10 ஜூன், 2011

கல்விக்காக ஏந்தப்பட்ட உயிராயுதம்!

கலப்பு மணம் செய்துக்கொண்ட காதல் தம்பதிகள் அவர்கள்.

ஆரம்பத்தில் எல்லாமே மகிழ்ச்சியாகவே கழிந்தது. நல்லறமான இல்லறத்துக்கு சாட்சியாக அழகிய மகன் பிறந்தான்.

தர்மராஜ் பஞ்சாலை ஒன்றில் கடைநிலைத் தொழிலாளி. கெட்டப்பழக்கம் எதுவுமில்லை. வாங்கும் சம்பளத்தை அப்படியே மனைவி சங்கீதாவிடம் தந்துவிடுவார். குழந்தை பிறந்தபிறகு பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகரித்தது. எல்லா ஏழை பெற்றோருக்கும் இருக்கும் அதே கனவுதான். மகனை டாக்டராகவோ, என்ஜினியராகவோ, ஐ.ஏ.எஸ்.ஸாகவோ, ஐ.பி.எஸ்.ஸாகவோ கற்பனை செய்து மகிழ்ந்தார்கள்.

கல்வி ஒன்றே தங்கள் குடும்பத்தை கரை சேர்க்கும் என்று நம்பினார்கள். மகனுக்கு நல்ல கல்வியை வழங்கியாக வேண்டும். தர்மாராஜின் சொற்ப சம்பளம் போதாது. சங்கீதாவும் வேலைக்கு போக ஆரம்பித்தார்.

குழந்தை தர்ஷனை கோவை உப்பிலிப்பாளையத்தில் இருக்கும் பெயர்பெற்ற ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். எல்.கே.ஜி. கட்டணத்தை கட்டி முடிக்கவே பெற்றோருக்கு இடுப்பு ஒடிந்து விட்டது.

இந்த வருடம் யூ.கே.ஜி.யும் தேறிவிட்டான். முதல் வகுப்புக்கு சென்றாக வேண்டும். சீருடை, புத்தகங்களோடு பள்ளிக்கட்டணமும் கட்டியாக வேண்டும். கட்டணம் மட்டுமே பண்ணிரெண்டாயிரம் ரூபாய். தர்மராஜ், சங்கீதா இருவரின் ஒரு மாத சம்பளத்தையும் விட இந்தத் தொகை அதிகம்.

தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார்கள். ஐயாயிரம் ரூபாய் வரைதான் சேர்க்க முடிந்தது. இன்னும் ஏழாயிரம் தேவை. முழி பிதுங்கிப் போனார் தர்மராஜ். ஒன்றாம் வகுப்பு சேர்க்க கூட வக்கற்றுப் போனோமே என்று வருத்தத்தில் ஆழ்ந்தார்கள் பெற்றோர். பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.

குஞ்சுக்கு ஆபத்து என்றால் தாய்ப்பறவை சீற்றத்தோடு காணப்படுவது இயற்கைதான். இந்த தாய் இயலாமை காரணமாக வேறு முடிவு எடுத்தாள். சமையலுக்கு வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் தலை மீது ஊற்றிக் கொண்டாள். தீக்குச்சியை பற்றவைத்தாள். மகனின் கல்வி மீது பெருங்கனவு வைத்திருந்த அந்த தாய் ஊழித்தீயாய் ஜெகஜ்ஜோதியாய் எரிந்தாள். தடுக்க நினைத்த காதல் கணவருக்கும் பெரும் தீக்காயம். சங்கீதாவின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது. எரிந்தது சங்கீதாவின் உடல் மட்டுமல்ல. அவரது மகன் தர்ஷனின் எதிர்காலமும்தான். கடந்த வாரம் கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தில் நடந்த சம்பவம் இது.

எங்கே போகிறோம் நாம்?

குழந்தைகளின் கல்விக்காக உழைப்பை, உடமைகளை இழந்து வந்த பெற்றோர் உயிரையும் இழக்கத் தொடங்கியிருக்கிறார்கள். லட்சக்கணக்கானோரின் வயிற்றில் பற்றியெறிந்துக் கொண்டிருக்கும் தீ இது.

சங்கீதாவின் உயிர் எப்படியும் திரும்ப கிடைக்கப் போவதில்லை. எனினும் இன்னொரு சங்கீதா உயிராயுதத்தை கல்விக்காக ஏந்திவிடக்கூடாது என்கிற அக்கறையால் இரண்டு விஷயங்களை முதன்மையாக சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

1) ஒன்றாவது படிக்கும் மாணவனுக்கே 12,000 ரூபாய் கட்டணம் வாங்கும் அளவுக்கு ஒரு பள்ளி கோவையின் புறநகரில் இருக்கிறது. ஒருவேளை இது ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகள் அடங்கிய பள்ளியாக இருக்குமோ? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக தனியார் பள்ளிகள் கட்டணம் வாங்கிக் கொண்டிருக்கிறது என்றால், கல்வித்துறை அதிகாரிகள் என்னத்தைதான் அங்கே கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்?

2) தர்மராஜ் – சங்கீதா போன்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? அரசுப் பள்ளிகளை புறக்கணிக்க என்ன காரணம்? தவறு பெற்றோர் மீதா, அல்லது தரமான அருகாமைப்பள்ளிகளை உருவாக்காத அரசாங்கத்தின் மீதா?

