6 மார்ச், 2012

சங்கரன்கோவில்


1967ல் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்தபோதே, காங்கிரஸின் கோட்டையான சங்கரன்கோவிலிலும் ஓட்டையை போட்டுவிட்டது திமுக. பிற்பாடு திமுகவிலிருந்து அது அதிமுக கோட்டையாக உருவெடுத்தது. 80ல் தொடங்கி இரண்டே இரண்டு வருடங்கள் தவிர்த்து எப்போதுமே சங்கரன்கோவில்வாசிகளுக்கு அதிமுகவில் இருந்துதான் எம்.எல்.ஏ. 89ல் மட்டும் வைகோவின் அன்றைய அன்புத்தம்பியான தங்கவேல் திமுக சார்பாக ஜெயித்தார். 90ல் தங்கவேல் ரயில்நிலையம் கொண்டுவந்ததுதான் அத்தொகுதியின் சொல்லிக் கொள்ளும்படியான கடைசி வளர்ச்சி. தொலைநோக்கில்லாத நபர்கள் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தளவுக்கு ஓர் ஊர் மோசமடையும் என்பதற்கு சங்கரன்கோவில் நல்ல உதாரணம். உருப்படியாக சமீபத்தில் அங்கே தொழிற்சாலையோ, கட்டமைப்போ எதுவுமே நடந்ததற்கான அடையாளங்கள் எதுவுமில்லை.

போனவாரம் பணிநிமித்தம் போய்வந்தேன்.

நகர்ப்புறங்களில் எட்டு மணி நேரம், கிராமப்புறங்களில் பத்து முதல் பண்ணிரெண்டு மணி நேரம் மின்வெட்டு. விவசாயிகளும், விசைத்தறியாளர்களும் நிறைந்த பகுதி. மின்சாரம்தான் முதன்மையான வாழ்வாதாரம். அதிமுக அபிமானத்தையும் தாண்டி, இப்பிரச்சினை ‘மாற்றி’ ஓட்டுபோட வைக்குமாவென இவ்வளவு சீக்கிரமாக கணிக்கமுடியவில்லை. ‘மின்வெட்டு தவிர்த்து வேறெதுவும் பெரிய பிரச்சினை இங்கே அம்மா ஆட்சியில் இல்லை’ என்று அங்கிருக்கும் அதிமுகவினர் சொன்னாலும், மின்வெட்டை தவிர்த்து வேறு பிரச்சினை இருந்தாலும் ‘அஜ்ஜஸ்ட்’ செய்துக்கொண்டு வழக்கம்போல ரெட்டை எலைக்கு குத்தியிருப்பார்கள். காலை 6 முதல் 9 மணி வரை வெட்டப்படுவதால் வேலைக்கு கணவரையும், பள்ளிக்கு குழந்தைகளையும் கிளப்பி அனுப்ப படாத பாடு படுகிறார்கள் பெண்கள். நாள் முழுக்க கொளுத்திய வெயில் அலுப்பு நீங்க, டாஸ்மாக்குக்குப் போய் “ஜில்லுன்னு பீரு கொடுப்பா” என்று கேட்கும்போது, “கரெண்ட் இல்லைண்ணே, ப்ரிட்ஜ் ஓடலை” என்று கூறி, கிட்டத்தட்ட 100 டிகிரி செண்டிக்ரேட்டில் பீரை கொடுக்கிறார்கள். ஆண்களுக்கும் வெறுப்புதான்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்தத் தொகுதிக்குள்தான் இருக்கிறது. எனவே மதிமுக அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் இங்கே இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. கலிங்கப்பட்டி சுத்து வட்டாரத்தில் ‘தெலுங்கு’ பேசும் நாயக்கர் இனமக்களின் ஒட்டுமொத்த ஓட்டும் பம்பரத்துக்குதான் விழும். கிட்டத்தட்ட முப்பதாயிரம் ஓட்டுகள் என்கிறார்கள்.

கடுமையான மும்முனைப்போட்டி என்பதால் இரண்டு லட்சம் வாக்காளர்களை கொண்ட தொகுதியில் ஐம்பதாயிரம் வாக்குகள் பெறும் வேட்பாளர் வென்றுவிடலாம்.

தொகுதியை சுற்றிப் பார்த்ததில் சங்கரன்கோவில் வாசிகள் ஆளுங்கட்சிக்கு ‘ஷாக்’ கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. வாக்கு வித்தியாசம் பெருமளவில் குறையலாம். ஐயாயிரம் டூ பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ரெட்டை எலை ஜெயிக்கக்கூடும் என்று கருதுகிறேன்.

அதிமுக வென்றால், கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ., அவருக்கு அமைச்சரவையில் இடமும் வழங்கப்படலாம். திமுக வென்றாலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தேமுதிகவுக்கு வெல்லுவதற்கு வாய்ப்பேயில்லை. இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஜனநாயக அமைப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதுதான் நியாயம். சதன் திருமலைக்குமார் நல்ல வேட்பாளரும் கூட. மதிமுக சார்பில் இவர் ஒருவரது குரலாவது ஈழம், கூடங்குளம், முல்லைப்பெரியாறு மாதிரியான அத்தியாவசியப் பிரச்சினைகளின்போது சட்டமன்றத்தில் எதிரொலித்தாக வேண்டும்.

