13 ஜூன், 2011

ஆரண்ய காண்டம்

படத்தில் ‘கதைஎன்கிற வஸ்து இல்லாததாலேயோ என்னவோ, தலைப்பிலேயே முழு கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். நாடு ஒரு காடு, மனிதர்கள் விலங்குகள் இதுதான் ஒரு வரி கதை. இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் இருப்பவன், எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற எளிய சூத்திரம் இறுதியில் வலியுறுத்தப்படுகிறது.

சினிமா என்பது ஒரு கதைசொல்லி ஊடகம் என்று தமிழ் சினிமாவின் முன்னோடிகள் அவசர அவசரமாக முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழில் சினிமா வந்து எண்பதாண்டுகள் கழித்து, ‘இல்லை. சினிமா என்பது ரசிகனுக்கு அனுபவத்தை ஏற்படுத்தும் ஊடகம்என்று ஆரண்ய காண்டம் அழுத்தம் திருத்தமாக மறுத்திருக்கிறது.

இப்படம் எந்த கதையையும், கருத்தையும் வலியுறுத்தவில்லை. முதல் காட்சி தொடங்கி, இறுதிக்காட்சி வரை உங்களுக்கு பிரேம்-பை-பிரேமாக வழங்குவது காட்சியனுபவத்தை மட்டுமே. முதல் காட்சி, அடுத்தக் காட்சிக்கு சங்கிலிப் பிணைப்பாக இருக்க வேண்டும் என்பது அழுத்தமான விதி. அனாயசமாக இவ்விதியை உடைத்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. லீனியர் அல்லது நான்லீனியர் என்கிற இரண்டே சாத்தியங்கள் கொண்ட திரைக்கதை கட்டமைப்பை, அசால்ட்டாக odd வரிசையில் அடுக்கியிருக்கிறார் (வானம் படத்தில் மொக்கையான காட்சிகளால் சப்பையாகிவிட்ட மேட்டர் இது).

கமல்ஹாசனும், விக்ரமும் நடித்திருக்க வேண்டிய படம். நம்ம ஷோதான் நல்லா இருக்காதேஎன்பதால் ஜாக்கிஷெராப்பும், சம்பத்தும். தனக்கு தொடர்பே இல்லாத கலாச்சாரத்தை கூட நன்கு உள்வாங்கி, சிறப்பான திறமையை நல்ல நடிகனால் வெளிப்படுத்த இயலும் என்பதற்கு ஜாக்கி நல்ல உதாரணம்.

படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வன்முறையாளர்கள் கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், வசனங்கள் மூலமாக அக்குறையை போக்க இயக்குனர் முற்பட்டிருக்கிறார். நிழல் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் கும்பலின் தலைவனுக்கு முதுமை ஏற்படுகிறது. துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்கிறார். அவரது தளபதியாக இயங்கும் இளைஞன், ஒரு கட்டத்தில் “டொக்கு ஆயிட்டீங்கஎன்கிறான். அவசரத்தில், ஆத்திரத்தில் உதிர்க்கப்பட்ட இந்த டொக்குஎன்கிற சொல்தான் படத்தின் காட்சி விளைவுகளுக்கான மையப்புள்ளி.

அவசரக் காரியமாக காரில் பயணித்துக் கொண்டிருக்கும் சம்பத்திடம், அவரது மனைவி “என்ன சமையல் செய்யட்டும்?” ரேஞ்சில் கைப்பேசியில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார். எரிச்சலோடு ஏதோ சமாதானப்படுத்தும் பதிலை சொல்லி அழைப்பை நிறுத்துகிறார். கூட இருக்கும் சகா கேட்கிறான். “அண்ணியா?”. சம்பத்தின் பதில் “சுண்ணி”.

