29 ஜூலை, 2011

புரட்சியும், பூர்ஷ்வாவும்!

ரு டீ சாப்புடலாமா தோழர்?” தோழர் கேகே கேட்டால் மறுக்க முடியுமா?

வாங்க தோழர் போகலாம்வாசித்துக் கொண்டிருந்த ஏழு தலைமுறைகள்நூலை டேபிளில் வைத்துவிட்டு கிளம்பினேன்.

அக்கம் பக்கம் சில தோழர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளை பிரித்து வாசித்துக் கொண்டிருந்தார்கள். புரட்சி வருவது குறித்த செய்தி ஏதாவது தேறுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். தோழர்கள் பெரும்பாலும் இரண்டு வார தாடி வைத்திருப்பார்கள். ஜிப்பா அணிவார்கள். தோளில் ஜோல்னா பை. பையில் ஓரிரண்டு ரஷ்ய மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள் நிரந்தரமாக இருக்கும். புதுத்தோழர் ஒருவர் பேராசானின் பொதுவுடைமை வாசித்துக் கொண்டிருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தது ஏனென்று தெரியவில்லை. இரவு முழுவதும் வாசித்திருக்கலாம். அவரையும் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தும் பணி கேகே தோழர் தலையில் தான் விடியும்.

முப்பதுக்கு இருபது அளவில் ஒரே அறையாக இருந்த கட்சியின் கிளை அலுவலகம் கிட்டத்தட்ட ஒரு நூலகம். தோழர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் இங்கு வந்து தேவையான நூல்களையோ, செய்தித்தாள்களையோ இலவசமாகவே வாசிக்கலாம். ஆனால் தினத்தந்தி வைப்பதில்லை என்று இயக்கத்தை சார்ந்த தோழர்கள் தவிர்த்து வேறு யாரும் இந்தப் பக்கம் வருவதில்லை. கட்சிப் பத்திரிகைகளையும், ரஷ்ய மொழிப்பெயர்ப்பு நூல்களையும் வெகுஜனங்கள் வாசிக்கும் நிலையை ஏற்படுத்துவதே புரட்சிக்கு இடும் வித்து என்பதாக தோழர் கேகே சிந்தித்து சிலாகித்துச் சொன்னார். ஆனால் வித்து இடும் பணி அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. வெகுஜனங்கள் ஒத்துவர வேண்டுமே?

நீளவாக்கில் இருந்த பெஞ்சில் மத்திய அரசை கண்டித்து அச்சிடப்பட்ட சூடான சுவரொட்டிகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இன்று இரவு தான் தோழர்களோடு போய் ஒட்டவேண்டும். எல்லா சுவரொட்டிகளுமே மத்திய அரசே! மத்திய அரசே!என்றுதான் ஆரம்பிக்கும். கண்டிக்கிறோம்என்றோ விடுதலை செய்!என்றோ முடியும். இடையில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அவ்வப்போதான பிரச்சினைகளின் அடிப்படையில் இயக்கத்தின் பொலிட்பீரோ முடிவெடுத்துச் சொல்லும்.

சமீபத்தில் தான் இந்த இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். தீவிரப் புரட்சிச் செயல்பாடுகளின் மீதிருந்த அதீத ஆர்வத்தால் நான் இங்கு இணைந்ததாக நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இங்கு வருவதற்கு முன்பாக இப்போதிருக்கும் ஆளுங்கட்சியில் தீவிர செயல்பாடுகளை கொண்டிருந்தேன். அந்தக் கட்சியின் 153வது வட்டச் செயலாளருக்கும் எனக்கும் தகராறு. கக்கூஸ் காண்ட்ராக்டில் அவர் பல லட்சம் ஊழல் செய்திருந்ததாக கண்டுபிடித்தேன்.

ஒண்ணுக்கு போறவனும் ரெண்டுக்கு போறவனும் கொடுக்குற ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் காசுலே என்னத்தய்யா லட்சக்கணக்குலே ஊழல் பண்ணமுடியும்?” செயல்வீரர் கூட்டத்தில் திருப்பிக் கேட்டார் வட்டம்.

