6 ஜூலை, 2011

YES, I AM LUCKY!

அதிகமான நண்பர்கள் இருப்பதின் அவஸ்தை நேற்றுதான் புரிந்தது.

மதியம் ஒரு மணிக்கு, பத்து பத்து பேராக க்ரூப் எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பித்தேன். நாலரை மணி வரைக்கும் இடைவிடாமல் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

எஸ்.எம்.எஸ். கிடைத்ததுமே செளபா அண்ணன் போன் செய்தார்.

“டேய் இங்கிலீஷ்லே என்னமோ அனுப்பியிருக்கே. எனக்கும் ஒண்ணும் புரியல. என்ன மேட்டருன்னு வாயாலேயே சொல்லுடா” – சீவலப்பேரி பாண்டிகள் இங்கிலீஷ் எஸ்.எம்.எஸ்.-சுக்கு பழகவில்லை என்பதும், தமிழில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி இன்னமும் கார்பன் மொபைலுக்கு வராத அவலமும் ஒருசேர சுட்டது.

“பொண்ணு பொறந்துருக்குன்னு எஸ்.எம்.எஸ். அனுப்புனேண்ணே”

“அடப்பாவி. நீ விடலைப் பையனாவே என் மனசுலே பதிஞ்சிட்டியேய்யா.. உனக்கு அதுக்குள்ளே கல்யாணம் ஆகி, ஒரு பொண்ணும் பொறந்துடிச்சா?”

“அண்ணே! இது ரெண்டாவது பொண்ணுண்ணே!”

YES, I AM LUCKY.

தமிழ்மொழிக்கு தங்கச்சி பிறந்துவிட்டாள்.

அகிலம் ஆளும் அம்மா, தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவியின் சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில் ‘தமிழ் நிலா’ பிறந்திருக்கிறாள். எப்படியோ எங்கள் வீட்டிலும் ஒரு ‘முதல்வர்’ சில பல பத்தாண்டுகளுக்கு பிறகு உருவெடுக்க, ஜோசியப்படி வாய்ப்பிருக்கிறது.

’பொண்ணு’ பிறந்ததால், என்னுடைய அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் வருத்தம். அவருக்கு கொள்ளி வைக்கவாவது, நான் ஒரே புள்ளையாக பிறந்திருக்கிறேனாம். எனக்கு கொள்ளி வைக்க ஒரு புள்ளை இல்லையே என்பது அவரது அங்கலாய்ப்பு. நெருப்புக்கு பையனோ, பொண்ணோ கணக்கு கிடையாது. கட்டையில் ஊற்றப்படும் கிருஷ்ணாயிலின் (மண்ணெண்ணெய்) அளவுதான் நெருப்பின் வீரியத்துக்குக் காரணம் என்று அவருக்கு பகுத்தறிவுப் பாடமெடுத்து சமாளித்திருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தண்டபாணி சாரிடம் நடந்த ஒரு ஈழ விவாதத்தில் எனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கு ‘திலீபன்’ என்று பெயர் வைப்பதாக சபதம் செய்திருந்தேன். அந்த சபதம் நிறைவேறாது என்பதுதான் எனக்கிருக்கும் ஒரே வருத்தம். இனி தமிழ் திலீபனுக்கு வாய்ப்பில்லை. இந்திய அரசின் ‘நாமிருவர், நமக்கிருவர்’ கோஷத்தை, ஓர் இந்தியனாக மதிக்கிறேன்.

முதல் குழந்தை பிறந்தபோது பாரா சொன்னார். “இன்னும் இருவது வருஷத்துலே நீ ஒரு கோடி ரூபாய் சம்பாதிச்சியாவணும். அப்போ தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சரூபாயா கூட இருக்கலாம்”.

ம்.. இன்னும் இருபது வருடத்தில் இரண்டு கோடி ரூபாயாவது சம்பாதித்தே ஆக வேண்டும்.

எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல், ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ், கூகிள் ப்ளஸ், இத்யாதி, இத்யாதியிலெல்லாம் வாழ்த்து சொல்லிய நட்புள்ளங்களுக்கு தனித்தனியாக நன்றி சொன்னால், முழுவதுமாக 48 மணி நேரம் (அதாவது அடுத்த இருபது வருடத்தில் முழுசாக ரெண்டுநாள்) வீணாகி விடும் என்பதால், இப்பதிவின் வாயிலாகவே எல்லோருக்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.

71 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் லக்கி அண்ணே

    பதிலளிநீக்கு
  2. congrats . tamil nila muthalvaraaka ippothe en valthukkal

    பதிலளிநீக்கு
  3. ஆமாண்ணே..சட்டுபுட்டுன்னு சம்பாதிக்க ஆரம்பிங்க.வாழ்த்துகள்ண்ணே..!! :)

    பதிலளிநீக்கு
  4. //கிருஷ்ணாயிலின்//

    கிருஷ்ணா.. கிருஷ்ணா..

    :))

    பதிலளிநீக்கு
  5. intha maathaththil irunthu maatham oru gm.allathu 2 gm.thangam vaangi semiyungal.vaazhththukkall.

    பதிலளிநீக்கு
  6. congrats lucky.. amma rocks in lucky house also. great amma...

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் லக்கி (இங்கேயும் சொல்லிக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  8. சிலபல ஆண்டுகளில் திமுக அரசின் முதல் பெண் முதல்வராய் ஆகவிருக்கும் தமிழ்நிலாவுக்கு வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா2:49 PM, ஜூலை 06, 2011

    Vaazhthukkal. Thamilil peyar vaithadhu Magilchi.

