18 ஜூன், 2011

‘நூல்’ பாண்டியன்

சென்னை கே.கே.நகரில் இருக்கும் அந்தக் கடையின் கதவை திறந்ததுமே ‘குப்’பென்று அடிக்கிறது புத்தகவாசனை.

“இது வெறும் பேப்பரோட வாசனை இல்லைங்க. அறிவு வாசனை” சிரிக்கிறார் கடைக்காரர் ‘நூல்’ பாண்டியன். ‘நூல்’ என்பது அவர் படித்து வாங்கிய பட்டமல்ல. மக்களாக முன்வந்து அளித்த பட்டம்.

நாற்பத்தியாறு வயதான பாண்டியன், ஒரு வித்தியாசமானத் தொழிலை செய்துவருகிறார். பழைய புத்தகங்களை சல்லிசான விலையில் விற்று வருகிறார். இதுதான் வித்தியாசமா என்று அவசரப்பட்டு கேட்காதீர்கள்.

அரிய நூல்களை தேடிக் கண்டுபிடித்து, தனது வாடிக்கையாளர்களுக்கு தருவதுதான் பாண்டியனின் தொழில். அதிலும் அந்நூல் வெளியான முதல் பதிப்பகத்தின், முதல் பதிப்பை தேடிக்கண்டுபிடித்து வாங்கித் தருவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே. இவர் வெறும் விற்பனையாளர் மட்டுமல்ல, அரியநூல்கள் சேகரிப்பாளரும் கூட. 1826ல் இலங்கையில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பஞ்சாங்கம் கூட இவரது சேகரிப்பில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நூற்றாண்டு கண்ட நிறைய நூல்களை நூல் பாண்டியனின் கடையில் நீங்கள் நிறைய பார்க்கலாம்.

இவரது சேகரிப்பில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? உத்தேசமாக யூகித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஒரு லட்சம், ரெண்டு லட்சம், ஐந்து லட்சம்?

தயவுசெய்து நம்புங்கள். சகட்டுமேனிக்கும் எல்லாவகை நூல்களுமாக, சுமார்அரை கோடி நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார் பாண்டியன். ‘நூல்’ பட்டம் இவருக்கு பொருத்தமானதுதானே?

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நூல்களை வைத்திருந்தாலும், தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு நூலையும் இவருக்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாடிக்கையாளர் தேடிவருகிறார் என்றால், அதைவிட சிறந்த புத்தகம் தன்னிடம் இருந்தால், அதைப்பற்றிச் சொல்லி சிபாரிசு செய்கிறார்.

கல்லூரி-பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், ஆன்மீகம், வைத்தியம், சித்தாந்தம், சுயமுனைப்பு நூல்கள், சிறுபத்திரிகைகள், காமிக்ஸ்கள், வார இதழ்கள், நாவல்கள் என்று எல்லாவகை நூல்களையும், எல்லா மொழிகளிலும் சேகரித்து வைத்திருக்கிறார்.

கே.கே. நகர் கடை தவிர்த்து, ஒரு கிடங்கிலும் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கும் இடம்போதாமல் பாண்டியன் வாடகைக்கு குடியிருக்கும் வீடு முழுக்க நூல்மயம்தான். மனைவியும், இரண்டு மகன்களும் நூல்கள் போக மீதமிருக்கும் இடத்தில்தான் புழங்குகிறார்கள்.

தேவக்கோட்டை இவரது பூர்வீகம். சென்னையில்தான் பள்ளிப் படிப்பு. உறவினர்கள் பலரும் பதிப்பகம் நடத்தி வருகிறார்கள். ‘நூல்’ தொடர்பான தொழில்தான் தனது வாழ்க்கை என்று அப்போதே முடிவு எடுத்து விட்டார். அதிலும் அரிய, பழைய நூல்கள் மீது அடாத காதல்.

“ஆரம்பத்தில் வீடு வீடா பேப்பர் போட்டுகிட்டு இருந்தேன். அப்புறம் சொந்தமா பேப்பர் ஏஜென்ஸி நடத்தினேன். இது தவிர்த்து நிறைய சின்ன சின்ன வேலைகளும் செய்துக்கிட்டிருந்தேன். என்ன வேலை செஞ்சாலும் பழைய புத்தகங்களை நோக்கியே திரும்ப திரும்ப வந்துக்கிட்டிருந்தேன்.

இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு சொல்லி அப்பா என்னை அரசு நூலகத்தில் நூலகரா சேர்த்து விட்டாரு. நூலகத்துலே இருக்குறது பெரும்பாலும் புதிய புத்தகங்கள். அதனாலே ஏனோ அந்த வேலையும் ஒட்டலை.

சேகரிப்பில் இருந்த புத்தகங்களை வெச்சு தனியா ‘ஆதிபராசக்தி பழைய புத்தகக்கடை’னு கடை ஆரம்பிச்சிட்டேன். விளையாட்டா முப்பது வருஷம் ஓடிடிச்சி...” நினைவுகளில் மூழ்குகிறார் பாண்டியன். பாருங்கள், நினைவுகள் கூட ‘பழையவை’தான்.

சென்னையின் கல்வியாளர்கள், சினிமா இயக்குனர்கள், புத்தகப் பிரியர்கள் என்று பலருக்கும் ‘நூல்’ பாண்டியன் அறிமுகமானவர்தான். வெளியூர்களில் இருப்பவர்களும் கூட தங்களுக்கு எந்த புத்தகம் வேண்டுமென்றாலும், போன் அடித்து சொல்லிவிடுவார்கள். தனது சேகரிப்பில் இல்லாத புத்தகமென்றாலும் இரண்டு மூன்று நாட்களில் ‘எப்படியோ’ வரவழைத்துக் கொடுத்துவிடுகிறார். ஆராய்ச்சி மாணவர்கள் பலருக்கும் இவரது கடை அட்சயப் பாத்திரம். அரிய நூல்கள் என்றால் விலையும் எக்குத்தப்பாக இருக்குமே என்று அஞ்சவேண்டாம். நூல்களைப் போலவே விலையும் கூட ‘பழைய’ விலைதான்.

இவ்வளவு நூல்களை சேகரிக்க முடிகிறதென்றால், இவரிடம் ஒரு பெரிய படையே இருக்கவேண்டும் இல்லையா? இல்லை. ‘நூல்’ பாண்டியன் ஒரு ஒன்மேன் ஆர்மி. காலையில் எல்லோரும் அலுவலகத்துக்கு கிளம்புவதைப் போல, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கிளம்பிவிடுகிறார். ஒவ்வொரு பழைய கடையாக சென்று, அரிய நூல்கள் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டே இருக்கிறார். மாலை மூன்று மணிவரை தேடலும், சேகரிப்பும்தான்.

மாலையில் கூடு தேடி வரும் பறவையைப் போல கடைக்கு வருகிறார். நாலு மணி முதல் இரவு ஒன்பதரை வரைதான் இவரது கடை திறந்திருக்கும். வார விடுமுறை எல்லாம் இல்லை. வேலைக்கும் தனியாக ஆட்கள் வைத்துக் கொள்வதில்லை.

இத்தொழிலில் வருமானம் என்று பெரியதாக எதுவும் கிடைப்பதில்லை. இவரிடம் புத்தகம் வாங்கிச் சென்று படித்து தேர்ந்த மாணவர்கள், இனிப்பு கொடுக்க வருவதுண்டு. பழைய புத்தகம் வாங்கிப் படித்து போட்டித்தேர்வுகளில் வென்று வேலைக்குச் சேர்ந்தவர்களும் இவரை மறப்பதில்லை. இந்த ஆத்மத் திருப்திக்காகதான் இப்பணியை விடாமல் செய்துக் கொண்டிருக்கிறார்.

ஊருக்கெல்லாம் புத்தகம் விற்கிறாரே, ‘நூல்’ பாண்டியன் என்ன புத்தகங்களை படிக்கிறார்?

“முழுக்க முழுக்க ஆன்மீகப் புத்தகங்களைதான் படிப்பேன். ஆனாலும் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்லணும்னு, மத்த புத்தகங்களை பத்தி மேலோட்டமா வாசிச்சி தெரிஞ்சி வச்சிப்பேன்.

இப்பல்லாம் மக்கள் புத்தகம் வாசிக்கிறது ரொம்ப குறைஞ்சிடிச்சி சார். எல்லாரும் டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அச்சிலே வாசிக்கிறது மனசுலே பதியறது மாதிரி, டிவியிலே பார்க்கிறது பதியாதுன்னு அவங்களுக்கு ஏன் தான் புரிய மாட்டேங்குதுன்னு தெரியலை” என்று அலுத்துக் கொள்கிறார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒரு பதினெட்டு வயது மதிக்கத்தக்க ‘வாசகர்’ உள்ளே நுழைகிறார்.

