11 ஜூலை, 2011

இராணுவப் பதிவு – விளக்கம், சில சந்தேகங்கள்!

கடந்த வாரம் எழுதியிருந்த இராணுவப் பதிவுக்கு, இதுவரை நான் எழுதிய எப்பதிவுக்கும் கிடைக்காத கடுமையான எதிர்வினைகள் கிடைத்திருக்கிறது. ஏகப்பட்ட மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள். இராணுவத்தையே கேள்விக்கு உள்ளாக்குவது ஒரு பத்திரிகையாளனின் தகுதிக்கு அழகல்ல என்கிற வகையிலான எதிர்வினைகள் நிறைய. நிச்சயமாக சொல்ல முடியும். இப்படிப்பட்ட ஒரு கட்டுரையை எந்தப் பத்திரிகையிலும் எழுதவே முடியாது. எனவேதான் இணையத்தில் எழுதினேன்.

வயிற்றுப்பாட்டுக்காக நான் செய்துவரும் பணியையும், நான் எழுதிவரும் வலைப்பூவையும் தொடர்புபடுத்தி பார்ப்பது சரியல்ல. என் வலைப்பூ முழுக்க முழுக்க என்னுடைய சுயேச்சையான சிந்தனைகளை வெளிப்படுத்துபவை. என்னுடைய தனிப்பட்ட கொள்கை, விருப்பு-வெறுப்பு ஆகியவை, தொழில் நிமித்தமான பணியில் நிச்சயம் வெளிப்படாது. அதுபோலவே நான் பணிபுரியும் நிறுவனங்களுக்கு வேறு கொள்கைகள், வழிமுறைகள் இருக்கலாம். அது என்னுடைய வலைப்பூவிலும் எதிரொலிக்க வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.

இதே பதிவை பத்திரிகைக்கு கட்டுரையாக எழுத வேண்டிய நிலை வந்திருந்தால், புள்ளி விவரங்களையும் துல்லியமாக தந்திருப்பேன். இன்னும் கூடுதல் ‘லாஜிக்’ சேர்த்திருப்பேன். பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதுவதில் இருக்கும் பெரிய சிக்கல், வாசகனை 100% கன்வின்ஸ் செய்தாக வேண்டும். வலைப்பூவில் அந்தப் பிரச்சினை இல்லை. இங்கே வாசகன் என்று யாருமில்லை. பதிவில் இருப்பது என்னுடைய சிந்தனை. வாசிப்பவர்கள் அவர்களுடைய சிந்தனைகளை பின்னூட்டங்களில் பதிவு செய்யலாம். இந்த உடனடி வசதி அச்சு, காட்சி ஊடகங்களில் இல்லை என்பதுதான் இணையத்தின் சிறப்பு.

அப்பதிவு எழுதப்படும் போது நான் கண்மூடித்தனமான கோபத்தில் இருந்தேன். எனவேதான் பதிவின் பின்குறிப்பாக அபத்தமான கருத்துமையத்தையும், மொழிநடையையும் வேண்டுமென்றே இப்பதிவுக்கு தேர்ந்தெடுத்தேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நானும், தோழர் அதிஷாவும் வாரம் ஒருமுறையாவது தீவுத்திடலுக்கு எதிரே இருக்கும் அந்த சேரிப்பகுதியில் சில நிமிடங்கள் நின்று இளைப்பாறுவதுண்டு. அப்பகுதி மக்களின் கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவர்களது தொடர்பு மொழி கொஞ்சம் கரடுமுரடானதாக இருந்தாலும் பொதுவில் பார்க்கப் போனால், ஒவ்வொருவரும் நெஞ்சில் டன் கணக்காக அன்பை சுமந்து வாழும் உயிர்கள்.

