22 மார்ச், 2012

வெங்காயம்

பேய்மழை பொழிந்துக் கொண்டிருந்த அன்றைய மாலையில் முழுக்க நனைந்தும் முக்காடு போட்டுக் கொண்டு சென்னை அண்ணா திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருக்கலாம். அவர்களில் சிலர் மழைக்கு ஒதுங்கவே டிக்கெட் எடுத்துக்கொண்டு அரங்குக்குள் வந்தார்களோ என்றுகூட சந்தேகம்.

மாஸ் நடிகர்கள், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எந்த எதிர்ப்பார்ப்பையும் கிளறாத படம். ஆனால் படம் முடிந்த நொடியில் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டியதுதான் இயக்குனருக்கு கிடைத்திருக்கும் நிஜமான கவுரவம்.

இப்படத்தின் குழுவினருக்கு தொழில்நேர்த்தி சுத்தமாக இல்லை. ஏனோ தானோவென்றுதான் படமெடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. பல நடிகர்களின் நடிப்பு சுமாருக்கும் கீழே. இசை, கேமிரா, எடிட்டிங், கிராபிக்ஸ் என்று எல்லாத் துறையிலும் படுமோசமான வேலை. ஆனால் அத்தனையையும் அடித்து நொறுக்கி, படம் பார்ப்பவர்களை கவர்கிறது படத்தின் உள்ளடக்கம். இப்படியொரு படத்தை எடுத்தால், எந்த தயாரிப்பாளரும் அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வீட்டுப்படி ஏறிவரமாட்டார் என்று தெரிந்தும், தைரியமாக எடுத்திருக்கும் இயக்குனர் சங்ககிரி ராச்குமாரே ஒட்டுமொத்த பாராட்டுகளுக்கும் தகுதியானவர்.

இம்மாதிரியான பகுத்தறிவு முயற்சிகளுக்கு எப்போதும் தாமாகவே முன்வந்து ஆதரவு வழங்கும் இனமான நடிகர் சத்யராஜையும் இந்நேரத்தில் பாராட்டுகிறோம்.

ஜோதிடம் என்கிற புரட்டு வியாபாரத்தை புரட்டிப் போட்டு எடுத்திருக்கிறார் இயக்குனர். ஜோதிடம் குறித்த அறிவியல்ரீதியான, சமூகரீதியான நியாயமான கேள்விகளுக்கு இதுவரை எந்தவொரு ஏற்றுக்கொள்ளத்தக்க பதிலும் ஆன்மீக அன்பர்கள் தம் தரப்பில் இருந்து தந்ததில்லை. ஜோதிடத்தை விஞ்ஞானம் என்று கதை கட்டி அப்பாவி மக்களை ஏமாற்றித் திரியும் ஆன்மீக பயங்கரவாதக் கூட்டத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை, அவலங்களை, சுரண்டல்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது இப்படம். “தேவடியாப் பசங்களா. இனிமேலாவது திருந்துங்கடா” என்று பத்து வயது பெண் இறுதிக்காட்சியில் தொண்டை வலிக்க கத்துவது ஏமாற்றி வயிறு வளர்க்கும் ஊளைச்சதைக் கும்பலை பார்த்து மட்டுமல்ல. மூளையை அடகுவைத்து.. வாழ்வை, குடும்பத்தை பணயம் வைக்கும் சாமானிய தமிழனையும் பார்த்துதான்.

ஜன்லோக்பால் மட்டுமே தேசமக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணி என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கும்பல்களுக்கு, ‘மூடநம்பிக்கை தானய்யா இந்த சமூகத்தின் நிஜமான பிரச்சினை’ என்று ஆணியடித்தது போல அழுத்தம் திருத்தமாக படமெடுத்திருக்கும் படக்குழுவினரை வணங்குகிறோம்.

நாத்திகக் கருத்துகளை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, கடவுளை உடனே தூக்கியெறிந்துவிட வேண்டும் எதிர்ப்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் மூடநம்பிக்கைகளில் உழன்று முட்டாளாக வாழ்க்கையைத் தொலைக்காமல் இருந்தால் கூட போதுமே என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் தற்போதைய ஆதங்கம்.