அவர் கேட்ட கேள்வி நியாயம் தான். ஆனால் எந்த வேலை வெட்டியோ, பூர்வீக சொத்தோ இல்லாத அவர் எப்படி புதிய டாடா சஃபாரி வாங்கியிருக்க முடியும்? அவருக்கு கட்சி கொடுத்தது கக்கூஸ் காண்ட்ராக்ட் மட்டுமே. எனவே அதை வைத்து மட்டுமே விஞ்ஞானப்பூர்வமாக பெரிய ஊழல் செய்து சம்பாதித்திருப்பார் என்று நம்பினேன்.

கட்சியில் என் குற்றச்சாட்டை யாரும் ஆமோதிக்கவோ, ஒரு பிரச்சினையாகவோ பார்க்கும் மனநிலையிலோ இல்லை. இந்த கட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான கட்சி என்பதை உணர்ந்தேன். கால் சென்டரில் (Call Centre என்று தெளிவாக வாசிக்கவும்) செக்யூரிட்டியாக காலத்தை தள்ளும் எனக்கு கக்கூஸ் காண்ட்ராக்ட் கூட வேண்டாம் அய்யா. குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஊராட்சி மன்றத்தில் குப்பை அள்ளும் காண்ட்ராக்ட்டையாவது கொடுத்திருக்க வேண்டாமா? எல்லாவற்றையும் வட்டச் செயலாளர், கொட்டச் செயலாளர் வகையறாக்களே தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தால் நாங்களெல்லாம் அரசியலில் இருந்து மக்களுக்கு என்ன பிரயோசனம்?

சிந்திக்க சிந்திக்க கட்சித்தலைமை உண்மைத் தொண்டர்களுக்கும், தமிழ் சமூகத்துக்கும் செய்துவரும் அளப்பரிய துரோகங்கள் புலப்பட்டது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகிச் செல்கிறது என்பதை முழுமையாக உணர்ந்தேன். ஈழத்தமிழர் பிரச்சினையை கட்சி கையாளும் முறை சரியில்லை என்று கூறி கட்சியை விட்டு வெளியேறினேன்.

கடந்த தேர்தலில் தோழர் கேகே இருந்த இயக்கத்தோடு உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்திருந்தோம். எனவே தோழர் கேகே எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். இப்போது அவரது இயக்கத்தின் பொலிட்பீரோ எதிர்க்கட்சியோடு உடன்பாடு கண்டிருந்ததால் ஆளுங்கட்சி மீது தார்மீகக் கோபம் கொண்டிருந்தார் தோழர். மாறி மாறி வைத்துக் கொள்ளும் இந்த தேர்தல் உடன்பாடுகளின் மீது தோழர் கேகேவுக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் புரட்சி வரும் வரை புரட்சிக்கான ஆயத்தங்களை தயார் செய்யவும், கட்சி அலுவலகத்துக்கு வாடகை கொடுக்கவும், மற்ற செலவினங்களுக்காகவும் இதுபோன்ற சமரசங்களுக்கு பொலிட்பீரோ உடன்படுகிறது என்று அவர் எனக்கு விளக்கினார்.


ட்டச்செயலாளரின் கக்கூஸ் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் தோழர்!கட்சியை விட்டு வெளியேறிய எனக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டப்போது சொன்னார் தோழர் கேகே. பாராட்டுக் கூட்டத்தில் ஆறு பேர் கலந்து கொண்டார்கள்.

எப்படி அம்பலப்படுத்துவது?” அம்பலப்படுத்துவது, அம்மணப்படுத்துவது மாதிரியான சொற்கள் எனக்கு அப்போது புதியதாக இருந்தது.