பதினைந்து நாட்களுக்கு முன்பாக கூட ஒரு காட்சியை காண நேர்ந்தது. வந்தவாசிக்கு அந்தப் பக்கமாக இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி யாரோ ஒரு இருபது வயது மதிக்கத்தக்க பையன் வந்திருக்கிறான். எங்கெங்கோயோ அலைந்து, திரிந்து கடைசியாக இந்த சேரிப்பகுதியை தஞ்சமடைந்திருக்கிறான். பிழைப்புக்காக கிடைத்த வேலைகளை செய்து வாழ்ந்திருக்கிறான். திடீரென்று ஒருநாள் ஏதோ ஒரு விபத்தில் மரணமடைந்து விட்டான். அவனது உடல் ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்பகுதியில் இருந்த எல்லா மக்களும் குழந்தை, குட்டியை அழைத்துக் கொண்டு சாலைக்கு நூற்றுக் கணக்கில் திரண்டு விட்டார்கள், இறந்தவனின் உடலை காண. செத்தவன் யாரோ, எவனோ என்று விட்டேத்தியாக சுச்சூ கொட்டிவிட்டு செல்லும் சென்னைக் கலாச்சாரச் சூழலில், தமிழ் கிராமத்துப் பண்பாடுகளோடு இன்னமும் வாழும் மக்கள் அவர்கள்.

இப்படிப்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவன் கொல்லப்பட்டான் என்று கேள்விப்பட்டதுமே அழுகையும், கோபமும் கண்ணை மறைத்த நிலையிலேயே அப்பதிவை எழுதினேன். இருப்பினும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூட, மிதமிஞ்சிய நிதானத்தோடே, ஓவர் வார்த்தைகளை விடாமல் எழுதியிருப்பதாக இப்போது வாசித்தாலும் புரிகிறது.

அடுத்து, இராணுவம் மீது இவ்வளவு காழ்ப்பு எனக்கு இருக்க, ஏதோ ‘பர்சனல்’ காரணம் இருக்கலாம் என்றும் சில நண்பர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆக்சுவலி, நான் ஒரு இராணுவ வீரரின் பரம்பரையில் வந்தவன். என்னுடைய தாத்தா முதலாம் உலகப்போரில் இந்திய ராணுவத்துக்காக சண்டை போட்ட ஜவான். ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்கு அக்காலக்கட்டத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்டிருக்கிறார். பிற்பாடு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபிறகு அவருடைய சேவையைப் பாராட்டி வந்தவாசியில் நிலபுலமும், கால்நடைகளும் கொடுத்து கவுரவித்தது அந்நாளைய அரசு. பின்னர் சென்னை காவல்துறையில் குதிரைப்படை வீரராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். சென்னை கொண்டித்தோப்பு போலிஸ் லேனில்தான் இருபதாண்டுகளுக்கும் மேலாக என் குடும்பம் வசித்திருக்கிறது. அவர் மட்டுமல்ல. எங்களுடைய நெருங்கிய உறவினர்கள் பலரும் இன்றும் இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். என்னுடைய பெரியப்பாவுக்கு கூட இராணுவ வீரரின் வாரிசுதாரர் என்கிற முறையில்தான் மத்திய அரசுப் பணி கிடைத்து எங்கள் குடும்பமே சமூகத்தில் தலைநிமிர்ந்தது. அவரது ‘வாரிசு’ சான்றிதழை வைத்து பேரர்கள் வரை பலரும் பலன் பெற்றிருக்கிறோம். எனவே அவ்வகையில் பார்க்கப் போனால், நான் இராணுவத்துக்கு கடமைப்பட்டவன் தானே தவிர, காழ்ப்புணர்வு கொள்ள ‘பர்சனல்’ காரணம் ஏதுமில்லை.