திராவிட இயக்கம் கலைத்துறையில் ஆரம்பத்தில் செய்து, பிற்பாடு செய்ய மறந்துவிட்ட கடமைகளை மிகச்சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறது இந்த வெங்காயம்.

நீங்கள் நாத்திகரோ, ஆத்திகரோ.. யாராக இருந்தாலும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டிய படம் இது.

26 கருத்துகள்:

  1. சுருக்கென அமைந்த விமர்ச்சனம். நானும் படம் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஒரே பிரச்சனை என்னவெனில் இம்மாதிரிப் படங்கள் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆவதில்லை. இன்னம் ஆரண்ய காண்டமே பார்க்ககிடைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்

    பதிலளிநீக்கு
  3. மூட நம்பிக்கைகளை சாட வரும் இது போன்ற படங்கள் குறைந்த பட்ஜெட்டில்,
    டிவி சீரியலை விட மோசமான தரத்தில் வெளிவருகிறது.
    மூட நம்பிக்கைகளை பரப்பி,மக்களை முட்டாள்களாக்கும் படங்கள்
    கோடிக்கணக்கான பட்ஜெட்டில்,பிரம்மாண்ட கிராபிக்ஸ்களின்
    துணையோடு வெளிவந்து வசூலை வாரி குவிக்கிறது.
    வெறுப்பேற்றும் நகைமுரண்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா11:09 PM, ஆகஸ்ட் 25, 2011

    Boss...if you are not interested/trust in JAN LOKPAL...its your wish..how ever you dont have the rights to plunge Mr.Hazare and his team......

    பதிலளிநீக்கு
  5. அண்ணே... இந்த விமர்சனத்தை முன்னரே எழுதியிருந்தால் நான் படம் பார்த்திருப்பேன்... நாளைக்கு தியேட்டரில் படம் ஓடுகிறதோ இல்லையோ...?

    பதிலளிநீக்கு
  6. இப்போதுதான் உங்கள் தளத்திற்க்கு வருகிறேன். விமர்சனம் சிம்ப்ளி பெஸ்ட். படம் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் வலுவாகியிருக்கிறது.இப்போதுதான் உங்கள் தளத்திற்க்கு வருகிறேன். விமர்சனம் சிம்ப்ளி பெஸ்ட். படம் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் வலுவாகியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா2:17 PM, ஆகஸ்ட் 27, 2011

    சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். விஜயகாந்த் கல்யாண மண்டபம் எதிரில், ஆக்சிஸ் பேங்க் ATM அருகில் உள்ள கட்டத்தில் மூன்று பெண் வழக்கரிஜர்கள் உண்ணா நிலைப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.

    தோழர் கிருஷ்ணசாமி MLA அவர்கள் அங்கு வந்து பார்த்து, பேசி விட்டு சென்றார்கள். பேரறிவாளனின் தாயார், அற்புதம் அம்மா அவர்களும் அங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். நூற்றுக்கும் மேலான நமது உணர்வாளர்கள் அங்கு உள்ளார்கள். நாளை காலை பரப்புரை ஆரம்பம் ஆகும். ஆயிரகணக்கான தமிழர்கள் அங்கு வரவேண்டும்.

    பல தோழர்கள் இன்னமும் அங்கு இருக்கிறார்கள். லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவாளர்களுக்கு தகவலை பரப்புங்கள்.
    லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. படம் உங்களுக்கு பிடிச்சா போதுமா? விமர்சனம் எங்க?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா4:30 PM, ஆகஸ்ட் 29, 2011

    //ஜன்லோக்பால் மட்டுமே தேசமக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணி என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கும்பல்களுக்கு, ‘மூடநம்பிக்கை தானய்யா இந்த சமூகத்தின் நிஜமான பிரச்சினை’ என்று ஆணியடித்தது போல அழுத்தம் திருத்தமாக படமெடுத்திருக்கும் படக்குழுவினரை வணங்குகிறோம்.//

    உங்களுக்கு ஏன் வலிக்கிறது.

    ஊழல் கட்சிகளின் முன்னோடியான தி.மு.க. வில் இருப்பதால் ஊழலுக்கு எதிராக போராடுவது வலிக்கிறதோ.


    உங்கள் மூட நம்பிக்கைக்கான கருத்து நல்லது.