பார்க்கலாம். இன்னொருமுறை சங்கரன்கோவிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. கலைஞர், அம்மா, கேப்டனின் பிரச்சாரங்கள் மக்கள் மனதில் ஏதேனும் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்துகிறதாவென்று கடைசிக்கட்டத்தில்தான் தெரியவரும்.

19 கருத்துகள்:

  1. கட்சி பேதம் பாரமல் சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட

    பதிலளிநீக்கு
  2. என்னங்க லக்கி கடைசீல மதிமுக செயிக்கனும்னு சொல்லிபுட்டீங்க!!!!

    பதிலளிநீக்கு
  3. "இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் "


    நல்ல விஷயம் தம்பி . . .

    அமலா பால் கட்டுரையிலேயே

    உமக்கு தெளிவு கிடைச்சது தெரிஞ்சிடுச்சி . . .

    நன்றி

    பதிலளிநீக்கு
  4. Very sad to note that a conSITUtuncys voting would be decided by the COOLING CONDITIN of the BEER; where the Tamilnadu is going; Even Gandhi,Kamaraj,Periyar, Rajaji had a chance to resurrect, they could not rectify this damages created by the MANJAL THUNDU
    SUPPMANI

    பதிலளிநீக்கு
  5. பாஸ்,
    உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...

    பதிலளிநீக்கு
  6. //இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.//

    என் அப்பாவிற்கும் இதுதான் ஆசை.

    ஆனால் எனக்கு ....... சொல்ல வேண்டுமா என்ன?.

    பதிலளிநீக்கு
  7. கடுமையான மும்முனைப்போட்டி என்பதால் இரண்டு லட்சம் வாக்காளர்களை கொண்ட தொகுதியில் ஐம்பதாயிரம் வாக்குகள் பெறும் வேட்பாளர் வென்றுவிடலாம்.


    சரியான கருத்துக்கணிப்பு...

    பதிலளிநீக்கு
  8. //இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஜனநாயக அமைப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதுதான் நியாயம். சதன் திருமலைக்குமார் நல்ல வேட்பாளரும் கூட. மதிமுக சார்பில் இவர் ஒருவரது குரலாவது ஈழம், கூடங்குளம், முல்லைப்பெரியாறு மாதிரியான அத்தியாவசியப் பிரச்சினைகளின்போது சட்டமன்றத்தில் எதிரொலித்தாக வேண்டும்.//

    நியாயமான, நேர்மையான ஆசை.

    பதிலளிநீக்கு
  9. //. இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். //...me too sir.....

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு.
    பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. Initially I thought it is april fool news , then i checked the calendar . After a long time or may be for the first time you have written positive comment about MDMK.If Money doesnt matter in public minds then MDMK will get an representative in assemblly.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் எழுத்துக்கள் ஒரு எழுத்தாளனை போலவே உள்ளது. நான் மிகவும் ரசித்தேன்.எல்லா விடயங்களும் அதனுடைய முடிவில் தான் இனிக்கும்

    http://mosikeeran-mosi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா12:45 PM, மார்ச் 07, 2012

    //இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஜனநாயக அமைப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதுதான் நியாயம்//

    ஹாட்ஸ் ஆப் யுவா. தங்கள் தீவிர தி.மு.க. இணைய பிரச்சாரம் எம் போன்றோருக்கு நெருடலை தந்து வந்தது. இப்பதிவின் மூலம் அதை மாற்றியுள்ளீர்கள். இடைத்தேர்தல் குறித்த தங்களின் அடுத்த பதிவிற்கு வைட்டிங்.

    பதிலளிநீக்கு
  14. சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட

    பதிலளிநீக்கு
  15. மதிமுகவை.. விமர்சிக்கும்..மதிமுகவினரை வெறுப்பேற்றும் யுவ கிருஷ்னாவா இது..! எனிவே ... சந்தோஷம்..!

    பதிலளிநீக்கு
  16. "இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஜனநாயக அமைப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதுதான் நியாயம். சதன் திருமலைக்குமார் நல்ல வேட்பாளரும் கூட. மதிமுக சார்பில் இவர் ஒருவரது குரலாவது ஈழம், கூடங்குளம், முல்லைப்பெரியாறு மாதிரியான அத்தியாவசியப் பிரச்சினைகளின்போது சட்டமன்றத்தில் எதிரொலித்தாக வேண்டும்".

    நியாயமான, நேர்மையான ஆசை.

    பதிலளிநீக்கு
  17. தங்க வேல் ரயில்வே ஸ்டேசன் கொண்டு வரலை.
    அங்க 50 வருசமா இருக்கு, தங்க வேல் கொண்டு வந்தட்து புதிய கட்டடம் மட்டும்தான்.
    மதிமுக நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
    திரு வைகோ அவ்ர்கள்
    எமது தொகுதிக்கு உட்பட்ட எராளமான்வ்ர் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் எதாவது பிரச்சனை எண்ட்ரால் முதலில் சாதி,மதம்,கட்சி பேதம் இண்ரி உதவியவர் .

    பதிலளிநீக்கு
  18. நீர் திமுக அனுதாபியாக இருந்தாலும் மதிமுக ஜெயிக்கவேண்டும் என்று சொன்னதிற்கு என் மனமார்த நன்றி!!!

    பதிலளிநீக்கு