துண்டுப் பிரசுரம் கொடுப்போம் தோழர். அந்த வட்டச் செயலாளர் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் கக்கூசுக்கு வரும் ஒவ்வொரு பாட்டாளித் தோழருக்கும் தலா ஒரு துண்டுப் பிரசுரம் கொடுப்போம். அவர் வீட்டுக்கு அக்கம் பக்கத்து வீடுகளிலெல்லாம் துண்டுப் பிரசுரம் வினியோகம் செய்வோம். அவரது ஊழலை வெகுஜனங்களுக்கு எடுத்துச் சொல்வோம். துண்டுப் பிரசுரம் மூலமாக கலகம் புரிவோம். கலகம் சிறுபொறி. சிறுபொறி நெருப்பாகும். புரட்சி நெருப்பு!ஆவேசமாக குரலை ஏற்றி, இறக்கி தோழர் சொன்னபோது எனக்கு புல்லரித்தது. மயிர்க்கால்கள் கூச்செறிந்தது.

என்னுடைய செலவில் பிட்நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வட்டச்செயலாளர் அம்பலப்படுத்தப் பட்டார். ஆனால் அம்பலப் படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு ஆளுங்கட்சி பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்தது ஏனென்றே தெரியவில்லை. நான் தோழர்களின் இயக்கத்துக்கு வந்த வரலாற்றுப் பின்னணி இதுதான்.

இந்த இயக்கத்துக்கு வருவதற்கு முன்பாக புரட்சி என்றாலே எனக்கு புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் தான் தெரியும். புரட்சி எப்படியிருக்கும் என்று எனக்கு சொல்லித் தந்தவர் தோழர் கேகே. புதியதாக கட்சிக்கு வருபவர்களுக்கு கட்சியின் கொள்கை மற்றும் செயல்விளக்க செயல்பாடுகளைப் பற்றியும் பொதுவுடைமை சித்தாந்தங்கள் குறித்தும், புரட்சியின் அவசியம் குறித்தும் விருப்பத்தோடு பாடமெடுப்பார்.

ஆரம்பத்தில் தோழர் சொன்ன புரட்சி எந்த வடிவத்தில் எந்த நிறத்தில் அமைந்திருக்கும் என்று என்னால் தீர்மானிக்க இயலவில்லை. தோழர் சொன்னதை வைத்துப் பார்த்தால் ஜூராசிக் பார்க் டைனோசர் வடிவில் புரட்சி இருந்திருக்க வேண்டும். ஆனால் அது எப்போது வரும்? எப்படி வரும்? என்பதைப் பற்றி தோழருக்கே தெளிவில்லாத நிலை இருந்ததால் என் மனதில் அமீபா வடிவில் புரட்சி பதிந்துப் போனது.

தோழர் கேகே மவுண்ட் ரோட்டில் ஒரு ஏசி கம்பெனியில் வேலை பார்க்கிறார். இயக்கத்தின் தொழிற்சங்கப் பொறுப்பில் அவர் இருப்பதால் அவர் வேலை செய்யாமலேயே அவருக்கு கம்பெனி சம்பளம் தந்து கொண்டிருந்தது. அவரை வேலை செய்யச் சொன்னால் எங்கே ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் அறிவித்து விடுவாரோ என்று கம்பெனி நிர்வாகத்துக்குப் பயம். அடிக்கடி தோழர் கேகே டெல்லிக்கெல்லாம் போய்விட்டு வருவார். ஒருமுறை மக்கள் சீனத்துக்கு கூட நேரில் சென்று தொழிற்சங்க புரட்சிகரச் செயல்பாடுகளை கற்றறிந்து வந்தவர் அவர். இயக்கத்தின் முழுநேர ஊழியராக அவர் இருந்ததால் அவருக்கு பிரயாணச் செலவுகளையெல்லாம் இயக்கமே பார்த்துக் கொள்ளும். ஆங்காங்கே பிரயாணித்து புரட்சிக்கான விதைகளை ஊன்றிவருவதை தவம் போல செய்துவந்தார் தோழர் கேகே.