    கடவுள் உட்பட எல்லா மூடநம்பிக்கை பிரட்சினைகளையும் தாங்கள் தீர்க்கலாமே (ஜன் லோக்பால் போல்) .

    பதிலளிநீக்கு
  10. சிறந்த விமர்சகர்.....

    பதிலளிநீக்கு
  11. ithu pondrey nalla padangalai tamilagathil yaarum paarkkey virumbuvathillai endru ninaikum bothu varutham irukirathu...vaagai soodavah endrey padamum inthey listil seirkalam...aruva gun vididu arivai thidungey pa ithey mathiri padam paartavathu

    பதிலளிநீக்கு
  12. சிந்திப்பவன்1:09 PM, மார்ச் 22, 2012

    மூட நம்பிக்கைக்கும் பகுத்தறிவிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

    தன் கட்சியினர் கோவிலுக்கு
    செல்லுதல் ..மூடநம்பிக்கை
    தன் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்லுதல் ..பகுத்தறிவு

    தீபாவளி,விநாயகசதுர்த்தி பண்டிகைகளை கொண்டாடுவது ...மூடநம்பிக்கை
    ரம்ஜான்,கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கொண்டாடுவது ...பகுத்தறிவு

    மற்றவர் ஆங்கிலம்,இந்தி படிப்பது.....மூடநம்பிக்கை
    தன் குடும்பத்தினர் ஆங்கிலம்,இந்தி படிப்பது.....பகுத்தறிவு

    கோவிலுக்கு செல்வது .....மூடநம்பிக்கை
    கொள்ளை அடிப்பது .....பகுத்தறிவு

    தீமிதித்தல்..மூடநம்பிக்கை
    தீகுளித்தல்..பகுத்தறிவு

    பார்பனர்களை மதிப்பது.......மூடநம்பிக்கை
    பார்பனர்களை தன் சம்பந்தி ஆக்கி கொள்வது......பகுத்தறிவு

    ஆக மொத்தம்..
    வாழைக்காய்.........மூடநம்பிக்கை
    வெங்காயம் ......பகுத்தறிவு

    பதிலளிநீக்கு
  13. தோழர் சிந்திப்பவன் அவர்களே!

    நீங்கள் வெள்ளரிக்காயை அதில் தொட்டுதான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பதாக இருந்தால் நாங்கள் செய்ய ஏதுமில்லை. enjoy :-)

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா2:35 PM, மார்ச் 22, 2012

    //மூட நம்பிக்கைக்கும் பகுத்தறிவிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

    தன் கட்சியினர் கோவிலுக்கு
    செல்லுதல் ..மூடநம்பிக்கை
    தன் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்லுதல் ..பகுத்தறிவு

    தீபாவளி,விநாயகசதுர்த்தி பண்டிகைகளை கொண்டாடுவது ...மூடநம்பிக்கை
    ரம்ஜான்,கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கொண்டாடுவது ...பகுத்தறிவு

    மற்றவர் ஆங்கிலம்,இந்தி படிப்பது.....மூடநம்பிக்கை
    தன் குடும்பத்தினர் ஆங்கிலம்,இந்தி படிப்பது.....பகுத்தறிவு

    கோவிலுக்கு செல்வது .....மூடநம்பிக்கை
    கொள்ளை அடிப்பது .....பகுத்தறிவு

    தீமிதித்தல்..மூடநம்பிக்கை
    தீகுளித்தல்..பகுத்தறிவு

    பார்பனர்களை மதிப்பது.......மூடநம்பிக்கை
    பார்பனர்களை தன் சம்பந்தி ஆக்கி கொள்வது......பகுத்தறிவு

    ஆக மொத்தம்..
    வாழைக்காய்.........மூடநம்பிக்கை
    வெங்காயம் ......பகுத்தறிவு

    super comment... oorukku matum upathesam pannum ivarkalukku enna yokkiyathai irukkirathu kadavulai ethirkka , saaththan vetham othupathai kooda yetrukollalam aanal intha saththankal athai ethirkkavallava seikindrana ...