‘டொக்குஎன்று நாலு பேர் மத்தியில் விமர்சித்துவிட்ட சம்பத்தை முடித்துவிட, அவனது சகாக்களுக்கே ஆணையிடுகிறார் ஜாக்கி. அவர்களிடமிருந்து சம்பத் தப்ப, முன்காட்சியில் ‘அண்ணியா?என்று கேட்டவனே, “கஸ்தூரியை தூக்கிடுறோம் பசுபதிஎன்கிறான். சொன்னபடியே தூக்கிவிடுகிறான். சம்பத் இப்போது ஜாக்கியை போனில் அழைக்கிறார். ‘ஹலோவுக்குப் பதிலாக அவர் போனில் சொல்லும் முதல் வார்த்தை “தேவடியாப் பையா”. படம் முழுக்க இப்படியான வசனங்கள்தான். படத்தின் எடிட்டரை விட தணிக்கை செய்த அதிகாரிகள்தான் அதிகம் உழைத்திருக்கிறார்கள்.

மெட்ராஸ் பாஷையென்றாலே தமிழ் சினிமா வசனகர்த்தாக்களுக்கு லூஸ்மோகன் பாஷைதான். இந்த வழக்கத்தை இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி, ‘ஓரம்போ படத்தில் தாறுமாறாக தகர்த்து எறிந்தார்கள். அந்தப் படத்தைவிட இதில் வசனங்களின் துல்லியம் கூடியிருக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று சகலமும் சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இசை. நாயகியின் அறிமுக காட்சியிலும், நாயகன் ‘ஐ லவ் யூ சொல்லும் காட்சிகளிலும் இதுவரை நாம் கேட்ட இசையை, ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளுக்கு அள்ளித் தெளித்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. படத்தின் முக்கியக் காட்சியான சேஸிங் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் ஒற்றை புல்லாங்குழல் க்ளாசிக்.

அளவாக பயன்படுத்தப்பட்ட காமம், தேவையில்லாத செண்டிமெண்ட் – அழுகையை தவிர்த்திருப்பது, கலையாக கைக்கொள்ளப்பட்டிருக்கும் வன்முறை, இயல்பாக நடித்திருக்கும் நடிகர்கள், எளிமையான காட்சிகள், அதே நேரம் ரிச்லுக் படமாக்கம் என்று படம் பார்க்கும் ரசிகனின் மூளைக்கு ஃப்ரெஷ்ஷான சமாச்சாரங்கள்.

குவென்டின் டொரண்டினோ பாணியிலான திரைக்கதை யுக்தி. இதையெல்லாம் பல்ப் ஃபிக்‌ஷனிலேயே பார்த்துவிட்டோம் என்று படம் பார்த்த சில நண்பர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். பல்ப் ஃபிக்‌ஷனை பார்க்காத தமிழர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே தொண்ணூறு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எழுநூற்றி மூன்று. எனவே ஆரண்ய காண்டம் அடித்துப் பிடித்து ஓடினால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.


எச்சரிக்கை : அடுத்த சில நாட்களில் அறிவுஜீவி திரைப்பார்வையாளர்கள் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும், இயக்குனரே சிந்தித்திராத குறியீடுகளை எல்லாம் எடுத்தியம்பி, உங்களை கதறக் கதற கற்பழிக்கப் போகிறார்கள், ஜாக்கிரதை.

15 கருத்துகள்:

  1. பெயரில்லா1:51 PM, ஜூன் 13, 2011

    / மெட்ராஸ் பாஷையென்றாலே தமிழ் சினிமா வசனகர்த்தாக்களுக்கு லூஸ்மோகன் பாஷைதான். இந்த வழக்கத்தை இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி, ‘ஓரம்போ’ படத்தில் தாறுமாறாக தகர்த்து எறிந்தார்கள். /

    ஓரம்போ படத்திற்கும் இவர்தான் வசனம் என்பது தெரிந்திருக்கும் என் நினைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  2. குவாட்டர் கட்டிங்குக்கும் இவர்தாண்ணா! கொடுக்காப்புளி அப்பனை ஒண்ணுமே சொல்லலையே... :-))

    பதிலளிநீக்கு
  3. நல்ல விமர்சனப் பார்வை.. பகிர்வுக்கு நன்றி யுவா..!