அப்பதிவில் கோடிட்டுக் காட்டியிருக்கும் ‘முக்கியமான’ கருத்தை, ஒரு சிலரைத் தவிர்த்து வேறு யாரும் கவனித்ததாக தெரியவில்லை. போர், பேரிடர்க் காலம் தவிர்த்து மற்ற காலங்களில் எந்த செயல்பாடும் இல்லாமல் இருக்கும் ஒரு அமைப்புக்கு, ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்திய அரசு ஒதுக்குவது குறித்த அபத்தமான அவலம்தான் அது. இந்திய இராணுவத்தில் மிகச்சிறந்த பொறியாளர்கள் இருக்கிறார்கள். மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் நிறைய ஏனைய தொழில்சார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களது அறிவு வெறுமனே போருக்கும், பேரிடருக்கும் மட்டும்தான் பயன்பட வேண்டுமா? பொறியாளர்கள் மக்களுக்குப் பயன்படும் பாலங்கள் கட்டலாம், சாலைகள் போடலாம். ஏன் செல்போன் கூட தயாரிக்கலாம். மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவச்சேவை வழங்கலாம். இராணுவம் பாதுகாப்பு தவிர்த்து மற்றைய பணிகளிலும் ஈடுபடலாம், அரசுக்கு வருவாயும் ஈட்டலாம். பல முன்னேறிய நாடுகளில் இதற்கெல்லாம் முன்னுதாரணம் உண்டு. சுவிட்சர்லாந்தில் சாக்லெட் கூட தயாரித்து விற்கிறார்களாம்.

சரி, இதையெல்லாம் விட்டுவிடுவோம்.

இப்போது ‘குற்றவாளி’யை கண்டுபிடித்து விட்டார்களாம்.

சென்னை மாநகர காவல்துறை இவ்வழக்கினை விசாரணை செய்வது, இராணுவத்துக்கு கவுரவக்குறைவாக இருந்ததால், சி.பி.சி.ஐ.டி. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

தில்ஷன் கொல்லப்பட்ட இடத்தில் ‘தடயம்’ இராணுவ வீரர்களால் ஊற்றி, கழுவப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன. ‘வினவு’ ஊடகம் வெளியிட்டிருக்கும் படத்தில் தடயத்தை, தமிழக போலிஸாரே கழுவிக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையில் அஜய்சிங் (சில ஊடகங்கள் அஜய் வர்மா என்றும் குறிப்பிடுகின்றன) என்கிற இராணுவ அதிகாரி மீது சந்தேகம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. சம்பவ நாளன்றே, காரில் எங்கோ சென்றுவிட்டு இறங்கியவரிடம் போலிஸ் விசாரணை நடத்தியது. பதட்டத்தை மறைக்க ‘சிகரெட்’ பிடித்தவாறே பேசியவர், சம்பவம் நடந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் இருந்ததாக ‘அலிபி’யோடு சொல்லியிருக்கிறார். மாறாக அவரது செல்போன் சிக்னல்களை ஆராய்ந்தபோது, இரண்டு மூன்று மணி நேரமாக தீவுத்திடலையே அவர் சுற்றி வந்தது தெரியவந்தது.

அடுத்ததாக கொல்லப்பட்ட தில்ஷனோடு சென்றிருந்த மூன்று சிறுவர்கள் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தி குற்றவாளியை அடையாளம் காணப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

நேற்று, திடீர் திருப்பம்.

மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி ராம்ராஜ் கந்தசாமி கைது செய்யப்பட்டு, கொலை செய்ததாக வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். தில்ஷனோடு சென்ற சிறுவர்கள் மூன்று பேர் இல்லையாம். நான்காவதாக ஒரு சிறுவனும் இருந்தானாம். அவன் கொடுத்த தகவலின் படியே ராம்ராஜ் குற்றவாளி என்பது தெரிந்ததாம்.

நமக்கு சில நியாயமான ஐயங்கள் ஏற்படுகிறது.

1. அஜய்சிங் ஏன் பொய் சொன்னார்?

2. குற்றவாளியை அடையாளம் காண, மூன்று சிறுவர்களின் முன்பாக அணிவகுப்பு நடத்தப்படும் என்றார்கள். அது ஏன் நடத்தப்படவில்லை?

