கே.கே.நகரில் இருக்கும் ஒரு புத்தகக்கடையில் நடந்த நிகழ்ச்சி அது. ஒரு அதிதீவிர இடதுசாரி முற்போக்கு புரட்சித் தோழர், இன்னொரு ‘சாதா’ தோழரை சந்தித்தார்.
“வணக்கம் தோழர். முதல் தடவையா சந்திக்கிறோம். நீங்க இப்படி இருப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கவே இல்லை”
“வணக்கம் தோழர். நான் எப்படி இருப்பீன்னு எதிர்ப்பார்த்தீங்க?”
“உங்களோட பிலாக் ப்ரொஃபைல் போட்டோவில் ஜம்முன்னு தொப்பியெல்லாம் போட்டுக்கிட்டு, தாடியெல்லாம் வெச்சுக்கிட்டு சூப்பரா இருந்தீங்க. நேர்லே ரொம்ப சுமாரா இருக்கீங்களே?”
நாற்பதை தொட்ட ‘சாதா’ தோழர் கொஞ்சம் தொப்பையும், கிப்பையுமாக மொக்கையாகதானிருப்பார். ஆனாலும் புரட்சித்தோழர் நேர்ப்பேச்சில் திடீரென சூட்டுக்கொட்டையாய் சுட்டுவிட, குழம்பிப் போனார்.
“அது சின்ன வயசுலே எடுத்த போட்டோ தோழர்” என்று சொல்லி சமாளித்தார்.
“அதானே பார்த்தேன். சின்ன வயசுலே நல்லா இருந்திருக்கீங்க”
“உங்களோட பிலாக் ப்ரொஃபைல் போட்டோவில் ஜம்முன்னு தொப்பியெல்லாம் போட்டுக்கிட்டு, தாடியெல்லாம் வெச்சுக்கிட்டு சூப்பரா இருந்தீங்க. நேர்லே ரொம்ப சுமாரா இருக்கீங்களே?”
நாற்பதை தொட்ட ‘சாதா’ தோழர் கொஞ்சம் தொப்பையும், கிப்பையுமாக மொக்கையாகதானிருப்பார். ஆனாலும் புரட்சித்தோழர் நேர்ப்பேச்சில் திடீரென சூட்டுக்கொட்டையாய் சுட்டுவிட, குழம்பிப் போனார்.
“அது சின்ன வயசுலே எடுத்த போட்டோ தோழர்” என்று சொல்லி சமாளித்தார்.
“அதானே பார்த்தேன். சின்ன வயசுலே நல்லா இருந்திருக்கீங்க”
இவ்வகையாக சம்பாஷணை முடிந்தது.
சொல்ல மறந்துவிட்டோமே? நம் ‘சாதா’ தோழரின் ப்ரொஃபைல் போட்டோவில் இருந்தவர் தோழர் சேகுவேரா. புரட்சித் தோழரோ இன்னமும், சின்ன வயசில் சாதா தோழர் சுருட்டெல்லாம் பிடித்துக் கொண்டிருந்தவர் என்று ‘சீரியஸாக’ நம்பிக் கொண்டிருக்கிறார்.
‘ஒயிட் நைட்ஸ்’ எழுதிய தஸ்தாவேஸ்கி இருந்திருந்தால், இச்சம்பவத்தை கேள்விப்பட்டு தூக்கு மாட்டி செத்திருப்பார்.
* - * - * - * - * - *
இவர் இன்னொரு தீவிர இடதுசாரி புரட்சித் தோழர். இந்துத்துவா சொம்பு தூக்கி அலையும் ஜெயமோகனை டவுசர் அவிழ்த்து ஓடவிட தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்.
வகையாக சிக்கியது ‘அவன் இவன்’
முதல் நாள் முதல் காட்சியே படத்தை பார்த்தார். படம் பார்த்த எஃபெக்டில் நேராக கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்தார். மூளையை கசக்கி யோசித்து ஒரு டைட்டிலை வைத்தார். ‘அவன் இவன் – ஜெயமோகனின் கிழிந்த முகத்திரை!’
வேகவேகமாக பதிவினை தட்டச்சினார். பாலாவின் ஆணாதிக்கத் திமிர், ஜெயமோகனின் முகம் சுளிக்க வைக்கும், காது கூச வைக்கும் வசனங்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு என்று கலந்துக்கட்டி புரட்சிகர திரைவிமர்சனத்தை வலைப்பதிவில் பதிவிட்டு விட்டார்.
முதல் பின்னூட்டமே படத்துக்கு வசனம் ஜெயமோகன் அல்ல, எஸ்.ரா என்று சுட்டிக் காட்டுகிறது. உடனே தோழர் ஜெயமோகன் என்று தட்டச்சிய இடத்தையெல்லாம் Find போட்டு கண்டுபிடித்து, எஸ்.ரா என்று மாற்றிவிடுகிறார். கோழி குருடா இருந்தாலென்ன, செவிடா இருந்தாலென்ன, ருசியாக இருந்தால் சரிதான் என்பது தோழரின் நிலைப்பாடு. தலைப்பும் ‘எஸ்.ரா.வின் கிழிந்த முகத்திரை’ ஆனது. ஒருவழியாக யாருடைய முகத்திரையாவது கிழிக்க வேண்டும் என்கிற தோழரின் ஆவலும் பூர்த்தியானது.