தோழர் ஒரு சிங்கிள் டீயும், நுரை தட்டாம ஒரு முழு கப் டீயும் போடுங்க!சினேகபாவத்தோடு நாயரிடம் சொன்னார் தோழர் கேகே. தோழருக்கு டீ க்ளாஸ் தளும்ப தளும்ப கப் டீ சூடாக இருக்க வேண்டும். அப்படியே சாப்பிடுவார்.

யான் தோளர் இல்லா. நாயர்டீக்கடைக்காரர் தோழர் என்பதை ஒரு சாதியாக புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

பார்த்தீங்களா தோழர்? புரட்சி சீக்கிரமா வராததால வர்க்கம் சாதியாவும், குழுக்களாவும் பிரிஞ்சு பேயாட்டம் ஆடிக்கிட்டிருக்கு!தோழர் கேகே பேசும் ஒவ்வொரு சொல்லையுமே இடைவிடாது ஒரு டயரியில் குறித்துக் கொண்டே வந்தால் ஆண்டு முடிவில் பொதுவுடைமை சைஸுக்கு ஒரு புத்தகத் தொகுதி போட்டு விடலாம்.

தம்மு அடிக்கிறீங்களா தோழர்?” கேகே தம் அடித்து நான் பார்த்ததில்லை. எனக்கு அப்போதைக்கு ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது.

தோழர் கேகே கொஞ்சம் சிந்தித்தார். அவர் சிந்திக்கும் போது புருவங்கள் இரண்டையும் நெறிப்பார். நெற்றியின் மத்தியில் சின்னதாக முட்டை போல சதைக்கோளம் தோன்றும். இதுபோன்று அவர் சிந்திக்கும் நேரங்களில் ஏதோ பொதுவுடமை முத்து அவரது வாயிலிருந்து சிந்தப் போகிறது என்பதை உணரலாம்.

சட்டென்று சொன்னார். நீங்க இன்னமும் கூட பூர்ஷ்வாவா தானிருக்கீங்களா தோழர்?”

தலைமீது இடி விழுந்தாற்போல இருந்தது. சமூகத்தில் வேசிமகன் என்று ஒருவனைப் பார்த்து சொல்லப்படுவது எவ்வளவு இழிவானதாக கருதப்படுகிறதோ, அதற்கு இணையான இழிவு பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமாக செயல்படும் ஒரு தோழரைப் பார்த்து பூர்ஷ்வாஎன்று சொல்லப்படுவதும்.

சினிமா பார்ப்பது பூஷ்வாத்தனம், உழைக்கும் தோழர்களை, ஒடுக்கப்பட்ட தோழர்களை சினிமா சுரண்டுகிறதுஎன்று ஒருமுறை தோழர் சொன்னதால் தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பதையே விட்டுவிட்டேன். ஆனால் 1917க்கும் 1990க்கும் இடையில் வந்த ரஷ்யத் திரைப்படங்களை பார்ப்பது பூர்ஷ்வாத்தனமில்லை என்று இயக்கம் விலக்கு அளித்திருந்தது. ரஷ்யமொழியை கற்றுக் கொண்டு அந்தப் படங்களை பார்த்துக் கொள்ளலாம் என்று வாளாயிருந்து விட்டேன்.

அப்படிப்பட்ட என்னைப் பார்த்து தோழர் பூர்ஷ்வாஎன்று சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. என்ன தோழர் சொல்றீங்க? சிகரெட்டு பிடிக்கிறது பூர்ஷ்வா மனப்பான்மையா?”

ஆமாங்க தோழர். சிகரெட்டு கம்பெனி முதலாளிகள் கோடி கோடியா மக்களை சுரண்டறதுக்கு நீங்க மறைமுகமா துணை போறீங்க! புகை புரட்சிக்கு நிச்சயமா பகை!!