3. நான்காவது சிறுவன் கேரக்டர் உள்ளே நுழைக்கப்பட்டு, உடனடியாக குற்றவாளி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது ‘போங்கு’ ஐடியாவாக தோன்றுகிறது. எனக்கென்னவோ இந்த நான்காவது சிறுவனை அடையாளம் காணவே, தனி அணிவகுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

4. துப்பாக்கியை கூவத்தில் போட்டுவிட்டார் என்று முதலில் அஜய்சிங் மீதுதான் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதே கதை ராம்ராஜூக்கும் சொல்லப்பட்டு, கூவத்தில் உடனடியாக (ஒசாமா பின்லேடன் கையில் வைத்திருந்ததைப் போன்ற) பெரிய துப்பாக்கி கைப்பற்றப்படுகிறது. கூவம் ஆற்றில் போட்ட இடத்திலேயே துப்பாக்கி அப்படியே இருந்திருக்கிறது. ஒருவாரமாகியும் துப்பாக்கி கொஞ்சம் கூட நகராமல் அப்படியே செருகிக் கொண்டிருந்ததாம். (சில ஆண்டுகளுக்கு முன் கதிர்வீச்சு கருவியை சிலர் கூவத்தில் போட்டுவிட்டு, ஒரு வாரகாலம் இரவு பகலாக எது எதோ கருவிகளையும், ஆயிரக்கணக்கான ஆட்களையும் வைத்து சல்லடை போட்டு தேடியது நினைவுக்கு வருகிறது).

5. கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றுவிட்ட ராம்ராஜ், மேலும் மூன்று மாத காலம் இராணுவக் குடியிருப்பில் தங்கியிருக்க அனுமதி கேட்டாராம். ஜூலை இறுதியில் மதுரைக்கு மூட்டை கட்ட இருந்தவர், பாதாங்கொட்டை பருப்பு மாதிரியான அற்ப காரணத்துக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பார் என்று சொல்லுவது சிறப்பான ‘காதுகுத்து’ மாதிரியிருக்கிறது.

6. காரில் வந்த ஒருவர் சுட்டார் என்று முன்பு மூன்று சிறுவர்கள் ஏன் பொய் வாக்குமூலம் கொடுத்தார்கள்? ராம்ராஜ் பால்கனியில் இருந்து சுட்டதாக சொல்கிறார்.

7. இரத்தம் இருந்த இடத்தை தானே கழுவி, தடயத்தை அழித்ததாக ராம்ராஜின் வாக்குமூலம். அப்படியெனில் போலிஸார் ரத்தத்தை கழுவுவதாக வினவுத்தளம் வெளியிட்டிருக்கும் படம் எங்கே எடுக்கப்பட்டது?

இப்படியாக இன்னும் நிறைய ஐயங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் விசாரணை அமைப்பு, விசாரணை நடத்தி ராம்ராஜ்தான் குற்றவாளி என்று சொல்லியிருக்கிறது. அவர் மீது இராணுவ கோர்ட்டும் விசாரணை நடத்துமென தெரிகிறது.

ராம்ராஜ் ஓய்வு பெற்றுவிட்டவர் என்பதால், இக்கொலைச் சம்பவக் கறை, இராணுவத்துக்கு இனி இல்லை. இராணுவத்தின் கை சுத்தம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அதுவுமின்றி தமிழ் சிறுவனை கொன்றவர் ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர் என்பதால், இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் இனி நமக்கு எந்த கேள்வியும் இல்லை.

26 கருத்துகள்:

  1. ராணுவ நடவடிக்கை இது தானா வலைபூவிலும் வளுக்கிறதா,,,

    பதிலளிநீக்கு
  2. இத்தனை நாள் காஷ்மீரில் மட்டுமே கபளீகரம் நடத்திய ராணுவ வீரர்கள் இங்கே துவங்கி இருக்கிறார்கள்.