அந்த தவறுக்கு தோழர் கொடுத்த விளக்கம்தான் சூப்பர். டைப் அடிக்கும்போது தவறுதலாக எஸ்.ரா என்பது ஜெயமோகன் ஆகிவிட்டதாம். டைப் அடிப்பவர்களே! நீங்களே சொல்லுங்கள். எஸ்.ரா என்று தட்டச்சும் போது, அது ஜெயமோகன் என்று மாற ஒரு சதவிகிதமாவது ஆவது வாய்ப்பு இருக்கிறதா?
* - * - * - * - * - *
இந்த புரட்சித் தோழர் ஆரம்பத்தில் சினிமா, கினிமாவென்றுதான் ஏதோ காமாசோமாவாக எழுதிக் கொண்டிருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஓவர் நைட்டில் புரட்சிக்காரராய் மாறிப்போனார். எதை செய்தாலும் அதை ‘புரட்சி’யாகவே செய்ய நிரம்பவும் மெனக்கெட்டார்.
எந்த லெவலுக்கு என்றால்...
சிலர் பின்னூட்டம் போடும் போது, கடைசியாக தங்கள் பெயரோடு பின்னூட்டம் இடுவார்கள். ‘அன்புடன் டோண்டு ராகவன்’ என்பது மாதிரி. நம் தோழர் இப்படி பின்னூட்டம் இடம் ஆரம்பித்தார். “இப்படிக்கு தோழர் ஃபயர்லுக்கு”
‘எங்காவது அநீதியைக் கண்டு உன் நெஞ்சு கொதித்தால், நீயும் என் தோழன்’ என்பார் சே. இணையம் முழுக்க நடக்கும் அநீதிகளை கண்டு மனம் வெதும்பிப் போனதாலேயோ என்னவோ, நம் தோழர் ஃபயர்லுக்கு தன்னைத்தானே கூட தோழர் என்றே அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார். கோயிலில் அர்ச்சனை செய்ய அய்யர் பெயரை கேட்கும்போது கூட ‘தோழர்’ என்கிற ஃப்ரீபிக்ஸோடுதான் தன் பெயரை தோழர் சொல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
* - * - * - * - * - *
இதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதங்கள்.
இதுபோல இன்னும் ஏராளமான தீவிர இடதுசாரி மொக்கைகளை உருவாக்கியிருக்கிறது வினவு இணையத்தளம். மக்கள் கலை இலக்கிய கழகம் என்கிற அமைப்பின் செயல்பாடுகளின் மீது ஏராளமானோர் வைத்திருந்த மரியாதை, அபிமானம் எல்லாவற்றையும் காலி செய்வதற்கென்றே வினவு இணையத்தளம் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது.
ஒருவன் நாத்திகனாக வாழ்வதுதான் உலகிலேயே மிகக்கடினமான செயல். முழுக்க போர்த்திய ஊரில், நிர்வாணமாய் அலைவது மாதிரி. அதைவிட கடினம், தீவிர கம்யூனிஸ்டாக இருப்பது. இதை உணர்ந்திருப்பதாலேயே, கம்யூனிஸம் பற்றிய சரியான புரிதல் கொண்ட பலரும் கூட மனசுக்குள்ளாக மட்டுமே கம்யூனிஸ்ட்டாக வலம் வருகிறார்கள். சில பேர் சமரசம் செய்துக்கொள்ளாத வாழ்க்கைச் சூழல் அமையும்போது தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
துரதிருஷ்டவசமாக தீவிர கம்யூனிஸ்டுகளின் இணைய செயல்பாடுகள், மேற்கண்ட தோழர்களை போல மேனாமினுக்கி கம்யூனிஸ்ட்களை உருவாக்கித் தொலைக்கிறது. கம்யூனிஸ்ட், நக்சல்பாரி என்று சொல்லிக் கொள்வது இவர்களுக்கு சேகுவேரா டீஷர்ட் போடுவது மாதிரி ஒரு Passion. இவர்களில் யாரும் போலிஸிடம் தடியடி பட்டவர்கள் அல்ல. தடியடி படுபவர்களை வேடிக்கை பார்ப்பவர்கள்.
அரசு இயந்திரம் என்றேனும் இவர்களை நெருங்கும் என்று தெரிந்தால், டீ ஷர்ட்டை தலைக்கு மேலே கையை தூக்கி அவிழ்த்துப் போடுவதைப் போல, கம்யூனிஸத்தை அவிழ்த்துப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.
பதிவுலகத்தைப் பற்றி நிறைய எழுதினால் ஹிட்ஸ் கிடைக்கும் என்பதற்காக, ஒரு ப்ளூ ஃப்லிம் எழுத்தாளரை, பிராக்ஸியாக எழுதவைத்து பதிவுகள் வெளியிட்டு வருகிறது வினவு. இப்படிப்பட்டவர்களால், ஒரே ஒரு உருப்படியான கம்யூனிஸ்ட்டையாவது இணையத்தில் உருவாக்க முடிந்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.