“சார். பொன்னியின் செல்வன் கிடைக்குமா?”

“கிடைக்கும் தம்பி. மொத்தம் அஞ்சி பாகம். இப்போ வர பதிப்புகளில் எல்லாம் படமே இருக்காது. அந்த காலத்துலே கல்கியில் வந்ததையெல்லாம் சேர்த்து வெச்சி ‘பைண்டிங்’ பண்ணி புக்கா கிடைக்கும். மணியமோட படங்கள் அட்டகாசமா இருக்கும். அதை வாங்கிக்குங்க” – இதுதான் ‘நூல்’ பாண்டியன்.

நூல் பாண்டியனின் தொடர்பு எண் : 9444429649

நூல்களை காப்பது எப்படி?

வீட்டில் சிறியளவில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பெரிய தொல்லை. புத்தகத்தை அரிக்கும் பூச்சிகள். புத்தக அடுக்குகளில் படித்துவிட்டு வைத்த பல புத்தகங்களை, சில காலம் கழித்து எடுத்துப் பார்த்தோமானால் மொத்தமாக அரித்து வீணாகிவிட்டிருக்கும்.

ஐம்பது லட்சம் புத்தகங்களை எந்தவித சேதாரமுமில்லாமல் பாதுகாக்கும் ‘நூல்’ பாண்டியன் சுலபமான ஒரு வழிமுறையை சொல்கிறார்.

“ஆறு மாதம் ஒரு புத்தகம் ஒரே இடத்தில் எந்த அசைவுமின்றி வைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதில் பூச்சிகள் குடிபுகும். ஒன்றுமே செய்யவேண்டாம். அடுக்கில் இருக்கும் புத்தகங்களை மூன்று மாதத்துக்கு ஒருமுறை சும்மா கையில் எடுத்து, மேலோட்டமாக பிரித்து பார்த்துவிட்டு அப்படியே வையுங்கள் போதும். எந்தப் பூச்சியும் வராது. நான் புத்தகங்களை பாதுகாக்கும் ‘டெக்னிக்’ இதுதான்”

(நன்றி : புதிய தலைமுறை)

30 கருத்துகள்:

  1. Very very thanks to you lucky... i am exactly searching for that old ponniyin selvan with maniyam drawings.. again thanks to you...

    பதிலளிநீக்கு
  2. oh me the first ah... could you please help me to type the comments in tamil ? thanks in advance...

    பதிலளிநீக்கு
  3. தணு!

    software.nhm.in என்கிற தளத்துக்குப் போய் nhm writer என்கிற மென்பொருளை தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவுங்கள்.

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என்று ஏகப்பட்ட மொழிகளை சுலபமாக தட்டச்சலாம்

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா4:30 PM, ஜூன் 18, 2011

    good one:) I'm surely visiting him
    the next time i come to India. what is his exact address?

    பதிலளிநீக்கு
  6. அண்ணே இந்த கட்டுரையை 2 நாட்கள் முன்னரே படித்துவிட்டேன்
    புதிய தலைமுறையில்
    தொடர்ந்து பயனுள்ள யாரும் சொல்லாத தகவல்களை அளித்து வரும் உங்கள் பதிவு மற்றும் கட்டுரைக்கு வாழ்த்துக்கள் அண்ணே......

    பதிலளிநீக்கு
  7. கூவி கூவி சொன்னாலும் யாரும் புத்தகம் படிப்பதே இல்லை

    பதிலளிநீக்கு
  8. நூல் பாண்டியனைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் ஒரு பதிவில் எழுதியிருக்கிறாரோ?

    அந்தக் கடை முகவரி கொடுங்கள். தொலைபேசி எண் பயன்படும்தான், ஆனால் நேரில் சென்றால் இன்னும் பயனுள்ளதாக அமையும்; அவருக்கும் மதிப்பு மரியாதையாக இருக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  9. இதோ , அவரை பார்க்க கிளம்பிட்டேன் . பயனுள்ள தகவல் . நன்றி

    பதிலளிநீக்கு
  10. sir , yelaam sari . Indha kadayin address kudhu irundha nallaa irukum. Avar kita phone panni thaan kettu therinjukanumaa?

    பதிலளிநீக்கு
  11. நூல் பாண்டியனை அறிமுகப்படுத்தியற்கு நன்றி. எனக்கு நிறைய புத்தகங்கள் வேன்டும்.