    வேலி பயிரை மேயதுவங்கி இருக்கிறது.
    முடிவு என்ன ஆகிறது பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்லுவதெல்லாம் சரிதான். ஆனால் இதை எல்லாம் விட ஒரு கர்னல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவரை எப்படி பலிகடாவாக்க முடியும்? இல்லை அவர்தான் எப்படி ஒத்து கொண்டிருப்பார்?. ஒரு ஜவான் மாட்டி இருந்தால் நீங்கள் சொல்வதை ஒத்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  4. ஐயங்கள் சரியானவை தான் - யார் பதில் சொல்லப் போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா3:15 PM, ஜூலை 11, 2011

    //இராணுவத்தின் கை சுத்தம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அதுவுமின்றி தமிழ் சிறுவனை கொன்றவர் ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர் என்பதால், இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் இனி நமக்கு எந்த கேள்வியும் இல்லை.//என்ன அநியாயம் இது?

    பதிலளிநீக்கு
  6. சொந்த நாட்டிலேயே இப்பிடீன்னா... இன்னொரு நாட்டில போய் எப்புடி 'அமைதி காத்து' என்னமோ போங்க பாஸ்!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா3:46 PM, ஜூலை 11, 2011

    Questions are right. I do have similar kind of Qs.Looks, ramraj took some money or army asked him to help in this case as other person is from N.India.

    Note: I feel these military bases are setup to avoid last minute transport and immediate action during emergency.

    பதிலளிநீக்கு
  8. Sariyaa Sonnenga Boss.Even i have the same thoughts..

    பதிலளிநீக்கு
  9. நல்ல கேள்விகள்... நாக்கை பிடுங்கி கொள்ளலாம்... ராணுவத்தின் இந்தக் குறிப்பிட்ட செய்கையை கண்டித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்...

    நீங்கள் நேரடியாக உங்கள் தரப்பு நியாயத்தை பிண்ணுட்டமாக தெரிவித்து இருக்கலாம். பதிவருக்கு போன் செய்து மிரட்டுவது சரியாகாது.

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு, பிரஜைகள் அனைவருக்கும் கருத்துரிமை இருக்கிறது என்ற எண்ணத்தில் பதிவு செய்யப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. இதில் சந்தேகமே இல்லை. ஜோடிப்பது என்பது இந்திய அரசு அமைப்புகளின் பல்லாண்டுகால வாடிக்கை. மற்றபடி ராணுவத்தின் தவறுகள் அவ்வப்போது வெளிவரும்.அதில் இது ஒரு சிறு துளிதான். மிகபெரிய தவறுகளை மணிப்பூரிலும் மற்ற வட கிழக்கு மாநிலங்களிலும் ராணுவம் செவ்வனே செய்துகொண்டுதான் இருக்கிறது.

    மிக சாதாரணமான ஒரு உதாரணம் ஊழல் : எனது பள்ளி தோழர்கள் நிறைய பேர் ராணுவத்தில் உள்ளனர்.அவர்கள் ராணுவத்திற்க்கு முறைப்படி தேர்வானலும் சில பெரிய அதிகாரிகளுக்கு கணிசமான அளவு (சுமாராக ரூ 60000 முதல் ரூ 80000)(சுமாராக 10 ஆண்டுகளுக்கு முன்பு) லஞ்சம் கொடுத்த பின்னரே பணியில் சேர அனுமதி வந்தது.

    இன்னும் வெளிவரவேண்டியது நிறைய உள்ளது.....

    பதிலளிநீக்கு
  11. Thanks for the blog. Please do keep writing similar kind of blogs. It will help every one to know your true intentions and real nature.

    பதிலளிநீக்கு
  12. Yuva , if anyone complains or blames you ask them to speak to dilshans family . They are the right persons to answer these patriotic fellows , these military personnel dint shoot a terrorist or enemy , they shot down a kid . Only the kids family know the pain , if those patriots doesn't have maturity to understand this article that this one is not against army its against the atrocity committed by their personnel who think that they are above IPC .

