22 ஜூன், 2011

இன்டர்நெட் ரோமியோ!


இப்போதெல்லாம் தோழர் டமாரு குமாரு ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட்டாக மாறிவிட்டான். பார்க்கும் ஃபிகர்களை எல்லாம் தன்னுடைய ஃபிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதியாகவும் உருவெடுத்துவிட்டான். சகாக்களின் ஃபிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவனுக்கு வாய்த்திருந்தது. வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் 'ஏ'ய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளன் நம்ம டமாரு. காதல் திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளைகளை பெற்றிருந்தாலும் டமாருக்கு ஏனோ சைட் அடிக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறையவேயில்லை.

இளைஞர்கள் பலரும் ‘சாட், சாட்’ என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட டமாருவுக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆர்.கே. மட் ரோடில் இருந்த டமாருவின் நண்பன் விஜி ஒரு பிரவுசிங் சென்டர் வைத்திருந்தான். டமார் குமாருக்கு ஓரளவுக்கு இங்கிலீஷ் தெரியும், ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டீ காண்ட்ராக்ட் எடுத்திருந்ததால் ஓரளவுக்கு ஆங்கிலப் பரிச்சயம் ஏற்பட்டிருதது. முன்பு போலில்லாமல் இப்போது டமாரு கொஞ்சம் டீசன்ட் வேறு ஆகிவிட்டிருந்தான். விஜி கடைக்கு அவ்வப்போது சென்று சாட்டிங் செய்ய கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் டமாரிடம் சாட்டிங்கில் மாட்டியதில் நிறையப் பேர் அமெரிக்க ஃபிகர்களாக இருந்தார்கள். வெள்ளைத் தோல் மீது பிறப்பிலேயே குமாருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும் கொஞ்ச நாள் சாட் செய்ததுமே டமாரு கேட்கும் ஒரு கோரிக்கையை (அது ஒரு மோசமான ஆங்கில நாலெழுத்து கோரிக்கை) கண்டு காரித்துப்பி அனுப்பி விடுவார்கள் வெள்ளைக்கார ஃபிகர்கள். நாம இருக்கறதோ மெட்ராஸ்? அமெரிக்காவில் இருக்குற பிகர்களிடம் போயி ஜொள்ளுவிடுவதால் என்ன பயன்? என்று திடீரென்று டமாருவுக்கு ஒருநாள் பகுத்தறிவு ஏற்பட்டது.

இதனால் டமார் குமாரின் பார்வை இந்திய ஃபிகர்கள் மீது திரும்பியது. ஆனாலும் மாட்டணுமே? ஒரு நாள் தோழர் டமாரு மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டான்.

‘என்ன மேட்டர்?’ விஜி வினவினான்.

"விஜி, சாட்டிங்ல மெட்ராஸ்லேயே ஒரு ஃபிகர் மாட்டிக்கிச்சி’’

‘‘இன்னா சொல்றே டமாரு. உன் ஏஜுக்கும், முகத்துக்கும் இதெல்லாம் ஓவராத் தெரியலை’’

‘‘இன்னாடா ஒனக்கு மட்டும் மாட்டிக்கிட்டா ......................... இருப்பியா?" (கோடிட்ட இடத்தில் ஆக்சுவலாக இடம் பெற்றது ஒரு மோசமான தமிழ் வார்த்தை. நாகரிகம் கருதி தனிக்கை செய்திருக்கிறேன்)’’

‘‘அப்புறம் ஒன் இஷ்டம்டா குமாரு. ஆனாலும் ஒனக்கு கொழந்தை, குட்டின்னு இருக்கு. பாத்துக்கோ’’

விஜியின் ஆலோசனையை எல்லாம் கேட்கும் நிலையில் டமாரு இல்லை. சாட்டிங் பைத்தியம் முத்திவிட்டிருந்தது.

அவள் பெயர் நந்தினி. வயது பத்தொன்பதாம். சாட்டிங்கில் பசங்களை மடக்கும் ஃபிகர்கள் எல்லோருக்குமே பத்தொன்பது வயதாக இருப்பது ஒரு ஆச்சரியகரமான ஒற்றுமை. சென்னையின் நுழைவாயிலில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாளாம். டமாரு தினமும் 4 மணிநேரமாவது நந்தினியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டான். ஒரு நாள் அவள் பிரவுசிங் சென்டருக்கு கீழிருந்த துணிக்கடைக்கு வருவதாகச் சொன்னாள். டமாரு ரொம்பவும் பரபரப்பாகி விட்டான்.

அன்று அவனுக்கு முக்கியமான வேலை இருந்தது. அவனது மனைவி கருவுற்றிருந்தாள். கன்சல்டேஷனுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. நந்தினியைச் சந்திக்க இயலாத சூழ்நிலை. எனவே விஜியிடம் ஒரு கோரிக்கை வைத்தான். ‘‘பச்சைத் தாவணியில் அவள் அக்காவோட வருவா. எப்படி இருக்கிறான்னு மட்டும் பார்த்து வைச்சுக்கோ. அவ இன்னால்லாம் செய்றான்னு நோட் பண்ணிக்கோ. மறுநாள் நான் சாட்டிங் பண்றப்போ அவளை நானே மறைஞ்சு நின்னு பார்த்தா மாதிரி ஃபிலிம் காட்டிக்கிறேன்’’ என்றான். விஜியும் பெரிய மனது வைத்து நண்பருக்காகச் சம்மதித்தான். இருந்தாலும் போயும் போயும் டமாருக்கு ஒரு ஃபிகர் சாட்டிங்கில் செட் ஆன வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது.