    பதிலளிநீக்கு
  12. நூல் பாண்டியனைப் பத்தி அருமையா சொல்லியிருக்கீங்ணா! அவர் போன் நம்பரைக் கொடுத்திருக்கிறதும் நல்ல விஷயம்! ரோஜா முத்தையா நூலகம் மாதிரி இவரும் ஏதாச்சும் ஒரு பெரிய தனியார் நூலகம் அமைச்சா, இன்னும் பலருக்கு உதவியா இருக்குமே?

    பதிலளிநீக்கு
  13. புத்தகத்தை பூச்சி அரிக்காம இருக்கிறத விடுங்க! படிச்சிட்டு தர்றேன்னு 'அடிச்சிட்டு' போற தெரிஞ்சவங்ககிட்டயிருந்து எப்படி காப்பாத்துறது?!!!

    50 லட்சம்!!!!!!! ரொம்ப ரொம்ப அதிகமாச்சே!!!!

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா9:31 PM, ஜூன் 19, 2011

    Please read http://siragu.com

    பதிலளிநீக்கு
  15. மிக நல்ல கட்டுரை. நூல் பாண்டியன் போற்றுதலுக்குரிய மனிதர்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  16. That's good & informative article. Keep it up....

    பதிலளிநீக்கு
  17. Good article give me the address it is very useful for me

    பதிலளிநீக்கு
  18. To those who are asking the address , If you are really interested give a call to pandian he will give you the address . Always many of us need banana to be inserted into our mouth

    பதிலளிநீக்கு
  19. ரொம்ப நன்றி யுவா சார்

    பதிலளிநீக்கு
  20. ரொம்ப நன்றி யுவா சார்

    பதிலளிநீக்கு
  21. அருமையான முயற்சி... அவருடைய நூல்களின் எண்ணிகையை பார்த்தவுடன் மனதுக்குள் ஓடிய ஓட்டம்,

    இவர் ஏன் கஷ்டபடனும், ஒருநூல்கு ஒரு ரூபாய்னாலும் ஐம்பது லட்சம் சொத்து இருக்கே இவரிடம்...

    புரியுது, ஐம்பது லட்சம் விட அறிவு சொத்து சேர்த்து வச்சு இருகர்னு... மனசுல ஓடினதே சொல்லிட்டேன் ..

    பதிலளிநீக்கு
  22. Nude Celebs Fakes. [url=http://www.thinkwriteconnect.com/celebrity-stolen-movies/]www.thinkwriteconnect.com[/url]

    பதிலளிநீக்கு
  23. Biography Of Popular Celebrities Which Got Scandal Videos, Sex Tapes, Oopsshots Or Just Nude Pics. [url=http://www.articlesglow.com/leading-performers-who-may-have-presented-unclothed.htm]www.articlesglow.com[/url]

    பதிலளிநீக்கு
  24. Video Clips And Movie Scenes Of Naked Celebrity Stars, Nude Pornstars, Naked Celebs, Actresses Nudes. [url=http://www.40downloads.com/searching-for-a-nude-model-for-your-upcoming-shoot/]www.40downloads.com[/url]

    பதிலளிநீக்கு
  25. Nude Celebrities Movies , Nude Celebrities Photos. [url=http://toparticlemoney.info/ArtsEntertainment/celebrity-stolen-dvds.html]toparticlemoney.info[/url]

    பதிலளிநீக்கு
  26. Welcome To The Largest Collection Of Free Nude Celebs In The Net. [url=http://www.autopartssite.net/auto-parts/celebrity-stolen-dvds/]www.autopartssite.net/auto-parts[/url]

    பதிலளிநீக்கு
  27. All Of Your Favorite Nude Celebrities. [url=http://massivearticles.info/finding-a-nude-model-for-your-shoot.html]massivearticles.info[/url]

    பதிலளிநீக்கு
  28. Welcome To Celeblist. [url=http://www.learningdirectorygroup.com/2012/02/05/getting-a-nude-model-for-your-upcoming-shoot/]www.learningdirectorygroup.com/2012/02/05[/url]

    பதிலளிநீக்கு
  29. I Am One Of Those People That Hates The Bandwagon Mentality. [url=http://www.submitarticleforfree.in/celebrity-stolen-dvds/]www.submitarticleforfree.in[/url]

    பதிலளிநீக்கு