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா12:08 PM, ஜூலை 12, 2011

    நம் மக்களுக்கு உள்ள உணர்வு ஒன்றே ஒன்று தான் ....அது 'யோசிக்காமல் குருட்டாம் போக்காக எதையாவது ஆதரிப்பது '!உங்கள் பதிவில் உள்ள உண்மையை ஏற்று கொள்ள தயங்குகிறார்கள் என்பதே உண்மை !
    வழக்கம் போல உலகிலேயே 'சிறந்த'!!(??!!) காவல் துறை .....பல லாஜிக் ஓட்டைகள் உள்ள கதையை தயார் செய்திருக்கின்றனர் ! காவல் தெய்வம் புரட்சி தலைவியும் இதை ரசித்து கொண்டு இருக்கிறார் ......ஏனென்றால் புதிய தலைமை செயலக வளாகத்தில் கோவில் கட்டும் அதி முக்கிய வேலை இருக்கிறதே ! யுவா, இந்த கதையை நாம் நம்பா விட்டாலும் ....காவல் துறையும் ராணுவமும் செய்யும் இந்த திருட்டு வேலை ....உண்மை கொலையாளியை கண்டிப்பாக தப்புவிக்க உதவும் ! காஷ்மீர் ,மணிப்பூர் ,இலங்கை ,பஞ்சாப் ,இப்பொழுது தமிழகம் ! - Bloorockz

    பதிலளிநீக்கு
  14. it was definitely done by a North Indian "Naathaari Indian" as Anonymous said, the Army wants to hide the truth and make up the things...............That is what the Indian Government doing all the time. BULLSHIT LAWS AND BULLSHIT GOVERNMENT.

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் கேட்கும் கேள்விகள் நியாயமாகவே தெரிகின்றன. இருப்பினும், யாரோ செய்த கொலைக் குற்றத்தை இவர் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? [அதன் தண்டனையை இவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாரா?]

    பதிலளிநீக்கு
  16. It is amazing how you use Vinavu's article to strengthen your case when your are in deep shit while a few weeks ago, you questioned the authenticity of articles written in Vinavu about the shamless Charu issue...Well, I just forgot you are a DMK person....Ungaluku ithelllam sappa matter illa...

    பதிலளிநீக்கு
  17. சுட்ட நபர் இளைஞர் என்றும், ரானுவ வீரரின் மகன் என்றும் சில செய்திகள் வந்தன். காரில் இருந்து வந்தவர் சுட்டார் என்று சொன்ன சிறுவர்களின் வாதத்தினை வைத்துப் பார்த்தால். நீதி நிச்சயமாக தில்சனுக்கு சாதகமாக இல்லை என்பதே தெரிகிறது.

    வெறும் பாதம்கொட்டைகளை பொறுக்க வந்த சிறுவன் மீது காட்டியது மிகப் பெரும் வெறுப்பு. துப்பாக்கியை தூக்கும் முன் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பதே பெரும் கேள்வி.

    பாதம் கொட்டைகளைக் கூட பகிர மனமில்லாமல், கொலை செய்யும் மனிதர்கள் வாழும் உலகில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது குமட்டிக் கொண்டு வருகிறது.

    அன்புடன்,
    ஜெகதீஸ்வரன்.
    sagotharan.wordpress.com

    பதிலளிநீக்கு
  18. (sorry for english)

    Lucky, I have similar questions you have. I do not believe the whole new story coming out. Now we can get an idea what indian army is doing in kashmir and what they did eelam. its total crap. Where is Vaiko and Nedumaran etc., They will keep quiet becos its not MK's government.