அன்றிரவு டமாருவை செல்லில் பிடித்து நந்தினியின் உடல்வாகு, அவள் பேசும் ஸ்டைல், அவளது அக்கா குண்டாக இருந்தது, அவர்கள் வாங்கிய சுடிதார் கலர் போன்ற விவரங்களை விஜி சொன்னான். அவன் காலத்தாற் செய்த அந்த உதவிக்கு ரொம்பவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தழுதழுத்துச் சொன்னான் டமாரு. நாட்கள் கடந்தன. டமாருவின் போக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. லேசாக முன் மண்டையில் விழுந்த வழுக்கையை மறைக்கும் விதத்தில் தலைவார ஆரம்பித்தான். சைடில் இருந்த நரைமுடியை மறைக்க ‘டை’ அடித்தான். டைட்டாக ‘டக்-இன்’ செய்ய ஆரம்பித்தான். அப்போதுதான் தொப்பை தெரியாதாம்.

ஒரு நாள் சாட் செய்துக் கொண்டிருந்தபோது ‘‘நாகேஸ்வரராவ் பார்க்கில் சந்திக்க விருப்பமா?’’ என்று நந்தினியிடம் கேட்டிருக்கிறான் டமாரு. நந்தினியோ ‘‘பார்க்குக்கு எல்லாம் வர முடியாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சாயுங்காலம் 6 மணிக்கு வர்றேன். பார்க்கலாம்" என்று கூறியிருக்கிறாள். டகாரு காத்திருந்தான். வெள்ளியும் வந்தது. மாலை 5 மணிக்கே பரபரப்பாகி விட்டான். வேர்க்க விறுவிறுக்க விஜியின் பிரவுசிங் சென்டருக்கு வந்தவன் ஃபேர் அண்டு லவ்லியும், பவுடரும் போட்டுக்கொண்டான். ஃபுல் மேக்கப்பில் டமாரு ஆஜர். சுமார் 2 மணிநேரம் கழித்து சோர்வாக வந்து சேர்ந்தான்.

‘‘என்ன டமாரு ஒர்க் அவுட் ஆயிடிச்சா?’’

‘‘அவளைப் பார்த்தேன் மாமு. ஆனாப் பேசலை’’

‘‘ஏன்டா?’’

"பாத்ததும் வயசைத் கண்டுபிடிச்சுட்டான்னா, அப்புறம் சாட்டிங்க்ல கூட வராமப் போயிட்டான்னா என்ன செய்ய?"

ஆனால் விதி யாரை விட்டது? நந்தினி குமாரை விடவில்லை. அவளது நச்சரிப்பாள் மெரீனாவின் கூட்டமற்ற இருண்ட முன்னிரவொன்றில் ஒருநாள் இருவரும் சந்தித்தார்கள். கிட்டத்தட்ட தன் உருவத்துக்கு சுடிதார் போட்டுவிட்டதைப் போன்றதொரு தோற்றத்துடன் இருந்த நந்தினியைக் கண்டு டமாரு 'டமால்' ஆனான். தன்னைப்போல் பிறரையும் நினைக்கும் அளவுக்கு அவன் மனம் விசாலமாக இல்லை.

விஜியுடன் அன்று இரவு டாஸ்மாக்கில் விடிய, விடிய கச்சேரி. விடிந்ததும் எழுந்து நேராக விஜி கடைக்கு வந்தான் குமாரு. யாஹூவின் சென்னை சாட்ரூம்.

"Hi"

"Hi"

"ASL Pls?" (Age, Sex, Location)

"I am kumaru 22/M/Chennai. Your ASL?"

"I am Bhuvana 19/F/Chennai"

புவனாவின் பூர்வீக புனைப்பெயர் 'நந்தினி' என்கிறது யாஹூ சாட் ஹிஸ்ட்ரி.

(நன்றி : யூத்ஃபுல் விகடன்)

8 கருத்துகள்:

  1. நல்ல சொன்னிங்க பாஸ், ஆனா சாட்டுல பெரும்பாலும் பசங்கதான் பெண்னுங்க பேருல வருவாங்க, தண்ணி மப்பு மாதிரி இந்த சாட்டும் ஒரு போதைப் பழக்கம்தான்.

    பதிலளிநீக்கு
  2. :-)
    எங்க கதை வேற மாதிரி இருக்கும். நேரம் இருக்கும் போது பதிவுறேன்.
    ஜேம்ஸ் பாண்டு மாதிரி ஒரு கேரக்டர் உருவாக்கி வெச்சிருக்கீங்க. டமாரு. :-) நல்லா இருக்கு அண்ணே

    பதிலளிநீக்கு
  3. sir.. neenga 2008 decemberla ASL pls 1 and 2 va thaane Damaru kumara vechi remake pannirukeenga.. kandupudichtomla.. edhu pannalum plan panni pananum.. :)

    பதிலளிநீக்கு
  4. மீள்பதிவுதான். அஜ்ஜஸ் பண்ணிக்குங்க ஜனங்களே.

    பதிலளிநீக்கு
  5. இந்த மீள்பதிவுவின் உள்குத்து புரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. ஹாய் பாஸ்! பழைய பதிவை கொஞ்சம் மாத்திட்டீங்க முடிவு எல்லாம் இல்ல?
    அதில நந்தினின்னு ஒரு காரெக்டரே இல்ல! (நீங்கதான்!)

    பதிலளிநீக்கு
  7. டமாரு கதை ரொம்ப ஜோரு!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா7:30 PM, ஜூன் 22, 2011

    This is very very funny. name selections are very apt. you are good!!

    - Sinna

    பதிலளிநீக்கு