    Anbudan - Saravanan

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. Congrats Boss. Convey our wishes to new born.

    Cheers
    Jane, Julie & Christo

    பதிலளிநீக்கு
  12. அரவிந்தன்3:18 PM, ஜூலை 06, 2011

    மீள்பதிவு?

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள் லக்கி!!!

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், பரிசல் வரிசையில் லக்கியும் சேர்ந்ததில் சந்தோஷம் :-)

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா3:28 PM, ஜூலை 06, 2011

    Hi Lucky

    By the time your daughters grow up - female population would have reduced and boys will pay dowry to get married to girls - dont worry be happy

    Sudha (from Bangalore) remember me?

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  17. அண்ண வாழ்த்து அண்ணன்.
    நமக்கும் ரெண்டு பொண்ணுதான்
    எதிர் காலத்தில பொண்ணு கெடைகாம
    பயலுக அலய போறான்.
    பொண்ணு பிறந்தது பொன் கெடச்ச மாதிரி
    தயவு செய்து ஜெயா கூட உங்க பொண்ணா
    ஒப்பிட வேண்டாம்

    பதிலளிநீக்கு
  18. என்னாது கண்ணாலம் ஆகிருச்சா? சொல்லவே இல்லே. நீங்க இன்னும் +12 படிக்கிறீங்கன்னு இல்லே நினைச்சுட்டு இருக்கேன்

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் யுவா!!.. You are really lucky!!

    நீங்க ஒன்ன்ன்னும் கவலபடாதிங்க!!

    சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் அறியப்பட்ட உண்மை,

    ஆண் – பெண் விகிதாச்சாரம் (6 வயதுக்குட்பட்டவர்கள்) 1000-914 என உள்ளது. ஆண்கள் வரதட்சணைக் கொடுப்பவர்களாவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள் அண்ணா

    பதிலளிநீக்கு
  21. திலீப நிலாவிற்கும் அவர் பெற்றோர் Mrs & Mr லக்கிக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அப்துல்லா அண்ணன் சொன்னது ரிபீட்டு

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா8:11 PM, ஜூலை 06, 2011

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. Hearty congratulations, Yuvakrishna.

    I always mention this: "A son is a son until his marriage; a daughter is a daugher for ever".

    So, YOU are 'Lucky'!

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துக்கள் யுவா..

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா9:37 PM, ஜூலை 06, 2011

    Congratulations Yuva..Many more happy returns of the day ;)

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துக்கள் லக்கி அண்ணே. வுடாம ஆண் பிள்ளைக்கு டிரை பண்ணுங்க. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

    பதிலளிநீக்கு
  28. எனது மனமார்ந்த பாராட்டும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  29. வால்பையனின் அருள்வாக்குபடியே இரண்டாவது மகாலட்சுமி!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. வாழ்த்துக்கள் அங்கிள்!

    பதிலளிநீக்கு
  31. வாழ்த்துக்கள் மற்றும் அழகான தமிழ் பெயர்களுக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  32. //மகம் நட்சத்திரத்தில் ‘தமிழ் நிலா’ பிறந்திருக்கிறாள். எப்படியோ எங்கள் வீட்டிலும் ஒரு ‘முதல்வர்’ சில பல பத்தாண்டுகளுக்கு பிறகு உருவெடுக்க, ஜோசியப்படி வாய்ப்பிருக்கிறது.//

    நல்வாழ்த்துகள் யுவகிருஷ்ணா .

    பதிலளிநீக்கு
  33. உழைப்பை நம்புகிறவர்களுக்கு மட்டுமே பெண்குழந்தை பிறக்கும்' என என் நண்பன் ஒருவர் எனக்கு சொன்னார்.....

    உழைப்பாளிக்கு என் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  34. நல்வாழ்த்துகள் யுவகிருஷ்ணா

    பதிலளிநீக்கு
  35. Just read this. "என்ன தவம் செய்தனை...". பெண் பிறக்கத் தவம் செய்திருக்க வேண்டும் போல் இருக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் யுவா.

    பதிலளிநீக்கு
  36. வாழ்த்துக்கள் யுவா அண்ணே..

    முதல்வரை போன்று ஒரு தைரிய லெட்சுமி பிறந்ததற்கு பெருமைப்படுங்கள்.


    அன்புடன்...

    ’அன்பு’ தம்பி

    பதிலளிநீக்கு
  37. கமலுக்கு ரெண்டு பெண்கள்; ரஜினிக்கு ரெண்டு பெண்கள்; கார்ட்டூனிஸ்ட் மதனுக்கு ரெண்டு பெண்கள்; இப்போ யுவ கிருஷ்ணாவுக்கும் இரண்டு பெண்கள். இதுலேர்ந்து என்ன தெரியுது?

    பதிலளிநீக்கு
  38. ரொம்ப சந்தோசம் சார்
    உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,,,,,

    பதிலளிநீக்கு
  39. பெயரில்லா12:46 PM, ஜூலை 08, 2011

    Congratulations. Wishes to TamilNila.

    -SV

    பதிலளிநீக்கு
  40. வாழ்த்துக்கள் லக்கி :-)

    பதிலளிநீக்கு
  41. My Best Wishes. மூன்றாவது பிறக்கும்போது திலீபன் என்ற பெயரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  42. வாழ்த்துக்கள் தோழரே.

    பதிலளிநீக்கு
  43. valthukal lucky

    kuttikku valthukkal

    பதிலளிநீக்கு
  44. வாழ்த்துக்கள். லக்கி என் மகள் பெரும் நிலா.

    பதிலளிநீக்கு