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா5:32 PM, ஜூன் 13, 2011

    //எச்சரிக்கை : அடுத்த சில நாட்களில் அறிவுஜீவி திரைப்பார்வையாளர்கள் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும், இயக்குனரே சிந்தித்திராத குறியீடுகளை எல்லாம் எடுத்தியம்பி, உங்களை கதறக் கதற கற்பழிக்கப் போகிறார்கள், ஜாக்கிரதை. // - very true..lol. great work.

    -Sinna

    பதிலளிநீக்கு
  5. இந்த படத்தின் இயக்குனர் என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர்(ஆனால், அதற்கு பிறகு பார்க்கவில்லை). படம் போய் பார்க்க வேண்டும்! facebook, twitterனு தேடிப் பார்க்கிறேன், ஆளு இன்னும் சிக்கவில்லை!

    பதிலளிநீக்கு
  6. குவென்டின் டொரண்டினோ பாணியிலான திரைக்கதை யுக்தி. இதையெல்லாம் பல்ப் ஃபிக்‌ஷனிலேயே பார்த்துவிட்டோம்’ என்று படம் பார்த்த சில நண்பர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். பல்ப் ஃபிக்‌ஷனை பார்க்காத தமிழர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே தொண்ணூறு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எழுநூற்றி மூன்று. எனவே ஆரண்ய காண்டம் அடித்துப் பிடித்து ஓடினால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.---//

    ரொம்ப நல்ல சொல்லி இருக்க... யுவா.. நெத்தியில அடிச்சது போல இருக்கு...

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா4:52 PM, ஜூன் 14, 2011

    யுவா, கலக்கல் விமர்சனம் ! முதல் நாளே இந்த படத்தை பார்த்தேன் ! சும்மா சொல்ல கூடாது ..சூப்பர் ! யார பாரட்டுரதுன்னே தெரியல ....அவ்வளவு பெரும் கலக்கி இருக்காங்க ! இயக்குனர், இசை ,தொகுப்பு, கேமரா ,நடிகர்கள் ,,,எல்லாமே ரொம்ப கிளாஸ் !Tarantinovin எல்லா படத்தையும் பார்த்திருக்கிறேன்...Quentin..Robert Rodriguezஇருவரும் என் favorite . ஆனால் தமிழில் மற்றுமொரு தரமான இயக்குனர் கிடைத்திருப்பது மிக மகிழ்ச்சியே ! - Bloorockz Ravi

    பதிலளிநீக்கு
  8. தரமான விமர்சனம் தோழரே..அறிமுக இயக்குனர் மசாலா படம் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்திடாமல்.. அருமையான உலக சினிமாவோடு நுழைந்திருக்கிறார்... சில அறிவு ஜீவிகள் காட்சிகளின் தரத்தை ஆராயும் முன் இது அறிமுக இயக்குனரின் படம் என்பதை மனதில் நிறுத்தி கொள்ளவும்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் எச்சரிக்கை பிடித்திருக்கிறது ;-)

    பதிலளிநீக்கு
  10. ஓரம் போ படத்தின் வசனம் எழுதியது இவர்தான் ...

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா11:43 PM, ஜூன் 18, 2011

    Nanbare... Arumaiyana padhivu... Innaikku thaan padam parthen... Ungalin karuthukkal nadunilamaiyodu ungalin thanithuvathai katukirathu.

    Nanum sila pala blogla varum adhi methavi thana theerpu (reviewinu solla asingama irukku) padichirukken. But unga vimarsanan (not a theerpu) oru pathrikaikarnodathunnu nirubikkuthu. Valthukkal...

    Note: athimethavi unga nanbar thaan... Konjam arivurai sollalame.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா8:06 AM, ஜூன் 26, 2011

    Sreedharan from Sharjah said,

    Yuvakrishna!

    Refer your last paragtraph.

    As you said,self claimed 'arivujeevi' kottai edutha keyboard puli has written a lot about this movie.It was the best mokkai of the year !

    Ha...Ha...Ha...!

    பதிலளிநீக்கு
  13. yuva ru giving review or again writing story, just analysis what is special of the movie,i am reed almost recent review, it's like again one time watching movie.

    i like way of writing style don't break some rules
    ok all the best man

    IVAN
    L.M.G.R

    பதிலளிநீக்கு