30 மார்ச், 2012

மாசி

“சார்! பர்ஸ்ட் சீனிலேயே நாலு பேரை போட்டுத் தள்ளுறீங்க. நீங்க ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். வேட்டையாடு விளையாடு பாட்டு மாதிரி உங்களுக்கு ஒரு தீம் சாங்கும் உண்டு. பாட்டு ஃபுல்லா போடு போடுன்னு எல்லா ரவுடிகளையும் போட்டுக்கினே இருக்கீங்க”

”இண்டரெஸ்டிங். மேலே சொல்லுங்க”

“மெட்ராஸ்லே ரெண்டு ரவுடி க்ரூப். ஒரு க்ரூப்புக்கு மினிஸ்டர் சப்போர்ட். இன்னொரு க்ரூப்புக்கு மும்பையிலேருந்து ரவுடியிஸம் ஆபரேட் பண்ணுற டான் சப்போர்ட். ரெண்டு க்ரூப்பு ஆளுங்க எல்லாத்தையும் என்கவுண்டர்லே போடறீங்க. கடைசியிலே வில்லன்களையும்”

“நல்லாருக்கு சார். இண்டியன் சினிமாவிலேயே இப்படியொரு கதையோட படம் வந்ததில்லை. ஆனா ஹீரோயினே இல்லையே?”

சுதாரித்தபடி, “இருக்காங்க சார். பர்ஸ்ட் சீன்லேயே நெத்தியிலே குண்டு பாய்ஞ்சு செத்துடறாங்க”

“அவங்களையும் நான் தான் போட்டுடறேனா?”

“நியாயமா நீங்கதான் போடணும். ஆனா வில்லன்கள் போடுறமாதிரி வித்தியாசமா எடுக்கிறோம் சார்”

“பர்ஸ்ட் சீன்லேயே ஹீரோயின் அவுட்டுன்னா.. டூயட்டு, ஃபாரின் சாங்குக்கு எல்லாம் ஸ்கோப்பே இல்லையே பாஸ்?”

“அதெல்லாம் ட்ரீம்லே வெச்சுக்கலாம் சார்”

இப்படியாகதான் அர்ஜூன் சாரிடம் இயக்குனர் கிச்சா சார் கதை சொல்லியிருப்பார். ‘வெற்றிவிழா, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு மூணையும் கலந்துக்கட்டி கலக்கறோம் சார்’ என்று விறுவிறுப்பாக்கி ஆக்‌ஷன் கிங்கை ஒப்புக்கொள்ள வைத்திருப்பார்.

படத்தில் அர்ஜூன் தன்னைத்தானே போட்டுக்கொள்ளவில்லை என்பதைத் தவிர்த்து, ஓரமாய் ஒண்ணுக்கு இருப்பவனை கூட போட்டுத் தள்ளும் ‘கொலவெறி’ என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வருகிறார். என்கவுண்டர் என்கொயரிக்கு வரும் மேலதிகாரிகளின் வாயில் லாலிபாப் வைக்காததுதான் ஒரே குறை. படத்தில் அ.மார்க்ஸ் நடிக்கவில்லை என்பதால் ‘மனித உரிமை’ என்கிற பேச்சுக்கே இடமில்லை.

இப்படியாக போட்டுத்தள்ளும் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு சோதனை வருகிறது. கமிஷனர் வில்லனின் ஆள் என்று வித்தியாசமான பாத்திர படைப்பு. எனவே நேர்மையான போலிஸ் அதிகாரியான அர்ஜூன் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளே தள்ளுகிறார்கள். அங்கிருந்து இன்னொரு வில்லனுக்கு அடியாளாக செயல்பட்டு, வெளியே வந்து, தன் பழியை துடைத்து, தன் மீது பழி போட்டவர்களையும் போட்டு கடைசியில் தனக்கு பழிதீர்க்க உதவிய வில்லனையும் போட்டு… ஒட்டுமொத்தமாக இரண்டரை மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேரையாவது ராஜபக்‌ஷே பாணியில் போடுகிறார் அர்ஜூன்.

ஹீரோயின் நாலஞ்சு சீனுக்குதான் என்பதால் இருப்பதிலேயே மொக்கை ஃபிகராக பார்த்து புக் செய்திருக்கிறார்கள். சம்பந்தமேயில்லாமல் ‘பிட்’டாக உரித்துக் காட்டப்படும் ஆரம்பக் குளியலறைக் காட்சியால் கூட அவரால் ரசிகர்களுக்கு ‘மூட்’ இன்க்ரீஸ் செய்யமுடியவில்லை என்பதுதான் பரிதாபம்.

ஆக்‌ஷன் கிங் கன்னச் சதைகளெல்லாம் தொங்கிப்போய், குள்ளமாக, ஏடாகூடமான உடல்வாகோடு பரிதாபமாக இருக்கிறார். கூலிங் கிளாஸ் மட்டும் இல்லையென்றால், நடிப்பையே விட்டுவிட வேண்டிய சூழல் வந்துவிடும். வித்தியாசமான வில்லன் அல்லது குணச்சித்திர அப்பா கேரக்டர்களை இனிமேலாவது இவர் பரிசீலிக்கலாம்.

ரிட்டையர்ட் ஆகிப்போன வில்லன்களான பொன்னம்பலம், சலீம்கவுஸ் ஆகியோரை மீண்டும் கொண்டு வந்திருப்பதை வைத்தே யூகிக்கலாம் இது ரொம்ப ‘நறுக்’கான பட்ஜெட் படமென்று. விளங்காத பயல்களை பெற்ற அப்பாக்கள் சொல்வார்களே “இந்த தறுதலை பொறப்பான்னு தெரிஞ்சிருந்தா, அன்னிக்கு நைட் ஷோ போயிருக்கலாம்”. அப்படிக்கூட போகமுடியாத படமிது :-(

10 கருத்துகள்:

  1. ஐயோ இந்தப்படம் பக்கம் போகமாட்டேன்...

    சரி தலை, திருச்சி சம்பவத்தை பத்தி எதாவது எழுதுவிங்கனு ரெண்டு நாளா அடிகடி இந்த பக்கம் வரேன்.
    ரொம்பபேரு உலகம் புல்லா சந்தோஷமான மனபோக்கொடுதான் இருக்காங்கனு தெரியுது,

    பதிலளிநீக்கு
  2. யுவா, நான் இதை படித்த காரணத்தால் இதற்கு சுட்டி கொடுக்கிறேன் ;) நேரம் கிடைத்தால் படிக்கவும்!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:15 AM, மார்ச் 31, 2012

    சாருக்கு அர்ஜுன் மேல என்ன பொறாமையோ? படம் நல்லா தானே இருக்கு (இதை சீரியசாக படிக்கவும் ) -- அன்பு

    பதிலளிநீக்கு
  4. “இந்த தறுதலை பொறப்பான்னு தெரிஞ்சிருந்தா, அன்னிக்கு நைட் ஷோ போயிருக்கலாம்" - Super and heard it first time

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா9:29 AM, ஏப்ரல் 01, 2012

    மொக்கை பிகர் என்றால் இது தானா?...

    பாவம் அந்தப் பெண்ணின் காதலன் அல்லது பாய்ஃப்ரெண்ட்...

    இதைக் கேட்டால் நொந்து போவானா... அல்லது எஸ்.வி.சேகர் நாடக ஹீரோ போல, அடுத்தவருக்கு என் காதலி மொக்கையாகவும், எனக்கு பேரழகியாகவும் தெரியவேண்டும் என்பானா?

    பதிலளிநீக்கு
  6. क्या बात है !...finishing touch वह रे वाह...कोई सोच नहीं सकतें .....

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா4:05 AM, ஏப்ரல் 08, 2012

    http://desiactressespics.blogspot.com/2012/04/karthika.html

    பதிலளிநீக்கு