என்ன தோழர் இப்படி சொல்றீங்க? தோழர் காஸ்ட்ரோ கூட புகைப்பழக்கம் கொண்டவர் தானே

என்ன தோழர். என்னிடம் விவாதமா? பொதுவுடைமையை நாலு முறை கரைச்சிக் குடிச்சவன் நான். இருந்தாலும் இதுபோன்ற விவாதங்கள் புரட்சி தொடர்பான விவாதங்களுக்கு தொடக்கப்புள்ளியா அமையுறதாலே கண்டிப்பா தொடரணும்னு பொலிட்பீரோ அறிவுறுத்தியிருக்கு. க்யூபாவில் புரட்சி வந்துடிச்சி. தோழர் காஸ்ட்ரோ புகை பிடிக்கிறார். இந்தியாவில் புரட்சி வருவதற்கான ஏற்பாடுகளை தானே நாம செஞ்சுக்கிட்டிருக்கோம். புரட்சி வரட்டும். நாடெங்கும் செங்கொடி பறக்கட்டும். நாமும் புகைப்பிடிப்போம் தோழர்!பரவசமாக சொன்னார் தோழர் கேகே. புரட்சி வரும் வரை திருமணம் செய்வதையே கூட தள்ளிப் போட்டிருந்த அவருக்கு புரட்சியின் மீதிருந்த நம்பகத்தன்மையை சந்தேகம் கொள்ள இயலாது. நான் சொன்ன காஸ்ட்ரோ லாஜிக்கை சந்தேகமேயில்லாமல் தவிடுபொடியாக்கி இருந்தார் தோழர்.

நீங்க இன்னும் மாவோவை உணரலை. அதால தான் இதுமாதிரி அரைகுறையா விவாதிக்கிறீங்க!தீவிரமாகவும், திடமாகவும் சொன்னார் தோழர்.

இல்லீங்க தோழர். மாவாவை நான் உணர்ந்திருக்கேன். முன்னாடியெல்லாம் அந்தப் பழக்கமிருந்தது. வாயி வெந்து உள்ளே ஓட்டை ஆயிட்டதாலே இப்போ தம்மு மட்டும் தான்என் நாக்கில் சனி. ஏடாகூடமாக உளற ஆரம்பித்தேன்.

நீங்க பூர்ஷ்வா என்பதற்கு இது தக்க உதாரணம் தோழர். புரட்சியாளன் மாவோவை மறந்து மாவா என்ற போதைப்பொருள் பின்னாடி விவாதத்தில் போறீங்க பாருங்க. இதுமாதிரியான தனிமனித ஆசாபாசங்கள் புரட்சியை தாமதப்படுத்தும்

தோழர் கேகேயிடம் தர்க்கம் செய்து வெல்ல முடியாது என்று புரிந்துப் போயிற்று. சட்டென்று ஒரு ஐடியா வந்தது. போனமாசம் அமெரிக்க முதலாளித்துவ அடக்குமுறை எதிர்ப்பு பேரணிக்கு கேரளாவுலேருந்து வந்திருந்த தோழர்கள் கூட புகை பிடிச்சாங்களே தோழர்!

நல்லா கவனிச்சுப் பார்க்கணும் தோழர். அவங்க பிடிச்சது பீடி. பீடி சுற்றும் இலட்சக்கணக்கான பாட்டாளிகளை அவங்க வாழ வைக்கிறாங்க!

இதற்குள்ளாக நாயர் டீ போட்டு டேபிளில் சூடாக வைத்தார். யோசித்துப் பார்த்ததில் தோழர் கேகே சொல்வதில் இருந்த புரட்சிவாதமும், அறமும் புரிந்தது. ஆனாலும் அப்படி பார்க்கப் போனால் டீ குடிப்பது கூட பூர்ஷ்வாத்தனம் என்பதாக ஆழமாக பொதுவுடைமை மனதோடு சிந்தித்தேன். ஒரு கப் டீக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்று என் பார்வை உலகளவில் விரியத் தொடங்கியது. இதையெல்லாம் தோழரிடம் விவாதித்தால் அதற்கும் தயாராக எதிர்விவாதத்தை ஏடாகூடமாக வைத்திருப்பார். எனவே புரட்சி வரும் வரை தோழர்களுக்கு தெரியாமல் தம்மடித்து ரகசிய பூர்ஷ்வாவாக வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். அமைதியாக, எதிர்த்துப் பேசாமல் ஏதோ சிந்தனைபாவத்தில் இருந்த என் முகத்தைப் பார்த்த தோழருக்கு நான் புரட்சிக்கு லாயக்கானவன் தான், என்னை தேத்திவிடலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்.