    பதிலளிநீக்கு
  19. வானளாவிய அதிகாரம் இராணுவத்துக்கு‍ வழங்கப்பட்டுள்ளது‍ என்னவோ உண்மைதான். அது‍ போர் காலங்களில் எதிரிகளை பந்தாடுவதற்கு‍த்தானே தவிர பொது‍ ஜனத்தை வேட்டையாடி‍ விளையாடுவதற்கு‍ அல்ல. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஒரு‍ வசதி. குறி பார்த்து‍ சுட்டு‍ பயிற்சி பெற மாடல் பொம்மைகள் தேவையி்ல்லை...

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா1:24 PM, ஜூலை 14, 2011

    ரஜினி கடுமையாக இராணுவ தலைமையகத்தில் அப்பாவி குழந்தை கொலை கண்டிக்கிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும் http://bit.ly/n9GwsR

    பதிலளிநீக்கு
  21. கர்னல் ஹரிஹரனை சமீபத்தில் சந்தித்தேன் அப்பொழுது ஊருக்கு நடுவில் எதற்கு இராணுவகுடியிருப்பு என்று கேட்டேன் அதற்கு நாங்க புள்ளை குட்டியோட வாழவேண்டாமா எந்நேரமும் எல்லையிலா இருக்க முடியும் என்றார். அதற்கு இல்லை நீங்கள் தோமையர் மலைக்கு அருகில் செல்லலாமே ஊருக்கு நடுவில் இருக்கும் இடம் பொதுமக்களுக்கோ இல்லை தலைமைசெயலகத்தில் வேலைபார்ப்பவர்களுக்கு ஒதுக்கினால் வசதியாக இருக்குமே என்றால் நீங்க வேண்டுமென்றால் தோமையார் மலைக்கு சென்று குடியிருங்கள் என்று கத்திவிட்டு இடத்தை விட்டு ஓடினார்.. எழுதுவதற்காக அமைதியாக எழுதினேன். ஆனால் காரசாரமான ஆங்கில வார்த்தை பிரோயகங்கள் நடந்தது இருவருக்கும் இடையில். கடைசியில் கத்திகொண்டே ஓடியதை பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது.. எனக்கு முன்பாகவே இரண்டு பெண்மணிகள் வேறு அவரை கேள்வியால் துளைத்து துவைத்து எடுத்தனர்..

    பதிலளிநீக்கு
  22. உங்கள் இராணுவப் பதிவை எதிர்த்தவர்களுள் நானும் ஒருவன்.. அந்த பதிவு சிறுவன் கொல்லப்பட்டதால் வந்த உணர்ச்சியின் வெளிப்பாடாகவும், இந்த பதிவு ஒரு நியாயமான பத்திரிக்கையாளரின் பதிவாகவும் உள்ளது.

    முதலில் இந்த பதிவை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்..

    \\நல்ல கேள்விகள்... நாக்கை பிடுங்கி கொள்ளலாம்... ராணுவத்தின் இந்தக் குறிப்பிட்ட செய்கையை கண்டித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்...\\
    அந்த பதிவில் பின்னூட்டமிட்ட யாரும் ராணுவத்தின் இந்தக் குறிப்பிட்ட செய்கையை நியாயப்படுத்தவில்லை. அதற்காக மொத்த ராணுவமும் வெளியேற வேண்டும் என்பது போன்றான கருத்துக்களை மட்டுமே எதிர்த்தோம்.
    \\பொறியாளர்கள் மக்களுக்குப் பயன்படும் பாலங்கள் கட்டலாம், சாலைகள் போடலாம். ஏன் செல்போன் கூட தயாரிக்கலாம். மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவச்சேவை வழங்கலாம். இராணுவம் பாதுகாப்பு தவிர்த்து மற்றைய பணிகளிலும் ஈடுபடலாம், அரசுக்கு வருவாயும் ஈட்டலாம். \\
    200% வரவேற்கிறேன்..

    வர வர தமிழர்கள் நடத்தப்படுவதை பார்க்கும்போது தனித்தமிழ் நாடு கோரிக்கையை மீண்டும் எழுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளுப்படுவோம் என்று தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு