vara lucky-yin jaalra saththam ooooooooooooover.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா4:52 PM, ஏப்ரல் 13, 2011

    ஹீரோ வசனமே பேசாமல் இருக்கும் வரலாற்று படம் இதுவாகத்தான் இருக்கும். பொன்னர் சங்கர் என்று வைத்து விட்டு இப்படி அசட்டு தனமாக படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் இரண்டு பிரசாந்த் வரும் இடங்களில் ஒளிப்பதிவு மிகவும் கலங்கலாக இருக்கிறது. இந்த கதையை யாரவது மலையாள பட இயக்குனர்களிடம் கொடுத்து இருந்தால் சிறப்பாக இயக்கி இருப்பார்கள்.

    கலைஞரின் எழுத்து திறமையை குறைத்து மதிப்பிட வைத்து விட்டது இந்த படம். அவர் இதை தவறிது இருக்கலாம். இயக்குனரை நம்பி கலைஞர் மோசம் பொய் விட்டார். விஜயகுமார் நாடக நடிகர் போல அலறும் இடத்தில் அரங்கம் முழுவதும் சிரிப்பலை.

    பதிலளிநீக்கு
  6. Dont worry this film will run successfully till may 13....

    பதிலளிநீக்கு
  7. காங்கிர‌ஸ்கார‌ன்5:25 PM, ஏப்ரல் 13, 2011

    //இறுதிக் காட்சியில் உறையூர் சோழ அரசுக்கு, பொன்னிவள நாடு பணிந்துவிடாது என்று அமைக்கப்பட்ட காட்சியில், சோனியா காந்திக்கு மறைமுக செய்தியையும் தலைவர் சொல்லியிருக்கிறார். ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ எனும் திமுக கொள்கையை வாழைப்பழத்தில் ஊசியாக ஏற்றியிருக்கிறார்.//

    உட‌ன்பிற‌ப்பே.....

    எழுதி வைத்துக்கொள்.

    காங்கிர‌ஸை அழிக்க‌ புற‌ப்ப‌ட்ட‌
    க‌ருணாநிதி ‍இன்று
    காங்கிர‌ஸின்
    கால‌டியில்.

    க‌ருணாநிதியின் அழிவு
    காலன்பிடியில் அல்ல ராகுல்
    காந்தியின் கிடுக்கி பிடியில்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா6:02 PM, ஏப்ரல் 13, 2011

    எங்க தாம்பரம் ஏரியாவில் பொன்னர் சங்கர் திரைப்பட டிக்கேட்டுகள் வீடுவீடாக போய் இலவசமாக வழங்கினார்கள், உங்களுக்கும் கிடைத்ததா?

    பதிலளிநீக்கு
  9. இதெல்லாம் எலக்ஷன் கமிஷன் கிட்டே புகாரா கொடுக்க முடியாதா? என்று சமீபத்தில் கலைஞர் வசனம் பத்தி படித்த கமென்ட் ஞாபகம் வருது...ஒரு விஷயம் கவனிச்சீங்களா...அவரு வசனம் எழுதுகிற படத்தை அவரு பேரன்கள் யாரும் தயாரிக்கிறதே இல்லே...புத்திசாலி பேரன்கள்.

    பதிலளிநீக்கு
  10. வெண்தாடிக் கிழவர் ஒருவர் பேசும் வசனம், “என்னை அடையாளம் தெரியலையா? ஈரோட்டுக்குப் பக்கத்துலே இருக்குறதாலே ‘அவர்’னு நெனைச்சுக்கிட்டியா?”


    இது காலத்திற்கு ஒத்து வரதா வசனம்
    .( விட்டால் திருவள்ளுவர் கூட "ஈரோடு தாடியை " பற்றி பேசுவது போல , திருவள்ளுவரின் வாழ்க்கை சினிமா- வில் காட்டுவார்கள் . )


    படத்தின் முதல் காட்சியிலேயே ("வெற்றிலை பாக்கு விஜயகுமாருக்கு ஊட்டுவது ") ஒரு பரபரப்பு தொற்றி கொள்கிறது .

    பதிலளிநீக்கு