கவலைப்படாதீங்க தோழர். உங்களுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டிருக்கிற பூர்ஷ்வாவை விரட்டியடிச்சி உங்களை புரட்சியாளனா மாத்துறதுக்கு நானாச்சி. என்னை நம்புங்க!

புரட்சி நாளை வருமென்று தோழர் நம்புகிறார். தோழரை நான் நம்புகிறேன்.

(நன்றி : புதிய தலைமுறை)

27 கருத்துகள்:

  1. புரட்சி என்றாலே எனக்கு புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் தான் தெரியும்

    தர்க்கம் இடிக்கிறதே.
    புரட்சிக் கலைஞர் பற்றி அறிந்திராத செக்யுரிட்டியா (காவல்காரரா

    பதிலளிநீக்கு
  2. thambi, kallakkal comedy . . nee eluthinathil illai.. nisam veru ! Engoorula honda civic vachirukkira thozaru enakku friend ! tirupur thozarkal ellaam kodeeswararkal. avanga party office pala kodi value ! aanaalum oorai adichu kollaiyadikkaama vaalum avanga nambikkaikku naan thalaivananguren ! nallavangalai polaikkatheriyaathavannu solliye kollaikaararkalai uruvaakkum samookaththil un angatham rasikkumpadiyaaka illai !

    பதிலளிநீக்கு
  3. 'புதிய தலைமுறை' உள்ளடக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக‌ மாற்றம் கொண்டு வருகிறீர்கள் போலவே!!
    :-)

    பதிலளிநீக்கு
  4. புதிய தலைமுறைய்லேயே படித்தேன்
    மிகவும் பிடித்திருந்தது
    பதிவிட்டமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. //புரட்சி நாளை வருமென்று தோழர் நம்புகிறார். தோழரை நான் நம்புகிறேன்// நாங்கள் உங்களை நம்புகிறோம்

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா6:40 PM, ஜூலை 29, 2011

    ///
    “இல்லீங்க தோழர். மாவாவை நான் உணர்ந்திருக்கேன். முன்னாடியெல்லாம் அந்தப் பழக்கமிருந்தது. வாயி வெந்து உள்ளே ஓட்டை ஆயிட்டதாலே இப்போ தம்மு மட்டும் தான்” என் நாக்கில் சனி. ஏடாகூடமாக உளற ஆரம்பித்தேன்.
    ///

    Nice

    பதிலளிநீக்கு
  7. Great story and great philosophy. I am not sure why people call this story as a comedy.It is more deeper than that.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா7:54 PM, ஜூலை 29, 2011

    nice post. i think this came in your blog some time ago. good that your blog post are being published in mainstream media.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா7:56 PM, ஜூலை 29, 2011

    எனக்கு ஒன்னும் புரியலயே? இதுக்குதான் புரச்சினா இன்னானு தெரியணுமோ?

    பதிலளிநீக்கு
  10. ### “யான் தோளர் இல்லா. நாயர்” டீக்கடைக்காரர் தோழர் என்பதை
    ஒரு சாதியாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். ###
    நரசிம்மராவ்களையே சிரிக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  11. பூர்ஷ்வாவு மாவோ முடியில லக்ஸ்லுக்ஸ்

    பதிலளிநீக்கு
  12. Lucky,

    I read this one 4 or 5 times in your blog, But every time I can't control myself and laugh loudly even in my office.