    பதிலளிநீக்கு
  15. நான் ஏற்கனவே வெங்காயம் பார்த்து ரசித்தவன்....நல்ல படம்...ஆதரவு தரவேண்டியது கடமை....
    சிந்திப்பவரின் கருத்துக்கு தங்கள் பதிலில் நாகரிகம் குறைந்துள்ளது...ஆகவே பதிலில் கொஞ்சம் நிதானம் தேவை.கவனத்தில் கொள்ளவும்

    பதிலளிநீக்கு
  16. யுவா, எனக்கு ஒன்று புரியவில்லை. சில விஷயங்களை அலட்சியமாக விமர்சனம் செய்கிறீர்கள். இவ்வளவு பத்திரிகை மற்றும் படிப்பனுபவம் மிக்க நீங்கள் சில சுய வெறுப்பின் காரணமாக அப்படி செய்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

    இந்த பட விமர்சனத்தில் லோக்பால் எங்கிருந்து வந்தது?

    எந்தவொரு கொள்கையின் காரணமாக ஒரு மைல்கல் நடவடிக்கை வேண்டும் என்று போராடினால் அது சமுதாயத்தின் முரணியக்க முன்னேற்ற செயலேயாகும். அந்த மைல்கல் அடைந்தால் பயணமே முடிந்துவிட்டது என்றாகிவிடுமா என்ன?

    சில நேரம் போராட்ட உணர்வில் அந்த மைல்கல் நடவடிக்கையை போராடுபவர்கள் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசலாம். அதையெல்லாம் நாம் கண்டுகொள்ளவேண்டியதில்லை.

    அதே போல் லோக்பால் மசோதா என்பது ஒரு முன்னேற்ற முயற்சியே. உடனே அது நடந்தால் நாளை தேனும் பாலும் ஓடுமா என்று கேட்டல் அதுவும் மூடத்தனமே. இப்போது பகுத்தறிவுவாதிகள் ஒரு மசோதாவோ அல்லது வேறு நடவடிக்கை கேட்டல் உடனே அதுதான் சர்வரோக நவாரனியா என்ன? இன்று உள்ள நிலையிலிருந்து நாம் விரும்பும் நிலையை அடைய செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அது ஹசாரே என்றாலும் பெரியார் என்றாலும் ஒரு சில மைல்கல் நடவடிக்கைகளாலோ போராட்டங்களாலோ நம்மை சுலபமாக அடைய செய்ய போவதில்லை.

    பல கருத்துக்களை சுலப வாசிப்புக்கு ஏதுவாகவும் ரசிக்கும்படியான எள்ளலாகவும் எழுதும் நீங்கள் கொஞ்சம் நிதானம் நிறைந்தும் எழுதினால் இன்னும் உங்கள் எழுது மிளிரும் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. ‘மூடநம்பிக்கை தானய்யா இந்த சமூகத்தின் நிஜமான பிரச்சினை !

    உங்களால் தீர்க்க முடுயுமா ? சொல்லுங்கள் நண்பரே !

    பதிலளிநீக்கு
  18. சிந்திப்பவன் சொன்னதில் தவறு என்ன இருக்கிறது. நல்ல விமர்சனம், சிந்திப்பவன்.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா1:28 PM, மார்ச் 29, 2012

    // தோழர் சிந்திப்பவன் அவர்களே!

    நீங்கள் வெள்ளரிக்காயை அதில் தொட்டுதான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பதாக இருந்தால் நாங்கள் செய்ய ஏதுமில்லை. enjoy :-) //

    @ Yuva Krishna - Do not you understand what Sindhippavan said? First try to reply relevant to his comment. Wonder how did you become a journalist!

    பதிலளிநீக்கு
  20. Dude, தயவு செய்து உங்களின் caption 'ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்!' - என்பதை உடனடியாக மாற்றி விடவும்..
    நீங்கள் ஆளப் பிறந்தவராக இருக்கலாம். ஆனால் ஆத்திரப் படாதவர்அல்ல.வெகுசீக்கிரமாகஆத்திரப் படக்கூடியவர் சிந்திப்பவன்-னின் கருத்துக்கு நீங்கள் எழுதி இருந்த பதில் உங்கள் ஆத்திரத்தின் வெளிப்பாடே. உங்களுக்கு என் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. Ada tholarkalee.. lokbal enbathu makkal pana varumaraiyil irunthu vidupada amaitha porattam. Athu mattum pothathu mana varumail irunthum makkal vidupada vendum yenbathu yuva sir karuthu..

    பதிலளிநீக்கு