குடிமக்களான நாம் சிந்திக்க மட்டுமே முடியும். முடிவெடுக்க வேண்டியதும், செயலாற்ற வேண்டியதும் அரசாங்கம்தான்.

14 கருத்துகள்:

  1. So Sad to hear. But Unfortunately We can't do anything

    பதிலளிநீக்கு
  2. கோமதி விநாயகம்10:20 AM, ஜூன் 10, 2011

    மிக அவசியமான பதிவு. கடந்த வாரம் வினவு இதை எழுதியிருந்தார்கள். சமச்சீர் கல்வி ஒழிப்புக்கும் - மெட்ரிக் பள்ளி கொள்ளைக்கும் உள்ள தொடர்பை தொடர்ந்து அம்பலப்படுத்துங்கள்

    படிக்க http://www.vinavu.com/2011/05/30/kovai-sangeetha-suicide/

    பதிலளிநீக்கு
  3. Right article. The same news already published in vinavu but the article from yuvakrishna will reach many because vinavu is nothing but /%$€

    பதிலளிநீக்கு
  4. I had to pay Rs.33000 per annum for my son who is into 2nd standard. Apart from that the van fee is about 10000 per annum. Overall, the expenditure for school alone is Rs.50K. I am in the outskirts of chennai and have no other cheaper alternative nearby.

    On the other hand if you are starting a new school, the money you invest on real-estate is huge. With increasing salaries for the teachers, its extremely hard for the schools to run without these kind of fee structure. So I absolutely don't blame the schools for this his amount of fees. If they follow the governments recommendation, they will close in a couple of years. Remember they are doing business and not service. As long they follow ethical standards in business I am OK with them. I am just being practical here.

    Its the governments responsibility to open more and more schools, increase the standards and make the fee affordable. No point in blaming the private schools.

    In developed countries only the rich go to private school and the rest to public schools. In India, only the poor go to public school and the rest to private schools. This is fundamentally wrong for a developing country like India.

    பதிலளிநீக்கு
  5. குடிமக்களான நாம் சிந்திக்க மட்டுமே முடியும். முடிவெடுக்க வேண்டியதும், செயலாற்ற வேண்டியதும் அரசாங்கம்தான்.

    பதிலளிநீக்கு
  6. It not only falls in to the hands of Government - people has to protest and deny paying such a huge amount as fees / Parents (i really dont know how you were all capable of paying a such a huge amount / please cooperate denying payment)

    பதிலளிநீக்கு
  7. அரசு பள்ளியில் சேர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா4:48 PM, ஜூன் 10, 2011

    Karuna govt didn't take any action for school fees. I am normal person and getting minimum in IT salary and now thinking aout my son's fees and school.prices are increased like anything and planning to admit in govt school and good coaching at home.I can't afford more then 15k per year with my salary ..Now , jaya turn and something need to be done.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா7:40 PM, ஜூன் 10, 2011

    I would say, the blame is on the parents. Why do they want to streach to go that far and "kuththudhey kodayudhey'nu" solradhu?

    No matter where you put your kid, school does not teach knowledge. None of our schools are guiding kids, it is only 'feeding' kids.

    பதிலளிநீக்கு
  10. Goverment should spend money on education and infrastructure. But our administrators will spend it on giving free color TV. Oh what a waste.. these thugs shud be hanged.
    But people like write birth daywish essays for them. I think in a state like this we will get only rulers like what we got.

    Anyway, I dont think there is any reason to sympathize with the lady who commited suicide for this. It is not everyone goes to 12000 rs a month school and also not every one who go there succeed.

    பதிலளிநீக்கு
  11. லக்கி அவசியமான பதிவு..
    இதோ கோவை நகரிலிருந்து இன்னும் ஒரு தற்கொலை செய்தி.. படிப்பில் சாதித்தான் மகன்:ஏழை தந்தை தற்கொலை.கல்வி உதவித் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களை சென்றடையவில்லை.http://bit.ly/jg3OsT

    பதிலளிநீக்கு
  12. Its certainly sad and a very painful reflection of the present education system.

    But I would not hold the school responsible for this. I would rather say its a failure of the govt to create necessary educational infrastructure in the country.

    Why should people run to private schools? Why not govt make school education system more efficient? If we can have IITs , NIT, Govt Engi colleges, why do we not have schools of such distinction?

    Private schools are business houses, we cant be blaming them. They run for profits except handful of trust schools.

    Instead of giving freebies the govt should invest more on education.

    பதிலளிநீக்கு
  13. முட்டாள்தனமான முடிவு! வேறென்ன சொல்றது? காதல்ல தோத்தால் தீக்குளிப்பது, பரீட்சைல தோத்தால் தீக்குளிப்பது, அரசியல் தலைவர் செத்தால் தீக்குளிப்பது இதெல்லாம் எத்தனை முட்டாள்தனமோ அத்தனை முட்டாள்தனம் இந்தப் பெற்றோர் செய்ததும்! இவங்களை நெனைச்சுப் பரிதாபப்படறதைத் தவிர வேற வழியில்ல!

    பதிலளிநீக்கு
  14. //லட்சக்கணக்கானோரின் வயிற்றில் பற்றியெறிந்துக் கொண்டிருக்கும் தீ இது.
    //
    உண்மை.

    பதிலளிநீக்கு