    I want you post more "Puratchi" in different way.

    பதிலளிநீக்கு
  13. Lucky,

    Please publish this one too in your blog. Normally a blog is for a persons individual thoughts which he wants to express himself to other persons, But in our tamil blog world our guys (kalachara kavalarkal) is questioning and blaming others about the content of their blog. I couldn't understand this. what ever the blogger's view you can argue (like R.V and other guys in vinavu.com who got a shit from them), but it is not fare to wrote that its against our culture blalala etc. I am the regular read of tamilmanam from 2005 and I am fed up with these guys now.

    Just think about it in 2006, 7. I like those guys who participate during this period including you.

    Now, I couldn't read tamilmanam for more than 2 minutes.

    Everybody wrote that they are 5 ft above normal man (honest, against corruption & for tamils in srilanka).

    I can't understand our guys mentality.

    I know most of them who wrote here are behaving differently in personal life.

    Man........ I couldn't understand this.

    But I like you from the very beginning (you never change your thoughts).

    பதிலளிநீக்கு
  14. டீ குடிப்பது கூட பூர்ஷ்வாத்தனம் என்பதாக ஆழமாக பொதுவுடைமை மனதோடு சிந்தித்தேன். ஒரு கப் டீக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்று என் பார்வை உலகளவில் விரியத் தொடங்கியது. இதையெல்லாம் தோழரிடம் விவாதித்தால் அதற்கும் தயாராக எதிர்விவாதத்தை ஏடாகூடமாக வைத்திருப்பார்


    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  15. So far you were well.what happened to day ?? Have you had more ??? yuva...write well and informative..dont waste u r time in satire for which many sadists are here and there...OOOOOhhhhoooonnnaa

    பதிலளிநீக்கு
  16. இதுபோன்ற மொக்கை எழுத்துக்களை விடுத்து அறிவுபூர்வமாக எழுதுங்கள். தமிழகத்தில்/ இந்தியாவில் கம்முனிசம் ஏன் வளரவில்லை? இது இழப்பா அல்லது சரிதானா. தொண்டன் போராட, தலைவர்கள் ஜாலியாக corporate- களுடன் கைகோர்த்து கொள்ளும் அவலம் ஏன் ஏற்பட்டது? புதிய தலைமுறை- அறிவார்ந்த கட்டுரைகளை வெளியிடுவது இல்லை. அதில் எழுதினால் காசு வரும். ஆத்ம திருப்தி வருமா?

    நீங்கள் திறமையானவர். முடிந்தவரை நடுநிலைமை யுடன் எழுதுகிறவர். அறிவார்ந்த கட்டுரைகளை எழுதுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. thozhar , idhai copy seidhu matrumoru valaithalathil ungal peyarudan prasurika anumadhi vendugiraen..

    nelson

    பதிலளிநீக்கு
  18. katturai arumai , ungalin indha katurayai ungal peyarudan matroru valaithalathil prasurika anumathi thevai nanbaa...



    nelson

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா1:22 PM, ஆகஸ்ட் 01, 2011

    Your flow is outstanding. Not only this article, anything you write is absorbing. Whether I agree with your views or not, but I cannot escape reading your writings. Very good. I am a fan for your writings though many times I disagree with what you say.

    -- Rajmohan, Hyderabad.

    பதிலளிநீக்கு
  20. தெறிக்கும் கதிர்! நோ பிராப்ளம் :-)

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா2:44 AM, ஆகஸ்ட் 02, 2011

    செம்ம காமடி.. உங்கள் ஹாசிய உணர்வு ஒவ்வொரு வரியிலும் என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது.. அருமை

    பதிலளிநீக்கு
  22. உங்கள் கிண்டல் எழுத்து நடை. நன்றாகவுள்ளது.

    பதிலளிநீக்கு
  23. Nice article. Couldn't control my laugh while reading. Rock on.

    Regards,
    ksawme
    http://ksaw.me

    பதிலளிநீக்கு